• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vetriyaa Tholviyaa - Chapter 4 part 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

Veteriyaa Tholviyaa - chapter 4:

அத்தியாயம்----4​
தன் லக்கேஜை பாக் செய்துக் கொண்டு இருந்த செல்லாம்மாவுக்கு சிறு சிறு உதவிகள் செய்துக் கொண்டு இருந்த சஞ்சய்.
“என்ன பாப்பா பங்கஷனுக்கு போடுற மாதிரி ஒரு ட்ரசும் எடுத்து வைக்கல….?” என்று தன் அண்ணா கேட்டவுடன் தன் தலையில் தட்டிக் கொண்ட செல்லம்மா.
“மறந்துட்டேன் அண்ணா. சாரி” என்று மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னவளிடம்.
“இதுக்கெல்லாம்மா மன்னிப்பு கேட்கனும். மன்னிப்பு கேட்கனும் என்றால் நான் தான் கேட்கனும். என்னால் தானே நீ உன் படிப்போடு கடையும் பார்த்துக்குற. இது போதாதுன்னு தோ அவ்வளவு தூரம் போற. “ என்று தன் ஆதாங்கத்தை கொட்டிய அண்ணாவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே….
சொன்ன பொய்யுக்கு ஏற்ப ஒரு ஆடம்பர புடவையும் அதற்க்கு ஏற்ற அணிகலன்களையும் சேர்த்து தன் லக்கேஜில் வைத்துக் கொண்டே…
“அண்ணா என் பிரண்டுக்கு கொல்கத்தாவில் கல்யாணம். அப்படியே இந்த மீட்டிங்கையும் சேர்த்துக்கிட்டேன். இதுல எனக்கு என்ன கஷ்டம்…..?” என்று சொன்னவளுக்கு ஆயிரம் அறிவுரைகளை அவள் கார் ஏறும் வரை சொன்னவனுக்கு.
டிரைவர் சீட் பக்கத்தில் வந்து அமர்ந்த சுகன். “நான் தான் கூட போறேன்ல. அப்புறம் என்ன பயம். நீ செல்லம்மாவை பத்தி பயப்படாம இரு. ஆ கடைக்கு மதியம் வரை இருந்தா போதும்.
இப்போ தான் உடம்பு கொஞ்சம் சரியாயிட்டு வருது. கண்டதை நினச்சிட்டு உடம்ப கெடுத்துக்காத.” என்று தன் நண்பனிடம் சொன்ன பின் அந்த கார் ஏர் போர்ட்டை நோக்கி சென்றது.
கார் ஏர் போர்ட் வரும் வரை இருவரும் ஒன்றும் பேசாது அவர் அவர் லேப்டாப்பில் மூழ்கி விட. துரையின் “பாப்பா இடம் வந்துடுச்சி….” என்றதும் தான் செல்லம்மா தன் கண்ணை நிமிர்த்தி பார்த்தாள்.
துரைக்கு ஒரு புன் சிரிப்பை உதிர்த்த வாறே காரை விட்டு இறங்கியவளிடம் “பாப்பா பத்திரம்.” வேலைக்கார விசுவாசத்தில் சொல்ல.
சுகனோ… “துரை நீயுமா….? உன் பாப்பாவை பத்திரமா கூட்டிட்டு வர்றது என் பொறுப்பு.” என்ற வாக்குறுதியோடு செல்லாம்மாவை பார்க்க.
செல்லம்மாவோ ஒரு ரகசிய சிரிப்பை உதிர்த்த வாறே ப்ளைட் ஏறும் முன் தன் போனில் தன் தோழியைய் அழைத்து குசு குசு என்று பேசி கடைசியில் “பார்த்து தேவி.” என்ற சொல்லோடு போனை அணைத்தவளை பார்த்த சுகன்.
“பாப்பா என்ன பாப்பா. எனக்கு தெரியாம ஏதாவது செய்யிறியா…..?” என்று தன்னை சந்தேகத்துடன் பார்த்து கேட்கும் சுகனை கண் சிமிட்டி.
“ நான் என்ன செய்தேன் அண்ணா. நீங்க என் பக்கத்திலேயே தானே இருக்கிங்க. உங்களுக்கு தெரியாம நான் ஏதாவது செய்தேனா…..?தோ இப்போ கூட என்னை நம்பாம அண்ணாவுக்கு உதவியா இல்லாம என் கூட வர்றிங்க.” என்ற செல்லாம்மாவின் குரலில் ஆதாங்கம் வெளிப்பட்டாலும் கண்ணீல் குறும்பு மின்னி மறைந்ததை பார்த்த சுகன்.
