• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உதிரி - 1 - வினைச்சொல் விகுதி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
ஒஹ்.. இது உதிரி இலக்கண பகுதியா அண்ணா.. நன்று. நானும் நான்காம் வேற்றுமை உருபு எங்கே என்று நினைத்தேன். ??

ஏன் என்றால் நேற்று நான் கதை எழுதுகையில் அனைத்து வேற்றுமை விரியும் கண்ணில் பட்டு வல்லினம் மிகும் மிகாவை கவனிக்க வைத்தது. ☺☺☺

எனக்கு இன்று நீங்கள் கூறிய பிழை வராது. நிறைய தமிழ் நூல்கள் படித்துள்ளதால் வார்த்தைகளின் எழுத்தே மூளையில் பதிந்து விட்டது. ஆனாலும் நீங்கள் இன்று கூறிய விதம் என்னை கவர்ந்தது அண்ணா.. இலக்கணத்தை கரைத்துக் குடித்துள்ளீர்கள்.. ???? வாழ்த்துகள்.

பொதுவாக இந்த புது சொற்களின் அர்த்தத்திற்கு பயந்தே அண்ணன் தம்பி அக்கா தங்கை என்ற சொல்லை பயன்படுத்துவேன். ???

சரி இனி வாரம் ஒன்றோ இரண்டோ படிப்போம். ?? கடைசி ஒரு கேள்வி.. அண்ணி இங்கே உள்ளார் என்றீர்கள் அல்லவா அவர்கள் என்ன பெயரில் உள்ளார்கள் என்று கூறவும்.. ?? ( சும்மா தான் தெரிந்து கொள்வதற்கு.. கண்டிப்பாக கூற வேண்டும் என்றில்லை.. ☺)

அம்மா என்னிடம் காய் நறுக்க சொல்வதற்கு அவர்களே சமைத்து விடலாம் என்ற முடிவிற்கு வந்து விடுவார்கள். ??? சொல்லி சொல்லி அலுத்து என்னமோ பண்ணு என்று விட்ட கேஸ் நானு.. ????
அக்கா இதெல்லாம் அநியாயம் . நானும் கூட ஒரு சில வேளைகளில் செய்ய மாட்டேன்..ஆனால் எனக்கே தோன்றிவிட்டால் சமையலே எனதாகத் தான் இருக்கும்
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஒஹ்.. இது உதிரி இலக்கண பகுதியா அண்ணா.. நன்று. நானும் நான்காம் வேற்றுமை உருபு எங்கே என்று நினைத்தேன். ??

ஏன் என்றால் நேற்று நான் கதை எழுதுகையில் அனைத்து வேற்றுமை விரியும் கண்ணில் பட்டு வல்லினம் மிகும் மிகாவை கவனிக்க வைத்தது. ☺☺☺

எனக்கு இன்று நீங்கள் கூறிய பிழை வராது. நிறைய தமிழ் நூல்கள் படித்துள்ளதால் வார்த்தைகளின் எழுத்தே மூளையில் பதிந்து விட்டது. ஆனாலும் நீங்கள் இன்று கூறிய விதம் என்னை கவர்ந்தது அண்ணா.. இலக்கணத்தை கரைத்துக் குடித்துள்ளீர்கள்.. ???? வாழ்த்துகள்.

பொதுவாக இந்த புது சொற்களின் அர்த்தத்திற்கு பயந்தே அண்ணன் தம்பி அக்கா தங்கை என்ற சொல்லை பயன்படுத்துவேன். ???

