• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் – 11

அத்தியாயம் 12

“ சரா” என்ற கூவலோடு உள்ளே வந்தார் சித்திக்கா. மைசரா தன் கைக்கடிகாரத்தை திருப்பி பார்க்க அது ஐந்து மணியை தாண்டியிருந்தது. றெக்கை கட்டி பறந்த நேரத்தை எண்ணி வியந்து போனாள். இந்த ஒற்றை நாளில் என்னென்ன நடந்துவிட்டது.....

“ ரிதாவ பார்க்கலாம் னு வந்தா ஐ.சி.யூ ல இருக்குற நர்ஸ் என்னென்னவோ சொல்றாங்க.... சபூராவுக்கு என்னாச்சு சரா” அக்கறையும் கவலையுமாய் வினவியவருக்கு நடந்ததை எல்லாம் விவரித்தாள் மைசரா.

“ சபூரா தைரியமான ஆள் தானே. அவ ஏன் இவ்ளோ எம்மோஷனல் ஆனா” என்றவர்,” சரி... சரி கவலைபடாத சரா... இன்ஷா அல்லாஹ் சீக்கிரமே ரெண்டு பேரும் குணமாகிடுவாங்க.... யாஸ்மீனுக்கு போன் பண்ணி சொன்னியா?”

“ இல்ல ஆன்ட்டி.... டென்ஷன் ல மறந்தே போயிட்டேன். இப்போ போன் பண்றேன்”

“ வேணா.... சரா. எதுக்கு அவளையும் டென்ஷன் பண்ணனும். அதான் டாக்டர் சீரியஸா எதுவுமில்லனு சொல்லிட்டாங்கல்ல. வீட்டுக்கு போயிட்டு சொல்லிக்கலாம். நான் சும்மா தான் கேட்டேன்”

“ ம்... சரி ஆன்ட்டி... நீங்க ரிதா வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிட்டீங்களா? இன்னும் யாருமே வந்து பார்க்கல....”

“ இப்போ தான் அவளோட அண்ணன் போனே எடுத்தான் சரா. விஷயத்தை சொல்லியிருக்கேன். வந்துடுவான். அவனும் ஒரு டாக்டராம்” என கூறவும் மருந்துகளோடு வந்து சேர்ந்தார் ஆசிரியை.

“ ஆன்ட்டி.... உம்மாவ பார்த்துக்கோங்க” என்று விட்டு மருந்துகளோடு ஐ.சி.யூ க்கு விரைந்தாள் மைசரா. செவிலியரிடம் மருந்துகளை கொடுத்து விட்டு அவரது அனுமதியோடு ரிதாவின் அருகில் அமர்ந்தாள்.

துள்ளி திரியும் இளம் வயதில் பிய்த்து போட்ட மலர் கொடியாய் வாடி கிடந்தாள் ரிதா. கைகளில் ஊசிகள் குத்தப்பட்டிருக்க, தலையில் ஏதேதோ வயர்கள் ஒட்டபட்டிருந்தது. அனலாய் காய்ந்த மேனி இப்போது குளிர்ந்திருந்தது. மைசரா கொடுத்த மருந்துகளை ஊசிகள் மூலமாகவும், குளுக்கோஸ் மூலமாகவும் செலுத்தபட்டது. இத்தனை சிகிச்சைக்கு பிறகும் கண் விழிக்கவில்லை அவள். அவளது கரத்தை மென்மையாக பற்றினாள் மைசரா. மற்றொரு கையால் அவளது தலையை வருடினாள்.

பிறந்தது முதல் தந்தையின் முகத்தை பார்த்திடாத மைசராவால், ரிதாவின் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது. அவளுக்காவது தந்தையின் அன்பையும் சேர்த்து கொடுக்கும் தாய் கிடைத்திருக்கிறார். அதனால் தந்தையின் இழப்பு அவளை பெரிதாக பாதித்ததில்லை ஆனால் பெற்றவர்களோடு வாழ்ந்து, வளர்ந்து அதற்கு பின் இருவரையும் ஒருசேர இழந்து தவிக்கும் ரிதாவை கண்டு அவளது பூமனம் பெருந்துயர் கொண்டது.

