• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆள்மாற்றம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
காயத்ரி அழுது கொண்டே சாப்பிட்டாள் , பாவம் அவள் என்ன செய்வாள் . அவளுக்கு தெரிந்த உண்மையெல்லாம் சொல்லி விட்டால் ஆனால் அதை நம்ப யாரும் தயாராக இல்லை. அவர்கள் நம்பும் அளவுக்கு பொய் சொல்லவும் இவளுக்கு தெரியவில்லை. . ஜெர்ரி இவளையே குறு குறுவென பார்த்து கொண்டிருந்தான் . இவள் சாப்பிட்டு முடித்ததும் விசாரணை தொடங்கி விடும். ஒரு பொங்கலை எவ்வளவு நேரம் தான் சாப்பிடுவது. அந்த பெருமாள் தான் தன்னை காக்க வேண்டும் என மனதிற்குள் எண்ணி கொண்டாள். அவள் வேண்டுதல் கேட்டு விட்டதோ என்னவோ. ஜெர்ரியின் போன் ஒலித்தது.
" யா .. சொல்லு "


" வாட் ! இத நான் எப்படி நம்புறது .." சில நொடி மௌனத்தில் , அவன் கவனம் போனில் குவிந்து இருக்க, அவன் கேட்ட ஏதோ ஒன்று அவன் முகத்தின் சிரிப்பை துடைத்து எடுத்தது .
" ஓகே ஓகே நன் காயத்ரியை விட்டுடறேன் .. எனக்கு அவன் வேணும் .. டீல் .."


போனை வைத்த போது அவன் முகம் கொஞ்சம் வெளிறி போனது,


" யாரு சார் போன்ல " நாராயணன் குழம்பி போய் கேட்க,


" நூர் மித்ரன் தம்பிய தூக்கிட்டா .. ரவியை அங்க புடுங்குனது போதும் இங்க வர சொல்லு.." தன் தலையை கோதி விட்ட வாறு அறையை விட்டு வெளியேறினான். காயத்ரி வாயில் இருந்த கடைசி பொங்கலை நிம்மதியாக முழுங்கினாள்.


*****************

நூர் முகத்தில் மீண்டும் இழந்த பொலிவு மிளிர , உற்சாகமானாள் . நிஷாவுக்கு மகிழ்ச்சி இருந்தாலும் மேரியை இன்னும் காணாதது கவலை அளித்தது . செல்வாவை கணேஷுடன் அனுப்பி விட்டு மேரிக்காகவே இருவரும் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் மேரி தூரத்தில் வருவது தெரிந்தது. மேரிக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற நிம்மதியுடன் நூர் நிஷாவை பார்க்க , அவளோ சந்தோஷத்தில் துள்ளி குதித்து விட்டு "டாமிமிமிமி ......" என கத்திக் கொண்டே அவளை நோக்கி ஓடினாள் அப்போது தான் மேரி கையில் வைத்திருந்த நாயை நூர் கவனித்தால். இதான் டாமியோ .. இதை தான் மித்ரன் பத்திரமாக பார்க்க சொல்லி அவன் தம்பியிடம் கொடுத்திருக்கிறான். இதில் எதோ ரகசியம் இருக்கிறது என மனதில் எண்ணியவளாய் நூர் மேரியிடம் சென்றாள் அவள்.


சில மணி நேரங்களுக்கு பிறகு, மாலை வேளையில் மித்ரன் தம்பி செல்வாவையும் நிஷாவையும் அழைத்து கொண்டு ஜெர்ரி சொன்ன இடத்துக்கு கிளம்பினாள் நூர். டாமி கிடைத்த தகவலை ரகசியமாக வைத்திருந்தாள். கணேஷுக்கு கூட அவள் இன்னும் சொல்லவில்லை. மேரியை டாமிக்கு காவலாக இன்னொரு இடத்தில் தங்க வைத்திருந்தாள். மித்ரனின் முழு திட்டத்தையும் அறிய, அவள் மனம் தவித்தது. ஆனால் இப்போது காயத்ரியை மீட்பதே தலையாய கடைமை. செல்வா விவரமற்றவனாக தெரிந்தான் , வரும் வழி நெடுகிலும் வள வள வென பேசிக்கொண்டே வந்தான். மித்ரனின் தந்திரத்தில் தம்புடி அளவு கூட அவனுக்கு இல்லை. ஜெர்ரியிடம் இவன் பிழைப்பதே கடினம் என்று நினைக்கையில் அவளுக்கு கொஞ்சம் பரிதாபமாகவே இருந்தது. இவள் இவ்வாறு எண்ணி கொண்டிருக்கையில் வாகனம் ஜெர்ரி சொன்ன இடத்தை அடைந்திருந்தது. முதலில் இறங்கிய நிஷா,
" என்ன மேடம் காபி ஷாப் ல நிறுத்திருக்கிங்க , மாமிய கூப்பிட்டு வந்துட்டு சாப்பிடலாமே.."


