• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Sokkattan paarvai - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
ஹலோ தோழமைகளே !!
தொடர்ந்து அனைவரும் தரும் ஆதரவுக்கு நன்றி. இதோ அடுத்த பதிவு . படித்துவிட்டு மறக்காமல் கருத்துகளைப் பதிவிடுங்கள் ...


கதை முடிவை நோக்கி..!!!
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu

கிருஷ் எதையோ யோசித்த வண்ணமே இருக்க , அவனின் ரிசப்ஷனிஸ்ட் அழைத்தாள் .


"டெல் மீ "

இவன் கூறவும் ,

"சர், மிஸ். வைஷாலி வந்துட்டாங்க . " என்று அவள் கூறினாள் .

"ஆஸ்க் ஹெர் டு வெயிட் இன் மீட்டிங் ஹால்." என்று சொல்லிவிட்டு ரஞ்சித்தை நோக்கினான்.

அவனும் கூர்மையாக இவனையே பார்த்துக் கொண்டிருந்தான் .

"நீ சொன்ன மாதிரியே ஷாலினி வந்தாச்சு . ஷீ இஸ் நாட் இன் அ பொசிஷன் டு ரெகக்னைஸ் யு ரஞ்சித்.

அண்ட் , அவ நேம் இப்ப
வைஷாலி . பார்த்துப் பேசு எதுவா இருந்தாலும்"


"ஓஹ் , இது ரொம்ப நல்ல விஷயம் ராகவ் . இன்னுமா அவளுக்கு நினைவு திரும்பல? ஹையோ பாவம் , நீயும் எவ்ளோ நாள் தான் வெயிட் பண்ணுவ ?!"

"அது பத்தி நீ யோசிக்காத . ஜஸ்ட் கோ அஹெட் " என்றவன் எழுந்து நின்றான் .

கூடவே ரஞ்சித்தும் எழ , இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர்.

மீட்டிங் ஹாலினுள் பிரவேசிக்கும் போதே ரஞ்சித்தின் கண்கள் பரபரப்பாய் ஷாலினியைத் தேடியது .

அங்கே, கிருஷ் வாங்கியிருந்த அவார்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

அதையே ஆர்வமுடன் பார்த்தபடி அவள் நின்றிருந்தாள் .

முதுகு காட்டியபடி அவள் நிற்பதைப் பார்த்ததுமே அவனின் ஆர்வம் கட்டுக்கடங்காமல் பெருகியது .

இத்தனை நாள் அவள் உயிரோடு இருப்பாள் என்பதே அவன் எதிர்பாராத ஒன்று . அதுவும் அதே ஊரில் இருந்தும் அவனின் கண்களில் சிக்காமல் இருந்திருக்கிறாள் .

எவ்வளவு நாள் தெருத்தெருவாக இழந்த மானத்தை மீட்க அலைந்திருப்பான்? எல்லாம் இவளால் தானே !!

ஒரு வழியாக ஒழிந்தாள் என்று நினைத்தால் ... ஒளிந்து தான் இருந்திருக்கின்றாளா !!

ஷாலினியை அலேக்காக அப்பர் லோகம் அனுப்ப நினைத்த ரஞ்சித்தும், அதிரடியாக அன்பைப் பொழிய எண்ணிய ராகவும் கடவுளின் கணக்கில் தனக்கான இடத்தைப் படைத்தனர்.

"ஷாலு " என்ற கிருஷ்ஷின் விளிப்பில், மலர்ந்த முகத்துடன் திரும்பினாள் வைஷாலி .

அடுத்த நொடியே அவனின் அருகே இருந்த ரஞ்சித்தைக் கண்டு அவளின் முகம் சற்றே சுருங்கியது யோசனையில் .

"குட் மார்னிங் சர் " என்றவளின் பார்வை ரஞ்சித்தையே ரவுண்டு கட்ட , பழைய நினைவுகளின் தாக்கமோ என்று கிருஷ் எண்ணினான் .

யார் மூலமாக வந்தால் என்ன , அவள் பழையபடி மாறினால் அதுவே அவனுக்குப் போதுமே.

" மீட் மிஸ்டர் ரஞ்சித், பிசினிஸ்மேன். உன்கூட ஏதோ பேசணுமாம்."

மொட்டையாக அறிமுகம் செய்து வைத்தான் கிருஷ் .

அட , அவனுக்கே என்ன பேசப் போகின்றான் இந்த ரஞ்சித் என்று தெரியாத பொழுது என்னவென்று சொல்லுவான் ??

