• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகிய சிங்கர்-நரசிம்மர்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஆழ்வார்களிலே நான்காமவரான திருமழிசையாழ்வார், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி வைத்தாராம்.

1). மத்ஸ்ய,

2). கூர்ம,

3). வராஹ,

4). நரசிம்ம,

5). வாமன,

6). பரசுராம,

7). ஸ்ரீராம,

8). பலராம,

9). கிருஷ்ண,

10). கல்கி அவதாரங்களை, வரவழைத்தார்! திருமழிசையாழ்வார். முதல் சுற்றில் ..மத்ஸ்ய, கூர்ம, வராஹ மூன்று அவதாரங்களும் முறையே ..மீன், ஆமை, பன்றி ஆகிய மிருகங்களின் வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது! எனக் கூறி நிராகரித்து விட்டாராம் ஆழ்வார்.

நரசிம்மருக்குத் தலை சிங்கம்போல இருந்தாலும் உடல் மனித வடிவில் இருந்ததால் அவரை நிராகரிக்கவில்லை! திருமழிசையாழ்வார்.

நரசிம்மர் முதல் கல்கி வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள்.இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார்.மகாபலியிடம் சிறிய பாத்தைக் காட்டி மூவடி நிலம் கேட்டுவிட்டுப் பெரிய பாதத்தால் மூவுலகையும் அளந்தவர்! நீங்கள். அதைப்போலப் போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு! எனவே உங்களை நிராகரிக்கிறேன்!” என்றார் திருமழிசை யாழ்வார். பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும் கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அவரையும் நிராகரித்தார்! ஆழ்வார். பலராமன், கண்ணன் இருவரையும் பார்த்து, “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது.யாராவது ஒருவர் மட்டும் இருங்கள்!” என்று கூறினார்! ஆழ்வார். தம்பிக்காக பலராமன்போட்டியி லிருந்து விலகிக் கொண்டார்.கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால்,

“நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி அவரையும் நிராகரித்துவிட்டார்! திருமழிசையாழ்வார்.இறுதியாக, நரசிம்மர், இராமர், கிருஷ்ணர் மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள்.மூவரையும் பரீட்சித்துப் பார்த்த திருமழிசையாழ்விர் நரசிம்மர் தான் அழகு! என்று தீர்ப்பளித்தாராம்.இராமர் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினார் என்பதில் சந்தேகமில்லை.கிருஷ்ணர் அனைவரையும் மயக்கிய அழகர்!.என்பதிலும் சந்தேகமில்லை!ஆனாலும் ஆபத்தில் யார் நமக்கு ஓடோடி வந்து உதவி செய்கிறார்களோ, அவர்களே மிகவும் அழகானவர்கள் பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்து வந்து, உடனே காத்தப் பெருமாள் நரசிம்மர்; எனவே அவரே அழகு!” என்று தீர்பளித்திர் திருமழிசையாழ்வார்.பெருமாள் திருமேனியில் உள்ள அனைத்து அங்கங்களும் அழகாக இருந்தாலும், அவரது திருவடிகளையே நாம் கொண்டாடுகிறோம். ஏனெனில் நமக்குத் துன்பங்கள் நேரும்போது பரந்தானின் திருவடிகளைத் தான் நினைத்துக் கொள்கிறோம்.துயரங்கள் வரும்போது அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கின்றன, எனவே அவை தான் மிகவும் அழகு. அவ்வாறே ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர் தான் அவதாரங்களுக்குள் அழகானவர்.இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார். அழகியான் தானே அரி உருவன் தானே பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த் தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே மீனாய் உயிரளிக்கும் வித்து".

என்ற பாசுரத்தில் *அரி எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார்! திருமழிசையாழ்வார்.

அதனால்தான் அழகியசிங்கர் என்று அழைக்கப்படுகிறார்! நரசிங்கர்.
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
அற்புதம் எம் அழகியசிங்கர். அவதாரங்களின் அழகுப் போட்டி அருமை. இதை நடத்திய திருமழிசையாழ்வாரை நான் சிரம் தாழ்த்திப் பணிவன்புடன் வணங்குகின்றேன். அவர் அழைத்ததும் எல்லா அவதாரங்களும் வந்துவிட்டார்கள். இதை அறிய தந்த அனி சகோதரிக்குக் கோடானு கோடி நன்றிகள். எனக்கு நரசிம்மர் என்றால் கொஞ்சம் பயம்.
1556080711719.png1556080833798.png1556081118450.png1556081308601.png1556081468212.png
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top