• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode அகராதி 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sarva Magizhavan

நாட்டாமை
Joined
Feb 17, 2019
Messages
52
Reaction score
184
Location
Madurai
ae12e20b3d7309250b2858827ed71ffb.jpgஎனது கனவுகளில் மீளும் நீ சுவடில்லாமல் அழிந்து போயினும் கரையும் அலையும் போல மீண்டும் மீண்டும் தீண்டித் திறப்போம் நம் கனவில்லத்தினை...
பிளாஷ்பேக் 1

நினைக்கத் தானே நினைவுகளும் நிமிடங்களும்!

இப்படியாக நினைத்துக் கொண்டே உறங்கியவளை பகல் கனவுகள் பாடாய்ப் படுத்தி எடுத்தன் விளைவாய் அகராதி அரக்கியாய் உருமாறி விட்டாள்!!!????

என்னைக் கட்டுனவனே கம்முனு படுத்துத் தூங்குறான் இந்தக் கனவுக்கு அதுவும் பொறுக்கலை என்றவாறே எழுந்து அமர்ந்தவள் அருகில் உறங்கும் அவனைக் கவனிக்கத் தவறவில்லை...

சற்று முழந்தாளிட்டு அமர்ந்தவாறே அவனைப் பார்த்தவள் லேசாகச் சிரித்தாள்... அவளாலே நம்ப முடியவில்லை... அவள் சிரிப்பதை அல்ல... அவனைக் கண்டு சிரிப்பதைத் தான்... அதுக்காக நம்மாளு அவனைப் பிடிக்காம எல்லாம் கட்டிக்கிடல மக்கா... அவனைப் பிடிக்குது ரொம்பப் பிடிக்குது... இருந்தும் அவனுடன் முரண்பட்ட ஒவ்வொரு நாளும் அவள் நியாபகத்திற்கு வராமல் இல்லை...

எத்தனை கனவு? எத்தனை ஆசை? தடம் மாறுதே... வலி கூடுதே... அடி பூமிக் கதவு உடைந்து போகுதே!!!

தேவதையைக் கண்டேன்! காதலில் விழுந்தேன்! என் உயிருடன் கலந்து விட்டாள்!!!

வாய் விட்டு சத்தமாகவே பாடிட்டா போல... அவன் லேசாக கண்ணைத் திறக்க முயலும் பொழுதே இன்னும் விடியலை தூங்கு தூங்கு என அவனை தூங்கப் செய்தவள் சத்தம் செய்யாமல் எழுந்து கதவை மட்டும் மூடி விட்டு வெளியில் வந்தமர்ந்தாள்...

அகராதின்னு பேர் வச்சாலும் வச்சாங்க நம்மாளு என்ன ஆனாலும் சரி எழுதணும்னு தோணிட்டா போதும் அவ அந்தாதியை ஆரம்பிச்சுருவா...

அகராதி அந்தாதி

நேற்று வரைக்கும் அகராதி அந்தாதியாய் இருந்த அத்தியாயங்கள் இனி எழிலனின் ஏகாதிபத்தியத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது என்ற வரிகளைக் கண்டு அவளே சிரித்துக் கொண்டாள்... லேசாக ஒரு துளி கண்ணீர் அவள் கன்னங்களில் கோடாகக் கீழிறங்கியது...

அவளாகவே சிரித்தும் அழுதும் கொண்டு அவள் அதனை எழுதி முடிக்கையில் நிஜமாகவே இரவாகி விட்டது... இத்தனை நேரமாகியும் யாரும் கூப்பிடவில்லையே என்ற எண்ணம் வர எழில் என்னவானான் இன்னுமா உறக்கத்தில் இருக்கிறான் என்றெண்ணி அவனைக் காணப் போனவள் அவளாகவே அவனருகில் சென்று அமர்ந்து கொண்டாள்...

இவனைக் கண்டால் வாய் விட்டு சிரிக்கவும் முடியவில்லை... கதறி அழவும் தோன்றவில்லை...அதற்காக இயல்பாய் இருக்க முடியலைன்னும் அவளால் சொல்லவே முடியாது எழிலன் அத்தனை இயல்பாய் அவளை உணர வைத்தான்...

ஒரு இயல்பு நிலை இருவரிடையே இருப்பினும் அதைத் தாண்டிப் போகலாம் என்ற எண்ணம் அவனுக்கும் சரி அவளுக்கும் சரி இப்பொழுது ஏன் இல்லை என்ற எண்ணம் அவளுக்கு இப்படித் தனிமையில் அமர்ந்து யோசிக்கும் பொழுதே ஒன்று புரிந்தது...

அவனும் நானும் சராசரி ஆணும் பெண்ணுமாய் இல்லை.... எல்லோரைப் போலவும் ஒரு வாழ்க்கை வாழவா நாங்கள் இருவரும் இணைந்தோம்?
இல்லவே இல்லை என்ற விடை வரத் தாமதமாகினும் இறுதியில் வந்தது அவனிடம் இருந்து!!!!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரவணக் கார்த்திகா டியர்
 




Last edited:

Pradeep

அமைச்சர்
Joined
Jun 12, 2018
Messages
1,767
Reaction score
3,949
Location
Coimbatore
அகராதி அந்தாதி, எழிலனின் ஏகாதிபத்தியம் - அருமை.
மிக அருமையான பதிவு டியர் (தீபா).
காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக.
 




Sarva Magizhavan

நாட்டாமை
Joined
Feb 17, 2019
Messages
52
Reaction score
184
Location
Madurai
நனர்
அகராதி அந்தாதி, எழிலனின் ஏகாதிபத்தியம் - அருமை.
மிக அருமையான பதிவு டியர் (தீபா).
காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக.
நன்றி தீபா!!! நாளை நிச்சயம் பதிவு வரும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top