• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vetriyaa Tholviyaa - Chapter 4 - Part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Vetriyaa Tholviyaa - Chapter 4 - Continuing :

மறுநாள் காலை விடிவதற்க்குள் தன் செல்லின் அழைப்பில் கண்ணை திறவாது அதை ஆன் செய்து காதில் வைத்தவனுக்கு அந்த பக்கத்தில் சொன்ன தகவலில்.
அவசர அவசரமா… “பாப்பா நீ தனியா போகாதே நானும் வர்றேன்.” என்று இவன் கத்தலுக்கு பதிலாக அந்த பக்கம் போனை அனைத்து விட்டது என்ற வகையாக பீ...பீ என்ற ஒலி எழுப்ப.
தூக்கம் பறந்தோட செல்லம்மாவின் கதவை தட்டலுக்கு பிரதிபலிப்பாய் கதவை திறந்து காட்சியளித்த செல்லம்மாவை பார்த்து.
“என்ன பாப்பா உன் பிரண்டை பெண் பார்க்க தானே வர்றாங்க கல்யாணம் இல்லையே….?” என்று கேட்கும் வகையாக இருந்தது செல்லமாவின் அலங்காரம்.
உடல் முழுவதும் சந்தன நிறம் இடம் பெற்று இருக்க .அடர் பச்சை நிறத்தில் பூங்கொடி போல் உடல் முழுவதும் பரவி இருந்த அந்த பட்டு புடவையில் செல்லம்மா பார்க்க அப்படியே மணப்பெண் போலவே காட்சி அளித்தாள்.
அதுவும் அந்த சேலைக்கு ஏற்ப முத்து, மரகதம், பதித்த அட்டிகையும் ,அதற்க்கு ஏற்ப காதணியும்,செல்லமாவுக்கு அழகுக்கு அழகு சேற்பது போல் இருந்தது.
அவளின் இந்த அழகை பார்த்து அவளை இந்த விடியாற்காலையில் தனியே அனுப்ப மனம் இல்லாது.
“டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு பாப்பா நானும் வந்துடுறேன்.” என்று சொன்னவன் அவளின் பதிலை எதிர் பாராது சொன்னது போல் பத்து நிமிடத்துக்கு எல்லாம் அவள் முன் வந்து நிற்க.
அவனை மேலும் கீழுமாய் பார்த்த செல்லம்மா. “இது உங்களுக்கே அதிகபடியாய் இல்ல.” அவனின் கோட் சூட்டை பார்த்து கேட்டதுக்கு.
“மேலயே இது தான் இருந்தது பாப்பா. நீ எங்கு என்னை விட்டு போயிட போறியோன்னு அவசரத்துக்கு எடுத்து மாட்டிட்டு வந்துட்டேன்.”என்று சொன்னவன்.
“என்னை விடு நீ ஏன் இப்படி அதிகபடியான அலங்காரத்தில் போறேன்னு தெரிஞ்சிக்கலாமா….?”
“நான் எடுத்துட்டு வந்த புடவை ப்யூர் கோட்டா சாரி. அது மீட்டிங்கு எடுத்து வெச்சிட்டேன். அதை தவிர ஜீன்ஸ் குர்த்தி தான் இருக்கு. அண்ணா கிட்ட சொன்ன பொய்ய மெயின்டன் செய்ய இந்த சேலையைய் எடுத்து வெச்சேன். அது இப்போ யூஸ் ஆகுது.” என்று சொன்னதும்.
“அப்போ இங்கு வந்து தான் உன் பிரண்டை பெண் பாக்குறது தெரியுமா…..?”
“ஆமா அண்ணா.நேத்து நையிட் போன் செய்து காலையில் ஏழுமணிக்கு காளிகோயிலில் வெச்சி அவளை பெண் பாக்குறாங்கலாம். ஒரே நெர்வசா இருக்கு.
நீ இப்போ கொல்கத்தாவில் தானே இருக்க வான்னு கூப்பிட்டா. சரி நமக்குக்கும் பதினொரு மணிக்கு தானே மீட்டிங். நானே அந்த கோயிலுக்கு போகனும் என்று நினச்சேன். அதான் ஒரே கல்லிலே இரண்டு மாங்கான்னு.” தன் கண்ணை சிமிட்டி சொல்ல.
அவள் சொன்னதை அனைத்தும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டே தரை தளத்துக்கு வந்ததும்.
“காரை புக் செய்யலாமா….?” என்று தன் போனை எடுத்த சுகனை தடுத்தவள்.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளே இங்கு வந்துடுவா…..”
“ கார் எல்லாம் அனுப்புற அளவுக்கு யாரு ….?சென்னையில் படித்தவளா….? இல்ல கும்பகோணத்தில் படித்தவளா….?என்ற கேள்விக்கு.
“சென்னையில் தான் அண்ணா.இரண்டு வருஷமா தான் தெரியும்.” என்றதுக்கு.
