• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ்??? உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே கதையின் 16வது எபியோட வந்துட்டேன்...???
கதைக்கு இதுவரைக்கும் நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி...??? தொடர்ந்து இதே மாதிரி லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்டு என்னை உற்சாகப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்???

1575273154745.jpg


ஈர்ப்பு 16

அந்த ‘காட்ஸில்லா’ ஓடிப் போய் ஒரு வாரம் கழிந்தது. இந்த ஒரு வாரத்தில் நான் எங்கும் வெளியே செல்லவில்லை. அப்படியே தப்பித் தவறி சென்றாலும் சுற்றார்த்தாரின் பார்வை என்னை துளைத்தெடுத்தது.

‘இவங்க ஏன் என்ன இப்படி பாக்குறாங்க… என்னமோ நான் தான் ஓடிப் போன மாதிரி…???’
என்னை பார்த்ததும் அவர்களுக்குள்ளேயே கிசுகிசுத்தனர். சிலர் என் முன்னாலேயே என்னை தவறாகப் பேசினர். இவற்றால் நான் எங்கும் வெளியே செல்லாமல் இருந்தேன்.


வீட்டிலேயே அடைந்து இருப்பதும் எனக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் இதைப் பற்றி க்ரிஷிடம் கூறியபோது, அவனோ “நீ இப்படி வீட்டிலேயே அடைஞ்சு இருந்தா தான் எல்லாருக்கும் உன் மேல தப்பான அபிப்ராயம் வரும். அவங்க சொல்றத எல்லாம் காதிலேயே வாங்காம கடந்துடு… நாம் ஏதாவது ஒன்னுக்கு இம்போர்ட்டன்ஸ் தந்தா தான் அது எல்லாராலையும் கவனிக்கப்படும்… நீ அவங்க சொல்றத பெருசா எடுத்துக்காம விட்டுட்டா அவங்க ஆட்டோமாட்டிக்கா அடுத்த விஷயத்துக்கு போயிடுவாங்க…” என்று எனக்கு அட்வைஸ் பண்ணி மறுபடியும் வெளியில் செல்ல வைத்தான்.

அவன் சொன்னதும் சரியே என்பது போல சில நாட்களில் என்னை விட்டு பக்கத்துக்கு வீட்டு அனிதாவின் டிவோர்ஸ் பற்றி எல்லாரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

வாழ்க்கையும் ஒரு பக்கம் சென்றுகொண்டே இருந்தது பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லாமல்… என் ஜாதகத்தில் திருமண யோகம் வராததால் என் கல்யாணப் பேச்சு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதற்கு தனியாக கடவுளிடம் நன்றி கூறினேன்???

வீடும் பழைய நிலைமைக்குத் திரும்பியது. எப்போதும் போல என் அம்மாவையும் அபியையும் வம்பிழுப்பது, சாண்டியுடன் வெட்டியாக ஊர் சுற்றுவது, சிறுவர்களுடன் விளையாடுவது, புலனத்தில் தோழிகளுடன் அரட்டையடிப்பது, நான் சமைத்த ‘கொடுமை’யை போட்டோ எடுத்த ’படவரி’யில் பதிவேற்றுவது, கடைசியாக ‘பற்றிய’த்தில் க்ரிஷுடன் அளவலாவுவது என்று என் நேரம் ‘பயனுள்ளதாக’வே கழிந்தது.

இதற்கிடையில் ராகுலின் ஞாபகம் எழுந்தாலும், என் காதலை சற்று ஆறப் போடுவோம் என்று அவனை (அவன் காதலை) நோக்கி எந்த அடியும் நான் வைக்கவில்லை. மேலும் எப்போதும் நானே அவனிடம் ‘வழிவது’ போன்று தோன்றியது. அதனால் சில நாட்கள் அவனைக் காண்பதை தவிர்த்து வந்தேன். அவன் பேச்சு எழுந்தாலே அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அபி அவன் நண்பனுடன் சேர்ந்து ‘மல்டி குயுஸைன் ரெஸ்டாரண்ட்’ ஒன்றை ஆரம்பித்தான். அங்கு இந்தியன், சைனீஸ் போன்ற பல்வேறு உணவு வகைகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் இந்த யோசனை பிடிக்காத அப்பா கூட அந்த ரெஸ்டாரண்ட்டிற்கு உள்ள டிமாண்ட்டைப் பார்த்து வாயடைத்து போனார்.

