• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னாலே உனதானேன் 30

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anu Chandran

மண்டலாதிபதி
Joined
Jun 1, 2019
Messages
226
Reaction score
697
Location
Srilanka
மாலை வீடு திரும்பிய வினய் வீட்டின் காலிங் பெல்லினை அடித்துவிட்டு கதவு திறக்கும் வரை வாசலில் நின்றிருந்தான்.
கதவு திறந்ததும் எதிரே ரேஷ்மியை கண்டவன் அவளை கவனியாதது போல் உள்ளே செல்ல முயல ரேஷ்மி தன் கையினால் வழிமறித்தாள்.
“ஷிமி ரொம்ப டயர்டா இருக்கேன்மா....” என்று கூற மறித்திருந்த கையை எடுத்து அவன் செல்ல வழிவிட்டாள்.
வீட்டினுள்ளே நுழைந்தவன் அறைக்கு சென்று உடைகளை கூட மாற்றாது கட்டிலில் விழுந்தான்.
கட்டிலில் விழுந்தவனை உறக்கம் தழுவ அந்நிலையிலையே கண்ணயர்ந்தான் வினய்.
வினய் வந்ததும் அவனுக்கு காபி கலந்து வந்த ரேஷ்மி அவனை ஹாலில் தேட அவனோ அங்கில்லை...
தங்கள் அறைக்கு வந்தவள் கட்டிலில் உடையை கூட மாற்றாது அயர்ந்து உறங்குபவனை கண்டாள்.
கழுத்திலிருந்த டையை சற்று தளர்த்தியிருந்தவன் கழுத்து பட்டனையும் அதை அடுத்திருந்த பட்டனையும் திறந்துவிட்டிருந்தான். எப்போதும் இன் செய்திருக்கும் சட்டை வெளியே நீண்டிருக்க நீள் கைசட்டையை பாதியாய் மடித்து உயர்த்திவிட்டிருந்தான்.
கட்டிலில் மல்லாக்காய் படுத்திருந்தவனின் கால்கள் இரண்டும் வெளிப்புறமாக தொங்கிக்கொண்டிருந்தது....
அவனது அயற்சி அவனது தோற்றத்திலேயே புலப்பட அங்கிருந்த மேசையின் மீதிருந்த ஏசி டிமோர்ட்டினை எடுத்த ரேஷ்மி அதன் உதவியால் ஏசியை அதிகரித்தவள் தொங்கிக்கொண்டிருந்த அவனது கால்களுக்கு ஏதுவாக டீபாயை வைத்து அதன் மேல் அவனது கால்களை தூக்கி வைத்துவிட்டு அவன் தூக்கி எறிந்திருந்த அவனது லாப்டப் பையினை அதன் இருப்பிடத்தில் பத்திரப்படுத்திவிட்டு ஓசையெழுப்பாதவாறு கதவை அடைத்துவிட்டு வெளியேறினாள் ரேஷ்மி.
ஒன்றரை மணிநேர உறக்கத்தின் பின் துயில் கலைந்து எழுந்த வினய் நேரத்தை பார்க்க அது இரவு எட்டு முப்பது என்று காட்டியது.
கட்டிலில் இருந்து எழுந்தவன் குளியலறைக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வர அவனது மொபைல் ஒலித்தது..
மொபைலை எடுத்து பார்க்க அதில் அபி என்று தோன்ற அதை அட்டன்ட் செய்தான் வினய்.
“கவின் எங்க இருக்கீங்க?? வந்துட்டீங்களா?? இல்லை வேறு எங்கயாவது போயிட்டீங்களா??” என்று அபி கேட்க
“அபி நான் வீட்டுல தான் இருக்கேன்...”
“அப்போ நீங்க வரலையா??”
“எங்கடா??”
“ரேஷ்மி சொல்லலையா கவின்??”
“இல்லைடா.. நான் வந்ததும் டயர்டா இருக்குனு தூங்கிட்டேன் டா..இப்போ தான் எழும்பினேன்..”
“ஓ.. நான் ரியா அனு அம்மாவை கூட்டிட்டு ஷாப்பிங் வந்துட்டேன்டா...ரேஷ்மியை ரியா கூப்பிட்டா..அவ நீ வந்ததும் உன்னை கூப்பிட்டுகிட்டு வர்றேன்னு சொன்னா...அதான் நீங்க எங்க இருக்கீங்கனு கேட்கத்தான் கால் பண்ணேன்...” என்று அபி கூற வினயோ
“சரி..நீங்க பர்ச்சஸ் முடிச்சிட்டீங்களா???”
