• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இதயத்தின் ராணிகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
பஞ்சாப் மற்றும் சிந்துவின் குறிப்பிடத்தக்க நாட்டுப்புறக் கதைகள் .இந்த காதல் கதைகள் வெவ்வேறு பாதைகளைப் பின்பற்றுகின்றன.நாட்டுப்புற கதைகளின் சின்னமான பாத்திரங்களை இன்று Punjab கலாச்சாரத்தில் எளிதாகக் காணலாம். எண்ணற்ற பாடல்கள், திரைப்படங்கள், கவிதைகள், புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் அவற்றை அழியாமல் வைத்திருக்கின்றன.

இந்த கதைகளை ஏற்க பலரால் முடியாமல் போகலாம்.காதல் ஒன்றே இங்கு பிரதானம்.அந்த காதலுக்காக சமூகம்,அதன் கோட்பாடுகள்,நெறிகள்,தளைகள் எதையும் தகர்க்க துணியும் காதலர்கள் பற்றிய நாட்டுப்புற காதல் காவியங்கள் இவை .

1.ஹீர் ரஞ்சா-

பஞ்சாபி நாட்டுப்புறக் கதைகளில் மிகவும் பிரபலமானது. பஞ்சாப் பகுதியில் மிகவும் அறியப்பட்ட சோகத்தில் முடியும் காதல் கதை ஆகும்.இது மந்திர புல்லாங்குழல் வாசித்த பஞ்சாபி ஜாட் ரஞ்சாவைப் பற்றியது. இசைக்கும் காதலுக்கும் உள்ள ஆழ்ந்த தொடர்பை சொல்லும் உன்னத காவியம்.

HEER-RANJAA

Heer-Ranjha-.jpg

இந்தக் கதை செல்வமிக்க, உயர்ந்த குடும்பத்து ஹீர் என்ற அழகான சிற்றூர் பெண்ணிற்கும் ராஞ்சா என்ற பண்ணை இளைஞருக்கும் இடையே எழுந்த காதலைக் குறித்தது. ஹீரின் தந்தையின் பண்ணையில் ராஞ்சா எருமைகளை மேய்த்து வந்தான். இருவருக்குமிடையே துளிர்த்த காதலை ஹீரின் பெற்றோர்கள் ஏற்கவில்லை. ஹீரைக் கட்டாயமாக ஒரு பணக்கார இளைஞருக்கு திருமணம் செய்விக்கின்றனர். இதனால் மனமுடைந்த ராஞ்சா துறவியாகின்றான். பின்னர் ஹீராவைச் சந்திக்க முயன்றும் இயலாமல் இறுதியில் இருவரும் மனமுடைந்து இறக்கின்றனர்.

“என்னை யாரும் இனி ஹீர் என்று அழைக்காதீர்கள் என்று என் ரஞ்சாவை பார்த்தேனோ அந்த கணம் முதல் நான் அவனாகி போனேன் .என்னை தீதோ ரஞ்சா என்றே அழையுங்கள்.”

"அவள் சுவாசம் இந்த பூமியில் இருந்த வரை நான் உயிர் வாழ்வேன் ...என்று அவள் சுவாசம் இந்த உலகை விட்டு சென்று விட்டதோ அன்றே இந்த இந்த பூமியில் இருக்க என்னால் முடியவில்லை.இங்கு எங்கள் இணைவை காலம் தடுத்து இருக்கலாம்.ஆனால் மரணத்தில் நாங்கள் இணைந்து விட்டோம். “

நிஜ வாழ்க்கையில் இவர்கள் இணைய முடியாமல் போனாலும் பெண்களின் நாட்டுப்புற காதல் பாடலில் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாகி வாழ்ந்து வருகின்றனர்.

ஹீர் போல் காதலிக்கும் பெண் மனைவியாகவும்,ரஞ்சா போன்ற உன்னை உள்ளத்தில் தாங்கும் கணவன் அமைய பெறட்டும் என்ற வாழ்த்தோடு இந்த பாடல்கள் முடியும்.

2.சோஹ்னி மஹிவால்-

sohni_mahiwal_PB55_l.jpg

பஞ்சாபி நாட்டுப்புறக் கதைகளிலிருந்து வெளிவரும் மற்றொரு சிறந்த காதல் கதை.

இது ஒரு குயவனின் மகள் சோஹ்னி மற்றும் இளவரசன் மஹிவாலின் கதை. சோஹ்னி வேறொரு குயவனை திருமணம் செய்ய நிர்பந்திக்கப்பட்டாள், ஆனால் மஹிவாலுடனான அவளது காதல் மகிவாலை சந்திக்க ஒரு ஆற்றின் குறுக்கே நீந்தத் தூண்டியது.