" இங்க தான் ஜெர்ரி வர சொன்னான்"


" என்ன இங்கேயா ..! என்ன மேடம் இந்த மாதிரி ஆக்சன்லாம் பாலைவனத்துல நடக்கும் இல்லேன்னா பாலத்துல நடக்கும் , நீங்க என்னனா இங்க வச்சிருக்கீங்க " நிஷா குரலில் ஏமாற்றம் தெரிந்தது.
பதிலாக நூர் சிறு புன்னகை மட்டுமே உதிர்த்தாள்.
இருந்தும் மனம் கேட்காமல் சுற்றும் முற்றும் பார்த்த நிஷா, நூரை நெருங்கி கிசுகிசுத்தாள்,
" மேடம் அங்க நிக்குற இளநி விக்ரவர், கேட் திறக்குற வாட்ச் மேன் , எதிர்த்த அப்பார்ட்மெண்ட்ல காக்காக்கு சோறு வைக்குற ஆயா எல்லாரும் நம்ம ஆளுங்க தான், நீங்க சிக்னல் கொடுத்ததும் கன் எடுத்து சுட்டுருவாங்க.. கரெக்டா..?" என்றாள் முகத்தில் உற்சாகம் பொங்கி வழிய, இம்முறை சிரிப்பை அடக்க முடியாமல் வாய் விட்டே சிரித்து விட்டாள் நூர்,
" நிஷா சினிமா மாற்று நடக்காது , அவங்களும் சாதாரண ஆளுங்க தான். நாம நேரே போய் காயத்ரியை கூட்டிட்டு வரோம் அவ்ளோ தான். பப்ளிக் ப்லேஸ் னா யாரும் ஏதும் பண்ண முடியாது அதான் இங்க சூஸ் பண்ணோம் .." நிஷாவுக்கு சிறு பிள்ளை போல விளக்கிய வேளை ,


" சூப்பர் ப்லேஸ் " என்றவாறே இறங்கினான் செல்வா,


" நான் இந்த மாதிரி இடதுக்குலாம் போனதே இல்ல , இங்க வரபோரோம்னு தெரிஞ்சிருந்தா நல்ல ட்ரெஸ் போட்ருப்பேனே " புலம்பினான் அவன். பக்கத்திலிருந்த கணேஷை நெருங்கி ,
" சார் ஒரு ஐநூறு ரூபா இருந்தா கடனா கொடுங்களேன்.. ஒரு நல்ல ட்ரெஸ் வாங்கிக்குரேண் . "


" டேய்.. யார்ட்ட பேசுற தெரியும்ல " கணேஷ் மீசையை முறுக்க.


" அட ஏன் சார் கோவப்படுறீங்க .. என் முஞ்சியலாம் பாத்தாலே உள்ள விட மாட்டாங்க அதான் ட்ரெஸ் போட்டாவுது மேட்ச் பன்னலாம்னு பாத்தேன்."


அவனை பார்த்து பரிதாபப்பட்டு நிஷா, " ஏன்பா உன் அண்ணன் இங்கல்லாம் கூட்டிட்டு வந்ததில்லையா.."


" நீங்க வேற அவன் வெளிய யாருனா கேட்டா என்ன டிரைவர்னு தான் சொல்லுவான் . எனக்கு இங்கிலிஷ்லாம் வெரி குட் கமிங் , நான் எங்கேயோ இருக்க வேண்டியவன். கொஞ்சம் காசு இருக்குற இடத்துல பொறந்திருந்தேன், நீங்க என்ன ... உங்கள விட செம்ம பிகரா பாத்து மடிச்சு செட்டில் ஆயிருப்பேன்.."


