• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ்???
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே - 7வது யூடி இதோ...???
படிச்சுட்டு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க...???

1573403574519.jpg

ஈர்ப்பு 7


எவ்வளவு யோசித்தாலும் முகநூலினை செயலிழக்கச் செய்ய முனையவில்லை. அதற்கு காரணம் ‘அவன்’ மட்டுமே. அவன் பெயரைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. நாங்கள் நண்பர்கள் ஆனதே விசித்திரமானது.

ஒரு நாள் மாலை என் தோழிகளுடன் ‘ட்ரூத் ஆர் டேர்’ விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது என்னை உசுப்பேத்தி ‘டேர்’ரை தேர்வு செய்ய வைத்தார்கள்.

அவர்களோ எனக்கான ‘டேர்’ரை ஒன்று கூடி ஆலோசித்துக் கொண்டிருந்தனர். நானோ பீதியோடு அவர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ எனக் காத்திருந்தேன்.

அவர்கள் கொடுத்த ‘டேர்’ இது தான்… முகநூலில் ‘பீப்பில் யூ மே நோ’வில் இருக்கும் முதல் நபருக்கு ‘பிரென்ட் ரெக்வஸ்ட்’ கொடுக்க வேண்டும்.

நானும் ஒரு ஆர்வத்தில் அதனால் வரும் பின்விளைவுகளை ஆராயாமல் ரெக்வஸ்ட் கொடுத்துவிட்டேன். அந்த நபரின் பெயரைக் கூட நான் பார்க்கவில்லை. ரெக்வஸ்ட் கொடுத்தவுடன் முகநூலிலிருந்து வெளியேறிவிட்டேன்.

அன்று விளையாட்டு முடிந்தவுடன்தான் எனக்கு அந்த ‘நபரின்’ ஞாபகமே வந்தது. உடனே முகநூலில் சென்று பார்த்தபோது அந்த நபர் என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்ற அறிவிப்பு இருந்தது. அதைப் பார்த்ததும்அவனின் சுயவிவரத்தை (profile) பார்த்தேன்.

அவன் பெயர் க்ரிஷ். 25 வயது ஆண் என்பதைத் தவிர அவனைப் பற்றிய வேறு தகவல்கள் இல்லை. அவனின் காலவரிசை இடுகையில் (timeline post) சில கவிதைகளும் மேற்கோள்களும் தான் இருந்தது.

‘சரியான தயிர்சாதமா இருப்பான் போல’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். ‘என்னடா இது டிபில கூட அவன் போட்டோ வைக்கல… ஒரு வேல ரொம்ப அழகா இருப்பானோ???…’

ஒரு வாரம் கழித்து நான் என் தோழியோடு ‘மெஸ்ஸெஞ்சரில்’ கடலை போட்டுக்கொண்டிருந்தேன். பின்பு அவளுக்கு வேலை இருப்பதாகக் கூறி சென்றுவிட்டதால் எனக்கு ‘போர்’ அடித்தது. நானோ வேறு யாராவது பேசுவதற்கு சிக்க மாட்டார்களா என்று பார்த்துக்கொண்டிருக்கும்போது க்ரிஷ் ‘ஆக்டிவ்’வாக இருப்பது தெரிந்தது.

‘அவனுக்கு பிங் பண்ணவா வேணாமா… பிங் பண்ணா தப்பா நெனைப்பானோ…’ என்று ஒரு பட்டிமன்றமே எனக்குள் நடந்தது. பின்பு ஒரு மனதாக ‘ஹாய்’ என்று அனுப்பிவைத்தேன். அவனிடமிருந்து எந்த மறுமொழியும் வரவில்லை. 10 நிமிடங்கள் கழிந்தது. என் பொறுமை குறைந்து நான் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டேன்.