அவள் குறுக்கே நீந்த உதவ ஒரு மண் பானையைப் பயன்படுத்தினாள். அவரது மைத்துனர் இதைப் பற்றி அறிந்தபோது, சுட்ட மண் பானைக்கு பதிலாக சுடப்படாத ஒன்றை மாற்றினார். அவள் ஆற்றைக் கடக்க முயன்றபோது சுடப்படாத களிமண் தண்ணீரில் கரைந்து அவள் மூழ்கினாள். அவள் நீரில் மூழ்குவதைப் பார்த்த மகிவாலும் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கினான்.

மிர்சா மற்றும் சாஹிபா-
5bEGgqZEHBMf7k3njXPmnK7eta8hm1otji6LfyFnDVhaGpzjNtf2MbAH3TNvGBr1JQXcN6jHQSbrRv6oKdJU7Vsb24J2Zp9C.jpg

ஒரு பஞ்சாபி நாட்டுப்புறக் கதை, இது ஒரு கரல் ஜாட் நிலப் பேரனின் மகன் மிர்சா மற்றும் சியால் பழங்குடியினரின் கீவாவின் மகளின் சாஹிபா. அவர்கள் ஒன்றாக வளர்ந்து காதலித்தனர். அவர்கள் வளர்ந்தபோது மிர்சா தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது, இதற்கிடையில் சாஹிபா வேறொருவரை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தன்னை காப்பாற்ற வருமாறு மிர்சாவுக்கு ஒரு கடிதம் எழுதினாள். மிர்சா தனது குடும்பத்தினரின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் சென்று தனது மெஹந்தி விழாவின் போது அவளை அழைத்துச் சென்றார். சாஹிபாவின் சகோதரர்கள் அவர்களைத் துரத்திச் சென்று, இறுதியில் மிர்சாவைப் பிடித்து சண்டையிட்டு, அவரை வாளால் கொன்றனர்.

சாஹிபா இதைக் கண்டதும் மிர்சாவின் வாளால் தன்னைக் கொன்றாள், காதலர்கள் நாட்டுப்புற வரலாற்றில் அழியாதவர்களாக மாறினர்.

3 Sassi Punnu—

80ac6cd11d26c77e9b6d98b682ebfc17.jpg

Shah Abdul Latif Bhittai (1689-1752)என்ற sufi மத துறவி எழுதிய காவியம் இது.

சசி என்ற பெண் பாம்பூர் என்ற நாட்டை ஆண்ட ராஜாவின் மகள்.பிறந்த உடன் ஜோசியர்கள் இவளால் அவர்கள் பெயர் கெடும் என்று சொல்லிவிட,அவள் தாய் அவளை indus நதியில் விட்டு விடுகிறாள்.ஆற்றில் வந்த குழந்தையை துணி துவைக்கும் ஒருவர் எடுத்து வளர்க்கிறார்.

புன்னு கான் ராஜா மிர் மொஹான் கானின் மகன்.பலுசிஸ்தான் நாட்டை சேர்ந்தவன்.

சசி வளர வளர அவளின் தெய்வீகமான அழகை பற்றிய தகவல்களை கேட்டே புன்னு அவள் மேல் காதல் கொள்கிறான்.பார்க்காமலே வந்த காதல்,பார்த்த உடன் பெருவெள்ளமாய் மாறி போகிறது.

புன்னு அவளை மணக்க வளர்ப்பு தந்தையிடம் கேட்க அவரோ அந்த கால ஜெயம் ரவி நடித்த "something something படத்திற்கு முன்னோடியாக இளவரசனை நீ துணிகளை துவைத்து அதில் ஜெயிக்க வேண்டும் என்று பந்தயம் போடுகிறார்.இளவரசன் துணி துவைக்கும் போட்டியில் தோற்று விடுகிறான்.இருந்தாலும் பேசி பேசியே அந்த தந்தையின் மனதை கரைத்து விடுகிறார்.

இளவரசி குடும்பத்தால் இதை ஏற்க முடியாமல் போக,திருமணம் நாளின் போது இளவரசனுக்கு மயக்க மருந்து கொடுத்து அவனை தங்கள் நாட்டுக்கே அழைத்து சென்று விடுகின்றனர் அவன் குடும்பத்தினர்.

