• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தியாயம்1- குமரித்தீவு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
குமரித்தீவு

View attachment 6267

அது ஒரு ரம்மியமான இரவு நேரம். சுற்றிலும் இருள் கவிந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீலக்கடல் விரிந்து கிடந்தது. இந்தியாவின் தென்கொடி முனைக்கு, தெற்கே இருக்கும் குமரித்தீவின் தென்முனையிலிருந்து, அரைவட்டமாக சுற்றிக்கொண்டு, தூத்துக்குடியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது அந்த பயணியர் கப்பல்.

இருக்கையின் பக்கவாட்டில் முழங்கையை ஊன்றியபடி எல்லையில்லா நீலக்கடலையும், வானத்தையும் ரசித்துக்கொண்டிருந்தான், கவின். அங்கே இருந்த இளஞ்சிட்டுகள் சிலர் கவினை ரசித்துக்கொண்டிருந்தார்கள். அவன் உணராமலில்லை. இரவு நேரத்தில் தனித்து, காரை ட்ரைவ் செய்ய முடியாது என்று தான் கப்பலில் பயணம் செய்ய முடிவெடுத்தான். சுற்றி இருப்பவர்களின் எடை போடும் பார்வையும், அவனைப்பற்றி அவர்கள் அறிந்து கொள்ள காட்டிய ஆர்வமும் ‘ஹுப்’ என்று பெருமூச்செறிய வைத்தது. அவன் ஷூ கால்கள் தளத்தை ஒருவித தாளத்துடன் தட்ட துவங்கியிருந்தது.

இந்நேரம் அவன் மனைவி ‘மாயா’ அவனோடே இருந்திருக்க வேண்டும். “ஹே!! கேர்ல்ஸ்!! இவர் 30 ப்ளஸ் அங்கிள்.. நீங்க பெட்டரா ட்ரை பண்ணுங்களேன்.” கூலாக அவர்களிடம் கண்சிமிட்டி சொல்லிவிட்டு, அவன் கைகளுக்குள் தன் கைகோர்த்து உரிமையை நிலைநாட்டியிருப்பாள்.

மனைவியின் நினைவில் முகம் கனிந்து, இதழோரம் நெளிந்தது. சுற்றி இருந்தவர்களின் கேள்வி கணைகளை தவிர்க்கும் பொருட்டு, உதட்டோரம் மென்சிரிப்போடு ‘எக்ஸ்க்யுமி’ என்றவாறே தலைகோதியபடி எழுந்து நின்றவன், விடுவிடுவென அங்கிருந்து வெளியேறினான். கப்பலின் மேல்தளத்திற்கு சென்று, இரு கைகளையும் ஊன்றியபடி நின்றுகொண்டான். கடற்காற்று அவன் முன்னுச்சி முடிகளை கலைத்து விளையாடியது. இதே போலத்தான், அவள் விரல்களும் அடிக்கடி அவன் சுருள் முடியை கோதிவிடும்.

அவன் கைப்பிடிக்குள், அந்த இடைவெளியில் மாயாவே நிற்பது போன்ற பிரமை. அவள் மென்மையும், வாசமும் நினைவடுக்கில் எழுந்து பெருமூச்செறிய வைத்தது.

“நீ ஏன் 30 ப்ளஸ் அங்கிளை காதலித்து, திருமணம் செய்து கொண்டாய்?” சில நேரங்களில், அவளிடையை இறுக பற்றிக்கொண்டு, புருவத்தை ஏற்றி, பொய்க்கோபத்துடன் அவளை ஊடுருவி பார்ப்பான் கவின்.

“பாஸ்!! நீங்க ரொம்ப லக்கி. அதான் நான், உங்களை லவ் பண்ணிட்டேன்.” கெத்தாக சொல்லியபடியே, அவள் விரல்கள் அவன் முன்னுச்சிமுடியை கோதிவிடும், மென்மையாக!! அனிச்சையாக, அவன் உதடுகளும் குவிந்து அவள் மூக்கின் மேல் பதியும்.

இது சர்ப்ரைஸ் விசிட்! அவன் சென்னைக்கு வந்துகொண்டிருப்பதை மாயாவிடம் அறிவிக்கவில்லை. திடுமென்று நாளை அவள் முன்னே போய் குதிக்கப்போகிறான். எப்படி ரியாக்ட் செய்வாள்?

விழிகள் விரியும்..முகமெல்லாம் பிரகாசமாகும். கன்னத்தில் ஒரு புறத்தில் மட்டும் குழிவிழும். “வேலன்டைன்ஸ் டே அன்று ரிடன் ஆகிவிடுவேன்.” அவள் மைவிழிகளில் கெஞ்சல் இருந்தாலும், அவள் கம்பீரமும், நிமிர்வும் மட்டும் எந்த இடத்திலுமே குறைந்ததில்லை.

