• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலவைக் கொண்டு வா -3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அனைவருக்கும் வணக்கம்.

கடந்த இரு அத்தியாயங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ், சைலண்ட் ரீடிங் மூலம் ஆதரவு தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலவைக் கொண்டு வா மூன்றாவது அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்.

வாருங்கள்.

படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
3514.jpg
 




Last edited:

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நிலவைக் கொண்டு வா – 3



மேகத்தில் ஈரம் போல், கண்ணுக்குள் நீர் ஏனம்மா?

பூமிக்குள் வைரம் போல், நெஞ்சத்தில் நீ தானம்மா

சோகங்கள் சொல்லாமல் ஓடட்டும் காதல் பெண்ணே

சொந்தங்கள் போகாமல் கூடட்டும் ஊடல் பெண்ணே

இது காதல் ராகமே, புரியாத மோகமே........



வதனியின் நினைவால் உறங்காதிருந்தவன், கடந்த முறை இங்கிருந்து செல்லும்போது அவளின் ஈரம் படர்ந்த கண்களிலிருந்து, கண்ணீர் கீழே விழாமல் இருக்க, தனக்குள் மூச்சை ஆழ்ந்து இழுத்து சரி செய்ததை நினைவு கூர்ந்தபடி விடியலில் படுக்கையை விட்டு எழுந்தான்.

‘ஊரிலிருந்து அவள் இங்கு வர எப்படியும் மதியமாகி விடும்’ என எண்ணியவாறு கிளம்பினான்.

நர்சரி மற்றும் இறால் பண்ணை வரை சென்று வருவதாகத் தந்தையிடம் கூறிவிட்டு புறப்பட்டான்.

படுக்கையில் கண் விழித்தபடி, பகலவனின் வருகைக்காக காத்திருப்பது பரீட்சைக்கு படிக்க அல்ல. தன் வயதொத்த வானரங்களின் (‘இப்டி தான் அம்மாச்சி சொல்லுவாங்க’) வரவிற்காக எழுந்திருந்தாள்.

தனது தாயிற்கு தெரியாமல் அறையை விட்டு வெளி வந்தவள், பல் தேய்த்து, முகம் கழுவி அவளின் அன்றைய காலையை தனது விருப்பம்போல் விரட்ட தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வீட்டின் காம்பவுண்ட் கேட் அருகே அமர்ந்து தனது வேலையினை கவனிக்க ஆரம்பித்தாள்.

‘எந்த மனுசரும் நா வெளில போற வர என்னய பாத்ரக்கூடாது.... பாத்தாலும்.... அவங்க கண்ணுக்கு நான் தெரியக்கூடாது....’

பரீட்சைக்கோ, பள்ளி நாட்களிலோ அதிகாலைப் பொழுதில் எழாதவள், இன்றைய அவர்களது முக்கிய பணியான தோப்பில் உள்ள மாங்காய்களை மரத்தில் இருந்து கல்லால் அடித்து விழ வைக்க உண்டிகோல் செய்து கொண்டிருந்தாள்.

மரம் ஏறுதல் கூடாது என வீட்டில் கண்டிப்பாகச் சொல்லிவிட, அதற்கான மாற்று ஏற்பாடு தான் அவள் கைவசம் இருப்பது.

‘என்ன, இன்னும் யாரையும் காணோம், இவங்க வந்து நம்மள கூட்டிட்டு போறதுக்குள்ள, வீட்டுல இருக்கிற டான்ஸ் (Dons) எல்லாம் கோழி குஞ்சை கூடைக்குள்ள அடைக்கிற மாதிரி வீட்டுக்குள்ள போட்டு என்னய அடைக்கப்போறாங்க... கடவுளே.... பின் கட்டுல வேல சீக்கிரமா முடிஞ்சிறக்கூடாது....’

பால் கறக்க டிப்போவில் இருந்து வந்துவிடுவார்கள் என்பதால் முதலில் ராஜமனோகரி நான்கு மணிக்கு எழுந்து வெளி கேட்டை திறந்து விடுவார், அதன் பின், வீட்டில் வேலை செய்பவர்கள் ஒவ்வொருவராக வந்து தத்தமது பணிகளைச் செய்ய ஆரம்பித்துவிடுவர் என்பதால் அவளின் அத்தை துர்காவும் எழுந்து அவர்கள் செய்ய வேண்டியதை பிரித்து கொடுப்பார்.