எனக்கு எப்போதும் அபியின் சமையல் பிடிக்கும். வீட்டில் கூட ஏதாவது புதிதாக சமைத்தால் நான் தான் அதை சுவைப்பேன். அப்பாவிற்கு அண்ணன் சமையலறையில் இருந்தாலே பிடிக்காது. ஆண்கள் சமையல் செய்ய கூடாது என்ற எண்ணம் அவருக்குள்.

அபி பள்ளிப் படிப்பு முடிந்ததும் இளங்கலை சமையல் கலை பிரிவில் சேர நாட்டம் கொள்ள, அப்பாவோ ‘இன்ஜினியரிங்’ தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி அதில் சேர்த்து விட்டார். அதிலிருந்தே இருவருக்கும் மோதல் தான்.

கல்லூரியில் அவனுக்கு பிடித்த பிரிவு சேர முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், பகுதி நேரமாக சமையல் கலையில் ‘டிப்ளமோ’ முடித்தான்…. அப்பாவிற்கு தெரியாமல் தான்.

கல்லூரி முடிந்ததும் அப்பாவோ அவன் ஐடி கம்பெனியில் வேலை தேடுவான் என்று எதிர்பார்க்க, இவனோ அங்கெல்லாம் வேலைக்கு செல்ல முடியாது என்று கூற அன்று வீட்டில் பெரும் கலவரமே.

அதன் பின்பு இருவரும் சரிவர பேசிக்கொள்ளவில்லை. அபியும் பேங்க் லோன் விஷயமாக அலைந்து திரிய அதற்கு அப்பா சிறிதும் உதவ முன்வரவில்லை. கடைசியாக அவன் நண்பனின் உதவியோடு பேங்க் லோன் கிடைத்து ரெஸ்டாரண்ட்டை கஷ்டப்பட்டு திறந்துவிட்டான்.

நானும் அவன் ரெஸ்டாரண்ட்டிற்கு அடிக்கடி செல்வேன். இப்போதும் அவனின் அதிகாரப்பூர்வ சுவை தேர்வாளர் (official food taster???) நான் தான்.

முதல் தடவை அங்கு சென்ற போது அந்த ரெஸ்டாரண்ட்டின் உட்புற வடிவமைப்பைப் பார்த்து வியந்து தான் போனேன். அவனிடம் கேட்டதற்கு அவையெல்லாம் அவன் நண்பனின் யோசனை என்றே கூறினான்.

“எப்படி அபி உனக்கு இப்படி ஒரு அறிவாளி பிரென்ட்.. ஒரு தடவ கூட இந்த மாதிரி பிரென்ட்டெல்லாம் என் கண்ணுல காட்டவே மாட்டிங்குற???… எப்போ பாத்தாலும் பல்லிக்கு பாண்ட் சட்ட போட்ட மாதிரி ஒருத்தனையும் சட்டைக்கு போடுற கஞ்சியை குடிச்சுட்டு வெரப்பா இருக்குற ஒருத்தனையும் தான வீட்டுக்கு கூட்டிட்டு வருவ???… இவன் யாரு புது பிரென்ட்…???”

“நீயெல்லாம் யாருக்கும் மரியாதையே குடுக்க மாட்டியா…” என்று என்னைஅடிக்க துரத்தினான்.

அதன் பின்பு அவன் நண்பனைப் பற்றி அவன் பேசியதில்லை. நானும் கேட்கவில்லை. இன்று ஏதோ புதிதாக செய்ததாக என்னை அழைத்தான். அங்கு சென்ற போது நிறைய ‘கஸ்ட்மர்ஸ்’ இருந்ததால் நான் காத்திருந்தேன்.

அப்போது அங்கு ராகுலை பார்த்தேன். அவனின் தோழர்களுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்து 2 மாதங்களுக்கு மேல் இருக்கும். அவனின் மகிழ்ச்சியான முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் நான் இருக்கும் இடத்தையும் சூழ்நிலையையையும் மனதிற் கொண்டு என் பார்வையை வேறு திசைக்கு திருப்பினேன்.

சிறிது நேரம் அங்கு விளையாடிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் வந்து ரொம்ப நேரம் ஆனதை உணர்ந்து அபியைத் தேடினேன்.

