• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இனிமே நீ குடிப்ப?! 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
அன்பில் நிறைந்து சொக்கரும் மீனாட்சியும் ஆண்ட மாமதுரைச் சீமை. அதைச் சுற்றிப் பல குக்கிராமங்கள் எழிலும் பொழிலும் கொஞ்ச நிமிர்ந்து நின்றன. அப்படி ஒரு கிராமம் தான் பூம்பொழில்.(யாரும் இந்த ஊரை மதுரையில் தேடிராதீங்கோ?). விவசாயத்தை நம்பி வாழும் மக்களைப் பெற்ற ஊர். குழந்தைவேலு லட்சுமியம்மாள் தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமான பதினைந்து ஏக்கர் நிலத்தில் ஐந்து ஏக்கரில் மாந்தோப்பும் ஐந்து ஏக்கரில் தென்னையும் வளர்த்து தோட்டங்களாய் உருவாக்கி மீதி ஐந்து ஏக்கரில் பயிரிட்டு விவசாயம் செய்தனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மகள் சீதா, மகன் விதுரன்.

குழந்தைவேலு ஐயாவிற்கு விவசாயம் செய்வது வெல்லம் என்றால் கதை கேட்பதோ கற்கண்டு போல். வானொலியில் வரும் சொற்பொழிவுகள் முக்கியமாகக் கதைகள் கேட்பது அவரது தினசரி பழக்கங்களில் ஒன்று. அப்படிக் கதை கேட்டதில் அவரை மிகவும் பாதித்த இருவர் சீதா(இராமாயணம்), விதுரன்(மகாபாரதம்). ஆகையால் தன் பிள்ளைச் செல்வங்களுக்கு அந்த பெயர்களையே சூட்டினார்.

குழந்தைகள் இருவரும் தான் அவர்களின் உலகம்‌. ஆனாலும் விதுரனைச் சிறுவயதிலேயே வெளியூர் பள்ளியில் சேர்த்து விடுதியிலேயே அவனை வளரவிட்டார். அவனைப் பிரிந்து வாழும் வேதனையைத் தெரிந்தே ஏற்றனர் பெற்றோர் இருவரும். அதற்கு முக்கிய காரணம் சீதாவிற்கும் விதுரனிற்கும் உள்ள வயது வித்தியாசமே. ஆம்! சீதாவிற்கும் விதுரனிற்கும் பன்னிரண்டு வயது வித்தியாசம்.

லட்சுமியம்மாளுக்கு சீதா பிறந்த பின் இரண்டு குழந்தைகள் இறந்தே பிறந்தன. அதன் பிறகு அவர் கருத்தரிக்கவேயில்லை. சீதா ஆறாம் வகுப்பு வந்ததால் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தனர். மகளைப் பள்ளிக்குத் தினமும் லட்சுமியம்மாவே சென்று அழைத்து வருவார். அப்படி ஒரு நாள் அழைத்து வந்தவர் மயக்கம் வருவது போல் இருக்கவும் அங்கங்கே அமர்ந்து இளைப்பாறிக் கொண்டே அழைத்து வந்தார் மகளை. இதை தன் கணவரிடம் கூற மறந்துவிட்டார். ஆனால் சீதா தந்தை வீட்டிற்கு வந்ததும் வராததுமாகத் தாயின் உடல்நிலையைப் பற்றிக் கூற, உடனே மருத்துவச்சியை அழைத்து வந்தார் குழந்தைவேலு.

மருத்துவச்சி வந்து பார்த்து விட்டுப் புன்னகை முகமாக, "லட்சுமி! மறுபடியும் உண்டாயிருக்குத் தம்பி. பக்குவமா பார்த்துக்கோங்க!" என்று கூறிச் சென்றார்.

மருத்துவச்சி கூறிய செய்தியைக் கேட்டுச் சந்தோசமடைந்த குழந்தைவேலு அவருக்குப் பணமும் நெல்லும் காய்கறிகளும் கொடுத்தனுப்பினார். மனைவியைக் காணச் சென்றவர் அவர் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்தார். தான் மறுமுறை தாயாகப் போவதை அறிந்து முதலில் மகிழ்ந்த லட்சுமியம்மா பின்னர் தான் இரண்டு முறை கருவுற்று குழந்தை இறந்தே பிறந்ததை நினைத்து இந்த குழந்தைக்கும் எதுவும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் அழத்தொடங்கினார்.

மனைவியின் முகத்தை வைத்தே அவர் மனதில் உள்ளதை அறிந்த குழந்தைவேலு, அவரை அணைத்து ஆறுதல் படுத்தினார். பின்பு அவரிடம்,"ஏம்புள்ள இப்படி அழுவனும்? சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்துல இப்படி அழுது வடிஞ்சு வயித்துக்குள்ளாற இருக்குத புள்ளையவும் வெளியாற இருக்குத புள்ளையவும் மிரளவைக்குறவ! கண்ணைத் துடைச்சிபுட்டு சிரிப் புள்ள. சீதா கண்ணு பயந்துகிடுச்சு பாரு."

அவர் கூறிய பின்னர் தான் சீதாவைத் தேடினார் லட்சும்மா(லட்சுமியம்மா டைப் பண்ணக் கஷ்டமா இருக்குதுப்பா!?). அந்த அறையின் மரக்கதவின் குமிழைத் திருகிக்கொண்டு உம்மென்று நின்றிருந்தாள். அவளைக் கண்டவுடன் வேதனைகள் அனைத்தும் தூரம் சென்றது.