ஒய் வடிவ கவட்டை கம்பில் பெல்ட்டை வைத்து இறுக்கமாக கட்டி முடித்தாள், வதனா.

‘அப்பாடி, உண்டிகோலு ரெடி’

“கவகதகனா கவகதகனா..... கநா கங் கக கவ கந் கது கட் கடோ கம்... கநீ கவா....... கநே கர கமா கச் கசு”

‘அப்பாடி... வந்துட்டாய்ங்க...’

“கவ கரே கன்...”

வதனா..... வதனா..... நாங்க வந்துட்டோம்... நீ வா நேரமாச்சு என்று அழைப்பு வந்தவுடன்... அவளது அடுத்த கட்ட தேவைகளுக்குரிய அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு விரைந்தாள்.

வீட்டில் தனது பெயரை அழைக்கும் சத்தம் கேட்டு அவளின் அம்மாச்சி மற்றும் அத்தை வந்தால், இன்றைய நாள் அவர்களின் நாளாகிப் போகும் என்பதால் அலார்டாக இருக்கும் வதனியின் ஏற்பாடு இது.

ஒரு நபர் நுழையக்கூடிய அளவில் உள்ள பெரிய கேட்டுடன் இணைந்திருக்கும் சிறு கேட்டைத் சத்தம் வராமல் திறந்து வெளியே சென்று, மீண்டும் சத்தம் வராமல் பழையபடி வைத்துவிட்டு தனது சகாக்களுடன் சென்றாள்.

சற்று தூரம் சென்றபின், “என்ன .... இன்னிக்கு ஃப்ர்ஸ்ட் எங்க போலாம்?” என வதனி கேட்க

“ரோட்டோரமா இருக்கிற புளிய மரத்துல உதிந்திருக்ற புளியம்பழத்த பொறக்குவோம்...”

“நீங்க பொறக்கி வீட்டுக்கு எடுத்துட்டு போவீங்க..... அத வச்சு நானென்ன செய்ய?”, என்றாள் வதனா.

“இல்ல பனங்காட்டு பக்கம் போயி நொங்கு பொறக்குவோம்..”

“தோப்புல போயி மாங்கா அடிப்போம்”

‘ஆளாளுக்கு ஒண்ணு சொல்ராய்ங்க’ என யோசித்த வதனா, “பனங்காடு மொதல்ல போவோம்”, என்றாள்.

அறுவர் கொண்ட குழு, நுங்கு எடுக்க பனங்காட்டை நோக்கி பயணித்தது.

வதனா எனும் சந்திரவதனி, கோடை விடுமுறைக்காக தனது அம்மாச்சி வீட்டிற்கு வந்திருக்கிறாள். வருடமொரு முறை அங்கு வந்து சென்றாலும், அந்த ஊரின் லேஅவுட் அவளுக்கு அத்துபடி. மேலும், அங்கு எவ்வாறு தனது பொழுதை இனிமையாகக் கழிக்கலாம் என்பதை அறிந்தவள்.

அவளது தாய் கீதாஞ்சலி, வாலில்லாத தனது மகளால் உண்டாகும் பிரச்சனைகளைத் தவிர்க்க எண்ணி தனியாக எங்கும் அனுப்பமாட்டார். அதே போல், அவளது அத்தை துர்காவும் இவளின் அடாவடிகளை அறிந்ததால் மிகவும் கண்டிப்போடு இருப்பார்.

சந்தன நிறம், திருத்தமான வட்ட முகத்தில், வில் போன்ற அடர்த்தியான புருவங்கள், மை எழுதியது போன்ற இமைகளுக்குள் துறு, துறு கண்கள், சிவந்த நிறத்தில் செப்பு உதடு, எடுப்பான நாசி.

தோற்றம் மற்றும் ஆடைகளை வைத்தே, வெளியூரிலிருந்து அவள் வந்திருப்பதை உணர்ந்து கொள்வர், அக்கிராம மக்கள்.

அணில் கடிக்கும்பொழுது மரத்திலிருந்து கீழே தவறி விழுந்திருக்கும், நுங்குள்ள கோந்தைகளை ஆளுக்கொரு பக்கமாகச் சென்று எடுத்து வந்து ஓரிடத்தில் வைத்தனர்.

“போதும்பா.... எல்லாரும் வாங்க..”