அங்கு ஒரு ஓரத்தில் அபியும் ராகுலும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இவ்வளவு வருடங்கள் ராகுல் என் எதிர் வீட்டில் இருந்தாலும் இது வரை அபியும் ராகுலும் பேசி நான் பார்த்ததில்லை. ஆனால் இன்றோ இருவரும் பல நாட்கள் பழகிய தோழர்கள் போல பேசிக்கொள்வது எனக்கு வியப்பக இருந்தது.

அவர்களின் நட்பில் ஆர்வமாகி அவர்கள் அனைவரும் வெளியேற காத்திருந்தேன். அவன் செல்லும்போது என்னை ஒரு பார்வை பார்த்தான். ‘ஸ்ஸ்ஸ்… உன்ன பாக்கக்கூடாதுன்னு 2 மாசமா பல்ல கடிச்சுட்டு இருந்தா… ஒத்த பார்வைல ஃபுல்லா ஃபிளாட் ஆக்கிட்டு போயிட்டியே டா…’ என்று புலம்ப மட்டும் தான் முடிந்தது.

நான் அங்கு நின்று வாசலையே வெறித்துக் கொண்டிருந்ததைக் கண்ட அபி என்னை உலுக்கி, “அங்க என்ன பாத்துட்டு இருக்க?” என்று வினவினான்.

நானோ வாய்க்கு வந்ததை உலறிவிட்டு அவனை இழுத்து கொண்டு சமையலறைக்கு சென்றேன். அங்கு அவன் சமைத்ததை சுவைத்துக்கொண்டே அவனுக்கும் ராகுலுக்கு என்ன தொடர்பு என்று கேட்டேன்.

அதற்கு அவன், “எதிர் வீட்டுல இருக்குறவனை எப்படி தெரியாம இருக்கும்…”

“நம்புற மாதிரி இல்லையே…” என்று சந்தேகத்தோடு பார்த்தேன் நான்.

“நம்பு டி எரும… 2 வருஷமா தான் அவன எனக்கு பழக்கம். பழகுறதுக்கு ஈஸியா ரொம்ப பிரெண்ட்லியா இருந்தான். நான் படிச்சுட்டு வேலைக்கு போக பிடிக்காம சும்மா சுத்திட்டு இருந்தப்போ இவன் தான் எனக்கு பிடிச்ச வேலைய பார்க்க சொல்லி என்கரேஜ் பண்ணான்.”

“டேய் அண்ணா உண்மைய சொல்லு… இந்த ரெஸ்டாரன்டோட ‘சைலண்ட் பார்ட்னர்’ யாரு?”

அவனோ சிரித்துக்கொண்டே, “ராகுல் தான்…” என்று கூறினான்.

அதைக் கேட்ட அதிர்ச்சியுடன் அங்கிருந்து வெளியே சென்றேன். என்னை யாரோ பார்ப்பது என்னால் உணரமுடிந்தாலும் நான் திரும்பி பார்க்கவில்லை.

********
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
அடுத்த நாள் காலை நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என் அம்மா என்னை எழுப்பி ஆனந்த் வந்திருப்பதாகக் கூறினார். நான் ஆனந்தை ஊட்டியில்தான் கடைசியாக பார்த்தது.

நான் உடனே ‘ஃப்ரெஷ்’ஷாகி அவனை பார்க்கச் சென்றேன். அவனோ இயல்பாகவே இருந்தான். என் தந்தையோடு பேசிக் கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து தலையசைத்தான். என் தந்தை சிறிது ‘டென்ஷன்’னாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. ஆனால் ஆனந்தோ பேசிப் பேசியே அவரை இயல்பாக்கினான்.

நாங்கள் இருவரும் எங்கள் ஊட்டி பயணத்தைப் பற்றி பேசினோம். என் அப்பாவும் இதில் கலந்து கொண்டது இதுவே முதல் முறை. இப்படியே அன்று காலை நேரம் நல்ல படியாக சென்றது. ரொம்ப நாள் கழித்து என் குடும்பத்தின் மகிழ்ச்சியை பார்த்ததில் எனக்கும் சற்று நிம்மதியாக இருந்தது.

