அந்தம் இல்லாதவள்

Thoshi

Author
Author
#1
enathu muthal muyarchi 200 vaarthaigalil........IMG_20190330_151419.jpg


அது பழைய மர சாமான்களை வாங்கி விற்கும் கடை .அதன் உரிமையாளரான பார்வதி அம்மாளுக்கு 70 வயது .அவர் தன் முன் இருந்த டைரியை கண்டு யோசனையில் ஆழ்ந்தார் . அது அவர் கடைக்கு வந்த மரப்பெட்டி ஒன்றில் இருந்தது ,அதை படிப்பதா வேண்டாமா என்பதே அவரது யோசனை . முடிவில் படிக்க எண்ணி திறந்தார் ....அதில் இரண்டு பக்கங்கள் மட்டுமே எழுதி இருந்தது .


உள்ளே:

நான் கண்மணி, வயது 38 ...இத்தனை வருடங்களில் முதல் முதலாக டைரியை நாடியுள்ளேன் . இதன் காரணம் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள எவரும் இல்லாததாலா ?? அல்லது உரிமை இல்லாததாலா ??

ஐந்து குழந்தைகள் உள்ள ஏழையின் வீட்டில் பிறந்து வயிற்றுக்காக ஓடிய பெற்றோரிடமும்... பொறுப்பாய் செயல்பட்ட உடன் பிறந்தோரிடமும் எண்ணங்களை பகிர இயலாமல் அதை மனதில் அடக்க பழகினேன் .

அதை உடைத்து எனது ரசனைகளையும் எண்ணங்களையும் ரசிக்க கற்றுக் கொடுத்தான் , அவன் .18 வயதில் சின்னஞ்சிறு பறவை இருந்தவள் அவனின் பாசத்திலும் பகிர்ந்த எண்ணங்களிலும் கரைந்து குடும்பம் என்னும் எனது எண்ணங்களை அடக்கும் கூண்டிலிருந்து பறந்துவிட்டேன் அவனுடன் .
ஆம் எனது எண்ணங்களை அடக்கும் கூண்டு அவ்வாறே தோன்றியது அன்று.


இன்பமாய் வானில் பறக்கையில் சூறாவளியில் சிக்கி கீழே விழும் பறவையாய் விழுந்தேன் ....ஒன்று இரண்டு அல்ல... 19 ஆண்டுகளுக்குப் பின்னாலான அவனது துரோகத்தால் .

துரோகம் அறிந்த பின்பும் தப்பி செல்ல இயலாமல் உடைந்தேன், பெண்ணாய் பிறந்தமையால்.... எனக்கும் பெண்கள் பிறந்தமையால்.... அவர்களுக்காக மனம் கூசியும் துரோகத்தை வெளிக்கொணராமல் அவனை என்னுடன் தக்கவைக்க(!) போராடுகிறேன் .இதுதான் பெண்களின் சாபமா ??அல்லஎனது பெற்றவளின் கண்ணீருக்கான பதிலா??

"பிறந்ததிலிருந்து
நட்பை அறிந்ததில்லை..
துரோகம் அறிந்தபின்
நட்பிற்காக ஏங்குகிறேன்...
ஆறுதலாய் தோள் சாய்க்க
எவரும் இல்லை....
ஆயினும் ,,
வாழ்வேன்
என் தோள் சாயும்

எனது மகள்களுக்காய்"

இதைத் தவிர டைரியில் இருந்தது கண்ணீர் துளிகள் மட்டுமே . அதில் இப்பொழுது பார்வதி அம்மாளின் கண்ணீர்த்துளிகளும் கலந்தன ....அவருக்குத் தோன்றியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான் இப்பொழுது எங்கிருந்தாலும் இப்பெண்ணின் காயத்தை அறிவோர் எவரும் இல்லை என்னை தவிர!!


""பெண்ணின் மனம் ஆழமானது மட்டும் அல்ல ... பல துக்கங்களையும் தன் ஒற்றை சிரிப்பால் மறைத்து பிறரை வாழ செய்யும் திறன் கொண்டது...."( அந்தம் இல்லாதவளின் அந்தம் )
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top