“இன்னும் கொஞ்சம் எடுத்துட்டு வந்து உக்காருவோம்”

“ஏய், ரம்யா....., நீ இங்கயே உக்காரு...”

“நான் மட்டுமா ?”

“நாங்க இன்னொரு ரவுண்டு போயிட்டு வந்தவுடனே ஆரம்பிக்கலாம்...”

“அது வரை நானென்ன செய்ய?”

“சின்ன அருவாவ வச்சு.. கண்ணுக்கு மேல லைட்டா எல்லா கோந்தையையும் சீவி வையி....”, என்றவாறு சென்றுவிட்டனர்.

கையில் ஒன்றிரண்டு கோந்தைகளுடன் அவர்கள் வர , அனைவரும் சேர்ந்து கண் தெரிந்த இடத்தில் கை பெருவிரலால் நுங்கை லாவகமாக திறந்து, பேசியபடி குடித்தனர்.

அதிகாலையில் எழுந்து ஒன்றும் குடிக்காமல், சாப்பிடாமல் வந்ததில் அனைவருக்கும் நல்ல பசி. காலை உணவாக நுங்கை சாப்பிட்டதாக பேர் செய்து விட்டு, அங்கிருந்து தோப்பை நோக்கி நடந்தனர்.
 




Last edited:

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
உண்டிகோல் சரியாகக் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்த்து அதன் பின் அதை பயன்படுத்திய போது முதலில் இலக்கை எட்டாத கல் பிறகு சற்றே கை கொடுக்க ஆரம்பித்தது.

அவரவர் கையில் இருந்த உண்டிகோலால் அவரவர்க்கு வேண்டியதை அடித்து கீழே விழுந்தவற்றை எடுத்தனர். அப்போது, விழுந்ததை எடுக்கக் குனிந்த ரம்யா...ஆ...... என்று கத்த....

“ஏய், நிப்பாட்டுங்க..”, என்றபடி அவள் நின்ற இடத்தை நோக்கிச் சென்றவர்கள்.....

“எங்க அடிபட்ட இடத்தை காமி...”

“பாத்து போயி எடுக்கமாட்டியா.... ரம்யா?” ‘இவளுக்கு கொஞ்சம் மூளை கம்மி யா...’

“இல்ல, நான் அங்க போனதுக்கப்புறம்..... யாரோ உண்டில அடிச்சிருக்காங்க”

“நல்லா அழுத்தி தேயி”

“சரி, நானே தேய்க்கிறேன்”

“சரி, போதும் இன்னிக்கு, வாங்க தோப்ப விட்டு வெளியில போவோம்”

கையில் இருந்ததை எடுத்துக் கொண்டு, சிலர் மா, கொய்யாவைக் கடித்தபடி பேசிக்கொண்டே வந்தபோது... வதனாவைத் தேடியபடி எதிர்புறமாகச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான் ரகு.

அதைக் கவனித்த வதனா, “எங்க வீட்ல அதுக்குள்ள தேடறதுக்கு ஆள் அனுப்பிட்டாங்க”

“யாரு வந்தா”

“எங்க ரகு மச்சா...”

“யாரையும் காணோம்”

“அந்த பக்கமா தேடி போறாங்க......யாராவது என்னைய பாத்துட்டு போயி சொல்றதுக்குள்ள நானே வீட்டுக்கு போறேன்”

“அப்ப எப்ப வருவ”

“வருவேன்.... எல்லாரும் அசந்த நேரம் பாத்து.....” என்றவள் சிரித்தபடி வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

‘ரகு .... கொகு.... அதுக்குள்ள ... தேடி வந்துட்டாக...’

இரண்டு தெரு தாண்டியவுடன், அருகே ஒரு சைக்கிள் வந்து நிற்க,

‘பாட ஆரம்பிச்சிருமே’

“டெய்லி வேற வேற இடத்துக்கு ஏன் போற”

‘ஒரே இடத்துக்கு போனா..... அப்பவே என்ன கண்டுபிடிச்சுருப்பியே... (மரியாத தெரியாத புள்ள இல்ல நானு....... வெளியில ரொம்ப மரியாதையா நடத்துவேன்.... மனசுக்குல்ல கொஞ்சம் அப்டி.... இப்டி தான்....)’