“நீ என்னவோ செய்ய போற…..” என்று ஆராம்பித்தவன்.
பின் “செய்ய போறியோ...?இல்ல செய்ய ஆராம்பிச்சிட்டியோ….? தெரியல. ஆனா பார்த்து செல்லம்மா உன் வீட்டில் என்னை நம்பி தான் அனுப்பிச்சி இருக்காங்க.” என்று இவர்களின் பேச்சி வாக்கு முடிவில் ப்ளைட்டில் ஏறி விட்டனர்.
பயணம் முழுவதும் செல்லாம்மா திரும்பவும் தன் லேப்டாப்பிலேயே கழிய. நம் சுகன் தான் கண்ணை அங்கும் இங்கும் சுற்றி நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தான்.
தன் வேலை முடித்த செல்லம்மா சுகனை பார்த்து “அண்ணா அவன் இரண்டு நாள் முன்னவே கொல்கத்தா போயிட்டான். அதனால அவனை தேடாது உங்க வயசுக்கு ஏத்த மாதிரி ஏதாவது பாருங்க.” என்று அவள் முடிப்பதற்க்கும் பிளைட் லேண்ட் ஆவதற்க்கும் சரியாக இருந்தது.
சுகன் செல்லாம்மா பேச்சுக்கு பதில் பேச்சு பேசாது அவளுடன் வந்தாலும் அவன் சிந்தனை முழுவதும் மனீஷை பற்றி அனைத்தும் விசாரித்து இருக்கிறாள். அவன் எப்போது கொல்கத்தா சென்றான் என்பது வரை.
இதனால் செல்லமாவுக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமா….? என்பதில் தான் மனது திக்… திக்…. என்று அடித்துக் கொண்டது.
சிறு பெண் ஆழம் தெரியாமல் கால் வைக்கிறாளோ...அதுவும் அவன் பெண் விஷயத்தில் எப்படி என்று தெரிந்த பின் செல்லம்மாவை அவனுடன் மோத விடுவது சரியா….? என்று ஒரு பக்கம் நினைத்தவன்.
இன்னொரு பக்கமோ….அவளுக்கும் அவனை பற்றி தெரிந்து தானே இருக்கு. அதனால் பார்த்து நடந்துப்பா….என்று நினைத்தவன். நான் வேண்டாம் என்றாலும், கண்டிப்பா அவனை இவள் சும்மா விட மாட்டாள். அவளின் பிடிவாதத்தை அறிந்த அவன் நினைத்துக் கொண்டு இருந்ததால் செல்லம்மா அழைத்த காரில் ஏறி அமர்ந்தவன்.
எங்கு செல்கிறது என்று கூட பாராது இருக்க. தாங்கள் தங்க வேண்டிய ஓட்டல் வந்து விட்டது என்று செல்லம்மா சொல்லி தான் சுற்றி முற்றியும் பார்த்த சுகன்.
“நாம் தங்க வேண்டிய இடம் இது இல்ல பாப்பா. இடம் மாறி வந்து இருக்க.” என்று சொன்னவன்.
காரை விட்டு கீழே இறங்காது டிரைவரிடம் தாங்கள் தங்க வேண்டிய ஓட்டலின் முகவரியைய் சொல்லி “அங்கு போய் விடுங்க.” என்று ஆங்கிலத்தில் சொல்ல.
அவனோ சுகனை வேற்று கிரகத்து வாசி மாதிரி பார்த்து வைக்க. ஓ ஆங்கிலம் தெரியல போல. என்று பெங்காலியில் பேச.
அந்த டிரைவரோ தூய தமிழில்…. “ அவங்க இந்த முகவரியைய் சொல்லி தான் வண்டியில் ஏறுனாங்க. நான் விட்டுட்டேன்.வண்டிய விட்டு இறாங்கினிங்கனா….நான் அடுத்த சவாரி ஏத்த வசதியா இருக்கும்.” என்று சொன்னதும் அதற்க்கும் மேல் தாமதிக்காது காரை விட்டு இறங்கியவன்.
செல்லம்மாவை முறைத்துக் கொண்டே…. இந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்தவங்க நாம் தங்குவதுக்கும் ஏற்பாடு செய்து தானே கொடுத்தாங்க. அங்கு தங்காம இங்கு ஏன் தங்கனும்.” என்று கேட்டதுக்கு.
“நாம அவங்கல நோட் பண்ணனும். நம்மல அவங்க நோட் பண்ண விட கூடாது.” என்று கண் சிமிட்ட.