"ஏன் ஆத்தா! எப்பப் பிடிச்சு இப்படி உம்மனாம் மூஞ்சியா மாறுனாவ? இது என் தங்கமயிலு இல்லியே வேற புள்ளை போலையே! நான்பெத்த வைரம் சிரிச்சிட்டே பம்பரமா சுத்தி சுத்தி வருமே! நீ யாரு புள்ளத்தா? என் குட்டிக் கிளியைப் பார்த்தியாத்தா?"

அவர் கூறியதைக் கேட்ட குட்டி சீதா அவரை நோக்கிச் சிட்டாய் பறந்து வந்து அவரை கட்டிக்கொண்டு,"ஏம்மா அழுறீங்க? உங்க வயித்துக்குள்ள இருக்குற தம்பி பயந்துக்கப் போறான்! பாவம்மா தம்பி பையன். இனிமே இப்படி அழாதீங்க சொல்லிட்டேன். இல்லாட்டிக்கா உங்களுக்கு அழுமூஞ்சினு பட்ட பேரு வச்சு வீட்டு சுவத்துல எழுதி வைப்பேன்" என்று வம்பிழுத்தாள் சின்னவள்.

முதலில் அவளைப் பார்த்து முறைத்த லச்சும்மா, பின்னர் அவளை அணைத்தபடியே,"ஆத்தா மீனாட்சி ஏம்புள்ளைய ஒருவழியா கண்டுகிட்டேன். அந்த உம்மனாம் மூஞ்சி யாருனும் காட்டிக் கொடுத்துறு ஆத்தா!" என்றார் நக்கலுடன்.

அதில் சிணுங்கியவாறே," ம்ம்மா..ஆ..!" என்று அவரை அணைத்துக் கொண்டாள். லச்சும்மாவும் அவளை அணைத்து முத்தமழை பொழிந்தார். தன் மனைவி மற்றும் மகள் நடத்திய பாச விளையாட்டில் கண் கலங்கிய வேலு (சேம் சோம்பேறித்தனம் ?) இறைவனிடம் அவர்கள் குடும்பம் என்றும் சந்தோசமும் நிம்மதியும் நிறைந்து இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

லச்சும்மா வயிற்றில் நம் விதுரன் மூன்றுமாதக் குழந்தையாக வளர்ந்திருந்தான். வயலில் வேலை செய்வோரை மேற்பார்வையிட்டு வீடு வந்தார். அப்போது அவர் அங்குக் கண்ட விசயத்தில் அவர் கண்கள் கோபத்தில் சிவந்தது. லச்சும்மா வீட்டின் நடவிலிருந்த வானவெளியில் அமர்ந்து அழுதுகொண்டிருக்க, அவரின் அக்கா பவளமோ அவரை பேச்சிலேயே சித்ரவதை செய்து கொண்டிருந்தார்.

"இது என்னடீ புதுக் கூத்தா இருக்கு... மக இன்னும் நாளே வருசத்துல குத்த வச்சுருவா! மறுமாசமே அவளுக்கு எவனையாச்சு புடிச்சு கட்டி வச்சோம்னா அவ மவறுருசம் புள்ள பெத்துருவா! இப்பப் போய் ஆத்தா வைத்த தள்ளிக்கிட்டு நின்னா என் தம்பி குடும்ப மானம் சந்திச் சிரிச்சுரும்... இப்படி அவனை நாலு பயலுக நக்கலா பேசத்தான் நல்லூர் சீமையில இருந்து உன்னக் நலங்கு வச்சு கூட்டியாந்தோமா?"

"அக்கா..ஆ!" என்று கத்தினார் வேலு.

"எய்யா! வேலு இதென்னய்யா இப்படி ஒரு சங்கடம் உனக்கு. இப்படி நாலு பேரு முன்னாடி தலை குனியத்தேன் நாங்க உன்ன ராசாவாட்டம் வளத்தோமா?"

"நாலு பேரு முன்னாடி தலை குனியிற மாதிரி சோலி ஒண்ணும் இங்க நடக்கல! எங்க வீட்டுக்கு இன்னோரு புது உசுரு வரப்போவுது! என் பொஞ்சாதி சதையில முளைச்சு என் ரத்தத்துல பூத்து என் மகள மாதிரியே சிரிக்கப் போற இன்னோர் பூ! அத கொண்டாடி சீராட்டாட்டிக் கூட பரவாயில்லை... அசிங்கப் படுத்தி தூத்தாத!"

"அதில்லய்யா..." என்று தொடங்கிய பவளத்தைத் தடுத்தது வேலுவின் கர்ஜனைக் குரல்.

"இன்னும் நா பேசி முடிக்கலைக்கா! நீ வந்து ஒப்பாரி வைக்குரியே உன் தம்பி என்ன செத்தா போயிட்டேன்! நான் இன்னொரு தடவை அப்பாவாயிட்டேன்! நான் செத்ததுக்கப்பறம் வந்து ஒப்பாரி வச்சிக்க. இப்போ போயி வேலையைப் பாரு!"

அவர் பேச்சில் அரண்டு போன பவளம் கண்களாலேயே இருவரிடமும் விடைபெற்றுச் சென்றார். லச்சும்மாவோ பதறி விரைந்து வந்து,"என்சாமி எதுக்குய்யா அபசகுனமா பேசுறீக! அத்தாச்சி ஏதோ கோவத்துல பேசுறாக, அதுக்கு இப்படி பேசனுமா?" என்று கண்களில் நீரோடு கணவனை அணைத்தார். இருவரும் ஒருவருக்கொருவர் சமாதானம் கூறி அமைதியடைந்தனர்.

