• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

En asai kanmaniye-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
கீர்த்தனா வாசலில் சென்று கார் நின்றது.

காரின் ஹாரன் சப்தம் கேட்டு மாதவன், ராதாவும் அவர்களை வரவேற்க வந்தார்கள். காரில் இறங்கி வந்த கார்த்திகேயன் குடும்பம் பார்த்து விக்னேஷ் அதிர்ச்சியாகிவிட்டான்.

"அக்கா... பெரிய இடம் கம்மிங்" என்ற கல்பனா தன் சீனியர் விஜயலட்சுமியை பார்த்து விட்டாள்.

விக்னேசை அங்கே பார்த்த கார்த்திகேயனுக்கு அவன் அத்தை மகளை பெண் பார்க்க வருவதாக கூறியது நினைவு வர தான் வந்திருப்பது தான் விரும்பிய கீர்த்தனா வீட்டிற்கா என்று அதிர்ச்சியானான்.

"என்ன விக்னேஷ்... நீ என்ன எங்களுக்கு முன்னால் இங்கு இருக்கிறாய்?" என்று கேட்டார் சிவமூர்த்தி.

"அங்கிள்... இது என் மாமா வீடு. கீர்த்தனா என் அத்தை மகள்." என்றான் விக்னேஷ்.

"அப்படியாப்பா ... என்னங்க... நாம் கடைசியில விக்னேஷ் வீட்டில்தான் பெண் பார்க்க வந்து இருக்கோம் பாருங்க" என்றாள் உமாதேவி.

"சாமி இது உலக மகா நடிப்புடா" என்று நினைத்து கொண்டாள். விஜயலட்சுமி.

"அண்ணா... எங்களை உள்ளே கூப்பிட மாட்டிங்களா?" என்று அவள் கேலியாக கேட்க, "அதுதானே" என்றாள் செல்வபிரியா.

"எல்லோரும் உள்ளே வாங்க... கார்த்தி... வாடா" என்றவன் அழைக்க சிவமூர்த்தி குடும்பம் உள்ளே நுழைந்தார்கள்.

"அக்கா... வந்திருக்கிறது யார் தெரியுமா?" என்றாள் கல்பனா.

"யாருடி? நீ ஏன் இப்படி ஷாக் ரியாக்சன் தருகிறாய்?" என்று தங்கையிடம் கேட்டாள் விக்னேஷ்.

"விக்னேஷ் மாமா பார்ட்னர் கார்த்திகேயன் குடும்பம் அக்கா." என்றாள் கல்பனா.

"அவர்களா?" என்று கேட்டாள் கீர்த்தனா.

உமா டெக்ஸ்டைல்ஸ், உமா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என்ற இரண்டு பெரிய நிறுவனத்தின் சொந்தகாரர்கள் என்பது மட்டும் அல்ல.

உமா டிபார்ட்மென்டல் ஸ்டோர் பார்ட்னராக விக்னேஷ் இருக்கும் காரணத்தால் அக்கா தங்கை இருவரும் பலமுறை சென்று வந்துள்ளனர்.

கீர்த்தனா விளையாட்டுக்கு தேவையான சூ, ராக்கேட், டீசர்ட் என்று அனைத்தையும் வாங்கி ஸ்டாக் வைத்திருப்பான் நம் கார்த்திகேயன்.

அவள் தங்கையுடன் அடிக்கடி செல்லும் கீர்த்தனா தனக்கு தேவையானவற்றை இருவரும் ஷாப்பிங் செய்து கொண்டு விடுவார்கள்.

விக்னேஷ், கீர்த்தனா குடும்ப மளிகை பொருட்கள் முதல் எல்லாம் அங்கேதான் வாங்கி வருகிறார்கள். துணி எடுக்க உமா டெக்ஸ்டைல்தான் அவர்களின் சாய்ஸ்.

"விஜிக்காவும் வந்திருக்காங்க" என்றாள் கல்பனா.

விஜயலட்சுமி அவளின் சீனியர் மட்டுமல்ல நம் கீர்த்தனாவின் டென்னிஸ் மேட்ச்களை வந்து பார்த்து பாராட்டி செல்லும் நபர்களில் ஒருத்தி.

சென்னையில் எங்கும் போட்டி என்றாலும் விஜயட்சுமி, விக்னேஷ், கார்த்திகேயன், மூவரும் ஆஜராகி விடுவது வழக்கம்.

இறுதி போட்டி என்றால் சில சமயங்களில் கார்த்திகேயனின் மொத்த குடும்பமும் வருவதும் உண்டு.

கார்த்திகேயனிற்கு தன் மனம் கவர் காதலி கீர்த்தனாவை பெண் பார்க்க வந்திருப்பது இன்ப அதிர்ச்சியாக மாற அவன் அதில் இருந்து மீளாமல் உள்ளே வந்து அமர்ந்து இருந்தான்.

கீர்த்தனாவை எப்பொழுது காண போகிறோம் என்று மனம் பரபரத்து கொண்டிருந்தது.

கீர்த்தனாவிற்கோ எப்படியும் தன்னை அம்மா யாருக்காவது கட்டி கொடுக்காமல் இருக்க போவதில்லை.

இந்த இடத்தை சரி என்று சொல்லிவிட்டால் அங்கே போய் ஏதோ செய்து தன் கனவை நிறைவேற்ற வழி தேடலாம் என்று மனதை தேற்றி சம்மதிக்க தயாரானாள்.

கல்பனாவிற்கும் அக்கா நல்ல இடத்தில்தான் சேர போகிறாள் என்பதால் திருப்தி.

விக்னேசிற்கு தன் நண்பனின் காதலி அவனுக்கு மனைவியாக போகிறாள் என்பதால் அவனும் நிம்மதியாகி விட்டான்.