“இல்லை கவின்.. இன்னும் கொஞ்சம் இருக்கு...”
“சரி...நீங்க எங்களுக்காக பார்க்க வேண்டாம்... பர்ச்சஸ்ஸை முடிச்சிட்டா வீட்டுக்கு வந்திடுங்க...நாங்க இனி தான் கிளம்பி வரணும்...”
“சரிடா...நான் பார்த்துக்கிறேன்... ”என்று அபி அழைப்பை துண்டிக்க வினய் ரேஷ்மியை தேடிச்சென்றான்.
ரேஷ்மியோ இரவு உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தாள்.
ரேஷ்மியின் பின்புறம் வந்து நின்றவன் தன் கோபம் மறந்து
“ஷிமி அண்ணா கால் பண்ணான்... ஏன் என்கிட்ட சொல்லலை???”என்று கேட்க ரேஷ்மியோ தன் வேலையை தொடர்ந்தபடி
“நீங்க ரொம்ப டயர்டா இருந்தீங்க..அதான் சொல்லலை.... கொஞ்சம் இருங்க காபி போட்டு தாரேன்....” என்று அவனுக்கு காபி கலக்க ஆரம்பிக்க
“அதை நான் கலந்துக்கிறேன்... இப்போ நீ போய் ரெடியாகு... நாம ஷாப்பிங் போகலாம்...” என்று வினய் அவளருகில் வர
“இல்லை வினய்... நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க..நாம நாளைக்கு போகலாம்..நீங்க ஹாலில் இருங்க... நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று தன் வேலையை தொடர
“டயர்ட் எல்லாம் ஒன்றும் இல்லை...தூங்கி எழுந்ததால இப்போ ரிலாக்ஸ்ஸா பீல் பண்ணுறேன்... நீ போய் ரெடியாகு...” என்று வினயோ ரேஷ்மியை கிளப்ப முயல அவளோ மறுக்கத்தொடங்கினாள்...
“இல்லை வினய் இப்போவே லேட்டாகிவிட்டது... உங்களுக்கு தான் கஷ்டம்.... நாம நாளைக்கு போகலாம்....” என்றதும் தான் தாமதம்
“ஆமா என்னோட கஷ்ட இஷ்டத்தை பார்த்து தானே எல்லாம் செய்ற..... உனக்கு என்னோட வர பிடிக்கலைனா நேரடியா சொல்ல வேண்டியதுதானே... எதுக்கு ஏதேதோ சாக்கு சொல்லிட்டு இருக்க???” என்று வினய் குரலை உயர்த்த அதில் பதறிய ரேஷ்மி
“ஐயோ வினய் நா அப்படி சொல்லலை வினய்... உங்களுக்கு டயர்டா இருக்குமேனு தான்....”
“அப்போ நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்?? உனக்கு என்னை அவொய்ட் பண்ணனும்... அதுக்கு இது ஒரு காரணம் அவ்வளவு தான்...” என்று மீண்டும் வினய் தொடங்க ரேஷ்மியோ
“இப்போ என்ன நாம ஷாப்பிங் போகனும்...அவ்வளவு தானே....இந்தாங்க இந்த காபியை பிடிங்க... நான் ரெடியாகுறேன்....” என்று விட்டு ரேஷ்மி சமையலறையில் இருந்து வெளியே வர வினயோ அவள் கொடுத்த காபியை சுவைத்தவாறு இதழில் புன்னகை உதித்தவாறு குரலில் கடுமையை ஏற்றி
“அவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் என்னோடு ஷாப்பிங் வரவேண்டிய கட்டாயம் இல்லை..” என்று இதழ்களால் வார்த்தைகளை உதித்தவன் மனதினுள்
“ஷாப்பிங் கூப்பிட்டால் ரொம்ப தான் பண்ணுறா... வாடா ஷாப்பிங் போகலாம்னு அவளே கூப்பிட்டிருக்கனும்... ஆனா கூப்பிடலை.. சரி நம்மளே கேட்டு அழைச்சிட்டு போகலாம்னா கஷ்டமா இருக்கும் நஷ்டமா இருக்கும்னு கத சொல்லிட்டு இருக்கா..... இவளை இப்படியே விட்டா இடைவெளியை இன்னும் பெருசாக்கிருவா.... நாம தான் இவளை ட்ரெயின் பண்ணலாம்... வினய் பொண்டாட்டி இப்படி நல்ல பொண்டாட்டியா இருப்பது சரியில்லையே...” என்றவன் காபியை குடித்து முடித்துவிட்டு அறைக்கு செல்ல அங்கு ரேஷ்மி வெள்ளையும் நீலமும் கலந்த லாங் ஸ்கெர்ட்டும் இளம்பச்சை நிற குர்த்தியில் தயாராகிக் கொண்டிருந்தாள். வினயோ அவளை பார்த்தவாறு அருகில் வந்து அவள் அமர்ந்திருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன் நின்று கண்சிமிட்டாமல் பார்த்திருந்தான்.