காணாமல் போன புன்னுவை தேடி ஓடுகிறாள் சசி.ஒரு ஆடுமேய்ப்பவனின் உதவியை நாட,அவனோ இவளின் அழகில் பைத்தியமாகி அவளை அடைய துடிக்க அதற்கு மேல் பொறுக்க முடியாத சசி,தன் காதல் தூய்மையானது என்றால் அங்குள்ள மலை பிளந்து தன்னை உயிரோடு புதைத்து கொள்ளட்டும் என்று கடவுளிடம் வேண்ட அந்த மலை அவளின் காதலின் ஆழத்தை உணர்ந்து அவளை விழுங்கி விடுகிறது.
2816.jpg

புன்னு இவளை தேடி அவள் ஊருக்கு சென்று எங்கே போனால் என்று அறியமுடியாதவனாய் பைத்தியம் போல் காடு,மேடு எல்லாம் அலைந்தது அவள் இறந்த மலை அருகே வருகிறான்.உண்மை அறிந்து அவனும் கடவுளை வேண்ட,அந்த மலை அவனையும் விழுங்கி விடுகிறது.

5.மோமல் ராணா
51F2khYSAyL._SX425_.jpg

ஜெய்சல்மர் நாட்டின் இளவரசி மோமல்.ஒரு மந்திர மாளிகை "காக் "என்று அழைக்க படும் அதில் தன் ஏழு சகோதரிகளுடன் வாழந்து வருகிறாள். தனக்கும் தன் சகோதரிகளுக்கும் ஏற்ற மணமகனை தேர்வு செய்ய அந்த மந்திர கோட்டை பல சோதனைகளை அவள் அழகை கேள்வி பட்டு வரும் இளைஞ்சர்களுக்கு வைக்கும்.

அமர் கோட் ராஜா ராணா மஹேந்திர சோடா அந்த தடைகளை கடந்து எல்லா போட்டியிலும் வெற்றி பெற்று மோமல் மனதை கவர்ந்து மணம் முடிக்கிறார்.தினமும் இரவில் காக் கோட்டைக்கு வரும் ராணா விடிந்ததும் பல மைல் தொலைவு உள்ள தன் நாட்டிற்கு திரும்பி விடுவார்.

ஒருநாள் இரவு அவர் வரவில்லை என்றதும் கோபம் கொண்ட மோமல்,அவரை வெறுப்பேற்ற தன் சகோதரி ஒருத்தியை ஆண் வேடம் அணிய செய்து தன் அறையில் ராணா வரும் போது அணைப்பது போல் நாடகம் ஆடுகிறார்.அதை உண்மை என்று நம்பிய ராணா கோபத்த்துடன் அவளை பிரிகிறார்.

எவ்வளவோ மன்றாடியும் ராணா அது வெறும் நாடகம் என்று நம்ப மறுத்து விட,மோமல் அவர் அரசவையில் நெருப்பு மூட்டி ராணா கண் முன்னே நெருப்பில் பாய்ந்து விடுகிறார்.ராணாவும் அதே நெருப்பில் குதித்து உயிர் துறக்கிறார்.

6.உமர் -மார்வி
2814.jpg

தாரி இனத்தை சார்ந்த மார்வி என்ற பெண்ணை அமர் கோட் ராஜா உமர் அழகை கண்டு காதலித்து சிறை எடுக்கிறார்.அவளை திருமணம் செய்ய விரும்ப,அவளோ அவர் தன் நாட்டின் எதிரி என்பதால் அவர் காதலை ஏற்க மறுத்து விட கோபம் கொண்ட ராஜா அவளை அமர் கோட் கோட்டையில் சிறை வைக்கிறார்.அவளின் கடைசி மூச்சு உள்ள வரை தினமும் அவளை மணக்க கேட்டதாகவும்,அதை மார்வி மறுத்து கொண்டே இருந்தாராம்.

இது ஒரு பெண்ணின் தேச பற்றுக்கும்,அந்நிய நாட்டவனை ஏற்க மறுக்கும் மன உறுதிக்கும்,அவளை தவிர வேறு யாரையும் மணக்க முடியாது என்று நிலைத்து நிற்கும் காதலுக்கும் இடையேயான போராட்டம்.வழக்கம் போல் இங்கும் மரணமே ஜெயிக்கிறது.

தாய் நாட்டிற்காக காதலை மறுக்கும் மார்வி,காதலுக்காக அவளையே சிறை வைத்து அவளுக்காக உயிர் துறக்கும் ராஜாவின் வாழ்க்கை இது.

7.லீலா சானெஸ்ஸார் -காதல் இந்த வகையில் ஒன்றாக குறிப்பிட பட்டு இருந்தாலும் அவர்கள் கதை என்ன என்ற குறிப்பு கிடைக்கவில்லை.இவர்களின் வாழ்க்கை நாட்டுப்புற பாடல்களில் மிக பிரசித்தம் என்று சொல்ல படுகிறது.