" ஹாய், மிஸ். வைஷாலி ? அம் ஐ ரைட் ??"

அர்த்தப் புஷ்டியுடன் கிருஷ்ஷையும் ஒரு பார்வை பார்த்தான் ரஞ்சித் .

அவனின் முறைப்பை ரசித்தும் மகிழ்ந்தான்.

" யெஸ் , யு ஆர் ரைட் . " என்ற வைஷாலி ,

" ஐ காட் இட் . ரீசெண்டா ஒரு மேகசின்ல உங்களைப் பத்தின ஒரு ஆர்டிகளை படிச்சேன்"

என்று அரிய கண்டுபிடிப்பு போல சொன்னாள் .

ஆனால், ரஞ்சித்திற்குத் தான் சுணக்கம் பிறந்தது .

'கழுவி ஊத்தின ஆர்டிகிளா தான் இருக்கும். எவன் பெருமையா எழுதியிருக்கான் என்னையெல்லாம்'

அவனின் மன எண்ணம் முகத்தில் தெரிய , கிருஷ் அதைக் கண்டு நக்கலாய் சிரித்தான்.

ஆனாலும் , ரஞ்சித்தை அவள் அடையாளம் காணவில்லை என்பது அவனுக்கும் ஒரு ஏமாற்றமே...

"ஓஹ் " என்று சுரத்தே இல்லாமல் ரஞ்சித் முடித்துக் கொண்டுவிட ,என்ன படித்தோம் என்பதை விளக்காமல் அவளும் விட்டுவிட்டாள்.

"ஓகே, டெல் மீ . என்ன பேசணும் ? " வைஷாலியின் கேள்விக்கான பதிலை ரஞ்சித் கூறும் முன்னர் , கிருஷ் அவனைத் தடுத்தான்.

"ஜஸ்ட் வெயிட் ரஞ்சித் . இன்னும் தர்ஷினி வரல . அவ வந்ததும் பேசலாம் "

கிருஷ்ஷின் கூற்றைக் கேட்ட ரஞ்சித்திற்கு எங்கோ இடித்தது .

'என்ன இவன் இவ்ளோ தைரியமா சொல்றான் !! கடைசி நேரத்துல கால வாரி விடுவானோ ?'
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu

குழப்பமாய் நடப்பதை வேடிக்கை பார்த்த வைஷாலி ,


"வாட் இஸ் தி மேட்டர் கிருஷ் ? தர்ஷினி யாரு ? "

அவளின் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்லாத கிருஷ் , சற்றே யோசித்து விட்டு ,

"மை யங்கர் சிஸ்டர். கொஞ்சம் வேலையா வர சொல்லிருக்கேன் . நீ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு"

என்றான்.

கிருஷ்ஷின் தங்கை வரப் போகிறாள் என்றதும் வைஷாலியின் முகம் பிரகாசித்தது .

முதன் முறையாக மனம் கவர்ந்தவனின் சொந்தத்தைக் காணப் போகிறோம் என்பதே அவளுக்கு இனிமையான மகிழ்ச்சியைத் தந்தது .

அவளின் எண்ணத்தை எளிதாகப் புரிந்து கொண்டான் கிருஷ் .

ஆனால் , தர்ஷினி வந்து இவளைக் கண்டு அலப்பறை செய்தால் என்ன ஆகும் என்று எண்ணியும் பார்த்தான் அவன்.

'இவள் முழிக்க, அவள் களிக்க' ... சிரிப்பை அடக்க முயன்றான் கிருஷ்.

அதைக் குறித்துக் கொண்ட வைஷாலி ,

"இப்ப எதுக்கு இந்த சிரிப்பு ?"

என்று ஆராயும் பார்வையுடன் கேட்க ,

"நத்திங் ஷாலு." என்று சொல்லிவிட்டு ரஞ்சித்தை நோக்கி மர்மமானப் புன்னகையை வீசினான்.

அவனோ அவசரமாக ஃபோனை எடுத்து எதையோ பார்த்தான்.

பின்னர் , நிம்மதியாக கிருஷ்ஷை நோக்கி ஏளனமாகப் பார்த்தான் .

அவனின் பார்வைக்கு சற்றும் சளைக்காமல் பார்த்த கிருஷ் ,

"என்ன ரஞ்சித் , உன் பிளான் ஃபிளாப் எதுவும் ஆகாதே ! "

என்று உள்குத்து இருப்பது போன்றே கேட்டான்.