இவ்வாறு கலவையான சூழலில் வாழ்க்கை நகர்ந்தது அவர்களுக்கு. விதுரன் பிறந்ததை ஊருக்கே விருந்து வைத்துக் கொண்டாடினார். பெற்றோரின் பாசத்திலும் தமக்கையின் அன்பிலும் இனிய சூழலில் வளர்ந்தான் விதுரன். ஊராரின் ஏச்சுகளும் பேச்சுக்களும் தங்கள் குடும்பத்தை அண்டாமலிருக்க தங்கள் தோட்டத்திற்குள்ளேயே வீடு கட்டி குடியேறினர்.

விதுரனிற்கு மூன்று வயதிருக்கையில் பள்ளிக்குச் சென்ற சீதா உம்மென்று வந்தாள். வந்ததிலிருந்து யாருடனும் பேசாமல் விதுரனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். இரவு உணவு முடிந்ததும் தன் முடிவைப் பெற்றவரிடம் கூறி அவர்களை அதிரவைத்தாள் சீதா.

"ப்பா.. நான் இனிமே பள்ளிக்கூடத்துக்கு போகமாட்டேன்ப்பா!"

அவள் கூற்றில் அதிர்ந்த லச்சும்மா,"என்னடீ இது பேச்சு பத்தாங்கிளாஸ் பரீட்சையை அடுத்த மாசம் வச்சுகிட்டு!" என்று மகளை அதட்டினார்.

அவரை பார்த்த வேலு அமைதியாக இருக்கும்படி சைகை செய்துவிட்டு மகளிடம்,"எதுனாலம்மா இனி பள்ளிக்கூடத்துக்கு போகமாட்ட? வாத்தியார் யாரும் வஞ்சாய்ங்களா? இல்ல கூட்டாளிகள் கூட சண்டையா? என்ன காரணம்னு சொல்லுடா!" என்று வினவினார்.

"அப்பா பள்ளிக்கூடத்துல கூட படிக்கிறவளுங்க என்கிட்டவந்து என்னடீ உங்க தம்பிக்கு ஆயா வேலை பார்த்துட்டே படிக்கப் போறியா?னு கேக்கறாளுகப்பா.. அவளுங்க தங்கச்சி தம்பிலாம் எங்க பள்ளிக்கூடத்திலேயே சின்ன கிளாஸ் படிக்குறாய்ங்கப்பா.‌.. நம்பத் தம்பி மட்டும் குழந்தையா இருக்கான்னு என்னிய ஆயான்னு ஏடாசி பண்ணுதாகப்பா.. " என்று சிணுங்கினாள் சீதா.

மகளைச் சமாதானப்படுத்த வேலு முயல்கையில், "இதுக்குத்தான் சொன்னேன் இந்த புள்ளய பெத்துக்குற வேணாமுன்னு யாரு கேட்டீக! புள்ள எப்படி வெக்கப்படுது பாருங்க! இப்படி பச்சை மனச வெசனப்பட விட்டுடீகளே!" என்றபடியே வந்தார் வேலுவின் தமக்கை பவளம்.

"இதிலென்ன ஐயித்த வெக்கமும் வெசனமும் பட? என் தம்பியை பார்த்து கிட இந்த பாழாய்ப்போன படிப்பு தடையா இருக்கு.. அதான் படிப்ப விடலாம்னு தோனுச்சு!" என்று தன் அத்தையை அதிர வைத்தாள்.

மகள் பள்ளிப் படிப்பை விட முடிவெடுத்தது வருத்தமளித்தாலும் அவளது சகோதரப் பாசம் அவர் நெஞ்சில் அளப்பரிய ஆனந்தத்தை வாரி இறைத்தது. மகளின் பக்குவப்பட்ட மனதை நினைத்து அந்த பெற்றோர் பெருமிதம் கொண்டனர். இதே சூழலில் தன் மகனை நினைத்த அந்த தந்தையுள்ளம் பிஞ்சு மனதில் வெறுப்பும் பேதைமையும் வராதிருக்க அவனை உறவுகளை விட்டுத் தள்ளி வளர்க்க முடிவு செய்தார்.erhow_198496.jpg
 




Last edited:

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
விதுரனிற்கு நான்கு வயதிலிருந்தே விடுதி வாசம்தான். அவன் மனதில் குடும்பம் என்ற பிடிப்பும் பாசமும் விட்டுப் போகுமோ என்று பயந்த லச்சும்மா, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சென்று அவனைப் பார்த்துக் கொஞ்சி விட்டு வருவார். இப்படி இருக்கையில் ஒரு நாள் சீதா வயதிற்கு வந்தாள். அவளுக்குச் சீரும் சிறப்புமாய் ஊரே வியக்கும் அளவிற்குத் தலைக்குத் தண்ணீர் ஊற்றினார் லாபேஸ்வரன், லச்சும்மாவின் ஒன்றுவிட்ட தம்பி. மறுமாதமே சீதாவைப் பரிசம் போட்டனர் லாபேஸ்வரன் வீட்டினர்.

சீதாவைத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்கினார் லாபேஸ்வரன். அவள் தோழிகளிடம் பேசும்போதெல்லாம், "தாய்மாமனென்றால் சும்மாவா! அதான் உன்னை இந்த தாங்கு தாங்குறார். நீ ரொம்ப குடுத்து வச்சவ புள்ள!" என்று கூறி பெருமூச்செறிந்தனர். இதனால் சீதாவின் மனதில் ஓர் ஆசை வேரூன்றி வளர்ந்ததை யாரும் அறியவில்லை. ஆம் தனக்கு மகள் தான் பிறக்க வேண்டும் என்றும் அவளை விதுரனிற்குத்தான் மணமுடிக்க வேண்டும் என்றும் பிள்ளை பெருமுன்னரே தீர்மானம் செய்தாள் சீதா.

மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் திருமணம் நடந்தாள் தாலி பெருக்கி கட்ட தாய் மீனாட்சி அம்மன் சன்னதியில் வைத்துக் கட்டுவதே வழக்கம். சீதாவையும் தாலி பெருக்கி கட்ட அங்கு அழைத்துச் சென்றனர். அப்போது தனக்கு மகள் தான் பிறக்க வேண்டும் என்றும் அப்படிப் பிறந்தாள் அன்னை மீனாட்சியின் பெயரையே வைப்பதாகவும் மனமுருகி வேண்டினார்.

அடுத்த பத்தாம் மாதம் அவள் கைகளில் தவழ்ந்தாள் மாதங்கி. அன்று மீனாட்சி தாயிடம் வேண்டியபடியே தனக்கு மகள் பிறக்கவும் அந்த இராச மாதங்கியின் பெயரையே தன் மகளுக்குச் சூட்டினாள். விதுரனோ அந்த பிஞ்சு கைகளையும் கால்களையும் கொஞ்சிக்கொண்டே திரிந்தான். அவனுக்குப் பரீட்சை விடுமுறையும் அமையக் குதூகலமாக விளையாடித் திரிந்தான்.

பத்து வருடங்களில் அவர்கள் குடும்பத்தில் சந்தோஷத்துக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமேயில்லாமல் நாட்கள் நகர்ந்தது. அந்த கருப்பு நாள் அவர்கள் வாழ்கையில் வரும் வரை. லாபேஸ்வரன் விவசாயம் செய்தாலும் அவருக்குக் கட்சியில் அதிக ஈடுபாடு இருந்தது. அவர் அவ்வப்போது கட்சி பணியாற்றியும் வந்தார்.

அவர் தொண்டில் குளிர்ந்த கட்சி மேலிடம் அவருக்குப் பதவி வழங்கத் தீர்மானித்து அழைப்பிதழ் விடுத்தது. அதனை தன் மாமனும் மைத்துனருமான குழந்தை வேலு ஐயாவிடம் சென்று கூறி கலந்தாலோசித்து இருவரும் சேர்ந்து இன்னும் சில கட்சித் தொண்டர்களையும் அழைத்துக்கொண்டு காட்சி தலைமையகம் சென்றனர்.

லாபேஸ்வரனுக்கு மாவட்ட நிர்வாகி பதவியை அளித்தது அக்கட்சி. லாபேஸ்வரனுக்கும் குழந்தை வேலுவிற்கும் இருப்புக் கொள்ளவில்லை சந்தோசத்தில். வீடு திரும்பும் வழியில் அனைவரும் மது விருந்து கேட்டனர். லாபேஸ்வரனோ தயக்கமாகக் குழந்தைவேலுவை பார்த்தார். அளவிலா மகிழ்ச்சியிலிருந்த குழந்தைவேலுவும் சம்மதம் தந்தார். அனைவரும் மது அருந்தினர். குழந்தைவேலு மதுப் பழக்கம் இல்லாவிடினும் மருமகனுக்காகச் சிறிதளவு மட்டும் அருந்தினார்.

அனைவரும் மது விருந்தை முடித்துக்கொண்டு வீடு திரும்ப வண்டியில் ஏறினர். குழந்தைவேலு முன்னிருக்கையில் அமர மற்றவர் பின்னால் அமர லாபேஸ்வரன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியைக் கிளப்பினார். என்னதான் நாம் வாகனத்தை நன்றாக விதிமுறைகளை கடைப்பிடித்து உபயோகித்தாலும் எதிரே வரும் வண்டிக்காரனும் நல்லமுறையில் வந்தால்தான் பிரச்சினை இல்லை.

இங்கோ இவரும் விதிமுறைகளை மறந்து சிறிதளவேயாயினும் மது அருந்தி வண்டியோட்டினர். எதிரே வந்தவனும் கவனமின்றி வண்டியோட்டியதில் இரண்டு வண்டியும் மோதிக் கவிழ்ந்தது. குழந்தைவேலு வயதானதாலும் பழக்கமில்லாத மதுவைக் குடித்ததாலும் இரத்த அழுத்தம் கூடி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியில் இறைவனடி சேர்ந்தார்.

லாபேஸ்வரனுக்கு பலமாக பின் மண்டையில் அடிபட்டதால் உடனடியாக அறுவை சிகிச்சை பண்ண வேண்டும். ஆனால் அவர் அதிகமாக மது அருந்தியிருந்ததால் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியவில்லை. நேரம் சென்று செய்ததால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் தன் கூட்டை விட்டுப் பறந்தது. செய்தி கிடைத்து ஓடிவந்தது இரு குடும்பமும். தன் கணவனின் இழப்பைத் தாங்க முடியாத அந்த இளகிய இதயம்(லச்சும்மா) தன் துடிப்பையும் நிறுத்தியது.

விதுரனே மூவருக்கும் இறுதிச் சடங்குகள் செய்தான். பத்து வயதான மாதங்கி என்னும் சுட்டிப்பெண், தொடர்ச்சியான இழப்புகளில் மனமுடைந்து அமைதிப் பாவையானாள். விதுரன் காரியங்கள் அனைத்தும் முடிந்ததும் அக்காவிடம் சொல்லிக் கொண்டு பள்ளி விடுதிக்குத் திரும்பினான்.