சரி இனி வாரம் ஒன்றோ இரண்டோ படிப்போம். ?? கடைசி ஒரு கேள்வி.. அண்ணி இங்கே உள்ளார் என்றீர்கள் அல்லவா அவர்கள் என்ன பெயரில் உள்ளார்கள் என்று கூறவும்.. ?? ( சும்மா தான் தெரிந்து கொள்வதற்கு.. கண்டிப்பாக கூற வேண்டும் என்றில்லை.. ☺)

அம்மா என்னிடம் காய் நறுக்க சொல்வதற்கு அவர்களே சமைத்து விடலாம் என்ற முடிவிற்கு வந்து விடுவார்கள். ??? சொல்லி சொல்லி அலுத்து என்னமோ பண்ணு என்று விட்ட கேஸ் நானு.. ????
கேட்கவே (படிக்கவே!!) மிக்க மகிழ்வாய் உள்ளது...

நான் இலக்கணத்தைக் கரைத்துக் குடிக்கலாம் இல்லை... எனக்கும் நிறைய பிழைகள் வரும்! ஒரு ஆர்வத்தினால் சராசரித் தமிழரைவிடச் சற்றுக் கூடுதலாய்க் கற்று வைத்துள்ளேன், அவ்வளவே!

என் மனைவியின் பெயர் தாமரை. @thaamz :):)(y)(y)
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
இல்ல
அப்படியா.. எனக்கு வார்த்தை மட்டும் குடுத்து எப்படி பிரிக்கணும் என்று மட்டும் தாண்டா இருந்தது. இப்போ இந்த வந்தனர் இருக்குல்ல அதை பிரித்து.. வா பகுதி ந் சந்தி ந் த் ஆனது விகாரம் இப்படின்னு சொல்லிருக்கும். நான் என்ன பண்ணுவேன் மனப்பாடம் தான் பாரு இப்போ கூட சொல்றேன்.. ???
இல்லை அக்கா....நான் இதுவரை மனப்பாடம் செய்ததில்லை....ஆசிரியரைக் பொறுத்து கூட மாறுபடலாம் அக்கா..இனி கற்று கொள்ளலாம் அக்கா..
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அப்படியா.. எனக்கு வார்த்தை மட்டும் குடுத்து எப்படி பிரிக்கணும் என்று மட்டும் தாண்டா இருந்தது. இப்போ இந்த வந்தனர் இருக்குல்ல அதை பிரித்து.. வா பகுதி ந் சந்தி ந் த் ஆனது விகாரம் இப்படின்னு சொல்லிருக்கும். நான் என்ன பண்ணுவேன் மனப்பாடம் தான் பாரு இப்போ கூட சொல்றேன்.. ???
நான் குறிப்பிட்டதைப் போல பகுபதம் என்ற அமைப்பு இல்லாமலே, சொற்களை வெட்டிக் கூறுபோடாமலே அவற்றை அலசலாம்.

தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு, ஓரளவு அதில் பயிற்சியும் உள்ளவர்கள் இதையெல்லாம் எளிதாகச் செய்வர்.

ஒரு செல்லை இறந்த காலத்தில், எதிர்காலத்தில், நிகழ்காலத்தில் எப்படிச் சொல்ல வேண்டும் என்ற குழப்பம் நமக்கு வருவது அரிது... இத்தனைக்கும், இந்த அமைப்பில் தமிழில் சில குழப்பம்பிடித்த அமைப்புகள் உள்ளன* ஆனாலும் நாம் யாரும் குழம்புவதில்லை...

So, believe in your instincts!

*எடுத்துக்காட்டாய்,

வா - வந்தான் என வருகிறது, ஆனால்,
போ - பொந்தான் என வருவதில்லை (போனான்! ‘போந்தான்’ என்று பழைய இலக்கியங்களில் வரும்!)
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
கேட்கவே (படிக்கவே!!) மிக்க மகிழ்வாய் உள்ளது...

நான் இலக்கணத்தைக் கரைத்துக் குடிக்கலாம் இல்லை... எனக்கும் நிறைய பிழைகள் வரும்! ஒரு ஆர்வத்தினால் சராசரித் தமிழரைவிடச் சற்றுக் கூடுதலாய்க் கற்று வைத்துள்ளேன், அவ்வளவே!