“ எக்ஸ்கியூஸ் மீ ” என்ற குரலை தொடர்ந்து ஒரு இளைஞன் உள்ளே நுழைந்தான். விசும்பி கொண்டிருந்தவள் கண்களை துடைத்து கொண்டு எழுந்தாள். நல்ல உயரம், களையான முகம், சாந்தமான கண்கள், அளவான உடற்கட்டு, படிய வாரிய சிகை என வந்து நின்றவனை கண்டதுமே அவன் ரிதாவின் அண்ணன் என்பதை யூகித்து விட்டாள் மைசரா. ரிதாவின் அருகில் அமர்ந்தவன் பரிவாய் அவளது தலையை வருடி, நெற்றியில் முத்தமிட்டான். அவனையும் மீறி கண்கள் கலங்கி நீரை வார்த்தது. ஆறுதல் கூற துடித்த இதழ்களை முயன்று அடக்கினாள் மைசரா. இதுவரை அவள் எந்த ஆணிடமும் பேசியதில்லை. ஆனாலும் அவன் கண்களில் வழிந்த பாசத்தை இமை கொட்டாமல் பார்த்திருந்தாள்.

“ நீங்க பேஷண்ட்க்கு என்ன வேணும்?” – செவிலியர்.

“ நான் இவளோட பிரதர்”

“ ஓ.கே... நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன்” என வெளியே விரைந்தார்.

தங்கையின் நிலை கண்டு கலங்கியவன் சில நிமிடங்களில் தன்னை திடப்படுத்தி கொண்டான். அவளது நாடிதுடிப்பை பரிசோதித்தவன் அவள் கால்மாட்டில் தொங்கி கொண்டிருந்த அறிக்கையை படித்து பார்த்தான்.

தற்செயலாக நிமிர்ந்தவன் அப்போது தான் மைசராவை கவனித்தான்,”ஸாரி.... நீங்க நிற்குறத கவனிக்கல.... நீங்க....?” என கேட்டான்.

“ நா...நான்” என தடுமாறியவள்,” அவளோட கிளாஸ்மேட்” என்றாள்.

“ ஓ... என்ன நடந்துச்சு” என்றதும் மீண்டும் ஒருமுறை நடத்ததையெல்லாம் ஒலிபரப்பினாள் மைசரா.

“ கிரேட்.... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். எவ்வளவு உதவிகள் செய்திருக்கீங்க.... பட் அதே சமயம் ரொம்ப ஸாரி ரிதாவால தானே உங்க அம்மாவுக்கு இப்படி ஆயிடுச்சு” என்றான் கவலையாக.

“ அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உம்மா சீக்கிரமே நல்லாயிடுவாங்க னு டாக்டர் சொல்லியிருக்காங்க. ஸாரி... நாங்க அம்மாவ உம்மானு தான் கூப்பிடுவோம்”

“நாங்களும் அப்படி தான் கூப்பிடுவோம்” என்னும் போதே மருத்துவர் உள்ளே வந்தார்.

“ நீங்க தான் பேஷண்டோட பிரதரா?”

“ ஆமா டாக்டர். ஐ யம் ரமீஸ்....ஐ டூ எ டாக்டர். இப்போ ஹவுஸ் சர்ஜனா வொர்க் பண்ணிட்டு இருக்கேன்” என தன்னை அறிமுகபடுத்தி கொண்டான்.

“ ஓ.... வெல். அப்போ உங்க சிஸ்டரோட கன்டிஷன் பற்றி உங்களுக்கு புரிஞ்சிருக்கும் னு நினைக்கிறேன். இதுக்கு முன்னாடி இவங்களுக்கு இந்த மாதிரி ஃபிட்ஸ் வந்திருக்கா?”

“ லாஸ்ட் இயர் எங்க பெரண்ட்ஸ் இரண்டு பேருமே ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க டாக்டர். அன்பார்ச்சுனேட்லி ரிதா அப்போ அவங்க கூட தான் இருந்தா. அதிலிருந்து இவளுக்கு இப்படி தான் அடிக்கடி ஃபிட்ஸ் வருது டாக்டர். ஒன் இயரா இதுக்காக ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கா” என்றவன் தான் கையோடு கொண்டு வந்த ரிதாவுடைய மருந்துவ அறிக்கைகளை மருந்துவரிடம் கொடுத்தான்.