அவனைத் தடுக்க நினைத்த சீதாவும் அவனுக்கு இடமாற்றம் தேவை என்று எண்ணி வழியனுப்பி வைத்தார். அவன் உடனே ஊருக்குப் புறப்பட்டதே தன் தமக்கையின் இந்த கோலத்தைப் பார்க்க விரும்பாமல் தான். அவரை அப்படிப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அவன் இதயத்தை யாரோ ஊசி வைத்துக் குத்தியது போல் வலித்தது. பெற்றோரின் பிரிவையே தாங்க முடியாமல் தத்தளித்த அந்த பதினைந்து வயது வாலிபன் தன் தமக்கையின் விதவை கோலத்தில் மறித்துப்போனான். அவளோடு துள்ளித் திரிந்து விளையாடிய குழந்தைப்பருவ நினைவுகள் அவன் இமைகளை நனைத்தன.

தன் தமக்கைக்குப் பிடிக்குமெனப் பக்கத்துத் தோட்டத்தில் திருட்டுத்தனமாகத் தான் பறித்து வந்த மல்லிகையும், கோவில் திருவிழாவில் அவள் ஆசையாய் வாங்கும் வண்ண வண்ண சாந்துப் பொட்டுகளும், ஆடைகளுக்கு ஒத்துப்போகும் நிறங்களில் கைகளில் சிணுங்கும் கண்ணாடி வளையல்களும் அவன் நினைவுகளில் அணிவகுத்தன. தன் கண்ணீர் கொண்டு அதனை அவன் நினைவுகளிலிருந்து அழித்தான்.

கிராமத்திலோ அமைதியாகத் திண்ணையில் அமர்ந்து தன் சிந்தனையில் மூழ்கிய சீதா தாய் தந்தை கணவன் மூவரும் தன்னை விட்டுச் சென்றதை நினைத்து வருந்தியவர் தன் தம்பியை மகளையும் நினைத்துத் தெளிந்தார். அவசரமாக எழுந்தவர் தன் மகளைத் தேடி அவளறைக்குச் சென்றார். அவள் நிலையைப் பார்த்து சீதாவின் பெற்ற வயிறு பற்றியெரிந்தது. ஆம் ஒருநிமிடம் கூட நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த அவள் கால்கள் இப்போது நிற்கவே தெம்பில்லாமல் மெலிந்திருந்தது. பாலும் தயிரும் உண்டுக் குண்டுக் குண்டு குழந்தை கண்ணங்கள் சாப்பாட்டையே பார்க்காதது போல் வறண்டு ஒட்டிப்போய் இருந்தது.

மகளின் இத்தகைய நிலைக்குத் தான் அவளைக் கவனிக்காமல் விட்டதும் ஒரு காரணம் என்று புரிந்து தன்னையே ஏசினார். ஒரு முடிவெடுத்தவராக அவளருகில் சென்று மாதுவை எழுப்பினார்.

"மாது! எழுந்திரு டா கண்ணம்மா! வா சாப்பிடலாம். உனக்கு பிடிச்ச மாதிரி முறுகலா தோசை ஊத்தித் தாரேன்! காரச்சட்னி வச்சிருக்கேன்."

"ம்ம்ம் எனக்கு பசிக்கலைமா!"

"பசிக்கலையா! சரி அப்போ நீ சாப்பிட்டதும் குடிப்பியேனு கருப்பட்டி பால் கலந்து வச்சேன். நானே குடிச்சுகுறேன்!" என்று கிளம்பினார்.

அவர் கையை பிடித்துத் தடுத்த மாது,"உனக்குத் தான் கருப்பட்டி பால் பிடிக்காதுல்ல... எப்படிக் குடிப்ப? இரு நானே வந்து குடிக்கிறேன்..." என்று எழுந்தாள் மாது.

மகளின் செயலில் வந்த சிரிப்பை அடக்கிய சீதா,"சாப்பிடாமல் கருப்பட்டி பால் குடிக்க கூடாதே!" என்று அவளைச் சீண்டினார்.

"அப்போ ஒரு முறுகல் தோசை மட்டும் போதும்மா!" என்று செல்லம் கொஞ்சினாள்.

"சரிடா! வா!" என்று மகளை உண்ண அழைத்துச் சென்றார்.

நாட்கள் நகர நகர அவர்கள் மனதிலிருந்த சோகமும் நகர்ந்து சென்று ஓர் ஓரமாய் மறைந்தது. விதுரன் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் பாடத்தில் சேர்ந்து இரண்டு வருடமும் முதல்நிலையில் தேர்ச்சி பெற்று மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்தான். பத்தாம் வகுப்பு பரிச்சையில் தத்தி பித்தி தேறினாள் மாது. பதினோராம் வகுப்பு சேராமல் அடம்பிடித்தவளை விதுரனே நேரில் வந்து கெஞ்சிக் கூத்தாடி பள்ளியில் சேர்த்துவிட்டான்.

சீதா தங்கள் நிலத்தில் நடக்கும் விவசாயத்தைத் தானே முன்னின்று பார்த்துக்கொண்டார். தந்தையின் தென்னந்தோப்பையும் மாந்தோப்பையும் மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தந்தையின் விவசாய நிலத்தை நம்பிக்கையான ஒருவருக்குக் குத்தகைக்குக் கொடுத்தார்.

விதுரன் மூன்றாவது வருடத்தின் முதல் பருவத்தேர்வு முடிந்து தமக்கை வீட்டிற்குச் சென்ற நேரம் மாதங்கி பெரிய பெண்ணானாள். தாய் மாமன் சீராக நகைகளும் தந்தையின் தோட்டத்தில் பாதியையும் அவளுக்குக் கொடுத்து அமர்க்களப் படுத்தினான்.