"இந்த டைம் நான்தான் டா வின் பண்ணுவேன். உன்னோட பேலன்ஸ் காயின்ஸ் இப்ப என்னோட கஸ்டடில தான் இருக்கு"

உறுதியாகத் தான் கூற முனைந்தான் ரஞ்சித். ஆனால் , அவனின் கண்களே உள்ளே அவனுகிருந்த கலவரத்தைக் காட்டியது .

இத்தனை நேரம் அடங்கி இருந்த கிருஷ் , இப்பொழுது பொடி வைத்துப் பேசுவது ரஞ்சித்திற்கு ரசிக்கவில்லை .

" அட , நீ கவலை எதுவும் படாத . நான் புதுசா பிளான் எல்லாம் பண்ணல ."

என்று சிரித்தான் கிருஷ் .

அங்கே நின்றிருந்த வைஷாலிக்குத் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது .

"எக்ஸ்கியூஸ் மீ . ரெண்டு பேரும் என்ன பேசறீங்கன்னே புரியல . ப்ளீஸ் , எதுவா இருந்தாலும் சொல்லுங்க "

கிட்டத்தட்ட கத்தியேவிட்டாள் அவள்.

"கண்டிப்பா சொல்லுவேன் ஷாலு. எதுக்கும் நேரம்னு ஒன்னு இருக்குல்ல . "

என்று ரஞ்சித்தைப் பார்த்தபடியே சொன்ன கிருஷ்ஷை முறைத்தாள் வைஷாலி.

' ஓவர் பில்ட் அப் விடறானே . '

அவள் எண்ணும்போதே உள்ளே தர்ஷினி வந்தாள் . கிருஷ்ஷைக் கண்டு வேகமாக அவனருகே சென்றவள் ,

"என்னண்ணா ஆச்சு? எதுக்கு இவ்ளோ சீக்கிரமா வர சொன்ன?" என்று பதறியபடியே கேட்டவள் , அங்கே நின்றிருந்த வைஷாலியைக் கண்டு ஒரு நிமிடம் ஆனந்தத்தில் பேச்சற்றுப் போனாள்.

அடுத்த நொடியே , "அண்ணி!!!"
என்று கூவியபடியே அவளைச் சென்று அணைத்தாள் .


கிருஷ் , தர்ஷினியைத் தடுக்க எண்ணியதெல்லாம் எடுபடாமல் போயிற்று.

மானசீகமாக மண்டையை சுவற்றில் முட்டிக் கொண்டான் கிருஷ்.

தன்னை இறுக்க அணைத்தபடி இருந்த தர்ஷினியைக் கண்டு வைஷாலி தடுமாறிப் போனாள் .

வைஷாலியை ஒரு வழியாக்கி விட்டுத்தான் தர்ஷினி விட்டாள்.

"அண்ணி எப்படி இருக்கீங்க !!! பார்த்தே பல மாசம் ஆயிடுச்சு . உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா? இதோ இவன் இருக்கானே, உங்களைக் கண்டுபிடிக்கறேன்னு சொல்லியே காலத்தைக் கடத்திட்டான் "

படபடவென தர்ஷினி பொரிந்து தள்ள , வைஷாலி திருதிருவென விழித்தாள்.

"ஒன் செகண்ட் , உங்களுக்கு முன்னாடியே என்னைத் தெரியுமா!!! "

என்ற வைஷாலியின் கேள்வி புரியவே தர்ஷினிக்கு நேரம் பிடித்தது .

புரிந்த பின்னரோ, கிருஷ்ஷைப் பரிதாபமாக அவள் நோக்க , அவன் திட்டவா கொட்டவா என்ற ரீதியில் நின்றிருந்தான் .

"சாரி" என்று கண்களால் கெஞ்சியபடி வாய்க்குள்ளேயே தர்ஷினி முணுமுணுத்தாள் .

நீயே சமாளி என்பது போல் கிருஷ் அசையாமல் நிற்க , நாக்கை நாசூக்காகக் கடித்துக் கொண்ட தர்ஷினி ,

"அது வந்து , சாரி ... நான் வேற யாரோன்னு நினைச்சுட்டேன் "

என்று மழுப்ப , அவளை நம்பாத பார்வை பார்த்தாள் வைஷாலி .