அந்த கண்கள் காதலால் கனிந்திருக்க அந்த காதல் பாஷையை புரிந்துகொண்டவள் தலை குனிந்து வெட்கத்தால் நாணிச்சிவந்தாள்.
அந்த வெட்கத்தை மிகைப்படுத்த எண்ணிய அந்த காதலன் அவளுடனான இடைவெளியை குறைத்து அவள் புறம் குனிய அதனால் வெட்கமுண்டு பேதையவள் கண்களை இறுகமூடிக்கொண்டு அவனது நெருக்கத்தையும் அந்த நெருக்கம் தரும் பரிசையும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருத்திருந்தாள்.
கணத்திற்கு கணம் மூச்சுக்காற்றின் வெப்பம் அதிகரிக்க கையில் வைத்திருந்த சீப்பினை இறுக பற்றிக்கொண்டு ஒருவித இன்ப நடுக்கத்துடன் அந்த கணத்தை அனுபவிக்கத்தொடங்கினாள் ரேஷ்மி.
ஆனால் நெருங்கிய மூச்சுக்காற்றின் வெப்பமோ நெருங்கிய மறுகணமே விலகியது.. அந்த விலகல் நடுக்கத்தை குறைத்த போதும் பெண் மனதை காயப்படுத்த தவறவில்லை...
கண்விழித்தவள் கண்ணாடியை பார்க்க அவளது ஏமாற்றம் தேவையற்றது என்ற வகையில் அவளது கன்னத்துக்கு வெகு அருகிலேயே பட்டும் படாமலும் முகத்தை வைத்திருந்தான் வினய்.
அவள் கண்விழித்ததும் வினயின் உதடுகள் கள்ளச்சிரிப்பை தத்தெடுத்திருக்க
“ஓய் பொண்டாட்டி.... நீ ரொம்ப ஸ்பீட்டுமா.. மூச்சுக்காற்றை வைத்து நான் இருக்கேனா இல்லையானு கண்டுபிடிக்கிறியே..... நீ லவ் சப்ஜெக்ட்டில் ரொம்ப வீக்குனு நினைத்தேன்.... ஆனா நீ வேற லெவல் மா..” என்று அவள் காதில் உரைத்தவன் அவளை பின்னாலிருந்து அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.
முத்தமிட்டதோடு நிறுத்தாமல் அவளை இருக்கையிலிருந்து எழுப்பியவன் அவள் அமர்ந்திருந்த இருக்கையை காலால் அகற்றியவன் இருவருக்கும் இடையிலான இடைவெளியை இன்னும் குறைத்தான்.
அவள் கழுத்திடைவெளியில் தன் முகம் புதைத்தவன் இன்னும் அவளை இறுக்கியணைக்க பேதையின் கைகளோ தன்னிச்சையாக மணாளனின் தலையை கழுத்திடைவெளியில் இறுக்கியது....
அவளது அந்த செயல் பெண்ணவளின் சம்மதத்தை தெரிவிக்க மன்னவனும் தன் முத்த ஊர்வலத்தை தொடங்கினான்.
மோகம் தந்த மயக்கத்தில் கோபம்தாபம், மனசஞ்சலம், தயக்கம் என்று அனைத்தும் மறக்கப்பட காதலால் சிக்குண்டு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாத இரு உயிர்களும் சங்கமிக்க சங்கல்பம் எடுக்கத்தொடங்கியது.
அந்த சங்கமத்தில் காதல் இருந்த போதிலும் அதை அந்த இரு உயிர்களும் உணர்ந்ததா இல்லையா என்று அந்த இரு ஜீவனுக்கும் தெரியவில்லை..
ஆனால் தங்கள் முதல் சங்கமத்தில் கூடி கழித்தது அந்த ஜோடி புறாக்கள்.
இடம், பொருள், ஏவல் மறந்து தொடர்ந்த ******* முடிவடைந்த நேரம் ஒலித்தது வினயின் மொபைல்.