என் மனைவியின் பெயர் தாமரை. @thaamz :):)(y)(y)
நன்றி அண்ணா. அவர்களுக்கும் எங்களின் நன்றியை தெரிவித்து விடுங்கள். ??? அமைதியாக இருந்தே தளத்திற்கு நல்லது செய்துள்ளார்களே. ????
 




Premi

அமைச்சர்
Joined
Apr 1, 2018
Messages
1,011
Reaction score
2,292
Location
coimbatore
பள்ளியில் படித்த பகுபத உறுப்பிலக்கணத்தை நினைவு படுத்தும் பதிவு ...அருமை அண்ணா
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
ஏதோ இப்ப விடுப்புன்றதால ரெண்டு நாளா தெனமும் எழுத முடியுது... வேலைக்குப் போறப்ப இப்படிலாம் எதிர்பார்க்கக் கூடாது... :giggle::giggle::giggle:

அதுமட்டுமில்லாம, தெனமும் பதிவு போட்டா கத்துக்குறது நீர்த்துப் போயிடும்... அதனால, வாரத்துக்கு ஒன்னு ரெண்டு பதிவோட நிறுத்துக்குவோம்...

’கற்கக் கற்கண்டாய்’ பகுதியை வாரத்துக்கு ஒருமுறையும், இடையிடையே ‘உதிரி’ பகுதியை இயன்றளவும் இடுகிறேன்... (உதிரி பேருக்கேத்த மாதிரி கோர்வையா இல்லாத, சின்னச் சின்ன இலக்கண தகவல்களாத்தான் இருக்கும்!)

எப்போதும் முதல் மாணவியா ஆஜர் ஆகுறதுக்கு உனக்கு ஒரு சிறப்புப் பாராட்டு (y)(y):):)

(’ஏண்டி எப்பப் பாரு மொபைலும் கையுமாவே இருக்க? வந்து இந்தக் காயலாம் நறுக்கு’னு உங்க அம்மாவோ அப்பாவோ திட்டினா அதுக்கு நான் பொறுப்பில்ல!!)
????
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
வணக்கம்,

’கற்கக் கற்கண்டாய்’ இழையின் பின்னூட்டத்தில் ஒரு சகோதரி குழப்பம் விளைக்கும் சொற்களையும் நாளுக்கு நான்காய்ப் பதிவிடுக என்று கேட்டிருந்தார். அதுவும் சரிதான் என்று தோன்றியது.

ஆனால், அது என் ஒருவனால் மட்டுமே செவ்வனே செய்து முடித்துவிடக் கூடிய செயலன்று. அதற்கு உங்கள் அனைவரின் உதவியும் தேவை.

நீங்கள் கவனித்த சொற் குழப்பங்களை, எழுத்துப் பிழைகளை இங்கே சுட்டிக்காட்டுங்கள். அவற்றை விவாதித்து நாம் அனைவரும் கற்போம்!

அச்சகோதரி ‘போனாள் - போனால்’ குழப்பத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

நான் பொதுவாகத் தமிழ் வினைச்சொற்களின் ’விகுதி’ பற்றி இப்பதிவில் பேச விழைகிறேன்.

தொல்காப்பிய இலக்கணம் சொல்லைச் சொல்லாகத்தான் கையாள்கிறது. ஆனால், பின் வந்த நன்னூலில் சொல்லைக் கூறுபோட்டுப் ‘பகுபதம்’ & ‘பகாபதம்’ என்று இலக்கணம் கூறப்படுகிறது.

ஒரு தீவிர தொல்காப்பியர் இரசிகனாய் எனக்கு நன்னூலாரின் முறையில் முழுமையான உடன்பாடில்லை என்றாலும், தொடக்க நிலை மாணவர்களுக்கு நன்னூல் இலக்கணம் ஒரு எளிய வழி என்பதை மறுக்க இயலாது.

