• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Pesum silaiye.. kattavizhkava..??? Epi - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் டியர்ஸ்...
வெரி வெரி சாரி... லேட்டா எபி கொண்டு வந்திருக்கேன் இன்னிக்கு எபி படிங்க படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.. நீங்க எதிர்பார்த்தது போல் ஹீரோவை ஊரின் உள் கொண்டு வந்துட்டாங்க கோட்டையம்மாள்..???

கட்டு – 10

View attachment 2982

அகலெழிலன் இப்பொழுது எல்லாம் அவனது தாத்தா தொழிலை தான் பார்த்துக் கொள்கிறான்... அவனுக்கு அவனின் வாழ்வு எல்லாம் அவன் கண்ணில் வந்துப் போனது..

மீனின் வாழ்வு மிக குறுகியதே... அதே போல் தான் இவனின் வாழ்வும். இதற்கிடையில் அந்த கனவு தேவதையை தான் மனத்தால் கூட எண்ணவே கூடாது என்று எண்ணினான் அவன்....

அதன்படி தான் இப்பொழுது விவசாயத்தை கையில் எடுத்துக் கொண்டான்... அவனின் அம்மாவின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு நல்ல முறையில் முன்னேறி வருகிறான்... அந்த ஊருக்கு எல்லாமே இவர்களின் குடும்பம் தான். நல்லது கெட்டது எது என்றாலும் முன் நிலையில் இருபது அவர்களே...

விண்பா அவன் மனதின் ஓரத்தில் இருந்தாலும் அவனுக்கு அவளை மறப்பது என்பது முடியாத காரணமாக இருந்தது... அப்போ அப்போ அவளின் முகம் மின்னி மறையும்...

ஏதாவது சிறு குழந்தையை கண்டாலே அவள் நினைவு தான் அவனுக்கு...

கோட்டைத்தாய் அவன் அயராத உழைப்பைக் கண்டு அவளுக்குமே ஆச்சரியம் “ இவனுக்கு விண்பா கொஞ்சமும் நினைவு இல்லையா ” என்று அவனை யோசனையாகப் பார்த்துக் கொண்டாள்...

நாளுக்கு நாள் அவனை கவனித்ததில் தான் அவள் கண்டுக் கொண்டாள் “ இவன் அவளை மறந்துவிட்டான்” என்று.
அது தான் தினமும் சிறுகுழந்தைகளை இவனை நோக்கி அனுப்பி விண்பாவின் நினைவை அவனுக்கு வர செய்து எப்பொழுதும் அவனுக்கு அவளின் நினைப்பை வரசெய்தாள்...

அவனின் காதலையும் கண்டுக் கொண்டாள்... அவளின் வாரிசை காப்பாற்ற அவளுக்கு வேற வழியும் இல்லை... அது தான் அவனின் ஆசையை அவள் நிறைவேற்ற எண்ணினாள்...

அவனின் ஆயுசு நாள்களை அறிந்தும், அந்த நேரம் அவள் முடிவெடுத்தாள்...அவனை விண்பா திருமணம் செய்தால் கண்டிப்பாக பாதியில் வாழ்கையை இழந்து நிற்பாள் என்பதும் அவள் அறிந்ததே... ஆனாலும் விண்பாவின் உயிரை காக்க அவள் மிக பெரிய முடிவை எடுத்தாள்....

அந்த நேரம் அக்ரதா தன் காதலை விண்பாவிடம் எப்படி கூறுவது என்று யோசித்துக் கொண்டு இருந்தான்...

அவனின் யோசனையை கண்ட மகரிஷி சித்தருக்கு பெரும் கோபம்.. “ தன் உடமையை அவன் பறித்துக் கொள்வதாகவே எண்ணினார்,” அந்த எண்ணம் வரவும் அக்ரதா மனதை அடக்கி தன் மனதை வெளிபடுத்த எண்ணினார் அவர்...

இனிமேல் அக்ரதாவை வெளியில் வர வைக்க அவர் எண்ணவே இல்லை என்று விண்பாவை அவர் மனதில் குடிவைத்தாரோ அன்றோ அவர் முடிவெடுத்துவிட்டார்... அவரின் வசதிக்காய் அவன் மனத்தை அவர் கொல்ல முடிவெடுத்தார்....
அதன்படி அவனை, அவன் மனத்தை அடைக்கி அவர் அவன் உடலை ஆள ஆரம்பித்தார்...

