அநாதையாய்

#1
"ஆயிரம் சொந்தங்கள்
அருகே வருகிறது
அன்பினால் அல்ல
ஆயிரங்கள் கொண்ட பணக்கட்டு
பையில் இருப்பதினால்"


"பாசத்திற்கும் பஞ்சம் வந்தது
பாவி இவளுக்கு
பையில்
பணம் இல்லாத போது"


"அப்பா நீ
அநாதையாய்
ஏனோ என்னை
விட்டுச் சென்றாய்"


"கரை புரண்டு
ஓடும் வெள்ளத்தில்
கழுத்தளவு நீரில்
கரை சேரமுடியாமல்
உன் பெண்ணவள்
பாடுபடுகிறாள்"


"உன் பாசம்
இல்லாமல்
பரிதவிக்கிறேன்
நீ ஊட்டிடும்
உணவு இல்லாமல்
உயிர் வாடுகிறேன்"


"நன்றாய் வளர்த்த
நீ
என்னை
நடுங்கவைக்கும் உலகமிதில்
நடுவே விட்டுச்சென்றாயே"


"உன் அன்பின்றி
அநாதையாய் ஆனேனே
ஆயுளுக்கும் இது தீராதோ?"


"தூரத்தில் காணும்
வண்டிகளில்
நீ வருகிறாய் என எண்ணி
நான் துடித்திட்ட பொழுதுகளை
துடைத்தெறிய முடியவில்லையே"


"அன்பின்றி அநாதையாய்
வாழ்ந்திடுவதை விட
அப்பா உன் அணைப்பில்
வாழ்ந்திட
அடக்கிக் கொள்கிறேன்
உலக வாழ்வை
இன்றோடு"
 
Last edited:

Sponsored

Advertisements

Top