• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இராமப் பெருமாள் என்று யாராச்சும் சொல்கிறார்களா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
இராம காதையில், இராமனுக்குக் கூடப் "பெருமாள்" என்ற பட்டம் கிடையாது!!

இராமப் பெருமாள் என்று யாராச்சும் சொல்கிறார்களா?

ஆனால், எண்ணி இரண்டே இரண்டு பேருக்குத் தான் பெருமாள் என்ற சிறப்பு.

* இளைய பெருமாள் - இலக்குவன் * குகப் பெருமாள் - குகன்

குலசேகரர், பெரியாழ்வார், திருமங்கை முதலான ஆழ்வார்களும், இராமானுசர், தேசிகன் முதலான ஆச்சாரியர்களும் குகனைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் என்று இராமனின் அடையாளங்களுள் ஒன்றாக, குகனையே குறிக்கிறார் பெரியாழ்வார்.

குகனைப் பற்றி நம் எல்லாருக்குமே தெரியும். மிஞ்சி மிஞ்சிப் போனால் கதையில் ஒரே ஒரு அத்தியாயம் வருகிறானா இந்தக் குகன்? அவனுக்குப் போய் இவ்வளவு சிறப்பு ஏன்?

இலங்கையில் வெற்றி பெற்ற பின், எல்லாரும் ஊர் திரும்புகிறார்கள் புஷ்பக விமானத்தில்!!

பெரும் களைப்பு; வழியில் பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தில் சற்றே ஓய்வு!!

ஆனால் ஓய்வெடுக்க எல்லாம் நேரமே இல்லை. உடனே விரைந்தாக வேண்டும்.

பதினாலு ஆண்டு காலம் முடிய, இன்னும் கொஞ்ச நாட்களே உள்ளன.

அயோத்திக்கு வெளியே, நந்திக் கிராமத்தில் பரதன் காத்துக் கொண்டு இருக்கிறான்.

சமயத்துக்குள் வரவில்லை என்றால் தீக்குளித்து விடுவான்!!

அப்புறம் என்ன வாழ்ந்து, என்ன பயன்?

விமானத்தில் சென்றாலும் நேரம் ஆகிறதே; அதை விட விரைந்து சென்று, செய்தி சொல்ல வல்லவர் யார்? சொல்லின் செல்வர் தானே!!

"ஆஞ்சநேயா, எனக்குத் தயை கூர்ந்து ஒரு உதவி செய்வாயா?"

"சுவாமி, என்ன இது பெரிய வார்த்தை? அடியேனுக்கு ஆணையிடுங்கள்!"

"அப்படி இல்லை ஆஞ்சநேயா! நீ இது வரை செய்த உதவிகளுக்கே, நான் எத்தனை பிறவி எடுத்து உனக்குக் கைம்மாறு செய்யப் போகிறேனோ என்னவோ? என்னமோ தெரியவில்லை,

உயிர் காக்கும் பொறுப்பெல்லாம் உன்னிடமே வருகிறது. நீ பறந்து சென்று...’பின்னால் அனைவரும் வந்து கொண்டே இருக்கிறோம்.

அப்படியே தாமதம் ஆனாலும் அவசரப்பட்டு விட வேண்டாம்’என்று பரதனுக்கு அறிவிப்பாயாக!!

இந்தா முத்திரை மோதிரம்! செல்! சென்று சொல், ஒரு சொல்!" ஆனால் இராமன் இன்னும் முழுக்க முடிக்கவில்லை; ....இழுத்தான். "ஆங்...மாருதீ, மறந்து போனேனே!!

போகும் வழியில் கங்கையை ஒட்டிச் சிருங்கிபேரம் என்ற ஊர் வரும். அங்கு என் அன்பன், அடியவன், குகன் இருக்கிறான்.

அன்று என்னையே கரையேற்றியவன் தான் இந்தக் குகன்.

அவனுக்கும் "வந்து கொண்டே இருக்கிறோம்", என்று அறிவித்துவிட்டே நீ செல்வாயாக!"

அனுமன் இந்த அவசரத்தில் இது தேவையா என்பது போல் ஒரு கணம் தயங்குகிறான்!!