அடுத்த நாள் காலை நான் சீக்கிரமாக 8 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன்???. ஞாயிற்றுக் கிழமை என்பதால் எனக்கு அந்த ‘அதிகாலை’ வேளையில் (!!!) என்ன செய்வது என்று தெரியாமல் கட்டிலிலேயே உருண்டுகொண்டிருந்தேன்.

அந்த நிலையிலேயே முகநூலிற்குள் சென்று பார்த்தபோது க்ரிஷிடமிருந்து ‘மெசேஜ்’ வந்திருந்தது. அதிர்ச்சியா ஆச்சரியமா என்று பிரித்தறிய முடியாத மனநிலையில் நான் இருந்தேன். அவனும் அப்போது ‘ஆன்லைனில்’ இருப்பதாய் காட்டியது.
சிறிது யோசனைக்குப் பின் அவனுக்கு மறுபடியும் ‘ஹாய்’ அனுப்பினேன்.


க்ரிஷ் : ஹலோ…

நான் : ஹவ் ஆர் யூ?

க்ரிஷ் : ஃபைன்… யூ?

இப்படி தான் ஆரம்பித்தது எங்கள் உரையாடல். அவனின் தகவல்களை அறிய முற்பட்டபோது அவன் சாதுர்யமாக தவிர்த்துவிட்டான்.கிட்டத்தட்ட அரை மணி நேரமாக அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

நான் : உன் ‘ஹாபி’ என்ன?

க்ரிஷ் : கிரிக்கெட் விளையாடுவேன்… கிடார் வாசிக்க பிடிக்கும்… உனக்கு?

நான் : நான் கிரிக்கெட் பாப்பேன்… கிடார் யாராவது வாசிச்சா கேட்பேன்…???

க்ரிஷ் :???

அதோடு என் கைப்பேசியின் ‘பேட்டரி’ காலியானதால் அவனுக்கு ‘பை’ சொல்லிவிட்டு என் கைப்பேசியை ‘சார்ஜ்’ஜில் போட்டேன்.
அதற்கடுத்து வந்த நாட்களில் அவனோடு பேசினாலும் அடிக்கடி பேசுவதற்கு வாய்ப்பு அமையவில்லை. அவனிடம் ஒரு நல்ல நண்பனைப் பார்த்தேன். அவன் மற்றவர்களை போல என்னிடம் ‘வழிய’வில்லை. அதுவே நான் தொடர்ந்து அவனோடு பேசக் காரணமானது.


நாங்கள் எங்களுக்குள் இருந்த பொதுவான விஷயங்களைப் பற்றி மணிக்கணக்காக உரையாடினோம். நல்ல பாடல்கள், படங்கள், கிரிக்கெட், அரசியல் என்று எங்களுக்கான தலைப்புகள் நிறையவே இருந்தன.
நான் கவலையாக இருக்கும்போது எனக்கு ஆறுதலாக இருப்பான். இப்படியே எங்கள் நட்பு வளர்ந்தது.


ஒரு நாள் பேசும்போது எப்படி அவனுக்கு ‘பிரென்ட் ரெக்வஸ்ட்’ கொடுத்தேன் என்று நான் கூறியதைக் கேட்டவன், எனக்கு ஒரு மணிநேரம் ‘அட்வைஸ்’ செய்தான். தெரியாதவர்கள் யாருக்கும் இது மாதிரி ‘ரெக்வஸ்ட்’ கொடுக்க கூடாது என்று. எனக்கே நான் செய்தது தவறு என்று தோன்றியதால் அவன் சொன்னதை ஏற்றுக்கொண்டேன். நான் சத்தியம் செய்யாத குறையாக அவனிடம் நான் யாருக்கும் ‘ரெக்வஸ்ட்’ கொடுக்க மாட்டேன் என்று கூறிய பிறகு தான் ‘அட்வைஸ்’ செய்வதை நிறுத்தினான்.