அக்ரதா (மகரிஷி ) மெதுவாக எழுந்து அவர் செய்து வைத்திருக்கும் சிலை நோக்கி சென்றார்...

அந்த இடத்துக்கு வரும்பொழுது அவர் முகம் மிகவும் மென்மையாக மாறியது...

அந்த இடம் ஒரு மண்டபம் போல் அமைத்திருந்தார் அவர்... “ தளம் அமைத்து 8 தூண் அமைத்து அந்த தூணில் ஒவ்வொரு சக்தியையும் வைத்தார்...

அதாவது தன்னை மீறி எதுவும் அந்த மண்டபத்தை அணுகாத படி கண்ணுக்கு தெரியாதபடி சில மந்திரங்களை கூறி பாதுகாப்பாக வைத்திருந்தார்...

அந்த சிலையை அவர் மிகவும் ரசித்து, ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கினார்....
அவரின் மனதுக்கு பிடித்தபடி, தினமும் அங்கு கோட்டைநல்லூருக்கு அக்ரதா செல்லும் பொழுது விண்பாவை அவர் மனது அதிகமாக ரசிக்க ஆரம்பித்தது...

முதலில் அவளின் பாதத்தை செதுக்கவே அவர் ஒரு வாரம் எடுத்துக் கொண்டார்... காரணம் அவளை பார்க்கும் பொழுது எல்லாம் அவள் பாதத்தை அவர் காணவே முடியாது....

அன்று ஒரு நாள் அவள் காலை மடக்கி முட்டில் கைவைத்து அமர்ந்து இருந்தாள் அந்த அருவிக் கரையோரம், அவளுக்கு முன் அமர்ந்திருந்தான் அக்ரதா..

அப்பொழுது அவளின் பாதத்தை நன்கு தன் கண்களை விரித்து, ஸ்கேல் வைத்து அளப்பதை விட அழகாக அளந்து கண்களில் நிறைத்துக் கொண்டார்... அப்படி தான் அவளை அங்குலம் அங்குலமாக அளந்து அவளை அப்படியே சிலையாக வடித்தார்..

அவர் வடிக்கும் பொழுது முகத்தை புன்னகை முகமாக வடித்தார் எப்பொழுதும் அவரை பார்த்து சிரிப்பது போல்...

சிலையை முழுவதுமாக செதுக்கி முடித்த அவர் கடைசியாக கண்களை செதுக்க 1 வருடம் முழுதாக எடுத்துக் கொண்டார்.... என்ன காரணம் என்று அவருக்கே தெரியவில்லை,
சரியாக 1 வருடம் கழித்த பிறகு தான் கண்களை செதுக்க எண்ணி சிலை அருகில் வந்து நின்றார்... சிலை நிற்பது போல் இல்லாமல் கிழே அமர்ந்திருப்பதை போல் வடித்தார்...

அவர் அப்படி வடிக்க காரணம் எப்பொழுதும் அதன் அருகில் அமர்ந்துகொண்டும், அதன் மடியில் தலை சாய்த்துக் கொள்வது போல் எப்பொழுதும் அதன் அருகிலையே இருப்பதுப் போல வடித்தார்....

அன்று அவர் கண்களை செதுக்க சிலை அருகில் வந்தார், வந்தவர் அப்படியே அதன் அருகில் அமர்ந்துக் கொண்டார்...

அவருக்கு அந்த சிலையை பார்க்க பார்க்க இப்பொழுதே அந்த சிலைக்கு உயிர் கொடுத்து அதன் கூட எப்பொழுதும் இருக்க ஆசை கொண்டது...

அது தான் இத்தனை நாள் சிலைக்கு கண்ணை செதுக்காமல் இருந்தார்...இன்று அவருக்கு அந்த சிலையை முழுதாக செதுக்க ஆசை வந்துவிட்டது...

அது தான் இன்றே அந்த சிலைக்கு கண்ணை செதுக்க ஆரம்பித்தார் அந்த கண்கள் எப்பொழுதும் அவரை காதலுடன் நோக்கிக் கொண்டிருப்பதுப் போல் வடித்தார்....

அந்த சிலையை பார்க்கும் பொழுது எல்லாம் அவருக்கு விண்பா அவர் அருகில் இருப்பது போலவே தோன்றியது.. அது மட்டும் அவருக்கு போதவில்லை, அவள் தன்னிடம் பேசவேண்டும், அவள் தன்னிடம் உரிமையாக சண்டை இட வேண்டும் என்று இப்படி பலவாறாக எண்ணினார் அவர்...

