• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகியின் " ஏய்! நீ ரொம்ப அழகாயிருக்கே" விமர்சனம்.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
“ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே “ இது @அழகியோட குறுநாவல் தலைப்பு. ஆனால் இந்த வார்த்தையை கதையின் நாயகன், நாயகியைப் பார்த்தும் நாம தாரளமாக சொல்லலாம். ஏனென்றால் அவர்களின் அகமும், முகமும் அவ்வளவு அழகு. ஆனால் நான் நாயகனைப் பார்த்து தான் சொல்லுவேன். ஏனென்றால் நம்ம ‘டிசைன்’ அப்படி.

சிங்காரச்சென்னையின் ராதா, மலைகளின் இளவரசி உதகையில் ஆசிரியர் வேலை பார்த்துக் கொண்டிருக்க, ஓர் நாள், ஒருபொழுதே தன்னை பார்த்த உடனேயே அவளில் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்க வைக்கிறான் நாயகன் அபராஜிதன்.ஆனால் அத்தனைக்கும் அன்றே சிறகொடிந்து போகின்றது ஆறு வயது மகள் ஆத்மிக்கு அட்மிஷனுக்காக அவள் பள்ளியில் அவனைக் கண்டபோது.
மறுநாளே அவன் விவாகரத்தானவன் என்று தெரியவர, சிறகொடிந்த பட்டாம்பூச்சிகள் அத்தனையும் மீண்டும் உயிர்தெழ, அவளின் மனது இயல்பாகவே பாசம் கொள்கிறது ஆறு வயது குழந்தைக்குரிய எந்த ஆர்ப்பாட்டமும், ஆர்வமும் இல்லாத அவனின் குழந்தை ஆத்மியிடம்.

நாளடைவில் நாயகனின் மகளுக்கு ஆசிரியர் ‘ஆன்ட்டி’ யாக, நாயகனின் மனதில் ஏதும் மாற்றங்களை கொண்டு வரமுடிந்ததா நம் நாயகியால், அப்படி ஏதும் மாற்றம் நிகழ்ந்திருந்தால் அது திருமணத்தில் முடிந்ததா? அந்த திருமணத்தில் நாயகனின் வாழ்வின் அபஸ்வரமாம் முதல் மனைவி ‘ஸ்வரா’ வின் தலையீடு ஏதும் இருந்ததா? என்று சுவாரஸ்யமான நிகழ்வுகளோடு அழகாக நகர்த்திருக்கிறார் அழகி கதையை...

எப்பொழுதும் போல் வார்தைகளில் வர்ணஜாலம் காட்ட ஆசிரியர் தவறவில்லை. “ஆத்மிகிட்ட ஏதோ மிஸ்ஸிங் மேடம்” என்று பள்ளி நிர்வாகியிடம் ராதா சொல்ல, “அம்மா தான் மிஸ்ஸிங்” என்று ஒரே வார்த்தையில், குழந்தையோடு அம்மா இல்லை என்று சொல்லுமிடம் மிக அருமை...அதுவும் இந்த கடைசி பதிவு கண்சிமிட்டாமல் படிக்க வைத்தார் அழகி தன் எழுத்தால். ஒவ்வொரு கதையையும் படிக்கும் போதும் எப்படி இந்த அம்மணி நம் உயிரை உருக்குற மாதிரி எழுதுகிறார் என்று பிரம்மித்து போகிறேன் நான்.

இம்முறை ஊட்டியில் இருந்து 2 நாள் பயணமாக சென்னைக்கு ஃப்ளாக் ஆடி வந்திருந்தது கண்கொள்ளாக் காட்சி (நமக்கு பிரியாணி முக்கியம் அமைச்சரே! )

கதை முடியும் போது இந்த அழகான நாவலை அழகியின் கைவண்ணத்தில் நெடுநாவலாக படிக்கமுடியவில்லையே என்ற ஏக்கம் எழுவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.

குறுநாவல் போட்டிக்கென்று எழுதிய நாவல்... எனவே போட்டியில் அழகியின்“ ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே “ வெற்றி பெற்று மாதநாவலில் வெளிவர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் தோழி.
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,081
Reaction score
49,948
Location
madurai
அழகான விமர்சனம் ????
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அருமையான விமர்சனம் அக்கா ??❤❤
பிரியாணி ரொம்ப ரொம்ப முக்கியம்.. ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top