View attachment 11235
:LOL::LOL::LOL::LOL:

நன்னூல் முறையில் சொல்லைத் துண்டு துண்டாக வெட்டுகையில் சொல்லின் முதலில் உள்ளது பகுதி என்றும், இறுதியில் உள்ளது விகுதி என்றும் அழைக்கப்படும்.

ஒரு சொல்லில் பகுதி விகுதிகளுக்கிடையே பிற கூறுகளும் இருக்கலாம்.

அவையாவன: இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆகியன.

பகுதி: இது சொல்லின் அடிப்படை உறுப்பு. வேர்ச்சொல்லாகவோ, அடிச்சொல்லாகவோ இருக்கும். ஏவல் வடிவில் இருக்கும் (நட, படி, ஓடு, வா, இரு, எழுது...)

விகுதி: இது சொல்லின் இறுதி. இது மூவிடம் (தன்மை, முன்னிலை, படர்க்கை) ஐம்பால் (ஆண், பெண், பலர், ஒன்று, பல) எண் (ஒருமை, பன்மை) ஆகியவற்றைக் குறிக்கும்.

இடைநிலை: இது பொதுவில் காலம் காட்டும் (த், ட், ற் - இறந்தகாலம்; கிறு, கின்று, இன்று - நிகழ்காலம்; ப், வ் - எதிர்காலம்)

சாரியை: இதற்குத் தனியே பொருள் இருக்காது. இது விகுதிக்கு முன் வரும். விகுதியை அதற்கு முன் உள்ள உறுப்போடு இயல்பாக ஒட்ட வைக்கப் பயன்படுகிறது.

சந்தி: இது புணர்ச்சி. இரண்டு உறுப்புகள் இணைகையில் அவற்றுக்கேற்ற புணர்ச்சி. (வல்லினம் மிகுதல், தோன்றல், திரிதல் போன்ற மாற்றங்கள்)

விகாரம்: இது உருமாற்றம். பகுதியோ, இடைநிலையோ, சந்தியினாலோ எழுத்துகள் மாறுதல் விகாரம் எனப்படும்.

கீழுள்ள படத்தில் இவற்றைக் காட்ட முயன்றுள்ளேன்.
‘வந்தனர்’ என்ற சொல் பகுபத உறுப்பிலக்கண முறையில் எப்படிப் பிரிகிறது என்று பாருங்கள்.

View attachment 11236

சரி, நாம் விகுதிக்கு வருவோம்.

தமிழ் வினைச்சொற்களின் மிக முக்கியமான உறுப்பு இந்த விகுதிதான். இது நமக்குப் பல தகவல்களைத் தருகிறது.

நான் மேலேயே குறிப்பிட்டதைப் போல, விகுதி நமக்கு இடம், திணை, எண் ஆகிய மூன்று தகவல்களையும் தரும்.

எடுத்துக்காட்டாய்:

View attachment 11237

விகுதியின் இந்த சூக்குமத்தைப் புரிந்துகொண்டால் ‘போனால் / போனாள்’ குழப்பமே வராதுதானே?

போனால் - இங்கு விகுதி ‘ஆல்’, இது 'if' என்ற பொருளுடையது.
(மழை வந்தால் குடைபிடி! வீட்டுக்குப் போனால் சாப்பிடு!)

போனாள் - இங்கு விகுதி ‘ஆள்’, இது உயர்திணைப் பெண்பால் வினைமுற்று விகுதி.
(மேலே இருக்கும் அட்டவணையைக் காண்க!)

போ+ன்+ஆள்: போதாலாகிய செயலைச் செய்தது ஒரு பெண் என்ற தகவலைப் பெறுகிறோம்.

வந்தால் / வந்தாள்
செய்தால் / செய்தாள்
படித்தால் / படித்தாள்


எல்லாம் இவ்வாறே பொருள் தரும்.

இனி இந்தக் குழப்பம் உங்களுக்கு வராதுதானே?

