• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode உங்களோடு சிறிது நேரம்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ஓடாதீங்க... நான் கொடுமை படுத்த வரலை. கொஞ்சம் பேசத்தான் வந்திருக்கேன். சில சுவாரசிய உண்மையைப் பத்தி.

ஒருத்தங்க என்கிட்ட கேட்டாங்க நதி மழைன்னு தண்ணீர் பத்தியே எழுதிருக்கியே ஏன் அப்படின்னு. இதுக்கான பதில் ஈசி நான் ஒரு தண்ணீர் பைத்தியம் கைக்குழந்தைல இருந்து இப்போ வரை.

இப்போ இருக்குற கைக்குழந்தை எல்லாம் டச் போனைக் கண்டா துள்ளி குதிக்கும். ஆனா நானோ 90’s கிட். வீடெல்லாம் விளையாட்டு சாமான் குமிஞ்சி இருக்குமாம் ஆனா விளையாடவே மாட்டேனாம். அதை தொட்டுக்கூட பார்க்காம அம்மா பின்னாடியே சுத்துவேன்.

அம்மாவோ எப்படிடா இவளை விட்டுட்டு வேலைய செய்றதுன்னு தூக்கி வச்சிட்டே இருக்குறதால காண்டாகிட்டாங்க.

ஆனா தண்ணிய கண்டா துள்ளுவேன் போல. அதை வச்சி அம்மா எனக்கு தண்ணீர் பிடிக்கும் என்ற அரும்பெரும்??? கண்டுபிடிப்பை கண்டுபிடிச்சாங்க.

அப்புறம் என்ன தண்ணிய கொஞ்சம் வெதுவெதுப்பா சூடாக்கி பக்கெட்ல ஊத்தி கீழ விழாம இருக்க சுவரோரமா வச்சி அதுக்குள்ள என்னை போட்ருவாங்க.

திரும்ப அம்மா வேலையெல்லாம் முடிச்சி கூப்பிட்டாதான் போவேன். அப்பா கூப்பிட்டாலும் ம்கும் அசைய மாட்டேன். குளிர கூடாதுன்னு சூடு குறைய குறைய அம்மா ஊத்திட்டே இருப்பாங்க. ரெண்டு மணி நேரம் நாலும் அசராம விளையாடுவேன். எப்புடி நம்ம விளையாட்டு ஹாஹா.

எங்கம்மா அப்புறம் தண்ணில விளையாடுற மாதிரி வேற வேற சைஸ் பாத்திரத்துல சூடு தண்ணி ஊதி ஸ்பூன் கரண்டி எல்லாம் குடுத்து எனக்கு விளையாட்டு சாமான் வாங்குறதை விட்டுட்டாங்க.

இப்பேர்ப்பட்ட நான் நாவலை தண்ணீர் சம்மந்தப்பட்டு எழுதுனது ஆச்சர்யமான விசியமா என்ன?

சரி நம்மளைப் பத்தி பெருமை பேசுனது போதும். நிலவரசன் மாதிரி இன்னும் உலகத்துல இருக்குற பல நிஜ அரசன் அரசில ஒரு ஐந்து பேரை மட்டும் பார்ப்போமா? நான் இன்ட்ரோ தரேன் சொன்னா போயிட்டே இருக்கும் விரிவா வேணும்னா லிங்க் உள்ள பார்த்துக்கோங்க.

1. ஆரண்யா சரவணனின் ஆரண்யா வனம். (புதுச்சேரி)

தனிஒருவனா 100 ஏக்கர் புல் பூண்டு கூட இல்லாத நிலத்தை 22 வருசத்துல அழகிய வனமா மாற்றிய வனபோராளி.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையடிவார பகுதியில், மரங்கள் நிறைந்த பசுமையான வளையாப்பட்டு கிராமத்தில் பிறந்த இவர் சிறுவனா இருக்கும் போது பச்சைத்தங்கம்ன்னு மரத்தை வெட்டி எடுத்துட்டு போக எவ்வளவோ போராடியும் தடுக்க முடியல மனம்குமுறி காடு மேல அதிக பற்று கொண்டாரு. அப்புறம் ஆரோவில் அப்படிங்குற இயற்கை பாதுகாக்கும் சமூகத்துல சேர்ந்து வெட்டாந்தரைய லட்சக்கணக்கான உயிர் வசிக்கும் காடா மாத்திருக்கார்.

https://www.vikatan.com/oddities/miscellaneous/63182-how-was-100-acres-of-arid-land-transformed-forest

2. சாலுமரத திம்மக்கா (கர்நாடகா)

