• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode அகராதி 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sarva Magizhavan

நாட்டாமை
Joined
Feb 17, 2019
Messages
52
Reaction score
184
Location
Madurai
எதுவும் கையில் வரும் நாள் வரை என்னில் ஏக்கங்கள் இல்லையே!

இப்படி நான் ஒன்றாக நினைக்க

நீ நினைக்காததும் கையில் வரும் நொடி என்ன செய்வாய் ப்ரியசகி? என வினவிக் கொண்டே வந்தமர்கிறாய் என்னருகிலா? மனதிலா?

அகராதி அந்தாதி

காலை பதினோரு மணி!!! அவ்வீட்டிற்கு அந்நேரத்திற்கான எந்த அறிகுறியும் இல்லாது இருந்தது அவ்வளவு அமைதி... காரணம் நம்ம கோதை நாச்சியார் தான்... அம்புட்டு அமைதியான குடும்பம் கட்டுப்பாடான குடும்பம்னு நினைச்சுறாதீங்க மக்களே... நம்ம கோதை மேடம் அவங்க அகராதி முழிக்கலையேன்னு வீட்டுல சின்ன சத்தம் கூட இல்லாம கதவு ஜன்னல் எல்லாம் சாத்தி வைச்சுட்டு வராண்டாவில் உட்கார்ந்து நாட்டு நடப்ப அலசிட்டு இருக்காங்க... இவள் அல்லவோ தாய்னு நீங்க சொல்றது கேக்குது மக்கா... சரி நம்ம கோதை மேடம் வேணுமானா அப்படி இருப்பாங்க அந்த வீட்டினர் யாரும் இல்லையா??? அதென்ன அகராதி மட்டும் தான் கோதைக்கு கண்ணன் போலயான்னு யாரோ என் கிட்ட சண்டைக்கு வராங்க... யாருன்னு பாத்தா அட நம்ம குட்டித் தம்பி!!! மினி அகராதி போல... அதே உயரம் அதே அடாவடி... எல்லாம் அப்படியே... அக்காவுக்குத் தப்பாத தம்பி... பய எங்கயோ வேலையாப் போறான் போல... அதான் வெறும் முக்கால் மணி நேரத்தில் குளிச்சுட்டு கெளம்பிட்டாரு தொரை... நிலமே அதிரும் அளவிற்கு படிகளில் இறங்கி வந்தவன் தூங்கிக் கொண்டு இருந்த அவளைக் கடக்கும் பொழுது அவள் சரியாகப் போர்த்தி இருக்கிறாளா என்றும் கவனிக்கத் தவறவில்லை...அவ தான் கூமுட்டை இவ அப்படி எல்லாம் இல்லைங்கிர நினைப்பு வந்தாலும் அவனுக்கு அவர்களைக் கவனிக்கத் தவறுவது இல்லை... அந்தக் கூமுட்டை இவனை ஓட விட்டு வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டு அவன் பின் நின்றிருந்தாள் சுவற்றில் மாட்டப் பட்டிருந்த அவனும் அக்காவுமான அந்தக் கூமுட்டயுடனான புகைப்படத்தில்!!! அதாங்க நம்ம அகராதிக்கும் மினி அகராதிக்கும் அக்கா... அகராதி பிடிச்சவளேன்னு அவ பல்லைக் கடிக்கிறா பேர சொல்லுவோம்... அவ பேரு மதிமுகி... அப்புறம் நம்ம குட்டித் தம்பி அவரு பேரு விஷ்ணுபிரசாத்... நம்ம குட்டித் தம்பி வேலைக்குப் போறார் போல தட்டுல வச்சது என்னனு நாம பாக்க முன்ன வாயில அள்ளி அடைச்சுட்டு வண்டி சாவிய எடுத்துட்டு கெளம்பிட்டாரு...இவுகளுக்கு முன்னயே நம்ம மதியக்கா 9 மணிக்கே சாப்பாட்டுக் கூடையோட வேலைக்குத் தயார்... அப்போ இந்த அகராதி என்ன தான் பண்ணுது???
வாங்க கேப்போம்...
வாசலில் உட்கார்ந்து வெங்காயம் உரிச்சுட்டு இருந்த நம்ம கோதைய பாக்க வந்தார் அங்கே குடியிருக்கும் அரசி... நாச்சியாரக்கா அகராதி எழுந்துக்கலையோ?

ஆமா அரசி... நேத்து இராத்திரி பூரா எதையோ கொடைஞ்சுட்டுக் கெடந்தா... விடிஞ்சவட்டித் தான் படுத்தா கிறுக்கி....சொன்னா எங்க கேக்குறா என மகிழ்வாய் அழுத்துக் கொண்டார்...
இருக்காதா பின்னே என்ன இருந்தாலும் என் மகள் அல்லவா என்ற பெருமிதம்...

வீட்டில் இருந்தவாறே பொற்காசுகள் சம்பாதிக்கும் மகள் யாருக்கு வாய்க்கும்???
வீட்டில் எல்லா வேலையும் செஞ்சுக்கிட்டு அவளுக்குத் தேவையானதையும் செய்யும் மகள் அவள் அல்லவா!!!


நம்மாளு பழம் எல்லாம் இல்லைங்க.... சரியான குறும்புக்காரி!!! அவ அண்ணன் சொல்ற மாறி சொன்னா சரியான இரட்டைச்சுழி குட்டிக் கழுதை...


பதினொன்றைக்கு எந்திரிச்ச நம்மாளு சுத்தி முத்தி பாத்துட்டு போன் எடுத்து போட்டு வச்ச பிலைட் மோடில் இருந்து அலைபேசியை விடுவித்து தன்னையும் உறக்கத்தில் இருந்து விடுவிக்க முயன்று கொண்டிருந்தாள்...

Thank you அதீ for everything என்று
திரையில் மின்னிய அந்த குறுஞ்செய்தியைக் கண்டவள் சற்று நிறைவாய்ப் புன்னகைத்து எழுந்தாள்...


ஆக மொத்தம் யாரோ ஒருத்தர் வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லிக் குடுத்துட்டு இருந்தா அந்த அகராதி!!!


என்ன தான் இருக்கு இவட்ட??? வாங்க பழகுவோம்....
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ரொம்ப வித்தியாசமாக இருக்கு.... இன்னும் அகராதி என்ன பண்ணுற என்று தெரியவில்லை... எழிலன் எங்க காணம் இன்று...

Waiting for next epi ...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top