“ஹாய் ப்ரோ!!” கணீர்குரலில் நினைவுகள் கலைந்து திரும்பியவன், பின்னே வந்து நின்ற கன்யாவை, அங்கே கவின், கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதை, அவன் முகமே காட்டிக்கொடுத்தது.

“எங்கே சென்னையா?” அடுத்த கேள்வியையும், கன்யாவே வீசியபடி அவனருகில் வந்து நின்றிருந்தாள். நீரின் சலசலப்பும், கப்பலுக்குள் இருந்தவர்களின் கூச்சலும், காற்றின் விர்ரென்ற ஓசையும் அந்த இரவின் நிசப்தத்தை விரட்டிக்கொண்டிருந்தது.

“ஹாய் கன்யா!!” பெருவிரலால், புருவத்தை நீவிக்கொடுத்தபடி புன்சிரிப்புடன் அவள் கைபற்றிக்குலுக்கியவன், “எஸ்!! அப்கோர்ஸ். உன் ப்ரென்ட், மாயா அங்கே தானே இருக்கிறாள். சர்ப்ரைஸ் விசிட்.” என்றான் தோளைகுலுக்கி.

“ப்ரோ!! சர்ப்ரைஸ் கொடுக்கிறதா, நீங்களே நினைச்சுக்க வேண்டாம்.. மாயா இந்நேரம் கெஸ் பண்ணிருப்பா..” என்றாள் நண்பியை அறிந்தவளாக.

கைகளை காற்றில் மேலும் கீழும் அசைத்து, “மே பி” வசீகர சிரிப்புடன் கவினும் ஆமோதித்தான். மிச்ச நேர பயணத்திற்கு, ஒரு நல்ல கம்பெனி கிடைத்ததை எண்ணி இருவருக்குமே ஆனந்தம்.

தூத்துக்குடியை அடைந்ததும் நண்பனின் காரை வாங்கிக்கொண்டு, தானே ட்ராப் செய்வதாக கூறி கன்யாவையும் அழைத்து சென்று விட்ட பிறகே, மாயாவின் இல்லத்தை நோக்கி பயணித்தான் கவின். கவினும் பலமுறை அதே ரூட்டில் பயணம் செய்திருப்பதால், ஆங்காங்கே தடுமாறினாலும் பெரிதாக சிரமமாக இருக்கவில்லை அந்த பயணம்.

******************************************************************************************************************

மறுநாள் இரவு. மாயா, வியர்த்துவழிந்த முகத்தை துடைத்தபடி, திறந்தே கிடந்த வீட்டிற்குள் தடதடத்து நுழைந்து, ஷூவை கழட்டி ரேக்கில் வைக்க குனிந்தவள், எதிரே நிழலாடவும் மெல்ல தலையுயர்த்தி பார்த்தாள்.

த்ரீபோர்த், கைத்தசைகளை இறுக்கி அவன் வன்மையை எடுத்து காட்டிய டீஷர்ட், ஒரு கையை பாக்கெட்டுக்குள் விட்டபடி, மயக்கும் புன்னகையோடு அவளைப்பார்த்து உதடு குவித்து முத்தத்தை பறக்கவிட்டான் கவின்.

ஆச்சரியத்தில் அகன்ற விழிகள், நொடியில் அவள் முகமெங்கும் வெளிச்சத்தை பாய்ச்ச, பரபரவென ஷூவை வீசி விட்டு, துள்ளலும், வேகமும் போட்டிபோட எழுந்து, அவன் கழுத்தை வளைக்க முனைந்தவளை ‘அப்பா’ உதட்டசைத்து ஹாலில் இருந்தவரை கண்களால் சுட்டிக்காட்டினான் கவின்.

சட்டென ப்ரேக் அடித்து நின்றவள், ஹிஹிஹி அசடுவழிந்தபடி அசட்டுசிரிப்புடன், தலையை கோதிக் கொண்டே அவனைக்கடந்து போக, அடக்கமுடியாமல் வாய்விட்டே சிரித்தான் கவின்.

ஹாஹஹா!!!!

அவன் எச்சரிக்கவில்லைஎன்றால் என்னென்ன செய்திருப்பாளோ இந்த பெண்?

“சிரிக்காதே!! டாகி!!” பேக் பேகினால் அவனுக்கு குத்துவிட்டு விட்டு “சாரிப்பா!! லேட் ஆகிடுச்சு..” சிரித்த முகத்தோடு, தந்தையிடம் சென்றுவிட்டாள் மாயா.

மாயாவின் பெயரில் இருந்த, ப்ராபெர்டி ஒன்றை விலைபேசி முடிக்க வந்திருந்தாள். கவினும் அவன் நிறுவனத்தின் பாட்னர்ஸ், ஆடிடர்களுடனான மீட்டிங்கிற்காகவே சென்னை வந்திருந்தான்.