" இல்லையே , நீங்க எதையோ மறைக்கற மாதிரி இருக்கு . எதுவா இருந்தாலும் சொல்லுங்க"

என்று வைஷாலி ஊக்கினாள் .

ஆனாலும் அசராத தர்ஷினி , சொன்னதையே சொல்லி சாரி கேட்டாள் .

இவள் சொல்லப் போவதில்லை என்று புரிந்த பின்னர் வைஷாலியும் விட்டுவிட்டாள்.

நடப்பதையெல்லாம் ஒரு வித சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித் , அவனுக்கு ஒரு அழைப்பு வந்ததும் அவசரமாக வெளியே சென்றான் .

அப்பொழுதே அவன் இத்தனை நேரம் அங்கிருந்ததை உணர்ந்த தர்ஷினி , கடுப்பில் பல்லைக் கடித்தாள் .

அதே வேகத்துடன் கிருஷ்ஷின் காதையும் கடித்தாள்.

"இவன்கூட என்ன பண்ற ? அவனுக்கு இங்க என்ன வேலை ? திரும்பவும் அவன் மேட்டர்ல மண்டையை விடாதன்னு எவ்ளோ டைம் சொல்லணும் உனக்கு ?"

"இதுதான் லாஸ்ட் டைம் தர்ஷு . நான் சும்மாதான் இருந்தேன். இவனா வந்து இடி வாங்கறான் . என்ன செய்ய ? சரியானப் பொறுக்கி"

என்று ரஞ்சித்தைப் பற்றி சுருக்கமாகக் கிருஷ் கூற, அதிர்ச்சியில் உறைந்து போனாள் தர்ஷு.

ரஞ்தித் நல்லவன் இல்லை என்று புரிந்து கொண்ட வைஷாலி , தர்ஷினியைப் பார்த்து ஓரளவு விஷயத்தைக் கணித்தாள்.

ஆனால் , அப்பொழுதும் எதற்காகத் தான் இங்கு வந்திருக்கின்றோம் என்று அவளுக்குத் தெரியவில்லை.

போதாக்குறைக்கு தர்ஷினி வேறு வந்ததும் ஏதேதோ சொல்லி அவளை நன்கு சுத்தலில் விட்டிருந்தாளே!

"சூர்யா எங்க ? நீ மட்டும் தான் வந்தியா ?" என்று கிருஷ் கேட்க ,

"நாங்க ஒன்னா தான் வந்தோம். அவன், வீட்டுக்குப் போயிருக்கான் இப்ப"

என்று அவள் சொல்ல , வைஷாலி எதையோ யோசிக்க , உள்ளே வந்த ரஞ்சித்தை எவரும் கவனிக்கவில்லை .

தளர் நடையிட்டு வந்த ரஞ்சித் , சேரில் சோர்வாய் அமர்ந்தான்.

"பிளான் பண்ணலன்னு சொன்னியே ? "

என்று உருக்குலைந்து உதிர்ந்த ரஞ்சித்தின் குரல் கேட்டு கிருஷ் திரும்பினான்.

"புதுசா பண்ணலன்னு தான் சொன்னேன் . இது அல்ரெடி ரெடியா இருந்தது "

அழுத்தமாகக் கூறிய கிருஷ் அவனருகே வந்தான்.

"அந்த கேம் இப்ப கன்டிநியூ ஆகுது ரஞ்சித்"

"என்ன தான் பண்ணிருக்கன்னு தெளிவா சொல்லு "

"நீ சொன்னியா எனக்கு? சரி , நம்ம ஸ்டார்ட் பண்ணுவோம் . அப்படியே கதையை சொல்லறேன் "
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
அடுத்த சில நொடிகளில் அந்த மீட்டிங் ஹாலில் லூடோ விளையாட்டு தொடர்ந்தது .

ஏற்கனவே இரண்டு காய்கள் வெட்டப்பட்ட நிலையில் இருந்த கிருஷ் , மிச்சமிருந்த இரண்டு காய்கள் கொண்டு களத்தில் இருந்தான்.

ரஞ்சித்தின் நான்கு காய்களை இவன் விரட்டிக்கொண்டிருக்கிறானா இல்லை விரட்டப் படுகிறானா என்று எவருக்கும் புரியவில்லை.

