• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலவைக் கொண்டு வா - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அனைவருக்கும் வணக்கம்

கடந்த மூன்று பதிவுகளுக்கும், லைக்ஸ், கமெண்ட்ஸ், சைலண்ட் ரீடிங்க் மூலம் ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

நான்காவது பதிவுடன் வந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களின் கருத்துகளைத் தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாருங்கள்..........

நிலவைக் கொண்டு வா - 4
3514.jpg
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நிலவைக் கொண்டு வா – 4



நானும் ஓர் தென்றல் தான்

ஊரெல்லாம் சோலை தான்

எங்குமே ஓடுவேன், நதியிலே நீந்துவேன்

மலர்களை ஏந்துவேன், எண்ணம் போல் வாழுவேன்

தந்தன தான தன தந்தன தானனா

இளமை காலம் மிக இனிமையானது

உலகம் யாவும் மிக புதுமையானது



அதிகாலையில் மானகிரி வந்த சிதம்பரம் குடும்பத்தினரின் வருகை, மனோகரிக்கு மட்டுமல்லாமல் மற்ற உறவுக்கார நல் உள்ளங்களுக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகான மகிழ்வான சந்திப்பாக அமைந்தது.

உறவினர்கள் நலம் விசாரிக்க வந்தபடி இருந்ததால், அந்த வீட்டிற்குள் கலகலப்பும், குதூகலமும் இயல்பாக வந்திருந்தது.

காதம்பரியின் ஒன்பதாம் வகுப்பு விடுமுறைக்குப் பின் இப்பொழுது தான் குடும்பமாக அவர்களால் ஊருக்கு வர இயன்றது. இடையில் சிதம்பரம் மட்டும் வந்து செல்வார். அவருக்கு அலுவலகத்தில் விடுமுறை கிடைக்கும்போது, காதம்பரிக்கு பள்ளிக்கல்வி, பிறகு கல்லூரிக் கல்வி என வர இயலாத சூழல்.

பயணம் செய்த அலுப்பு நீங்க குளித்து, காலை உணவிற்கு பிறகு ஓய்வு எடுத்தனர்.

கமலம் வழக்கம்போல மாமியாருடன் ஊர்க்கதைகளை பேசியபடி மதிய சமையலுக்கான பணிகளுக்கு உதவி செய்தார்.

“ஏம்மா, அன்னிக்கு ஜாதகமெல்லாம் வந்ததா சொன்னியே!”

“அத்த, அங்க வந்ததுல ரெண்டு பொருந்திச்சு ..... போட்டோல எல்லாம் பசங்க நல்லா இருக்குது (மரியாதை), குடும்பத்தை விசாரிக்க சொல்லியிருக்கேன் அத்த, அவங்களுக்கும் நம்ம பொண்ண புடிக்கணும், அவங்க என்ன எதிர் பாக்குறாங்கனு பாத்துட்டு மேற்கொண்டு பேசுவோம்..........”

“நானும் இங்க சொல்லி வச்சுருந்தேன் கமலா....”

“எதுவும் வந்துருக்கா அத்த...?”

“ஆமாம்மா........ ரெண்டு ஜாதகம் கொண்டு வந்து கொடுத்திருந்தாங்க ..... பொருத்தம் பார்த்துட்டேன் ...... புதுக்கோட்டை எட்டு பொருத்தம், உச்சிபுளி ஒன்பது பொருத்தம் இருக்கு........”

“வீடெல்லாம் விசாரிச்சீங்களா...”

“புதுக்கோட்டை அந்நியம், உச்சிபுளி சொந்தம் தான்....... நமக்கு தெரிஞ்ச குடும்பந்தான்”

“மாப்ள போட்டோ இருக்கா அத்த...”

“இருக்குமா..... வந்து எடுத்து தாரேன்.... இரு.....”

“படிப்பு, வேல எல்லாம் விசாரிச்சிகளாத்த...?”

“படிப்பெல்லாம் இருக்கு, சென்னைல தான் பையனுக்கு வேல.... வெளிநாட்டுக்கு எல்லாம் போயி வராணாம்”

“குடும்பம் எப்டித்த...?”

“மூணு பசங்க.... கடைசி பையனுக்கு தான் பாக்குறாங்க.... ராஜமனோகரினு எங்க மதினி அங்க கீழக்காட்டு பக்கமா கல்யாணம் பண்ணிக் கொடுத்தது.... மதினிக்கு ரெண்டு பொண்ணு, ஒரு ஆணு ....அதுல இது மகன் புள்ள பேரன் தான்... ”

“மகளுகளுக்கு பொண்ணுலாம் இல்லயா...?”