8.Noori Jam Tamachi.
Noori-Jam-Tamachi-Story-Lake.jpg Noori_jee_Qabr.jpg

நூரி என்ற மீனவ பெண்ணுக்கும் ராஜா ஜாம் தாமசி இடையே ஏற்பட்ட காதல் இது.அந்த ராஜாவுக்கு ஏற்கனவே 6 ராணிகள் இருந்த போதும் நூரி மீது காதல் வயப்பட்டு அவளை மணக்கிறார்.அந்த 6 ராணிகள் பல சூழ்ச்சி செய்தாலும் தன் காதலால் நாட்டினர் மனதை கவர்கிறார் ராணி நூரி.கடைசி வரை ராணி என்ற ஜம்பம் இல்லாமல் மீனவ பெண்ணாகவே எளிமையாக வாழ்ந்த ராணி மன்னனையும் மக்களுக்காகவே வாழ வைத்தார்.அந்த ராணியின் கல்லறை கெஞ்சர் ஏரியின் நடுவே வெள்ளை பளிங்கினால் கட்ட பட்டது.

காதலால் உலகையே ஆள முடியும் என்று நிரூபித்த ராணியின் காதல் இது.

9.சோரத் என்ற ballad வகை இசைக்கு அடிப்படை காரணமாய் இருந்த பெண் பற்றிய கதை.

சோரத் அழகை கண்டு ராஜா ராய் டயச் காதல் கொள்கிறார்.அவள் கரம் பற்றும் முன்பே ராஜா அன்னிராய் அவளை மணக்க கேட்டு விடராஜா ராய் அவளை சிறை எடுத்து மணக்கிறார்.

இதனால் கோபம் அடைந்த அன்னிராய் பல முறை போர் தொடுத்தும் ராயை வெற்றி பெற முடியவில்லை

,"யார் ராஜா ராய் தலை கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு தட்டு நிறைய தங்கம்,வைரம்,விலைமதிப்பில்லாத கற்கள் எல்லாம் பரிசு"என்று பிரகடன படுத்துகிறார்.

அதே ஊரில் பிஜால் என்ற இசை கலைஞ்சர் தன் பேராசை மிக்க மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.ராஜாவின் அறிவிப்பை கேட்ட உடன் அந்த பெண் மொத்த பரிசையும் தன் வீட்டில் வாங்கி வைத்து கொண்டு,"என் கணவன் ராஜாவின் தலை கொய்வார்"என்று அன்னிராய்க்கு வாக்கு கொடுத்து விடுகிறாள்.

எவ்வளவோ பேசியும் மனைவி அதை ஏற்று கொள்ள வில்லை என்றதும் மனம் உடைகிறார் பிஜால்.அவருக்கு ராஜா ராய் மீது அதிக பற்று உண்டு.மக்களின் ராஜா அவர்.

6 நாட்கள் ராஜாவின் கோட்டை வாயில் முன் பிஜால் வாசிக்க இசை பிரியரான ராய் அவரை உள்ளே அழைத்து உபசரித்து அவர் இசையை கேட்க விரும்புகிறார்.தொடர்ந்து 6 நாட்கள் பிஜால் வாசிக்கும் போது எல்லாம் ராய் பரிசு கொடுக்க அதை ஏற்க மறுக்கிறார் பிஜால்.

7வது நாள் ராஜா "என்ன வேண்டுமோ கேளுங்கள்"என்று சொல்லி விட அவர் தலையை கேட்கிறார்.சோரத் தன் கணவனுக்கு உயிர் பிச்சை அளிக்க மன்றாட மறுத்து விடுகிறார் பிஜால்.ராஜா ராய் தன் தலையை தானே வெட்டி கொடுத்து விட,ராஜா அன்னிராய் அதை கண்டு மகிழ்வதற்கு பதில் இத்தனை உயர்ந்த ராஜாவை கொள்வதற்கு தானே காரணமாகி விட்டோமே எண்டு வருந்த,ராஜாவின் தலையுடன் பிஜால் மீண்டும் சோரத்திடம் வருகிறார்.

அதற்குள் சதி மூட்டி நெருப்பில் குதித்து விட்ட ராணி நெருப்பில் நின்ற படி,துளியும் கதறாமல் கணவனின் தலைகாக காத்துநிற்க கேட்க,பிஜாலும் அந்த காதலுக்கு பணிந்து நெருப்பில் இறங்கி விடுகிறார்.

இது கொடுத்த வாக்கு,ஒருவனுக்கு ஒருத்தி,காதல்,வீரம்,போன்ற பல கலைவையான சுவை உள்ளடக்கியது.