கண் சிமிட்டல் என்பது செல்லாம்மாவின் மெனரிசம். மற்றவர்களுக்கு தெரியாமல் ஏதாவது செய்தால் அதை சொல்லும் போது எப்போதும் இது போல் கண்சிமிட்டுவாள். அது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.
சுகனோ தங்கை என்ற பாசத்தில் அவள் தலை முடியைய் கலைத்த வாரு….”ஏதோ செய்யிறேன்னு தெரியுது. ஆனா என்னன்னு தான் தெரியல.” என்று ஒரு பெறும் மூச்சோடு அவள் பின் தொடர.
அனைத்து ஏற்பாடும் முன்னவே செய்தது போல் வரவேற்ப்பறையில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் செல்ல.
இவர்களை பார்த்த அப்பெண் “எனி எல்ப் மீ….” சிரித்த முகத்துடன் கேட்ட பெண்ணிடம்.
அதே புன்னகையைய் பரிசாய் தந்த செல்லம்மா. “சுகன், செல்லாம்மாவின் பெயரில் இரு அறை சென்ற வாரம் பதிவு செய்து இருக்கு.” என்று சொல்லியதும்.
தன் புன்னகையைய் தொடர்ந்த வாறு…. தன் முன் உள்ள கம்புயூட்டரில்… ஏதோ பட்டனை தட்டி பார்த்த அப்பெண்.
தன் முகத்தில் உள்ள முன்னகை மறையாது…. “உங்க அறை தயாராய் இருக்கு மேம்.” என்று ஆங்கிலத்தில் கொஞ்ச.
திறந்த வாய் மூடாது பார்த்திருந்த சுகனின் கைய் பிடித்து. தமிழில்… “அப்புறம் அந்த பெண்ணை பாக்கலாம்.” என்று இழுத்து சென்றவளிடம் அசட்டு சிரிப்பை உதர்த்தவன்.
“அந்த பெண் சிரிச்சிட்டே இருக்கே. வாய் வலிக்காதான்னு தான் பார்த்தேன் பாப்பா.” தன் வழிச்சலை சமாளித்தவனை பார்த்து சிரித்துக் கொண்டே…
“ஆ நம்பிட்டேன்.” என்று இருவரும் பேசிக் கொண்டே தன் அறைக்கு முன் வந்து நின்ற செல்லம்மாவிடம்.
“லாக் செய்து இரு பாப்பா. எதுன்னா வேணுமுன்னா என்னை கேளு. யாராவது கதவை தட்டினா….எனக்கு போன் போடு நான் வர்றேன்.” என்று சொன்ன அனைத்துக்கும் தலையாட்டிய செல்லம்மா.
“சுகன் அண்ணா நான் பாப்பா இல்ல. “ என்ற சொல்லோடு தன் அறை கதவை மூட.
மூடிய கதவை ஒரு நிமிடம் பார்த்து விட்டு தன் அறைக்கு சென்ற சுகன் முதல் வேலையாக தன் நண்பன் சஞ்சய்க்கு போன் செய்து தாங்கள் வந்து விட்டதை தெரிய படுத்தியவன்.
தவறியும் தங்களுக்கு ஏற்பாடு செய்த ஓட்டலில் தங்காது வேறு ஓட்டலில் தங்கி இருக்கிறோம் என்று தெரிய படுத்தவில்லை.

 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
சுகன் செல்லம்மாவை பார்த்துக் கொள்கிறானாஇல்லை செல்லம்
அவனை பார்த்துக் கொள்கிறாளா....?
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

புத்திசாலியான பெண்தான் செல்லம்மா,எவ்வளவு அறிவு பூர்வமாக திட்டமிட்டு காய்களை நகத்துகின்றார் அதே நேரம் எதிரியின் அசைவுகளையும் கண்காணித்து வைத்திருக்கின்றார் ,ஆனால் மனிஷ் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவரா இருந்தால் செல்லம்மாவின் நிலை.

நன்றி

பி.கு:-தாழ்மையான வேண்டுகோள் mam,pls முடிந்தளவு ஒருபகுதிக்கும் இன்னொரு பகுதிக்குமிடையில் நீண்ட இடைவெளி (கிட்டத்தட்ட ஒரு மாதம்) விடாதீர்கள் mam,கதையின் தொடற்சி மறந்து போகின்றது .
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top