கட்டிலில் படுத்த நிலையில் ஒருகையில் மனையாளை அணைத்தவாறு மறுகையால் மொபைலை எடுத்து காதிற்கு கொடுத்தான் வினய்
“கவின் என்னடா பண்ணுற??? எவ்வளவு நேரமா கதவை தட்டுறது??? வந்து கதவை திற...”என்று வீட்டிற்கு வெளியே இருந்து அபி அழைக்க தான் வருவதாக கூறி அழைப்பை துண்டித்தவன் கூடலில் விளைவால் அயர்ந்திருந்த மனையாளை விலக்கி படுக்க வைத்தவன் மேலாடையை அணிந்து கொண்டு கதவை திறக்க சென்றான்.
கதவை திறந்ததும்
“டேய் எவ்வளவு நேரம்டா...” என்று தொடங்கிய அபி பாதியிலேயே தன் பேச்சை நிறுத்திவிட்டு வினயை உற்று நோக்க வினயோ என்னவென்று புரியாது முழித்திருந்தான்.
வினயை பார்த்த அபி ரியாவிடம் கண்ணை காட்ட இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு கள்ளச்சிரிப்பொன்றை பரிமாறிக்கொண்டனர். இவர்களது சிரிப்பிற்கு அர்த்தம் புரியாத வினயோ அவர்களையே பார்த்தபடியிருக்க அபியோ வினயை அங்கிருந்து இழுத்து செல்ல ரியாவும் வீரலட்சுமியும் தத்தமது அறைக்கு சென்றனர்.
வினயை ஓரமாக இழுத்துவந்த அபியிடம் “டேய் எதுக்குடா என்னை பார்த்து நீயும் அண்ணியும் சிரிச்சீங்க??? நான் என்ன அவ்வளவு காமடியாவா இருக்கேன்..”
“டேய் நாங்களாவது சிரிக்க தான் செய்தோம்... அனு முழிச்சிருந்தானா உன் மானத்தையே வாங்கியிருப்பா.. போ போய் கண்ணாடியை பாரு...”என்று வினயை அவனது அறைவாசலில் விட்டுவிட்டு அபி தன்னறைக்கு சென்றான்.
தன்னறைக்கு வந்த வினய் கண்ணாடியில் முகத்தை பார்க்க அதில் அவனது கன்னம் இரண்டிலும் சிவப்புநிற உதட்டு சாயமும் அவனது முன்னுச்சியில் சிவப்பு நிற பொட்டும் அங்காங்கே இருந்தது..
இதை பார்த்தவனுக்கு அசடு வழிந்தது...
அந்த பாவனையுடன் மனையாளை பார்க்க அவள் கண்ணயர்ந்த நிலையிலேயே இருந்தாள்.
கூடல் தந்த அயற்சியுடன், இவ்வளவு நாட்கள் மனதில் அழுத்திய பாரமும் நீங்க நிம்மதியில் கண்ணயர்ந்திருந்தாள் பெண்ணவள். அவளை கண்ணிமைக்காது பார்த்திருந்த கணாளனுக்கு அவளது இந்த மாற்றம் அவன் எதிர்பாராதது... அவளிடம் மாற்றம் உண்டாகியிருப்பதை அறிந்த போதிலும் அவளின் இந்த சம்மதத்தை இவ்வளவு விரைவாக பெறுவான் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.... அவளின் விலகலுக்கான காரணத்தை அறியாமல் அவர்களது வாழ்வை தொடங்கப்போவதில்லை என்று தீர்மானித்திருந்தவன் இன்று ஏற்பட்ட சலனத்தால் தன் முடிவில் இருந்து பின்வாங்கியதை அவனது மனம் கண்டித்தது... மனைவி என்ற போதிலும் அவளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளது முழு சம்மதத்துடன் தம் உறவை ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவன் மோகத்தின் பிடியில் சிக்கியிருந்த வேளையில் நடந்த கூடலை அவனது மனம் ஏற்கவில்லை... முரண்பட்ட மனதால் இவ்வளவு நேரம் இன்பக்கடலில் மூழ்கியிருந்தவனின் மனம் குற்றவுணர்வால் தவிக்கத்தொடங்கியது...
அந்த குற்றவுணர்வு அவர்களுக்கு இடையிலான உணர்வு பாலத்திற்கு பங்கமுண்டாக்கும் என்று உணராதவன் அதன் பிடியில் சிக்கித்தவித்தான்.
விளக்கை அணைத்துவிட்டு படுத்தவனுக்கு உறக்கம் தழுவவில்லை... அருகில் படுத்திருந்த மனையாளோ நிம்மதியான உறக்கத்தின் பிடியில் இருக்க கணாளனோ தூக்கம் தொலைத்து குற்றவுணர்ச்சி என்ற சாத்தானின் பிடியில் சிக்கத்தவித்துக்கொண்டு இரவை கழித்தான்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனு சந்திரன் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top