நிசப்தமான இரவில், பால்கணியில் அந்த மஞ்சள் வெளிச்சத்தில் நின்று எதிரே உயர்ந்து நின்ற குடியிருப்பு கட்டிடங்களை பார்த்துக்கொண்டிருந்தாள். கண்களும், மனமும் ஒரு சேர கவினின் வரவுக்காக காத்திருந்த வேளையில், பின்னிருந்து அவளை தன்னோடு இறுக்கிக்கொண்டவன், “அம்மு!! ஹாலில் என்னைப் பார்த்ததும் என்ன செய்ய வந்தாய்?” என்றான் குறுஞ்சிரிப்போடு.

லேசாக சிவந்தாலும், “ப்ளடி!!” பல்லைக்கடித்தபடி அவன் நெஞ்சில் வாகாக சாய்ந்துகொண்டாள் அவள்.

அவள் விரலோடு விரல்களை பிணைத்தவன் “நமக்கு வெட்டிங் முடிஞ்சது. நீ என்னோடவே இருக்க. இன்னும் என்னால் நம்பவே முடியலை. கனவு மாதிரி இருக்கு.”

பின்னிருந்தே, அவன் தலையில் பலமாக ஒரு கொட்டு வைத்தவள், ‘இப்போது நம்ப முடிகிறதா?’ என கண்களாலேயே வினவினாள். இரவு நேரங்களில் பணிபுரிவதால் கண்களின் கீழே கருமை படிந்திருந்தாலும், அதன் ஒளி கொஞ்சமும் குறையவில்லை.

அவன் மென்சிரிப்புடன், அவள் கண்களையே ஊடுருவி பார்க்க, “பாஸ்!! ரோமேண்டிக்கா எதுவும் ட்ரை பண்ணிடாதீங்க. பக்குன்னு சிரிச்சிடுவேன். ஹாஹா”

“ஏய்!!!!!!!!!” சிரித்தபடியே இன்னமும் இறுக்கி, அவள் கழுத்து வளைவில் அழமாக முத்தமிட்டவன், ஆசையுடன் அவள் தோளில்முகம் புதைத்துக்கொண்டான். ஒருவர் அணைப்பில் மற்றவர் திளைத்து இருந்தனர். கொஞ்சமும் மாறவேயில்லை அவள். இயல்பாக, அப்படியே இருக்கிறாள். திருமணத்திற்கு பின், அவன் தான் நிறைய மாறிபோயிருக்கிறான்.

“நான் ரொம்ம்ம்ப லக்கியாம். உன் ப்ரென்ட் சொல்கிறாள்.” அவளை சீண்டி பார்த்தான்.

“ஷி இஸ் ஆல்வேஸ் ரைட்..” மாயா தோள்குலுக்க,

“உங்க கேங்கில் எல்லாருக்குமே ஓவர் கான்பிடன்ஸ்டி..” செல்லமாக கடிந்துகொண்டே அவள் உச்சியில் தாடையை பதித்தான்.

“ஆதன் பேரைக் கேட்டாலே அவள் முகமெல்லாம் மாறுகிறது. இன்னும் அவங்களுக்குள்ள இஷு சால்வ் ஆகலையா?” அக்கறையாக கேட்டான் கவின்.

“மச்..” இல்லையென்பதாக சோகத்துடன் உதட்டை பிதுக்கினாள்.

திடீரென நினைவுவந்தவனாக, “அம்மு!!” உரக்க அழைத்தவன், “ம்யூசியத்தில் அன்று பார்த்தோமே ஒரு ஸ்வார்ட். ஞாபகம் இருக்கா உனக்கு?”

“ஹ்ம்ம்..கைப்பிடியில் கூட, என் நண்பன் பேர் ‘ஆதன்’ என்று எழுதியிருக்குமே!!”

“எஸ்..இப்போ அது ம்யூசியத்தில் இல்லை. அந்த சிலை போலவே அதுவும் மிஸ் ஆகிடுச்சு.” என்று இடைவெளி விட்டவன், “ஆதன்..” சோழப் பேரரசில் வருகிற பெயர் மாதிரி இருக்கு..” யோசனையுடன் அவன் புருவங்கள் நெறிந்தது.

“ம்ம்..ஆதன்..ஆதன்.....அறனாளன்..அந்த அரசனோட முழுப் பெயர்..” என்றாள் மாயா, தெளிவாக.



வணக்கம் மக்களே!!
முதல் அத்தியாயம் பதிவிட்டு விட்டேன். ஆதன், இந்த பெயருக்கான அர்த்தத்தை தேடிப்பாருங்கள். நிறைய சுவாரஸ்யமான தகவல்களை வாசிக்கலாம். சோழதேசத்து அரசன் ஆதன்அறனாளனைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் விரிவாக சொல்கிறேன்.இப்போ இந்த எபிக்கான கமென்ட்ஸ் ஐ ஷேர் பண்ணுங்க!!
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Very interesting kalpana sis....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top