1567313927591.png
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
wow.... அருமையான பதிவு honey டியர்... நிறைய பேருக்கு தெரியாத விஷயம் ... thanks dear:love::love:
 
Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
பஞ்சாப் மற்றும் சிந்துவின் குறிப்பிடத்தக்க நாட்டுப்புறக் கதைகள் .இந்த காதல் கதைகள் வெவ்வேறு பாதைகளைப் பின்பற்றுகின்றன.நாட்டுப்புற கதைகளின் சின்னமான பாத்திரங்களை இன்று Punjab கலாச்சாரத்தில் எளிதாகக் காணலாம். எண்ணற்ற பாடல்கள், திரைப்படங்கள், கவிதைகள், புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் அவற்றை அழியாமல் வைத்திருக்கின்றன.

இந்த கதைகளை ஏற்க பலரால் முடியாமல் போகலாம்.காதல் ஒன்றே இங்கு பிரதானம்.அந்த காதலுக்காக சமூகம்,அதன் கோட்பாடுகள்,நெறிகள்,தளைகள் எதையும் தகர்க்க துணியும் காதலர்கள் பற்றிய நாட்டுப்புற காதல் காவியங்கள் இவை .

1.ஹீர் ரஞ்சா-

பஞ்சாபி நாட்டுப்புறக் கதைகளில் மிகவும் பிரபலமானது. பஞ்சாப் பகுதியில் மிகவும் அறியப்பட்ட சோகத்தில் முடியும் காதல் கதை ஆகும்.இது மந்திர புல்லாங்குழல் வாசித்த பஞ்சாபி ஜாட் ரஞ்சாவைப் பற்றியது. இசைக்கும் காதலுக்கும் உள்ள ஆழ்ந்த தொடர்பை சொல்லும் உன்னத காவியம்.

HEER-RANJAA

View attachment 14923

இந்தக் கதை செல்வமிக்க, உயர்ந்த குடும்பத்து ஹீர் என்ற அழகான சிற்றூர் பெண்ணிற்கும் ராஞ்சா என்ற பண்ணை இளைஞருக்கும் இடையே எழுந்த காதலைக் குறித்தது. ஹீரின் தந்தையின் பண்ணையில் ராஞ்சா எருமைகளை மேய்த்து வந்தான். இருவருக்குமிடையே துளிர்த்த காதலை ஹீரின் பெற்றோர்கள் ஏற்கவில்லை. ஹீரைக் கட்டாயமாக ஒரு பணக்கார இளைஞருக்கு திருமணம் செய்விக்கின்றனர். இதனால் மனமுடைந்த ராஞ்சா துறவியாகின்றான். பின்னர் ஹீராவைச் சந்திக்க முயன்றும் இயலாமல் இறுதியில் இருவரும் மனமுடைந்து இறக்கின்றனர்.

“என்னை யாரும் இனி ஹீர் என்று அழைக்காதீர்கள் என்று என் ரஞ்சாவை பார்த்தேனோ அந்த கணம் முதல் நான் அவனாகி போனேன் .என்னை தீதோ ரஞ்சா என்றே அழையுங்கள்.”

"அவள் சுவாசம் இந்த பூமியில் இருந்த வரை நான் உயிர் வாழ்வேன் ...என்று அவள் சுவாசம் இந்த உலகை விட்டு சென்று விட்டதோ அன்றே இந்த இந்த பூமியில் இருக்க என்னால் முடியவில்லை.இங்கு எங்கள் இணைவை காலம் தடுத்து இருக்கலாம்.ஆனால் மரணத்தில் நாங்கள் இணைந்து விட்டோம். “

நிஜ வாழ்க்கையில் இவர்கள் இணைய முடியாமல் போனாலும் பெண்களின் நாட்டுப்புற காதல் பாடலில் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாகி வாழ்ந்து வருகின்றனர்.

ஹீர் போல் காதலிக்கும் பெண் மனைவியாகவும்,ரஞ்சா போன்ற உன்னை உள்ளத்தில் தாங்கும் கணவன் அமைய பெறட்டும் என்ற வாழ்த்தோடு இந்த பாடல்கள் முடியும்.

2.சோஹ்னி மஹிவால்-

View attachment 14924

பஞ்சாபி நாட்டுப்புறக் கதைகளிலிருந்து வெளிவரும் மற்றொரு சிறந்த காதல் கதை.

இது ஒரு குயவனின் மகள் சோஹ்னி மற்றும் இளவரசன் மஹிவாலின் கதை. சோஹ்னி வேறொரு குயவனை திருமணம் செய்ய நிர்பந்திக்கப்பட்டாள், ஆனால் மஹிவாலுடனான அவளது காதல் மகிவாலை சந்திக்க ஒரு ஆற்றின் குறுக்கே நீந்தத் தூண்டியது.

