• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நாங்கலாம் அப்பவே அப்படி -- 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
சென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ அடுத்த அத்தியாயம்....

நாங்கலாம் அப்பவே அப்படி - 4



IMG-20190701-WA0000.jpg



இரண்டு நாட்கள் கடந்திருந்தது. கௌதம் இங்கிருந்தே தன் அலுவல் வேலைகளை கவனித்துக்கொள்ள, ராகேஷோ தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை போல ஊரைச்சுற்றுவதிலேயே பொழுதை கழித்தான்.


மற்ற நேரமாய் இருந்தால் கௌதமிடம் வண்டி வண்டியாய் வசவுகள் வாங்கியிருப்பான்தான்! ஆனால் இப்போது அதை செய்ய இயலா நிலையில் கௌதமால் பல்லைக் கடித்துக்கொண்டு புலம்பதான் முடிந்தது.


ஒரு நேரம் கலையரசனுடன் என்றால், இன்னொரு நேரம் நம் கொரில்லா கேங்குடன் கழிந்தது. ஆம் இப்போது அவனும் கொரில்லா கேங்கில் அடக்கம். ஆனால் அதில் சேர்வதற்க்குள் பல வீரதீர சாகசங்களை செய்ய வேண்டியதாய் போயிற்று.



அதாவது அவர்களுடன் சேர்ந்து ஓணான் பிடிப்பது, மாங்காய் அடிப்பது, வீட்டிற்குள் கௌதம் குளிக்க சென்றால் அவன் வருவதற்குள் உடுத்த வைத்திருக்கும் உடையில் எதாவது குளறுபடி செய்வது, குளிக்கும் போது தண்ணீரை அடைப்பது இது போன்ற சிலபல நல்ல செயல்கள்.



இவர்கள் செய்யும் கலாட்டாவில் மாட்டிக்கொள்வது என்னவோ நாச்சியார்தான். "அம்மாடி கௌதம் ரூம்ல தண்ணி அடைச்சுகிச்சு போல இந்த வாளிதண்ணிய கொண்டு போய் வச்சிடுடா" என தன் பாட்டி கூறும் போது, சரியென தலையாட்டிவிட்டு எடுத்து செல்வாள்.



அவருக்கு தெரியும் விருந்தாளிகளை உபசரிப்பதில் குறும்புதனத்தை கைவிட்டு பொறுப்பாய் நடந்துகொள்வாள் என்று. ஆனால் இன்னொன்று அவருக்கு தெரியாதே அவர் இந்த பக்கம் சென்றதும் அவள் கண்களில் தோன்றும் கள்ள புன்னகை.


கௌதமிற்கு என்றால் அவள் எதுவும் செய்யகூடியவள். எங்கு எப்படி ஆரம்பித்தது என்றால் அது அவளுக்கே தெரியாது.


ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக அவளுக்கு பிடித்தம்தான்,அதீத பிடித்தம். சிறு வயதில் சீண்டி விளையாடிய ஞாபகம், அஞ்சுகத்தின் மூலம் கேள்விபட்ட அவன் ஆளுமைகள், தன் பாட்டியின் மேல் அவன் கொண்ட பாசம் அனைத்தும் கலந்துகட்டி அவளுள் விதைத்த நேசம் இது.


ஆனால் வெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டாள். அதற்கு வெட்கம் காரணமல்ல, பிடித்தத்தை அவனே முதலில் கூற வேண்டும் என்ற அவா.


நீ என்ன பெரிய அழகியா! பார்த்தவுடன் அவனும் உன்னை விரும்புவான் என்று எதிர்பார்க்கிறாயோ? என்று எதிர் கேள்விகேட்ட மனசாட்சியை சுடுநீர் ஊற்றி அடக்கியவள், அது அவனது விருப்பம் என் பிடித்தம் என்னோடே! யாருக்கும் தெரிய வேண்டாம். நடப்பது நடக்கட்டும்.


பார்க்காத போதுதான் அப்படியென்றால், இப்போது நேரில் இருக்கும் போதோ! பேச்சு வார்த்தைகள் அவ்வளவாக இருப்பதில்லை, பல நேரங்களில் மௌனத்திலேயே கடந்துவிடும். இதுவும் ஒரு வகை நேசமே, மனதினில் இருத்தி நினைப்பில் வாழ்வது.