ஆனந்த் கிளம்பும்போது அவனிடம், “டோன்ட் ஒர்ரி… அவ ஒன்னும் அவ்ளோ ஒர்த் இல்ல…” என்று நான் கூறியதைக் கேட்ட ஆனந்தோ அவனின் ‘ட்ரேட் மார்க்’ சிரிப்பை சிந்திவிட்டு சென்றான்.

********

நான் பால்கனிக்கு சென்று நின்றேன். இந்த வாழ்க்கை எனக்கு என்ன வைத்திருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் நேஹாவை ராகுலின் வீட்டில் பார்த்தேன்.

காதல் ஒருவரை எப்படியெல்லாம் மாற்றிவிடும் என்று அவளைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். மிகவும் பரிதாபகரமாக இருந்தாள். அவளை அந்த நிலையில் பார்க்க கஷ்டமாக இருந்தது. நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவளும் என்னைத் திரும்பி பார்த்து சிரித்தாள். ஆனால் அந்த சிரிப்பினில் சற்றும் உயிர் இல்லை.

அப்போது தான் ராகுல் வெளியே வந்தான் நேஹாவை அனுப்பி வைப்பதற்காக. அந்த நிலையிலும் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்ததை அவன் பார்த்துவிட்டான். ‘ஐயோ இந்த மானம் கெட்ட மனச வச்சுக்கிட்டு நான் தான் அடிக்கடி அவன்கிட்ட மாட்டிக்கிறேன்…???’

*********

மாலையில் முகநூலில் பக்கத்தை புரட்டிக்கொண்டிருந்த போது க்ரிஷிடமிருந்து மெசேஜ் வந்ததற்கான அறிவிப்பு வந்தது.

க்ரிஷ் : ஹாய்… ரொம்ப நாள் ஆள காணோம்… ஹவ் ஆர் யூ?

நான் : ம்ம்ம் நல்லா தான் இருக்கேன்…

க்ரிஷ் : என்ன ரொம்ப சலிச்சுக்குற… அப்படி என்ன பிரோப்ளேம்… என்கிட்ட சொல்லலாம்னா சொல்லு…

நான் : அப்படி ஒன்னும் பெருசா இல்ல…எப்பவும் போல தான்.. ஒரே போரிங்கா இருக்கு… உனக்கு எப்படி போகுது லைஃப்?

க்ரிஷ் : எக்சைட்டிங்…

நான் : ம்ம்ம்…

க்ரிஷ் : அப்பறம்… படிப்பு முடிஞ்சது… நெக்ஸ்ட் என்ன பிளான்?

நான் : ஒரு ஐடியாவும் இல்ல…

க்ரிஷ் : என்ன … இப்படியே வீட்டுல சும்மா இருக்க போறியா?

நான் : அப்படிலா இல்ல… யோசிக்கனும்.… ஐடி ஜாப்ல எனக்கு சுத்தமா இன்ட்ரெஸ்ட்டே இல்ல….

க்ரிஷ் : அப்போ உனக்கு எதுல இன்ட்ரெஸ்ட்டோ அத பண்ணு…

நான் : எனக்கு சின்ன வயசுல இருந்தே சொந்தமா ஷாப் வைக்கனும்னு ஆசை. இப்போ அதுவே பெருசாகி ‘பொடிக்’ வைக்கனும்ங்கிற அளவு வளந்துருக்கு…

க்ரிஷ் : சூப்பர்… அப்போ அதுக்கான வேலைய ஸ்டார்ட் பண்ண வேண்டியது தான…

நான் : எங்க அப்பா இதுக்கு கண்டிப்பா சம்மதிக்க மாட்டார்…???

க்ரிஷ் : நீ தான் உங்க அப்பாவ ஒத்துக்க வைக்கனும்…

நான் : அபி ரெஸ்டாரன்ட் ஸ்டார்ட் பண்ணதுக்கே ஃபர்ஸ்ட் அவரு ஒத்துக்கல… இப்போ எனக்கு மட்டும் எப்படி ஒத்துப்பாரு…

க்ரிஷ் : கொஞ்சம் கஷ்டம் தான்… இருந்தாலும் நீ அத ஃபேஸ் பண்ணித் தான் ஆகனும்…

இவ்வாறு எப்படி என் அப்பாவை சமாளிப்பது என்று பிளான் போட்டுவிட்டு தூங்கச் சென்றோம்.
அடுத்த நாள் காலையில் நான் மிகவும் அமைதியற்று இருந்தேன். அங்கும் இங்கும் நடைபயின்று கொண்டிருந்த என்னை பார்த்து என் அம்மா என்னவாயிற்று என்று வினவினார்.