இவங்க கதை வித்தியாசமானது. இளம் வயதில் குழந்தை இல்லாததால தற்கொலை பண்ணுற நிலைமைக்கு போயிட்டார். அப்புறம் சுமக்கிறது மட்டும்தான் உறவா ஏன் எந்தவித பிரதிபலனும் பார்க்காம உதவுற இயற்கை கூட என் உறவுதான்ன்னு சொல்லி தண்ணியே இல்லாத ஊருல 25 கிலோமீட்டர் தூரத்துல போய் கணவன் உதவியுடன் தண்ணீர் எடுத்து துணிச்சலா மரம் நட ஆரம்பிச்சிட்டார். நிறைய மரம் நட்டு 103 வயசாகியும் இன்னும் விடாம தன் பிள்ளைகளை நட்டுக்கொண்டே இருக்கிறார்.

https://www.vikatan.com/literature/agriculture/63062-thimmakkakarnataka-green-environmentalist

3. அம்லா ரூயா (ராஜஸ்தான்)

இவங்க காடு உருவாக்கலை ஆனா பாலைவனத்தையே சோலைவனமா உருமாற்றி இருக்காங்க. அதுவும் கடும் வறட்சி குடிக்க கூட தண்ணி இல்லாத இடத்தை. ஒன்னும் பண்ணலை வர்ற மழை தண்ணீர் ஒரு சொட்டு கூட வீணாக்காமல் 10 வருசத்துல 200 க்கும் மேற்பட்ட தடுப்பணை கட்டி சேர்க்க ஆரம்பிச்சாங்க. விளைவு? 100 கிராமங்களின் விவசாய ஆண்டு வருமானம் 300 கோடி. கேக்கவே நல்லாருக்குல?

https://www.vikatan.com/government-and-politics/politics/63304-single-woman-who-turned-arid-land-to-oasis

4. ஜாதவ் பயேங் (அசாம்)

இவங்க ரொம்ப கிரேட். 1979 ஆம் ஆண்டு வெள்ளத்துல நிறைய ஊர்வன அடிச்சு வந்துச்சி ஆனா அதெல்லாம் வெள்ளம் வடிந்ததும் பூமியோட சூடு தாங்காம இறக்க ஆரம்பிச்சிருச்சி. அப்போ அவரு வயசு 16 ஆனா பூமிய பாதுகாக்கணும்ங்கற விதை மனசுல விழுந்துருச்சி.

சமூக காடுகள் வளர்ப்புன்னு ஒரு திட்டம் ஆரம்பிச்சி அரசாங்கம் கைவிட்டதும் அங்க போய் நான் இருக்கேன் வச்ச மரத்தையாவது பார்த்துக்குறேன்னு அனுமதி வாங்கி போனாரு. அதுக்கப்புறம் இவரையும் அந்த இடத்தையும் மறந்தே போயிட்டாங்க.

25 வருஷம் ஓடிருச்சி. 2008 ல பக்கத்து கிராமத்துல இருந்து யானை இந்த காட்டுக்கு வந்ததும்தான் அது பின்னாடியே விரட்டிட்டு வந்த வனத்துறைக்கு இந்த காடு தெரிஞ்சிருக்கு. அதிர்ச்சில ஆடிப் போயிட்டாங்கல. சும்மாவா 1360 ஏக்கருங்க!
இப்போ 'இந்தியாவின் காட்டு மனிதன்' பட்டத்திற்குச் சொந்தகாரர்.


https://www.google.com/amp/m.dinamalar.com/weeklydetail.php?id=34470

5. பெங்கோ ‘ருத்ராபாணா காட்டின் ராணி’ (ஒடிசா)

இவங்க கதை நம்ம கதை மாதிரிதான். காட்டுலேயே பிறந்து வளர்ந்த இவருக்கு மரக்கடத்தல்காரர்களால் ஒரு மரம் கூட இல்லாம போனதும் மனமுடைந்து போயிருச்சி. கணவர் உதவியோடு வெட்டுன இடத்துலயே மரத்தை நட்டு அது மண்ணில் துளிர்விட்டதும் நம்பிக்கையும் இவர் மனதில் துளிர் விட்டிருக்கு.
இப்போ மறுபடியும் வனமாய் மாறியிருக்கும் இடத்துல காட்டுராணியா வலம் வந்துட்டு இருக்கார். முக்கியமான விசியம் யாரையும் ஒரு இலைக்கூட பறிக்க விடமாட்டாராம்! ஜாக்கிரதை.


https://www.google.com/amp/www.jaffnavision.com/2018/06/17/odisha-bengo-wife-of-rudra-palei-in-mayurbhanj-his-mission-to-save-the-forest-from-wood-smugglers/?amp_markup=1

6. வேலன்டினா தேவி (மணிப்பூர்)