‘பேச டாபிக் கிடைக்காம இதை ஸ்டார்ட் பண்ணேன்ல என்ன சொல்லணும். ஒரு ‘பிரென்ட் ரெக்வஸ்ட்’ கொடுத்ததுக்கா ஒரு மணி நேரம் லெக்சார் கொடுக்குற.’ என்று தலையில் அடித்துக்கொண்டு வேறு பேச ஆரம்பித்தேன்.

ஒரு நாள் அவனிடம் எதற்காக டிபியில் அவனின் போட்டோ வைக்கவில்லை எனக் கேட்டேன். அவனிற்கு ஆர்வம் இல்லை என்று கூறிவிட்டான். எனக்கு தெரிந்து எல்லா ஆண்களும் அவர்களின் ‘நல்ல’ புகைப்படத்தை டிபியாக வைத்திருப்பர். அதற்காகவே DSLRஇல் புகைப்படம் எடுத்துக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். அதனால் இவன் அதிலிருந்து வித்தியாசமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நான் : உனக்கு ஏதாவது ’லவ் ஃபெயிலியர்’ரா?

அவனிற்கு இது அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனெனில் இவ்வளவு நாட்கள் நாங்கள் பேசி இருந்தாலும் காதலைப் பற்றி இதுவரையிலும் பேசியதில்லை.

க்ரிஷ் : இல்ல… ஏன் கேட்ட?

நான் : பொதுவா பசங்க எல்லாரும் போட்டோ அப்லோட் பண்ணுவாங்க…

க்ரிஷ் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

நான் : மே பி நீ ‘லவ் ஃபெயிலியர்’ரா இருந்தா வெக்ஸாகி… டிபி ரிமூவ் பண்ணி…

‘அப்பாடி ஒரு வழியா அவன் போட்டோவ இன்டைரக்ட்டா கேட்டுட்டேன். அப்படியே அவன் ‘சிங்கிள்’ளானும் கேட்டுட்டேன்???’ நானே என்னை பாராட்டிக்கொண்டு அவனின் மறுமொழிக்காக காத்திருந்தேன்.

க்ரிஷ் : ??? உனக்கு மட்டும் எப்படி இந்த மாதிரிலா தோணுது…. எனக்கு லவ் மேல இன்ட்ரேஸ்ட் இல்ல… அண்ட் நான் ஒன்னும் என் மூஞ்சிய மறைக்குற அளவுக்கு கோழை இல்ல….

ஹான்… சிக்கிட்டியா…’

நான் : அப்போ உன் பிக் அனுப்பு…???

அவன் எனக்கு ஒரு போட்டோ அனுப்பினான். ஆனால் அதில் ஒரு சிறுவன் கடற்கரையில் பலூன் வைத்துக்கொண்டிருப்பது போல இருந்தது.

நான் : யாரிது?

க்ரிஷ் : நீ தான என் பிக் கேட்ட. அது நான் தான்…. 8 வயசு இருக்கும்போது எடுத்தது….???

நான் : யூ சீட்…???

க்ரிஷ் : ???

இன்று… நிறைய நாட்கள் கழித்து முகநூலிற்குள் நுழைந்தேன். பலப்பல அறிவிப்புகளும் செய்திகளும் இருந்தன. அதில் க்ரிஷுடைய செய்தியும் அடக்கம். எல்லாருக்கும் நான் ‘பிஸி’யாக இருந்ததால் அவர்களின் ‘மெசேஜ்’ஜிற்கு ‘ரிப்ளை’ செய்ய இயலவில்லை என்று விளக்கம் கூறினேன். க்ரிஷிற்கும் அவ்வாறே அனுப்பினேன். அவன் ஆன்லைனில் இருந்ததால் உடனே பதிலளித்தான்.


க்ரிஷ் : நீ ‘பிஸி’யா இருந்தனு நான் நம்பனுமா…

நான் : அது… ஒன்னும் இல்ல…

க்ரிஷ் : அப்போ ஏதோ பிரோப்ளேம் இருக்கு… உனக்கு என் கிட்ட சொல்ல விருப்பமில்லனா பரவால்ல...