அனைவரிடமும் படபட பட்டாசாக பொரிபவள் இவனை கண்டால் மட்டும் புஸ்வானமாக அடங்கிவிடுவாள். அவ்வப்போது அவன் பார்த்து வைக்கும் பார்வையில் மூச்சுக்காற்றுக்கே சிரமம் எனும் போது பேச்சு எங்கிருந்து வரும்? திட்டி பார்த்த மனசாட்சி இது திருந்தாது! என்று அடங்கிவிட இவளது கள்ள சைட்டுகள் தாராளமாக நடைபெற்றது.


இவள் இப்படியென்றால் கௌதமின் நிலை வேறு! இவளை பற்றிய சிறுவயது ஞாபகங்கள் இன்றளவும் உண்டு.


ஏனோ! எந்நேரமும் தன்னிடம் வம்பிழுக்கும் பொசுபொசுவென்று இருக்கும் அந்த குட்டி பெண்ணை அவனால் மறக்க இயலவில்லை. இங்கே வரும்போதே இப்போது எப்படி இருப்பாள் என்ற எண்ணம் எழாமல் இல்லை.


ஆனால் எப்போது அவளை பார்த்தானோ, மாலை நேர கதிரவனின் இளமஞ்சள் நிற ஒளியை போன்ற நிறத்தில், ஐந்தரை அடி உயரத்தில், கொடியிடையுடன் தாவணி பாவாடையில் பாந்தமாக இருந்தவளை கண்டு அவளா இவள்? என்னும் பாவனைதான்.


என்ன நினைக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை ஆனால் வசியம் வைத்தது போல கண்களை அவளிடம் இருந்து திருப்ப முடியவில்லை.

கண்களில் காந்தம்தான் வைத்திருக்கிறாளோ? விழிகள் கொஞ்சம் வித்தியாசம்தான் அவளுக்கு. "செங்கண்" என்பார்களே அதுபோல. அதன் உள் புகுந்து விடலாமா? என்று கூட யோசித்தான்.


"ச்சே என்ன இது இப்படி எல்லாம் யோசிக்கிறேன், ம்ஹும் என்னவோ செய்கிறாள் அவளை பார்க்காதே" என்று எச்சரித்தாலும் பார்த்தே ஆவேன் என்னும் கண்களை திரையிட்டு மறைக்கவா முடியும் அதன் போக்கில் விட்டுவிட்டான்.


அடுத்தநாள் அவள் அடித்த லூட்டிகளை பார்த்தவன் இன்னும் மீளமுடியா சுழலுக்குள் அவள் தன்னை இழுத்து செல்வதை உணர்ந்தான். அவள் மாறவில்லை. இன்னும் சுவாரசியமாய் விரும்பியே தொலையவும் செய்தான்.


கௌதம் ப்ரபாகர் அழகிய கந்தர்வனை போல தோற்றம். பரந்து விரிந்த " ஏ. கே. பி" நிறுவனத்தின் ஒரே வாரிசு. இப்போது அதன் ஒரே உரிமையான அதிபதியும் கூட,


அதனால் எந்த இடத்திற்க்கு சென்றாலும் இளம் பெண்களின் கண்களும், அதைவிட "இவன் நம் மாப்பிள்ளையாக வந்தால்? " என்று பெண்ணை பெற்றவர்களின் கண்களும் இவனை வட்டமடித்துக் கொண்டே இருக்கும். அதையெல்லாம் கண்டும் காணாமல் சிறு புன்னகையுடன் கடந்து விடுவான். அதில் சிறு கர்வம் கூட.


அதற்காக பெண் தோழிகள் இல்லாமல் இல்லை அமெரிக்காவில் படித்த போது பழக்கமானவள் " ஸ்டெல்லா" அமெரிக்க, இந்திய கலவை. ஆனால் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் கொண்ட தோற்றம். இன்னும் இணைப்பில் இருக்கும் நல்ல தோழிப்பெண்.



ஆனால் நாச்சியாரின் பார்வையோ இவனை ஆர்வமாய் தீண்டியதில்லை (அவனறிந்தவரை) தானாக அவளிடம் செல்ல வேண்டுமா என்ற ஈகோ, எனவேதான் விருப்பம் இருந்தாலும் நானாக கூற கூடாது என்ற எண்ணம். இப்படி இருவரும் போட்டி போட, சொல்லாத காதல் சேராது என்று அறியாமல் போனது யார் குற்றம்?
 