"ஸ்டார்டிங்ல நீ என்னை பயமுறுத்தப் பேசுனதை எல்லாம் அப்பவே ரெக்கார்டு பண்ணிட்டேன். அதை வாட்ஸப்ல ஃப்ரெண்டுக்கு அனுப்பி அவனை நெட்ல ட்ரெண்ட் ஆக்க சொன்னேன் "

" சரி , அப்படிப் பண்ணா என் மேல கேஸ் திரும்பும்னு
நினைச்சியோ ? "


" கண்டிப்பா. இப்ப டெக்னாலஜி வெச்சு என்ன வேணும்னாலும் பண்ணலாம் தான ?

அதான் நீ என்னோட அக்கௌன்ட்ல பிளாக் மணி போட நினைச்சது , என் வீட்ல நகைகளை பதுக்கி மாட்டி விட நினைச்சது , இதெல்லாம் வெச்சு என் இமேஜ கெடுக்கப் பார்த்தது எல்லாமே உலகத்துக்குத் தெரியவரும்னு நம்புனேன்"

" நம்பிக்கை ... அதானே எல்லாம் . சரி , மேல சொல்லு."

"இத்தனை நாளா நான் பட்ட அவமானம் எல்லாம் இத்தோட போகும்னு பாத்தா , என் ஃப்ரெண்ட் என்கிட்ட வெரி சாரின்னு சொல்லிட்டான் .

இப்ப அந்த ரெகார்டிங் என் ஃபோன்லேயே காணோம். ஒன்னுமே புரியல எனக்கு "

"புரியலையா ? அதே டெக்னாலஜி தான் . உன் ஃபோன xnspy ஆப் வெச்சு டிராக் பண்ணிட்டேன். நீ என்ன மெஸேஜ் , யாருக்கு அனுப்பறன்னு எல்லாமே என் கண்ணுக்குத் தப்பாம தெரியும். பார்க்கறியா !! "

என்ற கிருஷ் அவனது ஃபோனை எடுத்துக் காட்ட , சொன்னதுபோல் ரஞ்சித் இதுவரை செய்த மெசேஜ் , கால் அனைத்தும் கிருஷ்ஷின் ஃபோனில் தெரிய , அதிர்ச்சியில் அரண்டு போனான் ரஞ்சித் .

"இதெல்லாம் ...எப்ப பண்ண?? "

"நீ எப்படி யோசிப்பன்னு தெரிஞ்சு, முன்னாடியே செட் பண்ணிட்டேன்.

நீ இதை கண்டுபிடிக்கற அளவுக்கு புத்திசாலி இல்லன்னு எனக்குத் தெரியும்டா "

பின்னந்தலையைக் கோதிக் கொண்ட கிருஷ் வெற்றிப் புன்னகை வீச ,

"அப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பயந்த மாதிரி இருந்தியே !! "

"நடிப்புதான் உன்கிட்ட நான் தெரிஞ்சுகிட்ட பெரிய படிப்பு. இத்தனை நேரம் நீ சொல்லற தோஸ்த், பிளாக் மணியை உன் அக்கௌன்டல லாக் பண்ணிருப்பான் "

என்று கூறியபடியே ரஞ்சித்தின் ஒரு காயை வெட்டினான் .
" டேய் , வேணாம் ராகவ்.


இது ரொம்ப மோசம்" என்ற ரஞ்சித்தை நோக்கி உதடைப் பிதுக்கினான் கிருஷ்.

'போடா நீ பண்ணது மட்டும் ஆசம் பாரு.'

அப்பொழுது ரஞ்சித்திற்கு வந்த ஃபோன் கால் செய்தியை உறுதிப்படுத்த மேஜையின் மேல் ஓங்கி அடித்தான் ரஞ்சித்.

வைஷாலியும் தர்ஷினியும் சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர் .

தர்ஷினி , ஷாலுவிடம் மேலோட்டமாக ரஞ்சித்தைப் பற்றிக் கூறிவிட்டிருந்தாள் .

ஆக , ஓரளவு நடப்பைத் தெரிந்து கொண்டாள் வைஷாலி.

அடுத்தடுத்து கிருஷ் தாயம் போட்டு அவனுடைய காய்களை மீட்க , இப்பொழுது ரஞ்சித்தின் காய்கள் அஞ்சி ஓடத் துவங்கின .

"ஒரு த்ரீ போட்டா , உன்னோட செகண்ட் காயினை வெட்டிடலாம் . லெட்ஸ் ஸீ "

தாயக்கட்டையை கிருஷ் வேகமாக உருட்டிப் போட , அதிர்ஷ்டம் போல் மூன்று வந்து ரஞ்சித்தைக் கொன்றது .