உறவினர்களுக்கும் ஊரார்களுக்கும் விருந்தே ஒரு வாரம் உபசரித்தனர். சடங்கு சுற்றும்போது தண்ணீர் ஊற்றி சீர் கொடுக்கையில் திடீரென வந்த சீதா அவன் வாங்கியிருந்த நகைப் பெட்டியோடு மற்றொரு பெட்டியையும் வைத்துக் கொடுத்தார். விதுரன் கேள்வியாகப் பார்த்தான்.

"நம்ப பரம்பரை நகை.. அம்மா மாதுக்குட்டிக்கு இத அவங்க கையால் கொடுக்க ரொம்ப ஆசைப்பட்டாங்க! நம்ப குடுத்துவச்சது அவ்வளவுதான்!" என்று பெருமூச்செறிந்தார்.

"அக்கா இப்ப என்ன? அம்மா அப்பா மாமா மூனுபேரும் சாமியா நின்னு பிள்ளையை ஆசீர்வாதம் பண்ணுவாங்க! தேவையில்லாமல் மனசை கஷ்டபடுத்திக்காத! நல்லநாளும் அதுவுமா! போக்கா வேலையைப் பாரு!" என்று சீதாவைத் தேற்றினான் விதுரன்.

தண்ணீர் ஊற்றி முடிந்ததும் அவளிற்கு அத்தை முறை வரும் பெண்கள் மூவர் அவளுக்குத் தாய்மாமன் சேலையை உடுத்தி விட்டனர். நகைகளைப் போடப் போன சமயம் அவர்களைத் தடுத்த சீதா,"சீர் குடுத்தத சபையில் வச்சி என் தம்பியே போட்டுவிடட்டும்! அது தான அத்தாச்சி முறை!" என்று கேட்டாள். அவர்களும் அதை ஏற்று மாதுவை வெளியில் அழைத்து வந்தனர்.

அனைவர் முன்னிலையில் விதுரன் தான் மாதுவிற்கென வாங்கிய நகைகளை அவனே அணிவித்தான். காசு மாலை, மாங்காய் மாலை, பிச்சிப்பூ ஆரம், ஆறு வகை வளையல் ஜோடிகள், ஜிமிக்கி கம்மல், அதற்கு ஏற்ற அடுக்கு மாட்டல், மோதிரங்கள், மேலும் பல நகைகளை அடுக்கியிருந்தான் சீராக தன் அக்கா மகளுக்கு. அதில் அனைவர் கவனத்தையும் ஈர்த்ததென்றால் அவன் அவளுக்காய் வாங்கியிருந்த தங்க ராக்குடி(ஹேர் க்ளிப்) தான். அனைவரும் அவன் அளித்த சீரைப் பார்த்து வாயைப் பிளந்தனர். சிலர் பொறாமையுடன் பெருமூச்சு விட்டனர்.
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
மாதங்கிக்கு நகைகள் பூட்ட விதுரனுக்கு உதவினர் சில பெண்கள். மாதுவின் குழந்தை முகத்திலோ வெக்கமும் பெருமையும் ஒருங்கே சேர்ந்து போட்டிப்போட்டது. கடைசியாக தன் தமக்கை அளித்த அந்த பரம்பரை நகைப் பெட்டியைத் திறந்த விதுரன் திகைத்தான்.

அந்த பெட்டிக்குள் ஒரு கணவனும் மனைவியும் கைகோர்த்திருந்தனர். அவர்களுக்கு இரு பக்கமும் லட்சுமி கரமாக இரு பெண்கள் அமர்ந்திருந்தனர். இரு பெண்களுமே தங்களுக்கருகில் ஒரு கிளி வைத்திருந்தனர்‌. அந்த இரு கிளிகளுமே மாங்கனிகளைத் தின்றவாறு நின்றது. இரு கிளிகளின் பக்கவாட்டிலும் ஒரு சிவப்பு பாறையிலிருந்து உடைபட்ட கல். (அய்யோ தாலின்னு சொல்லாமல் இவ்வளவு மொக்கை தேவையா என்று எல்லோரும் என்ன அசிங்கமா கழுவி ஊத்துறது எனக்கு புரிகிறது என் சிந்தனை வளையத்துக்கு புரியமாட்டிக்குதே)
images - 2019-07-04T095236.478.jpeg

அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த விதுரன், தன் தமக்கையைப் பார்த்தான் உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு. அவரோ நின்ற இடத்திலேயே முட்டியிட்டு அமர்ந்து இருகரத்தையும் அவனை நோக்கி நீட்டினார். அவர் செயலை யூகித்த விதுரன், அவர் முட்டையிடத் தொடங்கியதுமே தன் பார்வையை மாதுவை நோக்கித் திருப்பினான். அவளோ அவனையும் தன் அன்னையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

முடிவெடுக்கத் தடுமாறினான் விதுரன். அவனது தடுமாற்றத்தை அறிந்த அவனுடன் விடுமுறையைக் கழிக்க வந்திருந்த அவன் கல்லூரித்தோழன் ராஜா (இப்போது இருக்கிற அதே ராஜா தான் தங்கம்),"டேய் மாப்ள! என்ன யோசிக்கிற? மாதுவைப் பிடிக்கலையா?" என்று கேட்டான்.

"பிடிக்காமல் இல்லைடா! ஆனால் அவ குழந்தை டா! அவளை எப்படி டா! அவ முகத்தை பார்டா! பச்சை மண்ணுடா அது!"

"அவ பச்சை மண்ணுதாண்டா அதான் அக்கா உன் பொறுப்பில் அவளை குடுக்குறாங்க! காலமிருக்கிற கோலத்தில் அடுத்தவனுக்கு பொண்ணு கொடுக்கத் தாயா அவங்க மனசு தயங்குதுடா. அதான் உன்னையவே அவங்க மாப்பிள்ளையாக்கனும்னு முடிவெடுத்திருபாங்க!"