Last edited:

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
"ப்பா" ஹாலில் அமர்ந்திருந்த வீரபாண்டியின் மடியில் தலைவைத்து படுத்திருந்தாள் நாச்சியார். இரவு உணவு முடிந்து தெய்வானை சமைலறையில் இருக்க, கௌதம் பிஸினஸ் விசயமாக பேச மாடிக்கு சென்றுவிட்டான்.மற்ற அனைவரும் அங்குதான் இருந்தனர்.


"என்னம்மா"


" நாளைக்கு காரும், டிரைவரும், வேணும்பா"


"ஆமா ஊருல அடிக்கற லூட்டி பத்தாதுன்னு காரேறி போய் பம்பரம் விட போறாளாம்!! இந்த கொடுமை இங்கதான் நடக்கும்" என தெய்வானை தன்பாட்டிற்க்கு புலம்ப,


"எடுத்துக்கம்மா.. யார் யார் கெளம்பறீங்க?"

" அதுங்கப்பா ராகேஷ் அண்ணனும் இன்னும் இங்க இருக்கற இடம்மெல்லாம் பாத்ததில்லையாம் அதனால அவரு, நண்டு, சிண்டு, சுண்டு, வண்டு, கலை நீயும் வரியா? என தம்பியை வினவ...



"என்னை கலைன்னு கூப்பிடாதீங்கன்னா கேட்க மாட்டிகங்கறீங்க, பொண்ணு பேர் மாதிரி இருக்கு" என அழாத குறையாக கூற,



"ஏன்டா குட்டி நல்லாதான இருக்கு"


அதெல்லாம் தம்பியின் மேல் அளவில்லாத பாசம் கொண்டவள்தான், அவனும் அப்படியே! ஆனால் சீண்டல் குறையாது. அடிதடிகள் அலுக்காது. உடன் பிறப்புகளுடன் போராட்டம் இல்லாத சிறுவயது உண்டா என்ன?"


அத விடுடா, அவகளும் வராங்களா கேளு!"


"யாருக்கா?"


அப்பாவின் மடியில் இருந்து எழுந்து கொண்டாள். பேச்சு தடுமாறியது ,

"அதா...ன்டா கௌ...தம்"



வீரா தன் தந்தையுடன் நிலத்தை அறுவடை பற்றி பேசிக்கொண்டிருக்க, இவர்கள் பேசுவதை கவனிக்கவில்லை. அஞ்சுகம் பாட்டி மட்டுமே பேத்தியின் நிலஅதிர்வு போன்ற ஒரு நிமிட தடுமாற்றத்தை கண்டு கொண்டார். அது அறிவித்த செய்தி அவருக்கு மகிழ்வை வாரி இறைத்தது.



"ஆண்டவா இந்த விசயத்தை நல்லபடியா முடிச்சு கொடுப்பா" என்றுவேண்டுதலும் வைக்கப்பட்டது.


"அட அத்தான கேட்டீங்களா, அதெல்லாம் நான் கூப்டா வருவாங்க" என பெருமையாக சொல்ல இவளுக்கு காந்தியது. எந்நேரமும் அத்தான்,பொத்தான்னு வால புடிச்சுகிட்டே திரிய வேண்டியது.



ஏன் நீயும் திரிய வேண்டியதுதானே! என மனசாட்சியின் கேள்விக்கு பெருமூச்சு மட்டுமே பதிலாக வந்தது.


காலையில் நான் வந்துட்டேன் என்றவாறே வெப்பத்தை வாரி இறைத்தவாறே கதிரவனும் வந்தான். ராகேஷ், அரசு இருவரும் தயாராக இருக்க, நாச்சியார் கடலின் பல வகையான நீல வண்ணங்களை கொண்ட தாவணி பாவாடையில் கடல் கண்ணியை போல் மாடியில் இருந்து இறங்கி வந்தாள்.


கௌதமும் அப்போதுதான் மாடியில் தன் அறையில் இருந்து வெளியே வர, அப்படியே நின்றுவிட்டான்.

அப்சரஸ் போல இருந்தவள் இவன் அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு பாதிபடியிலேயே திரும்பி பார்க்க இதயம் ரேஸ் குதிரையை போல தறிகெட்டு ஓட தொடங்கியது. அதை நிறுத்த கடிவாளம்தான் ஏது? தன் நெஞ்சை நீவியபடி தனிக்க முயன்றான், அந்தோ பரிதாபம் மோசமாக தோல்வியை சந்தித்தான்.