அக்ரதா உடலில் அவர் இருப்பதால் அவனின் ஆசை எல்லாம் அவர் ஆசையாக மாறியது,
இனி அந்த சிலைக்கு உயிர் கொடுப்பது மட்டுமே பாக்கி, அந்த சிலை உயிர் பெறும் நாளுக்காக காத்திருந்தார் சித்தர். அந்த சிலைக்கு உயிர் கிடைப்பது அக்ரதாவின் கையில் தான் உள்ளது...
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
சிலைக்கு விண்பா உயிர் இல்லாமல் வேறு உயிர் கிடைத்தால் அவர் காதல் முழுமைப் பெறாதே.... அதுதான் விண்பாவை இங்கு அக்ரதா அழைத்து வரும் நாளுக்காக காத்திருக்கா ஆரம்பித்தார்...

அதற்க்கு முதல் காரணமாக அக்ரதாவுக்கு விண்பாவின் மேல் உள்ள காதலை நினைவுப்படுத்தி அவனை அங்கு அனுப்பினார்... அவர் தன் ஆன்மாவை அவனில் இருந்து வெளியில் எடுத்தார்....

வெளியில் வந்து அருகில் இருந்த அணிலில் புகுந்துக் கொண்டார்... விண்பா இங்கு வரும் வரை அவர் அவன் உடலில் இருக்க எண்ணவில்லை..

ஒருவேளை அவன் உடலில் இருந்து அவளை அழைத்தால், அவளை வரவிடாமல் கோட்டை செய்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி தான் அவர் அந்த முடிவை எடுத்தார்....

இப்பொழுது முழு அக்ரதாவாக கோட்டைநல்லூருக்குள் கால் எடுத்து வைத்தான் அக்ரதா..

@@@@@@@@@@@@@@@@@@@@

கோட்டை மிக மிக தீவிரமாக யோசித்தாள், விண்பா அந்த பக்கம் செல்லாதபடி ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணினாள்..

சித்தருக்கு இப்பொழுது புதிதாக வந்த காதலைக் கண்டு அவளுக்குமே அதிர்ச்சியாக இருந்தது... முற்றும் துறந்தவர்கள் தான் சித்தராக வடிவம் பெறுவார்கள்... இப்பொழுது இவர் சித்தராக இருப்பது எல்லாவற்றையும் துறந்து, துறவி நிலை தான் அவர் நிலை, ஆனால் இப்பொழுது காதல் வந்து அவர் மனக்கதவை தட்டியது எப்படி என்று அறியாமல் இருந்தாள்,
அப்பொழுது தான் ஒரு நாள் இரவு அக்ரதா அந்த பக்கம் செல்வதைக் கண்டாள்... அவளுக்கு யோசனை “ அவன் இந்த நேரம் எங்கு செல்கிறான் “ என்று பார்த்துக் கொண்டே இருந்தாள்....

அவன் அந்த ஆற்றின் அருகில் செல்லவும் அவள் கண்களுக்கு மகரிஷி சித்தரின் முகம் மின்னி மறைந்தது... அப்பொழுது தான் அவள் அறிந்துக் கொண்டாள் சித்தர் இவன் உடலில் இருந்துக் கொண்டு தான் இங்கு நடப்பதை அறிந்துக் கொள்கிறாயா மகரிஷி... உன்னை விடமாட்டேன் என்று மனதில் எண்ணி அவனை கவனிக்க ஆரம்பித்தாள்...

அந்த ஆற்றின் அருகில் வந்த அக்ரதா அந்த ஆற்றை நோக்கி கையை நீட்டவும் அதில் ஒரு பாலம் எழும்பி அவனுக்கு வழியாக மாறியது, அதை கண்டதும் அவளுக்கு எல்லாம் அவள் கையை மீறி போவதாக இருந்தது....

அப்படியே கண்களை மூடி அமர்ந்துவிட்டாள்...
அவள் அந்த சித்தர் முன் தோற்றுப் போவதாக இருந்தது.... அப்பொழுது எழிலன் என்ன செய்கிறான் என்று அவனை கவனித்தாள்.. அவனோ அவன் வயலுக்கு என்ன உரம் போடுவது என்று பார்த்துக் கொண்டு இருந்தான்.... அவன் மனத்தை பார்த்தால் எங்கும் அவனின் வயலே அவனுக்கு நிறைந்து இருந்தது.. ஒரு ஓரத்தில் விண்பாவின் முகம் மின்னி மறைந்தது.. அந்த ஒரு விசயத்தில் மட்டுமே சந்தோசம் அடைந்தாள் அவள்.... மீண்டும் நம்பிக்கை வந்தது விண்பாவை அவரிடம் இருந்து காத்துக் கொள்ளலாம் என்று...