"மாது மனசில் என்ன இருக்கோடா? அந்த பிள்ளைக்கு சம்மதமான்னு தெரியலையே! அதான்டா தயக்கமா இருக்கு!"

"ஃப்....பூ இவ்வளவு தானா! இந்தா வாரேன்." என்றவாறே மாதுவை அழைத்து,"மாது தங்கச்சி! இவனைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமாம்மா?" என்று கேட்டான்.

"ம்ம்ம்... நல்ல வேளை அண்ணா என்கிட்ட நீங்களாச்சும் கேட்டீங்களே!" என்று இடை வெளி விட்டு தாயையும் மாமனையும் முறைத்தாள். அவள் செயலில் விதுவிற்குச் சிரிப்பு வந்தது. இருந்தாலும் ஏதோ ஒரு படபடப்பும் தவிப்பும் அவனை முட்டிக்கொண்டே இருந்தது.

"எனக்குனு நிறைய ஆசையிருக்கு கனவிருக்குண்ணா! அதையெல்லாம் விட்டுவிட்டு எப்படி இவரைக் கல்யாணம் பண்றது?"

"மாதும்மா நீ கல்யாணம் செய்துகொண்டு கூட படிக்கலாம். என்ன படிக்கனும்னு ஆசையிருக்கோ சொல்லு மாப்ள கண்டிப்பா சேர்த்து விடுவான். சொல்லு மாப்ள!" என்று விதுரனையும் துணைக்கு அழைத்தான். அதற்கு விதுரனோ அவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான். அதன் அர்த்தம் புரியாத ராஜா என்னவென்று வினவும் முன்னர், அவன் கூற்றை மறுத்தாள் மாதங்கி.

"என்னது படிக்கனுமா?? அதுவும் கல்யாணம் பண்ணிட்டா! ம்மா எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை!! இப்போதே வேற மாப்பிள பாரு!"

"சரிடீ நீ படிக்க வேண்டாம். என்ன கனவு கொஞ்சம் சொல்லு." என்று அவளைச் சமாதானம் செய்தார் சீதா.

"சொல்கிறேன் கேட்டுக்கோங்க! முதல் கனவு என்னன்னா எனக்கு மச்சு வீடுதான் (மாடி வீடு) வேண்டும்! அங்க நிறையா ரோசாப்பூச் செடி கலர்கலரா வச்சி வளர்க்கனும் அதுக்கு நடுவில் ஒரு பெரிய ஊஞ்சல் மாட்டனும். முக்கியமா என்னைய அதுல உட்கார வச்சி உசரமா ஆட்டிவிடனும் எனக்குத் தோணும் போதெல்லாம்."

"அடுத்து சொல்லுமா..." என்று அதிர்ச்சியை அடக்கிக் கொண்டு கேட்டான் ராஜா.

"அப்போ மாமாவை உம்னு சொல்லச் சொல்லுங்க! அதான் என்னோட ரெண்டாவது ஆசை… நான் என்ன சொன்னாலும் உம்னு சொல்லி ஏத்துக்கனும்!"

"மச்சி மோர் ஓவர் ஷீ நீட்ஸ் ய சின்சாக் போடுறவன்"என்று விதுரன் காதை கடித்தான் ராஜா.

"அப்புறம் எனக்குத் தோணும் போதெல்லாம் ஊட்டி விடனும். தண்ணி தவிச்சா தண்ணியெடுத்துக் குடுக்கனும். நிறையா புதுத்துணி வாங்கிக் குடுக்கனும். ம்ம்ம்... இப்போதைக்கு இவ்வளவுதான் அப்பறமா தோணும் போது சொல்றேன் மீதியை!"

"உன்னோட ஆசையெல்லம் செயல்படுத்த எனக்குச் சம்மதம்!" என்று திடமாகவும் கள்ளச் சிரிப்புடனும் கூறினான் விதுரன். ஆம் அவள் ஆசைகளைக் கேட்டவன் மனதில் அவளது குழந்தைத்தனமும் தூய்மையான மனதும் நன்கு புரிந்தது. அவளை மற்றவரிடம் விட்டுக்கொடுக்க அவன் மனம் தயங்கியது. அதற்கு அவன் மனம் கூறிய காரணம் யாதெனில் காதல். ஆனால் மூளையோ அதைத் தவிர்த்து அவளின் பாதுகாப்பும் நல்வாழ்க்கையும் தான் பிரதானமானது என்று காரணம் கூறியது. அதுவோ ஒரு காரணம், ஆனால் அவனது முடிவு திருமணத்தை நடத்துவது.

அனைவர் முன்னிலையிலும் அந்த தங்கத் தாலியை அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு இருவர் வாழ்க்கையையும் ஒரே கோட்டில் முடிந்தான். அனைவரும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் போட்டிப் போட வாழ்த்தினர் இருவரையும்.

சென்னையில் தனதுக் கல்லூரிக்கு அருகேயே ஒரு ஃப்ளாட் வாங்கி மனைவி மற்றும் தமக்கையுடன் குடியேறினான். காலையில் எழுந்ததும் சில பயிற்சிகள் செய்பவன் மனைவியை பால்கனிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஊஞ்சலில் அமர்த்தி அவள் போலுமென்கிற வரையில் ஆட்டி விட்டு அதன் பிறகு தான் கல்லூரிக்கே கிளம்புவான். காலை உணவும் இரவு உணவும் அவளுக்கு அவனே ஊட்டி விடுவான்.