மாதவன், வெங்கடாச்சலம், பத்மாவதி என்று எல்லோரும் சிவமூர்த்தி குடும்பம் என்பதால் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

கீர்த்தனா அழைக்கபட அவள் வந்து அனைவரையும் வணங்கி விட்டு காபி கொடுத்து அமர்ந்து கொண்டாள்.

தளிர் இலை பச்சை வண்ண சேலையில் வந்தவளை வைத்து கண் வாங்காமல் பார்த்து தன்னை மறந்த நிலையில் இருந்தான்.

"என்ன தம்பி... பொண்ணுக்கு நோ சொல்லிடலாமா?" என்று சிரித்தபடி கேட்டான் அண்ணன் செல்வகணேஷ்.

அண்ணன் வார்த்தையில் பதறி "அண்ணா" என்று அவனை பார்த்தான் கார்த்திகேயன்.

"மாப்பிள்ளைக்கு பெண் பிடித்து உள்ளதா என்று கேளுங்கள்" என்று கூட்டத்தில் யாரோ கேட்க சிவமூர்த்தி குடும்பம் கார்த்திகேயனை பார்த்தது.

"என்னப்பா... பெண் பிடித்து இருக்கிறதா?" என்று கேட்டார் சிவமூர்த்தி.

"எனக்கு பிடிச்சிருக்கிறது." என்றான் கார்த்திகேயன்.

"எங்களுக்கு பொண்ணு ஒகே. பெண்ணையும் ஒரு வார்த்தை கேட்டு விடுங்கள்" என்றார் சிவமூர்த்தி.

கீர்த்தனாவை அவள் அம்மா பார்க்க தங்கையின் காதில் ஏதோ கூறினாள் கீர்த்தனா.

"அக்காவுக்கு மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதாம்" என்றாள் கல்பனா.

Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"அப்புறம் என்னப்பா? இரண்டு குடும்பமும் தட்டை மாற்றி கொள்ளுங்கள். நிச்சயதார்த்த தேதி குறிப்போம்" என்று கூறினார் வெங்கடாசலம்.

அடுத்த இரண்டு மாதங்களில் திருமணம் என்று தேதி முடிவு செய்யபட்டது. திருமணத்திற்கு முதல்நாள் நிச்சயதார்த்தம் என்றும் முடிவு செய்தார்கள்.

இரு குடும்பத்தார்கள் தட்டை மாற்றி கொண்டு விட விழா இனிதாய் முடிந்தது.

கீர்த்தனாவின் எதிர்பாராத சம்மதம் அதிர்ச்சி அளித்தாலும் மகள் திருமணம் நிச்சயம் ஆனதில் ராதாவுக்கு மகிழ்ச்சி.

கீர்த்தனா பெரிய இடத்தில் வாழ செல்வதால் அப்பா மாதவனும், மாமா வெங்கடாசலம், அத்தை பத்மாவதிக்கும் மகிழ்ச்சி.

விக்னேஷ்க்கு நண்பனே தன் அத்தைமகளை மணப்பதால் மகிழ்ச்சி. கல்பனாவுக்கும் தெரிந்த இடம் என்பதால் மகிழ்ச்சியாகி விட்டது.

தன் குடும்பம் தந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் கார்த்திகேயன் வர அவனை கேலி பன்னியபடி வந்தது அவன் குடும்பம்.

கீர்த்தனா கார்த்திகேயனுக்கு திருமணம் நிச்சயம் ஆன செய்தியை போனில் கேட்டு முதலில் சோகமாகி பின்னர் வாய்விட்டு சிரித்தாள் வந்தனா.

கடுமையான டென்னிஸ் பயிற்சி முடித்து விட்டு தன் அறைக்கு திரும்பி குளித்துவிட்டு சிங்கிள் கவுனில் வந்து அமர்ந்தாள் வந்தனா.

செல்போன் அழைக்க எடுத்து பார்க்க தங்கை காஞ்சனாதான் அழைத்திருந்தாள். போனை செய்து "சொல்லுடி" என்றாள் வந்தனா

"அக்கா... உனக்கு விஷயம் தெரியுமா? உன் கார்த்திக்கு மேரேஜ் பிக்ஸ் பன்னிட்டாங்க."

வந்தனா சற்று அதிர்ச்சியாகி,
"எப்பொழுதுடி? பொண்ணு யாருடி? நம்மை விட பெரிய இடமா?" என்று கேள்விகளை அடுக்கினாள்.

"அக்கா... அதுதான் இன்னும் கொடுமை. பொண்ணு உன் எதிரி கீர்த்தனாதான்"

தங்கையின் பதில் கேட்டவள் மேலும் அதிர்ச்சியாகி, "அவளா?" என்றாள்.

"அவளேதான் அக்கா.கார்த்திக் அவளை ஒன்சைடாக லவ் பன்னுவதை கண்டுபிடித்து அவனுக்கே தெரியாமல் அவள் வீட்டில் பேசி இன்றைக்கு கீர்த்தனா வீட்டுக்கு போய் மேரேஜ் தேதி பிக்ஸ் செய்து விட்டு வந்து விட்டார்கள்"

"ஒ! அந்த அளவுக்கு சென்று விட்டார்களா?" என்று கேட்ட வந்தனாவின் குரலில் சோகம் மறைந்து திமிர் தெரிந்தது.

"என்னக்கா... இவ்வளவு இதை கேட்டு நானே ஷாக்கிலிருந்து மீளவில்லை. நீ சாதாரணமாக ஏதோ கதை கேட்ட மாதிரி பேசுகிறாய்?"

Write your reply...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top