அவளுக்கு இயற்கையை அழிப்பது எப்பொழுதுமே பிடிக்காத ஓன்று ஆனால் இப்பொழுது அவளின் வாரிசுக்காக இயற்கையை அழிக்க எண்ணினாள்...

அதன் படி ஒரே இரவில் அவனின் தோட்ட பயிர்களை எல்லாம் கருக வைத்தாள்.. காலையில் எழுந்த எழிலன் எப்பொழுதும் போல் தோட்டத்தை பார்க்க கிளம்பினான்...
பார்த்த அவனுக்கு அதிர்ச்சி கூடவே கண்களில் சிறு கண்ணீர் தடம்....

அவனுக்கு எப்பொழுதும் விவசாயம் பிடித்த ஓன்று.... அது தான் அவள் விண்பாவை கூட மறந்து இங்கு முழுமூச்சாக இறங்கினான்... ஆனால் அது தோல்வியை தழுவவும் அவனால் தாங்க முடியவில்லை... அப்படியே கண்ணீர் மல்க நின்று விட்டான்....
அவன் வயலை பார்த்த எல்லாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை... அவன் நிலம் முழுவதும் ஒரே போல் கருகியும், பூச்சி கடித்தும் செடிகள் இருந்தது...
ஊர் விவசாயிகள் கூறிய மருந்தை வாங்கி வந்து தெளித்தும் பூச்சிகடி நிற்கவே இல்லை... அப்பொழுது தான் ஒருவர் அவனிடம் வந்துக் கூறினார் “ அருகில் உள்ள கோட்டைநல்லூர் என்னும் கிராமத்தில் கெளதம் என்று ஒருவர் இருக்கிறார் அவரிடம் சென்று ஐடியா கேளு அவர் சொல்லுவார் “ என்று கூறினார்..

அங்கு உள்ள சுற்று வட்டாரத்தில் எல்லாருக்கும் கௌதமை நன்கு தெரியும் அவன் விவசாயத்தின் ராஜா... அவன் ஊரை அவன் செழிப்பாக வைத்திருப்பதால் எல்லாரும் அவனை அப்படி தான் அழைப்பார்கள்....

எழிலன் அந்த ஊரைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறான் ஆனால் இதுவரை அங்கு சென்றது இல்லை.. அப்படி செல்லும் வாய்ப்பும் அவனுக்கு கிடைக்கவில்லை...

இன்று எல்லாரும் சொல்லவும் சரி பார்த்துவிட்டு தான் வருவோமே என்று கிளம்பிவிட்டான்.. கிளம்பி வந்து இதோ ஊரின் உள் காலெடுத்து வைக்கிறான்... அவன் ஊருக்குள் வரவும் கோட்டைக்கு மிக மிக சந்தோசம்....

ஊரின் உள் வரவுமே அக்ரதாவைக் கண்டுக் கொண்டான் எழிலன்.... அவனைப் பார்க்கும் பொழுது அவனுக்கு “ அந்த பாம்பு மனிதன் “ தான் நினைவுக்கு வந்தான்.. அந்த நேரம் அவன் கண்கள் ஆவலுடன் அவளை அந்த தேவதையை தேடியது...
அவளோ அந்த ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டு “ டேய் அக்கி இங்க வாடா “ என்று அழைத்துக் கொண்டே ஊஞ்சலில் ஆடிக் கொண்டு இருந்தாள் அவள்.... இப்பொழுது குமரியாக வளர்ந்து இருந்தாள் அவள்...

அவளின் குரலுக்கு அந்த அக்கி, கொக்கி என்பவன் ஓடிப் போனான். இதை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டு இருந்தான் எழிலன்...

அவள் அவனை உரிமையுடன் அழைப்பதை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான்... அதே நேரம் இவன் தான் இவளை ராணியாக எண்ணும் அந்த அக்ரதாவா என்று பார்த்துக் கொண்டு இருந்தான்...

