• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode அகராதி 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sarva Magizhavan

நாட்டாமை
Joined
Feb 17, 2019
Messages
52
Reaction score
184
Location
Madurai
438c74babb97d8096f6cd6605b917cc0.jpg

உன்னை எனக்குப் பிடிப்பதே இல்லை....

ஏன்?

என் கற்பனைகளை மணல் வீடு போலக் களைத்துப் போகிறாய்....
நீ நேரிலே வர வேண்டும் என ஏங்கக் கூட எனக்கு வாய்க்கவில்லை....
காரணம் நீ!!!

நீ மட்டும் தான்!!!

காதல் செய்து இருந்தால் உன்னைக் களவாடி விட்டு ஓடி இருப்பேன்....

ஆயுளுக்கும் உனக்கான வதைகள் தரவே உன்னை என் கணவனாக வரிக்கத் தயாராக இருக்கிறேன்....

என்னை சகித்துக் கொண்டும் சகியாக வரித்துக் கொள்ளவும் சம்மதமா????
….........……...…........….
அவளின் வார்த்தைகள்

சட்டை வாசம் நுகரும் தூரம் தான் எனக்கும் அவளுக்கும்... ஆனாலும் என்னை நெருங்குவதில் என்ன தடை அவளுக்கு?

யோசித்தவாறே வந்தவன் கண்களில் கண்ணீருடன் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தவள் தான் பட்டாள் அங்கே தான் அவளைத் தவிர யாரும் இல்லையே...

செயற்கையாக அவள் கண்ணீரைத் துடைக்கவெல்லாம் அவன் நெருங்கவில்லை...பின்னின்றே அவளைக் கவனித்துக் கொண்டு இருந்தான்...

ஒன்றும் சொல்லாது அவள் முன்னின்று குறு குறு பார்வை பார்ப்பதை விடவும் அவளை இப்படியே அணைத்துக் கொண்டால் என்ன என யோசிக்க எல்லாம் இல்லை....அவளைப் பின்னிருந்தே அணைத்தவன் தன் மேல் சாய்ந்து கொண்டவளை வாகாகத் தாங்கிக் கொண்டான்...

என்ன அதி பிரச்சனை உனக்குன்னு நான் கேக்கப் போறது இல்லை....

நான் உன்னை அகராதியா பாக்கணும் இப்படி அழு மூஞ்சி அதியா இல்லை...

அவன் அப்படி சொன்னது தான் மாயம் அவன் மேலே சாய்ந்தவாறு இருந்தவள் படக்கென அவன் சட்டையில் மூக்குரசி அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்....

ஏய் என்னடி பண்ற ஏண்டி சட்டையை அழுக்கு பண்ற? அழுக்கி போடி அந்தப் பக்கமான்னு அவன் சொன்ன எதையும் காதிலே வாங்காமல் அவனை வாசம் பிடித்தாள்...வேண்டும் என்று தான் அப்படி சொன்னான் அவனுக்கு அவளை அப்படித் தான் பார்த்துப் பழக்கம்...

இந்த நேரம் தான் அவனுக்கு திவா ஏன் அவளை விட்டுப் பிரிய அவ்வளவு வருந்தினான் எனப் புரிந்தது.


பத்து நாளா இவளைப் பாத்துட்டு இருக்கற எனக்கே இப்படி இருக்கு அவளை பள்ளிக்கூடம் படிக்கறப்ப இருந்து பாக்கிற அவனுக்கு அதியப் பிரியறது எத்தனை கஷ்டமா இருந்துருக்கும்? திடீரென அந்த யோசனை தோன்ற பக்கத்தில் இருந்த அவன் ஸ்மார்ட் போனை எடுத்து அந்நிலையில் அப்படியே ஒரு புகைப்படம் எடுத்து திவாவிற்கு அனுப்பினான்...

உடனே பார்த்து விட்டான் போல... அவன் பதிலைக் கண்டவன் கட்டுப் படுத்த முடியாமல் சிரிக்க அவள் கடுப்பாகி விட்டாள்...

போனில் திவா பேரைக் கண்டவள் தீவெட்டித் தலையன் உன்கிட்ட பேசிருக்கான் என்னை மதிக்கவே இல்லை என அவனை நல்ல நல்ல வார்த்தைகளில் அர்ச்சனை செய்தவள் வேகமாக அவனுக்கு அழைத்தாள்...

அவன் எடுத்த எடுப்பில் என்னடி அஞ்சலிப் பாப்பா ஒரே லவ்ஸ் போல... உங்காத்துக்கார் வேற போட்டோ எல்லாம் போட்டு பகுமானம் பண்ணிருந்தாரு... என்ன இருந்தாலும் அவரு ஒரு அக்மார்க் 420க்கு வாக்கப் பட்டுட்டாரே இதெல்லாம் பண்ணி தான அப்பப்போ அவரும் பாவம் மனசத் தேத்திக்கணும்... இப்படியாக அவன் பேசிக் கோண்டே போக அவள் வண்ண வண்ணமாக வசை மாரி பொழியவும் கப் சிப்பென ஆனவன் உடனே பாவம் போல மூஞ்சியை வச்சுட்டு I missed you அதின்னு சொன்னது தான் மாயம்...
திவா என லேசாகக் கண் கலங்கினாள்....
அதி என்ன புதுசா கல்யாணம் பண்ணுனா புதுப் பழக்கம் எல்லாம் பழகுறியா... என்ன இது இப்படி ஆகிட்ட?

அவன் கேள்விக்கெல்லாம் அமைதியாக இருந்தவளை ஒன்றும் சொல்லாமல் நீ அப்புறமா எனக்கு பேசு என சொல்லி விட்டு நான் உங்களை நாளைக்கு மீட் பன்றேன் எழில் என்று விட்டு அழைப்பினைத் துண்டித்தான்....

ஏலியன் நான் உனக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ல மாட்டேன் என்றவள் அவன் மூக்கில் மூக்குரசி அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்து விட்டு எழுந்து ஓடியே விட்டாள்...
பேன்னு முழிப்பது அவன் முறையாகிப் போனது....

சரியான 420 என முணுமுணுத்துக் கொண்டான் அவளின் மணாளன்....

அகராதிகள் தொடரும்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top