என்னடா இவ ஐந்து சொல்றேன்னு சொல்லிட்டு ஆறாம் நம்பர்க்கு போறான்னு முறைக்காதீங்க. நாம முன்னாடி பார்த்ததெல்லாம் பெரியவங்க ஆனா இப்போ பார்க்க போறது குட்டி தேவதைங்க. அதுவும் இவள் இந்த மாசம்தான் பிரபலம் ஆனாள். நிறைய பேர் தெரிஞ்சிருப்பீங்க.
தேவிகுட்டி இப்போ 5 ஆம் வகுப்பு படிக்குறாங்க. அவங்க 1 ஆம் வகுப்பு படிக்கும் போதுல இரண்டு குல்மொஹர் மரம் வளர்த்துட்டு வந்தாங்க. அதாங்க மே மாசத்துல மரமே சிவப்பு பூவா பூத்துக்குலுங்குமே அந்த மரம். அதை இந்த அரசாங்கம் வழக்கம் போல் வெட்டி விட தேவி ஒரே அழுகை. அதை யாரோ வீடியோ எடுத்து போட்டதும் மணிப்பூர் முதல்வர் பார்த்து அதிர்ந்து போயிட்டார். பெரியவங்களே கவலைப்படலை இந்த குழந்தை கவலைப்பட்டு அழுதேன்னு சொல்லி ரெண்டு மரத்துக்கு பதிலா 20 மரக்கன்றும் அதை நடுறதுக்கு இடமும் குடுத்து சமாதானம் பண்ணிருக்கார்.


அப்புறம்தான் அவங்க முகத்துல சிரிப்பையே பார்க்க முடியுது. நிஜாமவே குட்டி தேவதைங்க அவ. எனக்கே அவ அழுததை வீடியோல பார்த்ததும் அழுகையா வந்துருச்சி.
அவளை விட யாரு பசுமைத் தூதரா இருக்க முடியும்ன்னு சொல்லி மணிப்பூர் மாநில பசுமைத் தூதரா இப்போ நியமிச்சிருகாங்க.


மணிப்பூர்ல எங்க மரம் நட்டாலும் இந்த பாப்பா முன்னாடித்தான் நடுவாங்கலாம். சூப்பர் பாப்பால?

View attachment 14903

https://www.google.com/amp/s/www.hindutamil.in/amp/news/india/510761-schoolgirl-who-cried-over-felled-trees-made-manipur-green-ambassador.html

இந்த மாதிரி தன்னலம் இல்லாம இருக்குற சில நல்ல உள்ளங்களாலத் தான் இன்னும் நம்ம நாட்டுல கொஞ்சமாச்சும் மழை பெய்யுதுன்னு நான் நினைக்குறேன். உண்மை தானே பிரண்ட்ஸ்?
கதை படிக்கலை செல்லம். ஆனா.... நீ தந்த தகவல்கள் அருமை....

Keep rocking.....
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
கதை படிக்கலை செல்லம். ஆனா.... நீ தந்த தகவல்கள் அருமை....

Keep rocking.....
ஆதிமா.. ????? நன்றி நன்றி... நீங்க எங்க போனீங்க.. பார்க்கவே முடியல சீக்கிரம் உங்க கதையை முடிங்க படிக்க start பண்ணனும் அப்போ தான்.. ரொம்ப குறைச்சிட்டேன் நாவல் படிக்குறதை.. ??
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ஆதிமா.. ????? நன்றி நன்றி... நீங்க எங்க போனீங்க.. பார்க்கவே முடியல சீக்கிரம் உங்க கதையை முடிங்க படிக்க start பண்ணனும் அப்போ தான்.. ரொம்ப குறைச்சிட்டேன் நாவல் படிக்குறதை.. ??
:):):) பொழுதுபோக்கு குறைஞ்சா லைஃப்ல முன்னேறிக்கிட்டு இருக்கே-ன்னு அர்த்தம். சரிதானா?
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
:):):) பொழுதுபோக்கு குறைஞ்சா லைஃப்ல முன்னேறிக்கிட்டு இருக்கே-ன்னு அர்த்தம். சரிதானா?
முன்னேற முயற்சிக்குறேன் ஆதிமா.. ரொம்ப சரிதான்.. ???
 




Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
எம்மாடியோவ் 😧 உங்க டைட்டில்க்கு பின்னாடி இவ்வளவு பெரிய ப்ளாஷ் பேக் இருக்கும்னு நினைக்கல enakkum thannikkumae oru flash back irukku theriyuma naanlam munnadi kulikkavae avlo aluvaenam Amma than 7maraikka pallan pidchchittu povannu solli kulikka vaippangalam 😂😂 ippo kooda enakku kulikkana somberi than 😂😂
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
எம்மாடியோவ் 😧 உங்க டைட்டில்க்கு பின்னாடி இவ்வளவு பெரிய ப்ளாஷ் பேக் இருக்கும்னு நினைக்கல enakkum thannikkumae oru flash back irukku theriyuma naanlam munnadi kulikkavae avlo aluvaenam Amma than 7maraikka pallan pidchchittu povannu solli kulikka vaippangalam 😂😂 ippo kooda enakku kulikkana somberi than 😂😂
அதான் கமெண்ட்ல சொல்ல முடியல 😂😂😂 ipo naanum kulika somberi aagiten
 




Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
Naanumae
அதான் கமெண்ட்ல சொல்ல முடியல 😂😂😂 ipo naanum kulika somberi aagiten
Naanumae eppo lockdown vanthutto appo irunthu kulikkavae sema late aakum 😂
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top