அவள் குறுக்கே நீந்த உதவ ஒரு மண் பானையைப் பயன்படுத்தினாள். அவரது மைத்துனர் இதைப் பற்றி அறிந்தபோது, சுட்ட மண் பானைக்கு பதிலாக சுடப்படாத ஒன்றை மாற்றினார். அவள் ஆற்றைக் கடக்க முயன்றபோது சுடப்படாத களிமண் தண்ணீரில் கரைந்து அவள் மூழ்கினாள். அவள் நீரில் மூழ்குவதைப் பார்த்த மகிவாலும் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கினான்.

மிர்சா மற்றும் சாஹிபா-
View attachment 14925

ஒரு பஞ்சாபி நாட்டுப்புறக் கதை, இது ஒரு கரல் ஜாட் நிலப் பேரனின் மகன் மிர்சா மற்றும் சியால் பழங்குடியினரின் கீவாவின் மகளின் சாஹிபா. அவர்கள் ஒன்றாக வளர்ந்து காதலித்தனர். அவர்கள் வளர்ந்தபோது மிர்சா தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது, இதற்கிடையில் சாஹிபா வேறொருவரை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தன்னை காப்பாற்ற வருமாறு மிர்சாவுக்கு ஒரு கடிதம் எழுதினாள். மிர்சா தனது குடும்பத்தினரின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் சென்று தனது மெஹந்தி விழாவின் போது அவளை அழைத்துச் சென்றார். சாஹிபாவின் சகோதரர்கள் அவர்களைத் துரத்திச் சென்று, இறுதியில் மிர்சாவைப் பிடித்து சண்டையிட்டு, அவரை வாளால் கொன்றனர்.

சாஹிபா இதைக் கண்டதும் மிர்சாவின் வாளால் தன்னைக் கொன்றாள், காதலர்கள் நாட்டுப்புற வரலாற்றில் அழியாதவர்களாக மாறினர்.

3 Sassi Punnu—

View attachment 14926

Shah Abdul Latif Bhittai (1689-1752)என்ற sufi மத துறவி எழுதிய காவியம் இது.

சசி என்ற பெண் பாம்பூர் என்ற நாட்டை ஆண்ட ராஜாவின் மகள்.பிறந்த உடன் ஜோசியர்கள் இவளால் அவர்கள் பெயர் கெடும் என்று சொல்லிவிட,அவள் தாய் அவளை indus நதியில் விட்டு விடுகிறாள்.ஆற்றில் வந்த குழந்தையை துணி துவைக்கும் ஒருவர் எடுத்து வளர்க்கிறார்.

புன்னு கான் ராஜா மிர் மொஹான் கானின் மகன்.பலுசிஸ்தான் நாட்டை சேர்ந்தவன்.

சசி வளர வளர அவளின் தெய்வீகமான அழகை பற்றிய தகவல்களை கேட்டே புன்னு அவள் மேல் காதல் கொள்கிறான்.பார்க்காமலே வந்த காதல்,பார்த்த உடன் பெருவெள்ளமாய் மாறி போகிறது.

புன்னு அவளை மணக்க வளர்ப்பு தந்தையிடம் கேட்க அவரோ அந்த கால ஜெயம் ரவி நடித்த "something something படத்திற்கு முன்னோடியாக இளவரசனை நீ துணிகளை துவைத்து அதில் ஜெயிக்க வேண்டும் என்று பந்தயம் போடுகிறார்.இளவரசன் துணி துவைக்கும் போட்டியில் தோற்று விடுகிறான்.இருந்தாலும் பேசி பேசியே அந்த தந்தையின் மனதை கரைத்து விடுகிறார்.

இளவரசி குடும்பத்தால் இதை ஏற்க முடியாமல் போக,திருமணம் நாளின் போது இளவரசனுக்கு மயக்க மருந்து கொடுத்து அவனை தங்கள் நாட்டுக்கே அழைத்து சென்று விடுகின்றனர் அவன் குடும்பத்தினர்.