“ரெண்டு மகளுக்கும் பொண்ணு இருக்கு...... ஏழெட்டு வருசம் சின்னதுகளாம்....... பெரிய பையனுகளுக்கு நாலு வருஷம் வித்தியாசத்துல பண்ணிட்டு, இந்த பையனுக்கு மட்டும் ரொம்ப வயசு வித்யாசத்துல பண்ண வேணாம்னு, வெளில பாக்குறதா சொன்னாங்க...”

“அப்ப இங்க வந்ததோட அப்டியே மாப்ள வீட போயி பாத்துட்டு வந்துரலாம்ல அத்த”

“மொதல்ல அவங்களுக்கு பொண்ணு பிடிச்சிருந்தா, மேற்கொண்டு பாக்கலாம். இன்னிக்கு மதினிக்கிட்ட பேசுறேன்”

மதிய உணவிற்கு பின், மாப்பிள்ளை வீட்டினரை அழைத்துப் பேசினார் மனோகரி. பெண் பார்க்கும் நிகழ்வை திருவாடானை, ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் வைத்துக்கொள்ளலாம் என இரு குடும்பத்தாரும் முடிவு செய்தனர்.

“காதம்பரி..... இங்க வாடா...”

“என்னப்பத்தா....?”

“உனக்கு சீக்கிரம் கல்யாணத்த வச்சுரலாம்னு ..... நினைக்கிறோம்... இதுல உனக்கு எதுவும் அபிப்ராயம் இருக்காடா”

“பெரியவங்க இஷ்டம் அப்பத்தா.... ஆனா.....”

“உனக்கு ஜாதகம் பாத்துருக்கோம்.... மாப்ள வீட்ல உன்ன கோவில்ல வச்சு பாக்க ப்ரியபடறாங்க.... அதனால.... நாளை மறுநாள் திருவாடானை போறோம்”

“எனக்கு இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமே..... அப்பத்தா.....”

“வயசு தான் இருவத்தி மூணு ஆரம்பிச்சுருச்சே...... உன் வயசுல.... எனக்கு எல்லாப் புள்ளைங்களும் பொறந்துட்டாங்க....”

“அதுக்காக என்னய சீக்கிரமா வீட்டை விட்டு விரட்ட பாக்குறீங்க.....”

“அப்டியில்ல தாயீ...... நாங்க நல்லா இருக்கும்போதே உனக்கு கல்யாணம் பண்ணிட்டா நல்லதுன்னு நினைச்சோம்”

“சரி நீங்க எல்லோரும் முடிவு பண்ணிட்டீங்க..... உங்க இஷ்டம் போல செய்ங்க....”

மகன், மருமகள் மற்றும் பேத்தியிடம் மாப்பிள்ளையின் போட்டோவை பார்க்க கொடுத்தார்.

சிதம்பரம் மற்றும் கமலாவிற்கு மாப்பிள்ளையை பிடித்துவிட்டது. காதம்பரி பார்த்தவுடன் அவர்களிடமே போட்டோவைக் கொடுத்துவிட்டு அகன்றாள்.

நேரம் கிடைத்தபோது, மாப்பிள்ளையின் ஃபேஸ்புக் ஐடி (ஹோரஸ்கோப்ல இருந்து சுட்டது) மூலம் மாப்பிள்ளையின் கல்வி, தற்போதைய வேலை போன்ற விவரங்களை கண்டு அறிந்தாள். அதில் சில போட்டோக்கள் மாப்பிள்ளை யுஎஸ்ஸில் இருந்து நண்பர்களுடன் எடுத்து, ரீசண்டாக அப்லோட் செய்து இருந்ததை பார்த்தாள்.

அப்பாவிடம் சென்று “ அப்பா , யாரெல்லாம் பொண்ணு பாக்க வருவாங்க...?”

“பையனோட அம்மா, அப்பா, அப்பத்தா, அத்தை குடும்பம், மாமா குடும்பம்...... ஏன்மா?”

“இல்லப்பா.... சும்மா கேட்டேன்”

“மாப்புள்ள ஆன்சைட் விசயமா யுஎஸ்ல இருக்கார். இன்னும் ஒரு மாசத்துல சென்னை வந்துருவார்மா...” மகளின் விடை அறிய விரும்பும் வினா இதுவாகத்தான் இருக்கும் என்பது அந்த தந்தையின் கணிப்பு.

அடுத்த நாள் குலதெய்வ கோவில் விழாவில் கலந்து கொண்டனர்.

மறுநாள், காதம்பரிக்கு சற்றே நெர்வசாக உணர்ந்தாள். முதல் முறையாக பெண் பார்க்கும் படலம். அதிலும் மாப்பிள்ளை இல்லாமல்..... ஒரு மணி நேர பயணத்தில் மாலை ஐந்து மணிக்கு திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.