குழந்தைத் தனமாக இருந்தாலும் அவன் மனம் அதை ரசிக்கவே செய்தது. அவன் வாழ்க்கை மிகவும் ரம்மியமாகச் செல்வதை அவன் மனம் உணர்ந்தது. அதற்குக் காரணமான அவன் தேவதையைக் காதல் உலகிற்கு அறிமுகம் செய்ய அவன் ஒரு மனம் துடித்ததென்றால் மற்றொரு மனமோ பொறுமை காக்கச் சொன்னது.

இவ்வாறாக அவன் தன் நான்காவது வருடக் கடைசி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணியில் அமர்ந்தான். ராஜாவும் அவனுடன் அதே அலுவலகத்தில் பணியில் சேர்ந்தான். அதற்கிடையில் மாதுவை வற்புறுத்தி ஆங்கிலம் பேச கற்குமிடத்தில் சேர்த்துவிட்டார் சீதா. தடுத்த விதுரனை அவளுக்குத் தன்னம்பிக்கை வர வேண்டும் என்று கூறி அமைதிப் படுத்தினார்.

ஆரம்பத்தில் பிடிக்காமல் சென்றாலும் அங்கு வரும் பெண்களுடன் பழக ஆரம்பித்த பின் விரும்பியே கற்றாள் ஆங்கிலத்தை மட்டுமல்ல அவர்களின் நாகரீக வாழ்க்கை முறையையும் தான் ஆரோக்கியமான வகையில்தான். அவளது மாற்றத்தை விதுரன் ரசித்தாலும் அவனுக்கு அந்த பட்டிக்காட்டு மாதுவைத்தான் பிடித்தது.

ஆனாலும் விதுரன் மற்றும் மாதுவின் காதல் வாழ்வு நிலைப்படியிலேயே தான் நின்றது. அதனை உணர்ந்த சீதா சீலாவாக அவதாரம் எடுத்தார். என்னதான் அவள் நாகரீகமான வாழ்க்கையை அங்கீகரித்தாலும் அது எளிமையான தொல்லையின்மைக்காக மட்டுமே தான். ஆனால் ஆடம்பரத்திற்காகவோ சுகாதாரக் கேடாகவோ வரும் இடத்தில் அவள் நாகரீகத்தை வெறுத்தாள் என்பதைவிட அவள் மனது அதை ஏற்க மறுத்தது.

சீதா அவள் தன்னை விட்டு விலகினாள் மட்டுமே விதுரனை நெருங்குவாள் என்பதை உணர்ந்து அவளை தன் நடவடிக்கையால் சீண்டி வெறுப்பேற்ற ஆரம்பித்தார். அதன் அடிக்கல் நாட்டு விழா தான் சீதா லாபேஸ்வரன் சீலாவானது. யாரவது கேட்டாள் மார்டனான ஆள் என்று விடுவார். அடுத்த அடியாக அவளை பட்டிக்காடு என்று கேளி செய்யத் தொடங்கினார்.

இப்படி இவர் பல அடியெடுத்து வைத்தாரென்றால் விதுரனோ தன் காதலை நிலைப்படியிலிருந்த மேல் நோக்கி நகர்த்த அடுத்த அடியை எடுத்து வைத்தான். ஆம் அவன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததிலிருந்து அவளுடன் பழகும் நேரம் குறைந்தது. அன்று மாது மட்டும் தனியாக வீட்டிலிருந்தாள். சீலா அழகு நிலையம் செல்கிறேன் என்று கூறிவிட்டு கோவிலிற்குச் சென்றிருந்தார்.

மாது வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்‌. திடீரென மின்தடை ஏற்பட்டு வீடே இருள் சூழ்ந்தது. ஆரம்பத்தில் தைரியமாக இருந்த மாது நேரமாக ஆகப் பயமென்னும் ஆழியில் மூழ்கத் தொடங்கினாள். அவளை மேலும் அச்சுறுத்தும் வகையில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மீண்டும் தாழிடும் சத்தமும் கேட்டது. பின்னர் மீண்டும் பலத்த அமைதி. மாதுவோ தன்னை எதிராளி எந்த பக்கமிருந்து தாக்கக்கூடும் என்ற சிந்தனையில் வாயை கையால் பொத்தியவாறு அமர்ந்திருந்தாள்.

நேரம் கடந்தும் எந்த ஒரு தாக்குதலும் இல்லை என்ற உடன் மாது சிறிது ஆசுவாசம் அடைந்தாள். வாயை மூடிய கையை வாயிலிருந்து பிரித்த நேரம் ஒரு கை சட்டென அவள் கண்களையும் வாயையும் துணி கொண்டு கட்டியது. மாதுவின் உடல் பயத்தில் விரைத்தது. பின்னர் அந்த கைக்குச் சொந்தக்காரன் அவளைத் தூக்கிச் சென்று எதிலோ அமர்த்தினான். பின்னர் அவள் கண்கட்டையும் வாய்க்கட்டையும் அவிழ்த்தவன் மின்சாரத்தையும் இயங்கவிட்டான்.

மாதுவின் கண்கள் அவள் கண்ட காட்சியில் விரிந்து மலர்ந்தது. அவர்கள் வீட்டு மேல்மாடத்தில் பல வர்ண மலர்கள் பூத்துக் குலுங்க அவளுக்காகவே அவன் வாங்கிய ஊஞ்சல் மலர் அலங்காரத்தில் கண்களுக்கும் மனதிற்கும் உற்சாகமூட்டியது. அவளின் ஒவ்வொரு முகபாவனைகளையும் விதுரன் தன் கண்கள் கொண்டும் கைப்பேசி கொண்டும் நினைவு பெட்டகங்களில் சேமித்தான்.
home-decor-thumbprinted.jpgIMG_20190712_151051.jpg
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top