• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அவள்…

[சமநிலைச் சிந்து]

Aval-eyes.png
அந்தி வானென அவள்முகமே – அதில்
......அழகிய மேகக் கோலமெனச்

சிந்திக் கிடந்தென் உயிர்வாங்கும் – இருள்
......திரளெனக் கருத்த நறுங்கூந்தல்!


நீலக் கடலென இருவிழிகள் – அதில்
......நீந்தி எழுசெஞ் சுடரெனவே

கோலத் திருநுதல் நடுவினிலே – இடும்
......குங்குமத் திலகம் திகழ்கிறதே!



காலன் கைச்சிலை ஒருபுறமும் – அந்தக்
......காமனின் கருப்புவில் மறுபுறமும்

நீல விழிஎனும் அம்புகளைக் – குறி
......நீட்டி என்னுயிர் கொளநிற்கும்!

[சிலை = வில்; புருவங்களுக்கு உவமை]


தைய்யத் தகதிமித் தைய்யவென – இமை
......தாளம் போட்டிடத் தானாடும்

மையது உண்ட கருவிழிகள் – என்
......மனமே களமாய்ப் போராடும்!



மாமுன் நிரையோ இலக்கணமே* – அதை
......மாற்றுகி றோம்காண் இக்கணமே – எனத்

தாமுன் நிறையும் என்பாவில் – எனைத்
......தளைகெட வைக்கும் வெண்பாவில்!


ஒளியே உள்ளே வீழ்ந்தாலும் – மீண்டு
......ஓடிட இயலாக் கருங்குழியாய் – அவள்

விழிகள் இரண்டும் முகவெளியில் – அடர்
......விசையொடு என்னை விழுங்கினவே!


[கருங்குழி – Black Hole, முகவெளி – (உருவகம்) முகமாகிய வெளி (Space), விசை – Force (Here, Gravity)]


கவியென நானும் கிறுக்குவதை – அவள்
......கண்கள் எள்ளி நகையாடும் – கடை

விழிகள் மொழியும் கவியோடு – என்
......விலையில் வார்த்தை பகையாடும்!

- அவள்


விழிகள் மொழியும் கவியோடு – என்
......விலையில் வார்த்தை பகையாடும்!


[விலையில் – விலை இல்லாத; மதிப்பற்ற]

*’மாமுன் நிரை’ என்பது இயற்சீர் வெண்டளை என்னும் தளை.
வெண்பாவில் அமையும் ஒரு இலக்கணம். மற்றது ‘விளமுன் நேர்’.


அன்புடன்,
--வி
:cool::cool:
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Bro’ really nice ???

விளக்கத்தோடு படிக்கும்போது ரொம்ப ரசிக்க முடிந்தது...
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஆசிரியரே கலக்குறீங்க.. எப்படி இப்படி எல்லாம் உவமை. நன்று நன்று
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அவள்…

[சமநிலைச் சிந்து]

View attachment 11763
அந்தி வானென அவள்முகமே – அதில்
......அழகிய மேகக் கோலமெனச்

சிந்திக் கிடந்தென் உயிர்வாங்கும் – இருள்
......திரளெனக் கருத்த நறுங்கூந்தல்!



நீலக் கடலென இருவிழிகள் – அதில்
......நீந்தி எழுசெஞ் சுடரெனவே


கோலத் திருநுதல் நடுவினிலே – இடும்
......குங்குமத் திலகம் திகழ்கிறதே!



காலன் கைச்சிலை ஒருபுறமும் – அந்தக்
......காமனின் கருப்புவில் மறுபுறமும்


நீல விழிஎனும் அம்புகளைக் – குறி
......நீட்டி என்னுயிர் கொளநிற்கும்!


[சிலை = வில்; புருவங்களுக்கு உவமை]


தைய்யத் தகதிமித் தைய்யவென – இமை
......தாளம் போட்டிடத் தானாடும்


மையது உண்ட கருவிழிகள் – என்
......மனமே களமாய்ப் போராடும்!



மாமுன் நிரையோ இலக்கணமே* – அதை
......மாற்றுகி றோம்காண் இக்கணமே – எனத்


தாமுன் நிறையும் என்பாவில் – எனைத்
......தளைகெட வைக்கும் வெண்பாவில்!



ஒளியே உள்ளே வீழ்ந்தாலும் – மீண்டு
......ஓடிட இயலாக் கருங்குழியாய் – அவள்


விழிகள் இரண்டும் முகவெளியில் – அடர்
......விசையொடு என்னை விழுங்கினவே!


[கருங்குழி – Black Hole, முகவெளி – (உருவகம்) முகமாகிய வெளி (Space), விசை – Force (Here, Gravity)]


கவியென நானும் கிறுக்குவதை – அவள்
......கண்கள் எள்ளி நகையாடும் – கடை


விழிகள் மொழியும் கவியோடு – என்
......விலையில் வார்த்தை பகையாடும்!


- அவள்

விழிகள் மொழியும் கவியோடு – என்
......விலையில் வார்த்தை பகையாடும்!


[விலையில் – விலை இல்லாத; மதிப்பற்ற]

*’மாமுன் நிரை’ என்பது இயற்சீர் வெண்டளை என்னும் தளை.
வெண்பாவில் அமையும் ஒரு இலக்கணம். மற்றது ‘விளமுன் நேர்’.


அன்புடன்,
--வி
:cool::cool:
எனக்கு ரொம்ப பிடித்தது இந்த வரிகள்

தைய்யத் தகதிமித் தைய்யவென – இமை
......தாளம் போட்டிடத் தானாடும்


மையது உண்ட கருவிழிகள் – என்
......மனமே களமாய்ப் போராடும்!


???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
கவிதை எழுத என்று ஏதாவது இலக்கணம் இருக்கிறதா ??? உங்க கவிதை படிக்கும் போது ஒரு தாளத்தோடு வருகிறது .., நான் மீண்டும் மீண்டும் படிக்கிறேன் ..... அந்த அழகை உணர முடிகிறது...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அருமை அருமை ??? எப்படி இப்படி எல்லாம் எழுதுறீங்க ஆசிரியரே... எனக்கு கொஞ்சம் விளக்கம் தேவை மாமுன் பதத்திர்க்கு
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
சமநிலை விளக்கம் & எங்கேயெல்லாம் இதை உபயோகப்படுத்தலாம்?
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top