பூமிக்கு வந்த சூரியன் ஈசனை நீலரெத்தினங்களால் அபிஷேகம் செய்து வழிபட்ட தலம், திருவாடானை (ஆதிரெத்தினேஸ்வரம் - பழைய பெயர்)
 




Last edited:

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டாரும் வர, அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு அனைவரும் அமர்ந்து பேசினர்.


'ஆதிரெத்தினேஸ்வரம்'



* இயற்கை (இறை)....

கொண்ட முயற்சியால்

பகலவனை உருவாக்கி.......

பற்பல சூட்சமங்களை .....

தந்ததால் வந்தது ஒளி!!!

* வளங்களை,

தாவரங்களை,

உயிரினங்களை,

ஒப்பற்ற அறிவுடன்

சீரான வேகத்தில் இயங்(க்)குவதில்

உருவாக்கும் வித்தையிலே...

வித்தகன் இந்த பகலவன்!

* கா்மத்தினை கடனாக்கி....

கடமை மறந்து

கர்வம் வந்த வேளை...

இழந்த ஒளி...

இயலாமையைச் சொல்ல..

* சரிந்த தன் நிலை உணர்ந்த ஞாயிறு...!

* சர்வமும் இயற்கையெனும் இறை - என

இடர்களைய..... இயற்கையை

இரந்த ரவி!

* உருவான இடம் நாடி....

அகம்பாவம் அடியோடு அகல

தன் நிலை மீள

அண்டிய ஆதித்யன்!!

* பார் முழுதும்

பம்பரமாய் சுற்றி

பலா் போற்ற!!!

வாழ்ந்த ஒளியான வாழ்வை

மீட்டெடுக்க.. உவகை கொண்ட

கதிரவன்!!!

* வற்றாத வாழ்வு வாழ வழி கேட்க...


* இயற்கையெனும் பேராற்றல் (இறைவன்) ......

இரந்த உள்ளம், உவகை கொள்ள ...

* வடகிழக்கு மூலையிலே

வற்றாத நீரில் மூழ்கியெழுந்து

மகிழ்வுடனே...

தினந்தோறும்

நீலரெத்தினக்கல்

கொண்டு இயற்கையெனும்

ஈசனை பூசை செய்ய உத்தமமாம்..

என உரைக்க...

* கா்ம சிரத்தையுடன்.....

கர்வமில்லாமல் !

கர்மம் செய்ய ....

கற்றுத் தந்த ஈசனின்

ஆற்றலால்

மீண்ட சூரியன்!

* ஆதித்யன்



பூமியில் ரெத்தினக்கல் கொண்டு

இறைவனுக்கு

பகலவன் பூசை செய்த தலமே!!!

ஈசன் வாழ்ந்த தலமே...

ஆதிரெத்தினேஸ்வரர்

ஆலயம்!!!

* திருவாடானை !!!

(இது ஆலயத்தின் தல வரலாறு)


இரு குடும்ப உறுப்பினர்களும் அமர்ந்து நிதானமாக பேசி அடுத்த மாதத்தில் வரும் வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது.

“சுந்தரமுடையான்ல கல்யாணத்தை வச்சிட்டு, அப்றம் உங்க தோதுப்படி சென்னைல ரிசப்ஷன் வச்சுக்கலாம்”

“ஒரு மாசத்துல மகால் எதுவும் கிடைக்காது, ஹால் எதாவது அரேஞ்ச் பண்ணிக்கலாம்”

“சென்னைல எங்க சைட்ல நூத்தம்பது பேரு வருவாங்க, உங்க சொந்த பந்தம், ஆபீஸ்ல இருந்து எவ்வளவுனு பாத்துட்டு ஹால் பாருங்க”

“மாப்ள வந்தவுடனே சொல்லுங்க, நேரில வந்து பாக்குறேன்”, என்றார் சிதம்பரம்.

“இன்னிக்கு பேசிட்டு சொல்றேன்”

“வேற எதுவும் எதிர்பார்ப்பு இருக்குனா சொல்லுங்க...”

“மத்த ரெண்டு பசங்களுக்கும் அவங்கவங்க வசதிக்கு ஏத்தமாதிறி செஞ்சாங்க.... அதுபோல உங்க பொண்ணுக்கு நீங்க நினச்சத செய்யுங்க....