இவன் நின்ற நிலையை பார்த்து எதாவது பிரச்சினையாக இருக்குமோ என்று எண்ணியவள் மேலே ஏறி வந்தாள். அருகில் வரவர அவள் சுகந்தம் காற்றில் அவளுக்கு முன் இவனை சேர்ந்தது. அதை ஒரு முறை ஆழ்ந்து சுவாசித்தவனுக்கு சற்று ஆசுவாசமடைவதுபோல் தோன்றியது.


நோயும் அவளே ; மருந்தும் அவளே! மனம் நொடியில் ஒரு ஹைக்கூவை எடுத்து விட உனக்கு முத்திடுச்சுடா! என அவனுக்குள்ளே கூறிக்கொண்டான்.

"என்னாச்சு?"


"ஒன்னுமில்லையே!"


"இல்ல ஏதோ நெஞ்சை புடிச்சிகிட்டு நின்னீங்களே அதான் .."


"அதான்"


"வலிக்குதோன்னு" கண்களில் சிறு கலவரம், பரபரப்பு. அதை கண்டதும் இவனுக்கு சில்லென்ற உணர்வு.


"ம் ஆமா ஒரு மோகினி அடிச்சிட்டா" மயக்கத்துடன் கூற, அவனது பதிலில் அவனை ஒரு மாதிரி பார்த்தவள் திரும்பி சென்றுவிட,


"அடிப்பாவி ஒன்னும் சொல்லாம போறா! இருடி வைக்கறேன் செக்!"

இவள் சென்றபோதே நான்கு வாண்டுகளும் வந்திருக்க "பார்த்து பத்திரமா போய்ட்டு வரனும்" என்ற அறிவுரையோடு தெய்வானையின் கைவண்ணத்தில் சாப்பாடும் நொறுக்கு தீனிகளும் தயாராக வர காரில் அத்தனையும் ஏற்றினர் அண்ணனும், தம்பியும். அதாங்க ராகேஷும், அரசுவும்.


கௌதம் வந்தவன் கீழே அமர்ந்து விட "என்ன அத்தான் உட்கார்ந்துட்டீங்க? வாங்க போலாம்." நாச்சியாரை ஒரு பார்வை பார்த்தவன்

"இல்லடா அரசு நான் வரல" உடனே அவளது முகம் சுருங்குவதை கண்டு மனம் ஆனந்தத்தில் துள்ளியது.

"ஏன் பாஸ் வாங்க போலாம்" என ராகேஷும் அழைக்க

"சார்தான் ஆபீஸ்னு ஒன்னு இருக்கறதையே மறந்துட்டு உடன்பிறப்புகளோட ஊர்கோலம் போறீங்க, நானும் அப்படி இருக்க முடியுமா ஆபீசர்" என கேட்க இனி அவன் வாயை திறப்பான். இரண்டடுக்கு பாதுகாப்போடு பூட்டிக் கொண்டான்.


பேத்தியின் முகம் வாடியதை பார்த்த அஞ்சுகம் "கௌதம் கண்ணா எந்நேரமும் ஆபீஸ் வேலைதானா போய்ட்டு வாப்பா" என கூற அவரிடமும் ஒருவாறு சமாளித்தவன் சட்டமாக அமர்ந்திருக்க மற்ற இருவரும் வாண்டுகளை அழைத்து சென்று விட்டனர்.


இவள் அழைப்பாளா என அவனும், வந்துவிடேன் என்று அவளும் மனதிற்குள் விண்ணப்பமிட வாயில் வரை சென்றவள் திரும்பி ஒரு பார்வை பார்த்து சென்றாள். ஆயிரம் கதைகள் சொன்னது அப்பார்வை. அதன் பொருளை படித்தவன்


" கடவுளே பார்த்தே கொல்றா!ஒன்னும் இல்லாத மாதிரி நடிக்கறா! சீக்கிரமே உன்னை என்கிட்ட வர வைக்கல நான் கௌதம் இல்லடி என் ப்யூட்டி.ஜஸ்ட் வெய்ட் அண்ட் வாட்ச்"


"சரி டார்லிங் இவ்ளோதுரம் நீங்க சொல்றதால நானும் போய்ட்டு வரேன்."


"பார்த்து போய்ட்டு வா பேராண்டி!"


அதற்குள் ஓட்டுனருக்கு பக்கத்து இருக்கையில் ராகேஷ் அமர்ந்திருக்க, அரசுவும, நாச்சியாரும் நடுபகுதியில் அமர்ந்தனர். நான்கு வாண்டுகளும் பின்னால் குதூகலித்தபடி ஏறிக்கொண்டனர்.