“இங்கே இருந்து சென்னைக்கா படிக்க வந்தா….?”
“இல்ல. அப்போ இங்கு இல்ல. அவங்க அப்பா ,அம்மா கூட சென்னையில் தான் இருந்தா...போன வருஷம் ஒரு ஆக்ஸிடென்ல அவங்க இரண்டு பேரும் இறந்துட்டாங்க .அப்புறம் அவங்க பெரியப்பா கூட இங்கு வந்துட்டா.
இந்த வருஷம் இங்கு தான் படிக்கிறா….இப்போவும் டச்சுல தான் இருக்கோம். அவ மூலமா தான் இந்த ஓட்டலை புக் செய்தேன்.” அவள் சொல்லி முடிக்கவும் செல்லம்மாவின் போனில் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
“அண்ணா அவ வந்துட்டா….” என்று மகிழ்ச்சியுடன் செல்பவள் பின்னே சென்ற சுகனுக்கு அவள் தோழியைய் பார்த்து அடுத்த அடி வைக்க முடியாமல் சிலையாக நின்று விட்டான்.
தன் தோழியிடம் பேசி விட்டு காரின் பின் பக்கம் அமர்ந்தவள். சுகன் வராததை பார்த்து “அண்ணா என்ன அங்கேயே நின்னுட்டிங்க வாங்க. அவங்க பெரியப்பா பெரியம்மா கோயிலில் காத்து இருப்பாங்க.” என்ற செல்லமாவின் பேச்சில் நினைவுக்கு வந்த சுகனுக்கு அப்போது தான் ஒன்று உறைத்தது.
நான் என்ன செய்துக் கொண்டு இருக்கிறேன். அவளை பெண் பார்க்க வர்றவங்களுக்காக செய்த அலங்காரத்தை நான் ரசித்துக் கொண்டு இருக்கிறேனே….என்று. என்னை நியாபகத்தில் வைத்து இருப்பாளா….?என்பதே சந்தேகம்.
பார்த்தது ஒரு சில நிமிடங்கலே...அதுவும் அந்த சூழ்நிலையில் அவள் எங்கு உன்னை பார்த்து இருக்க போகிறாள். என்று தன்னையே திடப்படுத்திக் கொண்டவன். டிரைவர் பக்கத்து இருக்கையில் அமர்ந்தவனை.
“ஜெயந்தி நான் சுகன் அண்ணான்னு சொல்வேன்ல அவர் தான்.” என்ற செல்லம்மாவின் அறிமுகத்துக்கு.
“ஹலோ…..” என்ற சொல்லோடு ஜெயந்தி முடித்துக் கொள்ள.
இவனும் பதிலுக்கு ஒரு “ஹலோ…” என்றதோடு வெளிப்பக்கத்தில் பார்வை செலுத்தியனுக்கு மனமோ வெற்றிடமாக
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
நான் என்ன செய்துக் கொண்டு இருக்கிறேன். அவளை பெண் பார்க்க வர்றவங்களுக்காக செய்த அலங்காரத்தை நான் ரசித்துக் கொண்டு இருக்கிறேனே….என்று. என்னை நியாபகத்தில் வைத்து இருப்பாளா….?என்பதே சந்தேகம்.
pathathume lovea sis:love::love::love::love:chellamavai than pen pakka porana manish or chellamavoda kalyanama:unsure::unsure::unsure::unsure:something fissy...........interesting ud sis .....(y)(y)(y)(y)suspensea irukku waiting eagerly:rolleyes::rolleyes::rolleyes:
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
சுகன் ,ஜெயந்தி முன்பே அறிமுகமானவர்களா...?
செல்லம்மாவின் அதிகப் படியான அலங்காரம் ,ஏன்....?
மனீஷை அங்கு சந்திக்கும் வாய்ப்பு இருக்கோ....? :rolleyes:
.
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

செல்லாம்மா நிச்சயம் தன் தோழியின் பெண் பார்க்க வருவதற்காக இந்த அலங்காரம் இல்லை ,இங்கு கோயிலில் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப்போகின்றது,அங்கு மனிஷை செல்லம்மா எதிர் பார்க்கின்றாரா,அல்லது சுகனுக்காக ஏதாவது செய்வதற்காக ஜெயந்தியுடன் செல்கின்றாரா,ஆனால் இந்த அலங்காரத்திற்கும் ஏதோ ஒரு திட்டமிடல் இருக்கின்றது இதற்கும் மனிஷுக்கும் என்ன சம்மந்தம் என்று புரியவில்லை.

நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top