" இப்ப சொல்லு , நான் வேற காயின் மூவ் பண்ணவா , இல்லை இதை வெட்டவா ?? "

"வேற மூவ் பண்ணு " என வேகமாகக் கூறினான் ரஞ்சித்.

" ஆஹான் , ஆனா எனக்கு இந்த மூவ் தான் பிடிச்சது "

என்று சொல்லி இரண்டாவதையும் வெட்டினான்.

அநாமத்தாகப் பல மூட்டை நகைகள் ரஞ்சித்தின் வீட்டில் போடப்பட்டன .

இவ்வாறே செல்ல , கிருஷ்ஷிடம் இருந்து தப்பித்தால் போதுமென்று பதட்டத்துடன் விளையாடிய ரஞ்சித் , கிருஷ்ஷின் காய்களை வெட்டக் கிடைத்த வாய்ப்பு சிலவற்றைக் கவனிக்காமல் விட்டான்.

" அப்பவே இந்த மூவ் பண்ணிருந்தா என்னோட காயின் காலி ஆகியிருக்கும். இப்ப பாரு, அது உன்ன வெட்டியே தீருவேன்னு வருது. "

மூன்றாவதும் வெட்டப்பட , ஒரே ஒரு காயை வைத்துக் கொண்டு ரஞ்சித் இருந்தான்.

"ஹ்ம்ம் , இப்ப பிரெஸ் மீட்ல உன்னைப் பத்தி நியூஸ் வரப் போகுது ரஞ்சித். லைவ் டெலிகாஸ்ட் பாரு "

என்று அங்கிருந்த எல்.இ.டி யை ஆன் செய்தான் கிருஷ்.

"பல்வேறு மோசடி செய்துள்ள தொழிலதிபர் ரஞ்சித் குறித்த விவரங்கள் அம்பலம் .

அவனின் நண்பர்கள் வாக்குமூலம் தந்ததில் இருந்து வெட்டவெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி தரும் சம்பவங்கள்.

தலைமறைவாக உள்ள ரஞ்சித்தைப் போலீசார் தேடுகின்றனர் "

எல்லா சேனல்களும் இதையே ஒளிபரப்ப , வியர்த்துக் கொட்டியது ரஞ்சித்திற்கு.

"இந்த லாஸ்ட் காயின நீ காப்பாத்திக்கோ ரஞ்சித் . அது எஸ்கேப் ஆனா , நீ சேஃப். இல்லன்னா, நீ இங்க தான் இருக்கன்னு சொல்ல வேண்டி இருக்கும் "

என்று சொன்ன கிருஷ் , தர்ஷினியை நோக்கி ,

" ராஜஷேகரும் அதுல இன்வால்வ் ஆகியிருக்கார் தெரியுமா? "

என்று கிருஷ் கைகளை இறுக மூட , இன்னமுமே அதிர்ந்தாள் தர்ஷினி .

தன்னுடைய தந்தை தான் அது என்றே தெரியாமல் வைஷாலி கோபப்பட்டுக் கொண்டிருந்தாள்.

இதெல்லாம் நிகழும் என்று கணித்திருக்காத ரஞ்சித் , பித்துப் பிடித்தது போலானான் .

மூச்சே விட முடியாமல் ரஞ்சித் பேச்சற்று இருக்க , ஊரிலே அவனைப் பற்றிய பேச்சாகவே இருந்தது .

வேறொரு கேஸில் தீவிரமாகக் களம் இறங்கியிருந்த ராஜஷேகர், இது எதையும் அறியாமல் , தான் சிக்கியது உணராமல் இருந்தார்.

எதிர்பாரா நிகழ்வுகள் , எதிர்பார்ப்புடன் கூடிய விதத்தில் , எதிர்பாரா நேரத்தில் நடப்பதே காலத்தின் கட்டாயம் .

விதியை மதியால் வெல்லலாம். ஆனால் , சதியே விதியானால் !! அதை வெல்வதற்குள் நம் விதி , தானாகவே முடிந்துவிடும்.

ஆகையால் விதியை வெல்ல நினைக்காமல் விதியை நாமே விதிக்கும்படி செய்ய வேண்டும் .

இங்கே , அவரவர் விதியை அவர்களே நிர்ணயம் செய்கிறார்களா இல்லை நிமிர்ந்து நிற்க முயல்கிறார்களா என்று பார்க்கலாம்.

சொக்கட்டான் பார்வை தொடரும்...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top