கார் கிளம்ப இருந்த சமயம் கௌதம் வந்தான். அவனின் நவீன விலையுயர்ந்த கேமிரா சகிதம். வந்தவன் யாரையும் சட்டை செய்யாமல் காரின் நடுபகுதியில் ஏறி அமர நாச்சியார் ஆனந்தமாய் அதிர்ந்தாள். நொடிக்கும் குறைவான மகிழ்ச்சியை அவள் கண்ணில் கண்டவன் கண்கள் மின்னின.

பாஸ் நீங்க முன்னாடி வாங்க என்று அழைத்தவனிடம் "இல்லை ராகேஷ் இதே கம்ஃபர்டபிளா இருக்கு" என்று மறுத்து விட்டான். அரசுவும், ராகேஷும் பேசியபடி வர, நாச்சியார் வேடிக்கை பார்ப்பதும் சைடில் சைட்டடிப்பதுமாக வர, கௌதம் பின்னால் இருந்த சிறுவர்களிடம் பேச்சு கொடுத்தான்.


"டேய் பசங்களா உங்க பேர் என்ன? " அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருக்க தங்களை ஆதி முதல் அந்தம் வரை கூறினர்.


"வீட்ல எப்படி விட்டாங்க உங்கள?"

" ஏன் மாமா அக்காகூடதான வரோம் அதெல்லாம் விட்டுடுவாங்க"

"பார்றா உங்க அக்கா மேல அவ்ளோ நம்பிக்கையா" சைடில் அவளை பார்த்துக் கொண்டே வினவ,


பின்ன எங்க அக்கா யாரு? அவங்க பவரு என்ன? அவங்கள எதிர்த்து ஒரு கேள்வி கேட்க முடியுமா?" இந்த நான்கு வாண்டுகளின் வீடுகளிலும் நாச்சியாருக்கு நல்ல பழக்கம். அவ்வப்போது இப்படி அழைத்து செல்வாள்தான். இவள் சமாளித்து விடுவாள் என்பதாலேயே நான்கு வயது வண்டை கூட அவன் அன்னை அனுப்பி விடுவார்.

"டேய் பசங்களா சும்மா இருங்க" அவளுக்கு படபடப்பாய் இருந்தது.

"அவங்கள ஏன் அடக்கற?"

"அதான நம்ம மாமா தானேக்கா"

"அதென்னடா மாமா, ராகேஷ் மட்டும் அண்ணா சொல்றீங்க?"அவன் சாதாரனமாகதான் கேட்டான் இவளுக்குதான் படபடப்பாக வந்தது.

"கௌதமா! நீ அமைதியா வந்தால் தேவல" என எண்ணதான் முடிந்தது. அதற்குள் அடுத்த கேள்வியை கேட்டிருந்தான்

"யார்டா உங்களுக்கு சொன்னது என்ன மாமான்னு கூப்பிட சொல்லி?"

"அக்காதான்" உடனே கோரசாக பதில் வந்தது. மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பது போல திரும்பி கொண்டாள்.


அவளைதான் பார்த்துக்கொண்டிருந்தான், "ஆனா உங்கக்கா இதுவரை என்னை மாமான்னு கூப்பிட்டதில்லையே!"

"அக்கா ஏன்கா என்ககிட்ட மட்டும் என் மாமான்னு சொன்ன" என்று மாட்டிவிட

"ம்ஹீம் இவனுங்கள அடக்கியே ஆகனும்" வலுக்கட்டாயமாக கோபத்தை பறைசாற்றும் குரலில் "டேய் என்னடா இப்ப, எனக்கு தோன்றப்பதான் கூப்பிட முடியும்! கம்முனு வாங்க இல்லைனா இனி எங்கயும் கூட்டிட்டு போக மாட்டேன்" என்றூ கூறி விட அதன்பின் பேசுவார்களா என்ன?

"பாரேன் எப்படி சமாளிக்கறா? எவ்வளவு நாளைக்கு சமாளிப்ப, மாட்டுவ ப்யூட்டி நீ என்கிட்ட வசமா மாட்டுவ அப்ப இருக்கு உனக்கு" என எண்ணி கொண்டவனுக்கு தெரியவில்லை இன்று மாலையே அவளிடம் அரை வாங்குவானென்று!!!!!
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top