“அவங்க எங்கங்கல்லாம் போனாங்களோ..... அங்க... கூட போனேன்”

“வண்டில ஏறு”

‘உத்தரவு ....’ “ஏறிட்டேன்”

“வதனி .... இவ்வளவு தூரமால்லாம் வராதே”

‘கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கோ?’ “சரி, மச்சான்”

“உனக்கு தான் விளையாட ப்ரவீண் இருக்கான்ல, அவங்கூட விளையாடு, இதுங்க கூடல்லாம் சேராதே...”

‘அவன் வயசென்ன, ஏன் வயசென்ன?... நானென்ன சின்ன புள்ளயா...... இப்போ உன்ன ஏங்கூட விளையாட கூப்டா வருவியா.... உனக்கு ஒரு நியாயம்.... எனக்குனா அநியாயம்.........’

“அவன் ட்டாய்ஸ் வச்சு விளையாடுவான், அதெல்லாம் சின்ன புள்ளைங்களுக்குனு அம்மா சொல்லிருக்காங்க...”

‘இந்த அத்த ... வேற...’ , “இப்பொ போயி என்ன விளையாண்ட...?”

“நொங்கு பொறக்குனோம்.”

“நுங்கு வேணும்னு கேட்டா...... ஒரு காட்டு நுங்க வீட்ல கொண்டு வர ஆளு இருக்கு..... அதுக்காக இவ்வளவு தூரம் வரணுமா?”

‘விடாது கருப்பு’ ...... “அதுல டேஸ்ட் நல்லா இல்ல ...”

“சாக்கு சொல்லாத....”

“மச்சான், சைக்கிள் நான் ஓட்டவா?.... நீங்க பிடிங்க...”

‘கேடி பேச்ச மாத்துற......’ “வெயில் ஏறிருச்சு, சாயந்திரமா முடிஞ்சா பாக்கலாம்....”

‘அதானே.... நான் சின்ன புள்ளயா இருந்தப்போ இவனுக்கு ட்டாய் மாதிரி வச்சிருந்துட்டு...... வளந்ததும் சைக்கிள் ஓட்ட கூட ஹெல்ப் பண்ண மாட்டிங்குது இந்த நெட்ட கொக்கு....’

“இப்பொ கொஞ்ச நேரம் ஓட்டுரேனே....”

“ஒண்ணு வேணா.... காலைல எழுந்ததுல இருந்து, அப்பத்தா உன்ன தேடிட்டு இருந்தாங்க..... அதான் உன்ன தேடி வந்தேன்”

‘போல்டு லேடி தான் நம்மள விளையாட விடாம பண்ணதா?’, என எண்ணியபடி வீடு வந்து சேர்ந்தாள், பத்து வயது நிரம்பிய வதனி.

அவனது அப்பத்தா வதனியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சிறு வயதில் அவனுக்குக் கொடுத்த போது, ஆர்வமாக, அதட்ட, கண்டிக்க என பெரிய மனித தோரணையை அவளிடம் காட்டிவன்தான் நந்தன்.

தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படிப்பை முடித்து விடுமுறைக்கு வந்திருப்பவனுக்கு, தோழர்களுடன் விளையாட, வெளியே செல்ல வதனியை தடையாக உணர்ந்ததால், அவளைத் திட்டுவான்.

எதற்கும் அசறுபவளல்ல. அவள் வயதையொட்டியவர்களுடன் இணைந்து விளையாட காம்பவுண்டிற்குள் அழைத்து வந்ததை வீட்டின் பெரியவர்கள் விரும்பவில்லை. அதனால், அவள் அவர்களுடன் சென்று விளையாடி வருவாள்.

நர்சரி சென்றுவிட்டு, இறால் பண்ணையில் உள்ள வேலைகளை முடித்த போது மணி இரண்டு. மீதமுள்ளவற்றை நாளை வந்து கவனிக்கலாம் என எண்ணிய ரகுநந்தன் வீட்டிற்கு கிளம்பினான்.

அதற்குள் அவன் தாயிடமிருந்து போன் வந்தது.

“என்னம்மா..”

“காலையில கூட ஒண்ணும் சாப்பிடல.... ஏன்பா ரொம்ப வேலையா.... இன்னும் வராம இருக்கியே?”

“கிளம்பிட்டேன்மா....” என்றவாறு அவனது BMW வை ஸ்டார்ட் செய்தான்.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top