நான் அதைக் கண்டுக்கொள்ளவே இல்லை. என் மனதிற்குள் அப்பாவை எப்படி சம்மத்திக்க வைக்க என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது. எப்படியெல்லாம் பேச வேண்டும் என்னென்ன கேள்விகளுக்கு எப்படி எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் அப்பா நல்ல மனநிலையில் வர வேண்டும் என்று கடவுளிடம் ஒரு கோரிக்கையை வைத்து அவருக்காக காத்திருந்தேன். ஆனால் அவரோ எக்கச்சக்க எரிச்சலில் வந்து என் நம்பிக்கையை தகர்த்தெறிந்தார்.

‘ஆத்தி… இப்போ சூழ்நிலை சரியா இல்ல… அதனால இன்னிக்கு இந்த மேட்டர இப்போ ஓபன் பண்ண வேண்டாம்…’ என்று எனக்குள்ளே கூறிக் கொண்டு அறைக்குச் சென்றேன்.

சிறிது நேரத்தில் அபி வீட்டிற்கு வந்து தந்தையோடு உரையாடிக் கொண்டிருந்தான். அவர்கள் ரெஸ்டாரண்ட்டின் லாப நஷ்ட கணக்குகளைப் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். இன்றோடு அபி அந்த ரெஸ்டாரண்ட்டை துவங்கி ஒரு மாதம் முடிவுற்றது.

நானோ எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தூரத்தில் நின்று பார்த்தால் அவர்கள் ஏதோ பேசுவது மட்டுமே எனக்கு தெரிந்தது.

கொஞ்ச நேரத்தில் என் அப்பா அவன் தோளில் தட்டி ஏதோ சொல்வதும் இவன் சிரிப்போடு அதை ஆமோதிப்பதும் தெரிந்தது. அப்பா சென்றதும் மெல்ல அவன் அருகில் சென்று விசாரித்தேன்.

“ஹே ப்ரோ… என ஆச்சு? ஃபர்ஸ்ட் மந்த் சக்ஸசா…”

அவன் என்னை கையோடு சமையலறைக்கு அழைத்து சென்று எனக்கும் என் அம்மாவிற்கும் அவன் வாங்கி வந்திருந்த ‘சாக்லேட்’டை ஊட்டிக் கொண்டே, “நம்ம ரெஸ்டாரண்ட் சூப்பர் சக்ஸஸ் ஆகிடுச்சு… அப்பா கிட்ட இந்த மந்த்தோட ப்ரோஃபிட் பத்தி சொன்னதும் அவரு என்ன பாராட்டினாரு… இது வரைக்கும் அவரு இப்படி என் கூட பேசுனதே இல்ல தெரியுமா…”

அப்பாவிடம் சொன்ன மாதிரியே அவனுக்கு பிடித்த துறையில் சாதித்த பெருமை அவன் முகத்தில் நிரம்பி வழிந்தது. நானும் இது போலவே எனக்கு பிடித்த துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வலுப்பெற்றது.

‘அப்பாவோட மூட் நல்லா தான் இருக்கு.ஏற்கனவே அபி ஜெய்ச்ச சந்தோசத்துல இருப்பாரு… இப்போவே ‘பொடிக்’ பத்தி பேசிட வேண்டியது தான்…’ என்ற முடிவோடு அவரிடம் சென்றேன்.

ஈர்ப்பான்(ள்)…
 




Diya Ram

புதிய முகம்
Joined
Nov 21, 2019
Messages
8
Reaction score
15
Super sis....definitely Rahul and Krish are same person...in each and every stage for heroin krish is giving proper advice and plays major role so both are same....when you will reveal sis....eagerly waiting ??
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,632
Age
38
Location
Tirunelveli
Potti kadai potruvangala????
Kaana thavaratheergal aduthu ud yil???

Nasriya va pottiya katta sollama iruntha sari than???..

Hero va heroine ta apo apo pesa vainga author ji?

Anand a Neha kita nekka matti vitrungalen ☺☺☺????

Superb sister?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top