• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உதிரி - 2 - ‘கள்’ (பன்மை) விகுதி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
கோ- அரசன்
ஆ- பசு(சான்று ஆநிரை)
மா( உரிச்சொல்)-பெரிய(சான்று மாநகரம்)
 
Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
ஒரு சப்பானிய பழமொழி இருக்கு: சிங் மங் ஜுன்... சரி சரி, தமிழ்லயே சொல்றேன் :LOL::LOL::LOL::

மனிதன் மலைகள் தடுக்கி விழுவதில்லை, சிறு கற்கள் தடுக்கித்தான் விழுகிறான்!

அடிப்படை இலக்கணத்தில்தான் நாம் அதிகம் பிறழ்கின்றோம்... எனவேதான் இவற்றில் கவனம் செலுத்துங்கள் என்கிறேன்!
சரிங்க ஆசிரியரே....
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
கோ- அரசன்
ஆ- பசு(சான்று ஆநிரை)
மா( உரிச்சொல்)-பெரிய(சான்று மாநகரம்)
அப்படியே சொல்லிட்டே வா..

தா - கொடு
வை - வைத்துவிடு
பா - பாடல்
தை - மாதம்
ஈ - ஒரு பூச்சி இனம்
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
@Kavyajaya @Kavichithra

நன்னூல் குறிப்பிடும் ஓரெழுத்தொரு மொழிகள்:

சூத்திரம்: [எழுத்ததிகாரம் - பதவியல்]

உயிர் ம-இல் ஆறும், த ப ந-இல் ஐந்தும்
க வ ச-இல் நாலும் ய-இல் ஒன்றும்
ஆகும் நெடில்; நொ து ஆம் குறில் இரண்டொடு
ஓரெழுத்து இயல் பதம் ஆறு ஏழ் சிறப்பின.

உயிரெழுத்து வரிசையிலும் மகர வரிசையிலும் (வரிசைக்கு) ஆறு உள்ளன:

ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ,
மா , மீ , மூ , மே , மை , மோ

[ஆ - பசு, ஈ - பூச்சி, தா, ஊ - மாமிசம், ஏ - அம்பு, ஐ - அழகு, தலைமை, ஓ - மதகுப் பலகை, மா - பெரிய, மாமரம், மீ - மேல், உயர், மூ - மூன்று, மூப்பு, மே - மேன்மை, மை - கருமை, கண்மை, மோ - முகர்தல்]

தகர பகர நகர வரிசையில் (வரிசைக்கு) ஐந்தும்:

தா , தீ , தூ , தே , தை ,
பா , பூ , பே , பை , போ ,
நா , நீ , நே , நை , நோ ,

[தா - கொடு, தீ - நெருப்பு, தூ - தூய்மை, தூவுதல், தே - தெய்வம், தை - மாதம், தைத்தல், பா - துணி, நெசவு ஊடு, பாடல், பூ - மலர், உலகம், பே - நுரை, மேகம், போ - செல், நா - நாக்கு, நீ - முன்னிலை, நே - அன்பு, நை - வருந்து, இற்றுப்போ, நோ - துன்புறு]

ககர, வகர, சகர வரிசையில் (வரிசைக்கு) நாலும்:

கா , கூ , கை , கோ ,
வா , வீ , வை , வௌ ,
சா , சீ , சே , சோ ,

[கா - காத்தல், சோலை, கூ - உலகம், கூவுதல், கை - சிறுமை, கரம், கோ - அரசன், வா - வருதல், வீ - மலர், வை - கீழே வை, திட்டு, வௌ - பற்று, பிடி, சா - சாதல், இறத்தல், சீ - வைதல், இழிவுக்குறிப்பு, சே - சிவப்பு, உயர்வு, எருது, அழிஞ்சல் மரம், சோ - மதில், அரண்]

யகர வரிசையில் ஒன்றும்:
யா,

[யா - மரம்]

குறிலெழுத்துகளில் இரண்டும்:
நொ , து

[நொ - துன்பம், நோய், து - உண், உணவு]

சிறப்புடைய ஓரெழுத்தொரு மொழிகள்.

சிறப்பில்லாதவையும் உள்ளன (அவற்றை இவர் குறிக்கவில்லை. ஆனால் ‘சிறப்பின’ என்று சுட்டியதால் சிறப்பில்லாத அவை குறிப்பாக உணர்த்தப்பட்டன: கு, கௌ, பீ, வே ஆகியவை அவை!)
 
ஆசிரியரே இன்னக்கி இது போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கு.. முதலில் பாட்டு ஒன்னும் புரியல கீழ நீங்க குடுத்திருக்குற விளக்கம் வைத்துப் பார்த்தால் அவ்வளவு தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இதில் உள்ள சொல்லைப் பயன்படுத்தி நான் எங்கும் பார்த்ததில்லையே.. ??

இத்தனையும் பயன்படுத்தினால் கொஞ்சம் படிக்க எளிதாக இருக்கும்.
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
@Kavyajaya @Kavichithra chellams unmaiya neega ellam tamil paadam teriyadha vanga nambitein ma?
ஹாஹா அக்கா நாங்கள் படித்ததெல்லாம் ஒன்றுமே இல்லை போல கடலளவு இருக்கிறது கா.. நாங்கள் வாளி அளவாவது படித்தோமா தெரியவில்லை.. ??
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஹாஹா அக்கா நாங்கள் படித்ததெல்லாம் ஒன்றுமே இல்லை போல கடலளவு இருக்கிறது கா.. நாங்கள் வாளி அளவாவது படித்தோமா தெரியவில்லை.. ??
’சொம்பில்’ பிறந்த குறுமுனி (அகத்தியர்) கடலையே குடித்தாராம்...

நீங்கள் ‘வாளி’ அளவு என்கின்றீர்... ஏழுகடலையும் குடித்துவிடுவீர்... :ROFLMAO::ROFLMAO:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top