இவனுக்குள் ஏதோ இருக்கிறது அது தான் அவளை ஏமாற்றுகிறான் என்று மனதில் எண்ணிக் கொண்டு அவர்களை பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது அவனை நோக்கி வந்தான் கெளதம்...

அவன் அருகில் வந்த கெளதம் “ மிஸ்டர் அகலெழிலன் என்ன வெளியில் நின்னுடீங்க வாங்க” என்று வீட்டின் உள் அழைத்து சென்றான்..

அவன் செயலில் கோட்டை மிகவும் மகிழ்ந்துப் போனாள்...

பொதுவாக கெளதம் அவனை பார்க்க யார் வந்தாலும் வெளியில் உள்ள அறையில் வைத்து பேசி அனுப்பி விடுவான்..பெண் பிள்ளை இருக்கும் வீடு என்பதால் அவன் அவ்வாறு செய்வான்.. ஆனால் இவனை மட்டுமே வீட்டின் உள் அழைகிறான்....

அதிலும் இவனின் தாத்தாவை கௌதம்க்கு நன்றாகவே தெரியும், அவர் ஊரின் பண்ணையார் என்கிற முறையில் தெரியும், அவனைப் பார்த்து “ என்ன விஷயம் மிஸ்டர் அகலெழிலன் “ என்று கேட்டான் கெளதம்...

அவன் கேட்கவும் தனது வயலில் நடந்ததைக் கூறினான் அவன்... அவன் கூறுவதை எல்லாம் கேட்ட கெளதம் தனது உர அறைக்கு சென்று அங்கிருந்து ஒரு மருந்து பாட்டிலை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்து “ இதை தண்ணீரில் கலந்து தண்ணீர் பாய்க்கும் முன் கொஞ்சம் வயலுக்கு தெளி போதும் எல்லாம் சரியாகிவிடும் “ என்று கூறி அவசர வேலையாக வெளியில் சென்றான்....

அவன் செல்லவும் வெளியில் வந்த அகலெழிலன் கோவிலைப் பார்த்து அதன் உள்ளே சென்றான், அவன் செல்லவும் அவனுள் ஏதோ மாற்றம், தனியாக அமர்ந்திருந்த விண்பாவை கண்டு நேராக விண்பாவை நோக்கி சென்றான். சென்று அவளிடம் “ இவனிடம் அந்த அக்கியிடம் கொஞ்சம் கவனமாக இரு “ என்று கூறி வேகமாக விலகி சென்றான்...

அவன் அப்படி செல்லவும் அவளுக்கு கோபம் “ என் அக்கியை பற்றி கூற இவன் யார்..?அவன் சொன்னா நான் கேட்டுவிடுவனா போடா இனி தான் நான் அவனிடம் நன்றாக பழகுவேன் “ என்று மனதில் எண்ணினாள்...

அவளின் குணம் அப்படி அவளை முடிவெடுக்க செய்தது....

அதை நிறைவேற்றும் படியாக அடுத்த 2 நாளில் விண்பா அக்ரதாவின் கையைப் பிடித்துக் கொண்டு அந்த ஆற்றை கடந்து, அந்த பாலத்தில் அவனுடன் நடந்து சென்றாள்...

அதே நேரம் மகரிஷி தன் ஆசை, லட்சியம் அழிந்த, அழிக்கப்பட்ட நாளுக்கு சென்றார்..

கட்டவிழ்க வருவான்....
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Shanu ka enna ippidi solitteenga.:(:( andha kokki akki kooda vinba close ah pazhaguvala:oops::oops: last time neenga sonna clue ippadhan puriyudhu. Vinba oda uyir andha silaikkulla poiruma. Haiyo enna sis ippidi polamba vechuteenga
நன்றி ரிஹா. அவள் உயிர் தான் வேணும் என்று சித்தர் அடம் பிடிக்கிறார்.??.. அன்று சொன்னது இப்போ தான் புரிகிறதா ???
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Indha ezhilan sariyaana loosu... mottai ya ippidi dhan solluvana:confused: seekrama ud ya podunga ka plssss
ஹா ஹா அவன் ரொம்ப நேரம் பேசுனா கெளதம் சும்மா விடுவானா??? அது தான் சொல்லிட்டு உடனே கிளம்பிட்டான்.. எல்லாம் கோட்டை பார்த்துப்பாள் ???
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Ada aama ka...naan appa kooda vinba ku favour ah andha silai la yaaro varuvaangalo nu nenachen.....but vinba ve vao_Oo_O
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top