“ ஓ.... ஐ யம் ஸாரி” என தன் இரங்கலை தெரிவித்தவர் ரமீஸ் கொடுத்த அறிக்கைகளை பார்வையிட்டார்.

“ஓ.கே ரமீஸ். நீங்க ரெண்டு பேரும் வெளியே இருங்க” என்றவர் அடுத்து செய்ய வேண்டிய சிகிச்சை குறித்து செவிலியருக்கு விளக்க தொடங்கினார்.

ஐ.சி.யூ விலிருந்து வெளியே வந்து வராந்தாவில் போடப்பட்டிருந்த இருக்கையில் தொப்பென அமர்ந்தான் ரமிஸ். இழந்து விட்ட பெற்றோர்களை நினைத்து அழுவதா இல்லை வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கும் தங்கை நினைத்து அழுவதா என புரியாமல் அவனது கண்கள் கலங்கின. உள்ளே மருத்துவரோடு திடமாக பேசிக் கொண்டிருந்தவன் இங்கே நிலைகுலைந்து அமர்ந்திருப்பதை கண்டு மைசராவின் மனம் துடித்தது.

“ கவலைபடாதீங்க....இன்ஷா அல்லாஹ்( இறைவன் நாடினால்) சீக்கிரம் ரிதா குணமாகிடுவா” என்றாள் ஆறுதலாக.


“ தேங்க்ஸ். அவ குணமாகனும் னு தான் நானும் துவா(பிராத்தனை) செய்துட்டே இருக்கேன். என் வாழ்க்கையோட ஒரே பிடிப்பு ரிதா தான். அவ... அவ இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சி கூட பார்க்க முடியாது.அவ தான் என்னோட உயிர், உலகம் எல்லாமே.....” உணர்ச்சி வசப்பட்டு அவன் பேசி கொண்டே போக தன்னையுமறியாமல் அவனை ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருந்தாள் மைசரா. அவள் வாழ்வில் அப்பா, அண்ணன், தம்பி,மாமன், மச்சான், நண்பன் என எந்த ஆண் உறவோடும் அவள் பழகியதில்லை. அதற்காக ஏங்கியதுமில்லை. ஆனால் இன்று ரமீஸை பார்த்த பிறகு முதன் முறையாக தனக்கு இது போல் ஒரு அண்ணன் இல்லையே என ஏங்கினாள்.

சிறிது நேரம் புலம்பிக் கொண்டிருந்தவன்,” ஸாரி.... ஸாரி... நான் ஏதேதோ பேசி உங்களயும் கஷ்டப்படுத்திட்டேன். நீங்க செய்த உதவியை மட்டும் நான் மறக்கவே மாட்டேன்.” என்றான் தன் பேச்சை மாற்றும் விதமாக.

“ போதும். எத்தனை தடவை தான் நன்றி சொல்லுவீங்க.” என்றாள் லேசாக முறுவலித்தபடி.

“ இல்லை மா. நான் முக்கியமான கேஸ பார்த்துட்டு இருந்ததால என் போன் அடிச்சத கவனிக்கவேயில்ல. ஆனா நான் வரலனாலும் அவள சரியான நேரத்துல ஹாஸ்பிட்டல்ல சேர்த்து, பணம் கட்டி, மருந்து வாங்கி கொடுத்து, அவ பக்கத்துலயே இருந்து வேற பார்த்துகிட்டீங்க. இதுக்கெல்லாம் நான் எத்தனை முறை தேங்க்ஸ் சொன்னாலும் போதாது” என்றான் நன்றி பொங்க.

“ ஆபத்தான நேரத்துல இந்த அளவுக்கு கூட உதவலனா எப்படி? அதுவுமில்லாம என் உம்மா தான் ரிதா இங்க கூட்டிட்டு வந்தாங்க. நான் தனியா எதுவுமே செய்யல... “ என்றாள்.

அவளின் தன்னடக்கத்தை வியப்பாக பார்த்தவன்,” சரி....உங்க உம்மாவ பார்க்க நான் வரலாமா?” என்றான் சின்ன முறுவலோடு.

“ தராளமா....” என்றவள் ரமீஸை அழைத்து சென்றாள்.

- மழை வரும்

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top