அவனுக்கு பரிதாபப்பட்ட தன் புத்தியை செருப்பாலே அடிக்க வேண்டுமென நினைத்து கொண்டாள் நிஷா.
குட்டை பாவாடையும் டவுசருமாக பல பெண்கள் அமர்ந்திருக்க அவர்கள் குட்டை பாவாடை நனையும் அளவுக்கு ஜொள்ளு விட்டவாறே வந்தான் செல்வா .
இரண்டு டேபிள்கள் தள்ளி ஜெர்ரி காயத்ரியுடன் அமர்ந்திருந்தான். இவர்களை பார்த்ததும் நீண்ட நாள் நண்பன் போல கை காட்டி அழைத்தான். இவர்கள் அந்த டேபிளில் அமரவும் நூரை பார்த்து, " பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல்ல , லுக்கிங் ஒண்டர்புல் " என்றான் ஜெர்ரி.
அதை கவனியாதது போல அமர்ந்தாள் நூர். அனைவரும் அமர்ந்தவுடன், உஸ்ஸ் என கண்ணை மூடி மூக்கால் நுகர்ந்த ஜெர்ரி, " அதே சென்ட் தான் யூஸ் பண்ணுற போல " என்றான் நூரை நோக்கி.
" செம்ம சார், போலீஸ் மோப்பம் பிடிக்கும்னு பேப்பர்ல படிச்சருக்கேன் , இப்போ தான் நேர்ல பாக்கறேன் " செல்வா இடையே நுழைந்தான்.
நூர் லேசாக சிரிக்க , ஜெர்ரி சினம் கக்க செல்வாவை பார்த்தான்.


" நீ தேடுன மித்ரன் பிரதர் இவர் தான் " என்றாள் நூர் நக்கலாக.


" நைஸ் மீட்டிங் யூ .. ஐ நேம் ஸ்டோன்கோல்டு செல்வா.." தன் கையை நீட்டினான் செல்வா


சினத்தில் கடித்த பற்களின் இடைவெளியில் "சட் அப் " என கத்தினான் ஜெர்ரி.


நூர் நக்கலாக சிரித்து விட்டு எழ முயல,
" இது நம்ம மாமிதான்னு எப்படி கண்பார்ம் பண்ணுறது " என்றாள் நிஷா
" நிஷா..." மானத்தை வாங்காதே என மனதுக்குள் மட்டும் சொன்னாள் நூர் .


" நீங்க சும்மா இருங்க மேடம்.. ரொம்ப கேர்லெஸா இருக்கீங்க.. இவரு வேற யாரையாச்சும் கொண்டு வந்து நம்மல ஏமாத்துனா ..? "


சிரிப்பதற்கு இப்போது ஜெர்ரியின் முறை மனதார சிரித்தான்.


" அவங்களே போக சொல்லிட்டாங்க , கடன்காரி கண்ட கண்ட இங்கிலிஷ் படத்தலாம் பாத்துண்டு என் கழுத்தை அறுக்குறியே.." கதறினாள் காயத்ரி.


" நீங்க தான் காயத்ரினு நான் நம்புற மாதிரி ஏதாச்சும் சொல்லுங்க, வேறேதும் பேசாதீங்க " தன் இருக்கையில் நிமிர்ந்து உக்கார்ந்தாள் நிஷா ஏதோ சாதித்தது போல,
சிறிது யோசித்த காயத்ரி சட்டென முகம் மலர்ந்தாள், " இதோ சொல்றேண்டி மவளே.. நீ போன வருஷம் பால் பாயாசத்துல சக்கரைக்கு பதில் கோல மாவை போட்டு பக்கத்தாத்து மாமாவை பரலோகம்.." அவள் முடிப்பதற்குள், நிஷா தன் குட்டு வெளிப்படுமென சுதார்த்தவளாய்,


" ஓகே ஓகே நம்ம மாமி தான் போலாம் போலாம் " என்றாள் .
நூர் நிம்மதி பெருமூச்சு விட்டு கிளம்ப முயல, செல்வா இடைமறித்தான், " என்ன மேடம் அதுக்குள்ள கிளம்பிட்டீங்கோ .. ஒரு செலுப்பி எடுத்துட்டு போலாமே எல்லாரும்.." பல் தெரிய இழித்தான்.


" அவர் கூட போப்பா செலஃபி என்ன க்ரூப்பியே எடுப்பாரு" ஜெர்ரியை கண்ணால் கேலி செய்தவள் காயத்ரியை நிஷாவையும் அழைத்துக் கொண்டு வீரு நடை போட்டு கிளம்பினாள்.
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
நூரும் ஜெர்ரியும் husband and wife ஓ?
காயு மாமியை மீட்டுட்டா...டாமி கிட்ட தான் வழி இருக்குதோ... அருமையான பதிவு அண்ணா
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
நூரும் ஜெர்ரியும் husband and wife ஓ?
காயு மாமியை மீட்டுட்டா...டாமி கிட்ட தான் வழி இருக்குதோ... அருமையான பதிவு அண்ணா
ஒரு கதாசிரியர் உருவாகிட்டார்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top