"ஆஞ்சநேயா...தம்பி பரதனின் உயிர் முக்கியம் தான். கால அவகாசமும் குறைவாகத் தான் உள்ளது!!

ஆனால் அதற்காகக் குகனைப் பார்த்தும் பார்க்காது போல் செல்ல முடியுமா?

எனவே, குகனிடம் ஓடிக் கொண்டே சொல்லி விடு. சொல்லிக் கொண்டே ஓடி விடு!"

"இன்று நாம் பதி போகலம், மாருதி! ஈண்டச் சென்று, தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி, நின்ற காலையின் வருதும்" என்று ஏயினன்... சிந்தை பின் வரச் செல்பவன், குகற்கும் அச் சேயோன் வந்த வாசகம் கூறி, மேல் வான்வழிப் போனான்.

யாருக்கு வரும் இந்த கருணை?

இன்று அவனவன் எல்லாவற்றிலும் "தானே" இருக்க வேண்டும்; அடுத்தது "தன் குடும்பம்" தான் இருக்க வேண்டும் என்று அலைகிறான்.

முதலில் தன் முனைப்பு, பின்பு தமர் முனைப்பு! தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவை உண்டு தானுண்டு என்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன், என்கிறார் பாரதிதாசன்.

இராமனுக்கு, இழந்தது எல்லாம் இப்போது கிட்டி விட்டது.

வேலையும் முடிந்து விட்டது.

இனி யார் தயவும் தேவை இல்லை. அண்ட பகிரண்டமும் அஞ்சும் இலங்கேஸ்வரனையே வென்றாகி விட்டது!!

அயோத்திக்குக் கீழே உள்ள நாடுகள் எல்லாம் இனி நட்பு நாடுகள் தான்!!
கூட்டணி பலமாக அமைந்து விட்டது!!


இனி யார் என்ன செய்ய முடியும்? எங்கோ ஒரு படகோட்டி, எப்போதோ படகு வலித்தான் - இது என்ன பெரிய விஷயமா? இதை விடப் பல பேர், பெரிய உதவி எல்லாம் செய்துள்ளார்கள். அப்படி இருக்கும் போது, ஏன் இந்தக் குகன் மேல் மட்டும் அவ்வளவு கரிசனம்?

- அதுவும் தம்பியின் உயிரைக் காக்கும் தருணத்திலும்? அங்கு தான் மறைபொருள் உள்ளது.

பொதுவாக இராமாவதாரத்தில், தன்னை இறைவனாக வெளிக்காட்டாமல், மனிதனாக வாழ்ந்து காட்டியதாகச் சொல்லுவார்கள்.

ஆனால் குகன் போன்றோரின் விடயங்களில் தான், இந்த தெய்வத்தன்மை தன்னையும் அறியாமல் வெளிப்பட்டு விடுகிறது!!

1. எளியவர்க்கும் எளியவனாகும் எளிவந்த தன்மை.

2. அதே சமயம், தன்னை எளிதில் வந்து அடையும்படி, தன் நிலையையும் வைத்துக் கொள்வது.இறைவனின் திருக் கல்யாண குணங்களில் இவ்விரண்டும் தலையாய குணங்கள். (வடமொழியில், இந்தக் குணங்களுக்குச் சிறப்புப் பெயர் சொல்லுவார்கள், சட்டென்று நினைவுக்கு வரவில்லை; அறிந்தவர் சொல்லுங்களேன்) தன்னையே தன் அன்பர்களுக்குக் கொடுத்து விடும் குணம்!!தம்மையே தம்மவர்க்கு நல்கும் தனிப் பெரும் பதம்! - எது அது?

இறை அன்புக்கு வரை இல்லை, முறை இல்லை! சாதி இல்லை, சுத்தம் இல்லை! மனிதன் இல்லை, மிருகம் இல்லை! உயர்வு இல்லை, தாழ்வும் இல்லை! இதுவே இராம காதையின் சூட்சுமம்.

அன்பு திரும்பக் கிடைக்குமா என்று கூடத் தெரியாமல், அன்பு செய்வதே - குகன்! "நின் அருளே புரிந்திருந்தேன், இனி என்ன திருக் குறிப்பே?"

ஜெய் ஶ்ரீராம்!!

?படித்ததில் பிடித்தது?

FB_IMG_1570957550056.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top