காணாமல் போன புன்னுவை தேடி ஓடுகிறாள் சசி.ஒரு ஆடுமேய்ப்பவனின் உதவியை நாட,அவனோ இவளின் அழகில் பைத்தியமாகி அவளை அடைய துடிக்க அதற்கு மேல் பொறுக்க முடியாத சசி,தன் காதல் தூய்மையானது என்றால் அங்குள்ள மலை பிளந்து தன்னை உயிரோடு புதைத்து கொள்ளட்டும் என்று கடவுளிடம் வேண்ட அந்த மலை அவளின் காதலின் ஆழத்தை உணர்ந்து அவளை விழுங்கி விடுகிறது.
View attachment 14928

புன்னு இவளை தேடி அவள் ஊருக்கு சென்று எங்கே போனால் என்று அறியமுடியாதவனாய் பைத்தியம் போல் காடு,மேடு எல்லாம் அலைந்தது அவள் இறந்த மலை அருகே வருகிறான்.உண்மை அறிந்து அவனும் கடவுளை வேண்ட,அந்த மலை அவனையும் விழுங்கி விடுகிறது.

5.மோமல் ராணா
View attachment 14927

ஜெய்சல்மர் நாட்டின் இளவரசி மோமல்.ஒரு மந்திர மாளிகை "காக் "என்று அழைக்க படும் அதில் தன் ஏழு சகோதரிகளுடன் வாழந்து வருகிறாள். தனக்கும் தன் சகோதரிகளுக்கும் ஏற்ற மணமகனை தேர்வு செய்ய அந்த மந்திர கோட்டை பல சோதனைகளை அவள் அழகை கேள்வி பட்டு வரும் இளைஞ்சர்களுக்கு வைக்கும்.

அமர் கோட் ராஜா ராணா மஹேந்திர சோடா அந்த தடைகளை கடந்து எல்லா போட்டியிலும் வெற்றி பெற்று மோமல் மனதை கவர்ந்து மணம் முடிக்கிறார்.தினமும் இரவில் காக் கோட்டைக்கு வரும் ராணா விடிந்ததும் பல மைல் தொலைவு உள்ள தன் நாட்டிற்கு திரும்பி விடுவார்.

ஒருநாள் இரவு அவர் வரவில்லை என்றதும் கோபம் கொண்ட மோமல்,அவரை வெறுப்பேற்ற தன் சகோதரி ஒருத்தியை ஆண் வேடம் அணிய செய்து தன் அறையில் ராணா வரும் போது அணைப்பது போல் நாடகம் ஆடுகிறார்.அதை உண்மை என்று நம்பிய ராணா கோபத்த்துடன் அவளை பிரிகிறார்.

எவ்வளவோ மன்றாடியும் ராணா அது வெறும் நாடகம் என்று நம்ப மறுத்து விட,மோமல் அவர் அரசவையில் நெருப்பு மூட்டி ராணா கண் முன்னே நெருப்பில் பாய்ந்து விடுகிறார்.ராணாவும் அதே நெருப்பில் குதித்து உயிர் துறக்கிறார்.

6.உமர் -மார்வி
View attachment 14929

தாரி இனத்தை சார்ந்த மார்வி என்ற பெண்ணை அமர் கோட் ராஜா உமர் அழகை கண்டு காதலித்து சிறை எடுக்கிறார்.அவளை திருமணம் செய்ய விரும்ப,அவளோ அவர் தன் நாட்டின் எதிரி என்பதால் அவர் காதலை ஏற்க மறுத்து விட கோபம் கொண்ட ராஜா அவளை அமர் கோட் கோட்டையில் சிறை வைக்கிறார்.அவளின் கடைசி மூச்சு உள்ள வரை தினமும் அவளை மணக்க கேட்டதாகவும்,அதை மார்வி மறுத்து கொண்டே இருந்தாராம்.

இது ஒரு பெண்ணின் தேச பற்றுக்கும்,அந்நிய நாட்டவனை ஏற்க மறுக்கும் மன உறுதிக்கும்,அவளை தவிர வேறு யாரையும் மணக்க முடியாது என்று நிலைத்து நிற்கும் காதலுக்கும் இடையேயான போராட்டம்.வழக்கம் போல் இங்கும் மரணமே ஜெயிக்கிறது.

தாய் நாட்டிற்காக காதலை மறுக்கும் மார்வி,காதலுக்காக அவளையே சிறை வைத்து அவளுக்காக உயிர் துறக்கும் ராஜாவின் வாழ்க்கை இது.

7.லீலா சானெஸ்ஸார் -காதல் இந்த வகையில் ஒன்றாக குறிப்பிட பட்டு இருந்தாலும் அவர்கள் கதை என்ன என்ற குறிப்பு கிடைக்கவில்லை.இவர்களின் வாழ்க்கை நாட்டுப்புற பாடல்களில் மிக பிரசித்தம் என்று சொல்ல படுகிறது.