அதற்க்கு மேல் அவனிடம் என்னால் மறைக்க முடியவில்லை. ரித்தீஷைப் பற்றி அனைத்தையும் கூறி விட்டேன். இனிமேல் ரித்தீஷ் ஏதும் தொல்லை கொடுத்தால் தன்னிடம் கூறுமாறு சொன்னான். அதன்பின்பு வழக்கம் போல பேசிக் கொண்டிருந்தோம்.

********

அது வழக்கமான காலைப் பொழுது. நான் கல்லூரிப் பேருந்தில் அன்றைய தினம் வீட்டில் நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தேன். என் அப்பா ஷீலாவிற்கு ஒரு வரன் வந்திருப்பதாகக் கூறினார்.
ஷீலாவிடம் மாப்பிள்ளையின் புகைப்படத்தைக் காட்டினார். அவளின் முகத்தை ஆராய்ந்த போதோ அது நிர்மலமாக இருந்தது. அவளின் உணர்ச்சியற்ற முகம் எனக்கு பயத்தைக் கொடுத்தது. ஒரு நொடி அபியின் முகம் என் கண்முன் வந்தது. அவனுக்காக பரிதாபப்பட்டேன். (Mr.Perfect காகவும் தான்…)


கல்லூரியில் இடைவேளையின்போது கேண்டீனிற்கு நானும் சாண்டியும் சென்று கொண்டிருந்தோம். அப்போது ரித்தீஷுடன் நேஹாவை பார்த்தேன். அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தனர்.

‘ச்சே இந்த நேஹாட்ட அந்த பொறுக்கிய பத்தி சொல்லிருக்கனும். அன்னிக்கு சொல்லாம விட்டது என் தப்பு தான்’ என்று தலையிலடித்துக்கொண்டேன்.

மதியம் நேஹாவிடம் சென்று ரித்தீஷைப் பற்றி கூறினேன். அவன் அவளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு புரியவைக்க முயன்றேன். அவளோ அதை கண்டுகொள்ளவே இல்லை.
அவளிற்கும் ரித்தீஷிற்கும் இடையே உள்ள உறவைப் பற்றி வினவியபோது முதலில் காதலிப்பதை மறுத்தாலும் பிறகு ஒத்துக்கொண்டாள். நான் அவனைப் பற்றி எவ்வளவோ கூற முயன்றாலும் அவள் அதை கேட்கக்கூட தயாராக இல்லை.
ஒன்றும் செய்ய இயலாது நான் திரும்பினேன்.


ஷீலாவும் நேஹாவும் என் மனதை போட்டு குழப்பிக் கொண்டிருந்தனர். ஒரு பக்கம் நேஹாவோ நான் சொல்ல வருவதை கேட்கவில்லை என்றால் மறுபக்கம் ஷீலாவோ என்ன நினைக்கிறாள் என்றே கணிக்க முடியவில்லை. அவர்களை நினைத்து நினைத்து தலைவலி வந்தது தான் மிச்சம்.

ஈர்ப்பான்(ள்)…
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Marubadiyum kidaar aaa,
Raghul Krishnan nu mattum sollirathingoo sister, hero name?????
Nasriyaa Mattum than pola intha epi la?..
Neha - Ragul Preet
Sheelaaaa- yaaro?
Super n interesting sister??????
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
Marubadiyum kidaar aaa,
Raghul Krishnan nu mattum sollirathingoo sister, hero name?????
Nasriyaa Mattum than pola intha epi la?..
Neha - Ragul Preet
Sheelaaaa- yaaro?
Super n interesting sister??????
??? Oru vela appadiyum irukumo @ Rahul Krishnan??? (enakke ipdi oru idea thonaliye???) Sheela- Nirosha (serial actress)...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top