(மேலே காட்டிய பகுபத இலக்கணம் அனைத்தும் ‘வினைமுற்று’ என்றவகை வினைச்சொற்களுக்கானவை. மேலே காட்டிய அனைத்துத் தகவல்களையும் முற்றாகத் தருவது ‘வினைமுற்று’ ஆகும். இதில் சில தகவல்களைத் தராமல் எஞ்சி இருக்கும் வினைச்சொற்கள் ‘வினையெச்சம்’ எனப்படும். அவற்றை நாம் நமது வல்லினம் மிகுதல் பகுதிகளில் பார்ப்போம்!)

பயிற்சி: ஏதேனும் கதையை எடுத்துக்கொண்டு அதில் வரும் வினைமுற்றுச் சொற்களைப் பட்டியலிடுக்கள்.

பின் அச்சொற்களின் விகுதிகளைத் தனியாக எழுதி அது தரும் தகவல்கள் என்னென்ன என்று அலசுங்கள் (இதைத் தனியாக எழுதத் தேவையிருக்காது, வேண்டுமானால் எழுதிப் பாருங்கள்!)

----
கொசுறு: என் மனைவி குறிப்பிட்டது (அவளும் இத்தளத்தின் வாசகி. சொல்லப்போனால் (’சொல்லப்போனாள் அல்ல!) இத்தளத்தை எனக்கு அறிமுகம் செய்தவளே அவள்தான்!)

சில இடங்களில் ‘தமயன்’ / ‘தனயன்’ குழப்பத்தைக் கண்டதாக அவள் சொன்னாள்.

தமயன் / தமையன்: இது தூய தமிழ்ச் சொல். இதன் பொருள் ‘அண்ணன்’ (மூத்த சகோதரன்) என்பது.

[இதே அடிப்படையில் ‘தமக்கை’ என்ற சொல்லும் உள்ளது. இது ‘அக்கா’வைக் குறிக்கும்.]

தனயன்: இது சமற்கிருதச் சொல். இதன் பொருள் ‘மைந்தன் / மகன்’ என்பது.

[இதனை ‘னையன்’ என்றும் எழுதுகின்றனர். அவ்வாறே ‘தனயள்’ என்பது மகளைக் குறிக்கும்!]

[’சகோதரன்’ என்ற சொல்லும் சமற்கிருதம்தான்! ‘உதரம்’ என்றால் வயிறு, ‘சக+உதரன்’ - ஓரே வயிற்றில் பிறந்தவன் என்று பொருள்! தமிழில் இதனை ‘உடன்பிறப்பு’ என்றோ ‘கூடப் பிறந்தவன்’ என்றோ சொல்கிறோம்!]
-----

(அடுத்த பதிவில் ‘கள்’ விகுதியைப் பற்றிப் பேசுவோம், இதிலும் பலருக்குப் பல குழப்பங்கள் இருப்பதாகத் தெரிகிறது!)

உங்கள் கருத்துகளை / வினாக்களைத் தயங்காது கூறுங்கள் / வினவுங்கள்..

நன்றி,
-வி
அருமை bro
 




thaamz

புதிய முகம்
Joined
Feb 25, 2018
Messages
4
Reaction score
16
Location
chennai
நன்றி அண்ணா. அவர்களுக்கும் எங்களின் நன்றியை தெரிவித்து விடுங்கள். ??? அமைதியாக இருந்தே தளத்திற்கு நல்லது செய்துள்ளார்களே. ????
ஹாய்.. இது 'வஞ்ச புகழ்ச்சி' போல இருக்கே..
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஹாய்.. இது 'வஞ்ச புகழ்ச்சி' போல இருக்கே..
அச்சோ அண்ணி ஏன் அண்ணி.. ?? நான் உண்மையைத் தான் சொல்றேன். நான் போய் அப்படில்லாம் பண்ணுவேணா ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top