8.Noori Jam Tamachi.
View attachment 14930 View attachment 14931

நூரி என்ற மீனவ பெண்ணுக்கும் ராஜா ஜாம் தாமசி இடையே ஏற்பட்ட காதல் இது.அந்த ராஜாவுக்கு ஏற்கனவே 6 ராணிகள் இருந்த போதும் நூரி மீது காதல் வயப்பட்டு அவளை மணக்கிறார்.அந்த 6 ராணிகள் பல சூழ்ச்சி செய்தாலும் தன் காதலால் நாட்டினர் மனதை கவர்கிறார் ராணி நூரி.கடைசி வரை ராணி என்ற ஜம்பம் இல்லாமல் மீனவ பெண்ணாகவே எளிமையாக வாழ்ந்த ராணி மன்னனையும் மக்களுக்காகவே வாழ வைத்தார்.அந்த ராணியின் கல்லறை கெஞ்சர் ஏரியின் நடுவே வெள்ளை பளிங்கினால் கட்ட பட்டது.

காதலால் உலகையே ஆள முடியும் என்று நிரூபித்த ராணியின் காதல் இது.

9.சோரத் என்ற ballad வகை இசைக்கு அடிப்படை காரணமாய் இருந்த பெண் பற்றிய கதை.

சோரத் அழகை கண்டு ராஜா ராய் டயச் காதல் கொள்கிறார்.அவள் கரம் பற்றும் முன்பே ராஜா அன்னிராய் அவளை மணக்க கேட்டு விடராஜா ராய் அவளை சிறை எடுத்து மணக்கிறார்.

இதனால் கோபம் அடைந்த அன்னிராய் பல முறை போர் தொடுத்தும் ராயை வெற்றி பெற முடியவில்லை

,"யார் ராஜா ராய் தலை கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு தட்டு நிறைய தங்கம்,வைரம்,விலைமதிப்பில்லாத கற்கள் எல்லாம் பரிசு"என்று பிரகடன படுத்துகிறார்.

அதே ஊரில் பிஜால் என்ற இசை கலைஞ்சர் தன் பேராசை மிக்க மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.ராஜாவின் அறிவிப்பை கேட்ட உடன் அந்த பெண் மொத்த பரிசையும் தன் வீட்டில் வாங்கி வைத்து கொண்டு,"என் கணவன் ராஜாவின் தலை கொய்வார்"என்று அன்னிராய்க்கு வாக்கு கொடுத்து விடுகிறாள்.

எவ்வளவோ பேசியும் மனைவி அதை ஏற்று கொள்ள வில்லை என்றதும் மனம் உடைகிறார் பிஜால்.அவருக்கு ராஜா ராய் மீது அதிக பற்று உண்டு.மக்களின் ராஜா அவர்.

6 நாட்கள் ராஜாவின் கோட்டை வாயில் முன் பிஜால் வாசிக்க இசை பிரியரான ராய் அவரை உள்ளே அழைத்து உபசரித்து அவர் இசையை கேட்க விரும்புகிறார்.தொடர்ந்து 6 நாட்கள் பிஜால் வாசிக்கும் போது எல்லாம் ராய் பரிசு கொடுக்க அதை ஏற்க மறுக்கிறார் பிஜால்.

7வது நாள் ராஜா "என்ன வேண்டுமோ கேளுங்கள்"என்று சொல்லி விட அவர் தலையை கேட்கிறார்.சோரத் தன் கணவனுக்கு உயிர் பிச்சை அளிக்க மன்றாட மறுத்து விடுகிறார் பிஜால்.ராஜா ராய் தன் தலையை தானே வெட்டி கொடுத்து விட,ராஜா அன்னிராய் அதை கண்டு மகிழ்வதற்கு பதில் இத்தனை உயர்ந்த ராஜாவை கொள்வதற்கு தானே காரணமாகி விட்டோமே எண்டு வருந்த,ராஜாவின் தலையுடன் பிஜால் மீண்டும் சோரத்திடம் வருகிறார்.

அதற்குள் சதி மூட்டி நெருப்பில் குதித்து விட்ட ராணி நெருப்பில் நின்ற படி,துளியும் கதறாமல் கணவனின் தலைகாக காத்துநிற்க கேட்க,பிஜாலும் அந்த காதலுக்கு பணிந்து நெருப்பில் இறங்கி விடுகிறார்.

இது கொடுத்த வாக்கு,ஒருவனுக்கு ஒருத்தி,காதல்,வீரம்,போன்ற பல கலைவையான சுவை உள்ளடக்கியது.

View attachment 14933

Nice stories
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எட்டு இதய ராணிகளின் கதைகளும் நெஞ்சம் தொட்டு என் இதயத்தில்
இடம் பிடித்து விட்டன, அனிதா டியர்
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top