பசங்களுக்கு தொழில் ஊருல இருந்தாலும், கொஞ்ச காலத்துக்கு அவங்க ஆசைப்படி வேல பாக்கட்டும்.... அப்றம் தொழில வந்து கவனிச்சிக்கட்டும்னு சொல்லிட்டேன்”

“சீறு சாமானெல்லாம் எங்க கொண்டு வரது”

“சென்னைல உள்ள சின்னவனோட பிளாட்ல வச்சா போதும், ஊருக்கு எடுத்துட்டு வர வேணாம்”

“பொண்ணு வேல பாத்துட்டு இருக்கு, அத கண்டினியூ பண்ணணும்னு ஆச படுது”

“அது அவங்கவங்க ப்ரியம்....... சரி, அப்போ வேற எதுவும் விசயம் இருந்தா போன்ல தகவல் சொல்லுங்க.... நீங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னடியே ஊருக்கு வந்திருங்க”

என்று இரு குடும்பத்தாறும் திருமண நாளை முடிவு செய்து விட்டு கிளம்பினார்கள்.

ராஜமனோகரியின் குடும்பத்தில் காதம்பரி கோவிலில் நடந்து கொண்ட விதத்திலும், அனைவரிடமும் மிகுந்த மரியாதையுடனும், கேட்டவற்றிற்கு அமைதியாக பதிலளித்த விதத்திலும் அவளை அனைவருக்கும் பிடித்து இருந்தது.

ஆனாலும், உரியவனுக்கு முந்தைய தினம் அனுப்பிய போட்டோ மற்றும் ஹோராஸ்கோப்பின் காதம்பரி பற்றிய இதர தகவல்கள், இது வரை ‘வீ ட்ரான்ஸ்ஃபரில்’ அவனால் டவுன்லோடு செய்யப்படாமல் இருந்தது.


ராஜம் தனது வயதை காரணமாக்கி பேரனை திருமணத்திற்கு சம்மதிக்கச் செய்து இருந்தார். ஆனாலும் தினசரி இரவில் அனைவரிடமும் பேசுபவன், கடந்த இரு தினங்களாக தொடர்பு கொள்ளவில்லை.

கோவிலிலிருந்து திரும்பிய அனைவரும் பத்திரிக்கை, திருமண வைபவ விழா ஏற்பாடு, விருந்து போன்றவற்றிகான வேலைகளை பார்க்க, மேற்பார்வையிட என பிரித்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

அன்று இரவு போனில் தொடர்பு கொண்ட மகனிடம் விசயத்தினை பகிர்ந்து கொண்டனர். இன்னும் இருபது நாட்களுக்குள் வேலையை முடித்து திரும்ப வேண்டிய நிலையில் வேலைப்பளு அதிகமானதால் பார்க்கவில்லை என்றான்.

பிறகு போட்டோ மற்றும் மணப்பெண் பற்றிய மற்ற தகவல்களையும் பார்த்துவிட்டு பெரியவர்களது விருப்பம் என கூறிவிட்டான்.

அதன்பின் மகனின் வருகையை சம்மந்திக்கு தெரியப்படுத்தினார் ஹரி.

சிவகங்கையில் இருந்து திரும்பிய சிதம்பரத்தின் குடும்பத்தில் மனநிறைவு. தன் ஒரே மகளுக்கு நல்ல ஒரு குடும்பத்தில் வாழ்க்கை அமைய போவதை எண்ணி மகிழ்ச்சியுடன் திருமண வேலைகளை பார்க்க ஆரம்பித்து இருந்தனர்.

அதற்கு முன்பு, சிதம்பரம் தனது திருப்திக்காக, குணத்தில், பழக்க வழக்கம் மற்றும் தனிப்பட்ட விசயங்களில் மருமகனாக வர இருப்பவரைப் பற்றி டிடெக்டிவ் மூலம் அறிந்து கொண்டார்.

காதம்பரிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை, ஆயினும் மறுக்கும் வகையில் குறை இல்லை. ஆகையினால், அவள் அவளது அலுவலக வேலைகளிலும், கமலாவிற்கு உதவி செய்வதிலுமாக அவளுடைய நாட்களும் சென்று கொண்டிருந்தது.

அலுவலகத்தில் இருந்து திரும்பிய காதம்பரி,

“அம்மா...... எங்க ஆபீஸ் சார்பா மும்பைல நடக்குற ஃபங்சனுக்கு என்ன போக சொல்றாங்கம்மா...”, என மிகுந்த தயக்கத்தோடு கூற

“அதெல்லாம் இனி உன்ன எங்கயும் வெளிய அனுப்ப முடியாது......”, என்று கமலா முடித்துவிட்டார்.
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரோஜினி டியர்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
கல்யாணம் சீக்கிரம் mudivaayiruchu... மும்பை போவாலா kat... மாப்பிளைக்கு சம்மதமா இந்த திருமனத்தில்...???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top