• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னால உலகம் அழகாச்சே 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
நான் வந்துட்டேன் amulus... போன எபிக்கு லைக் அண்ட் கமென்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப பெரிய தேங்க்ஸ்??.. இந்த எபியும் படிச்சிட்டு மறக்காம உங்களோட கருத்துக்களை சொல்லுங்க. கருத்துக்களை எதிர் நோக்கி நான் ??...

அன்பே பேரன்பே, பேரன்பே
ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரை மீறும்இவளின் ஆசை
நிறைவேறுப் பார்க்கிறேன்.
நதி சேரும் கடலின் மீது
மழை நீராய் சேருவேன்.


அந்த காருக்குள் சித் ஸ்ரீராம்,ஸ்ரேயா கோசல் குரல் மட்டுமே ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. நிச்சயம் இரண்டு குரலுக்கும் அனைவரையும் கட்டிப் போடும் காந்தசக்தி உள்ளது.

அதனால்தான் அனுவும் சிறு குழந்தை போல் தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக் கொண்டே வந்தாள்.

அவளின் ரசனைக்கு இடையே வந்தது சுந்தரத்தின் குரலும், GV இன்ஜினியரிங் காலேஜ்ம்.

“பாப்பா காலேஜ் வந்துடுச்சு…”

“ஓ…காலேஜ் வந்துடுச்சா நான் அப்படியே அந்த பாட்டுல மூழ்கிட்டேன்பா” “ஓகே பாய் ஈவினிங் பாக்கலாம்பா”

“சரிடா…அங்க போய் ஒழுங்கா படி உங்க அம்மா சொல்ற மாதிரி விளையாடிக்கிட்டு இருக்காம்ம”

“அப்பா இருந்தாலும் அனுவுக்கு இவ்ளோ பெரிய இன்சல்ட் வேண்டாம்பா… ஒரு டாப்பர்ர பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே..” சிவாஜி கணேசன் வாய்ஸ்ல மிமிக்ரி பண்ணி சிரிக்க வச்சே டாட்டா சொன்னா சுந்தரத்துக்கு…

GV இன்ஜினியரிங் காலேஜ்… சுமார் 2000 மாணவர்களை தன்னகத்தே கொண்ட தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்று.

கல்வி ஒரு வியாபாரமா போன நிலையிலும் இன்னி வரைக்கும் பல ஸ்டூடண்ட்ஸ்க்கு பாதி பணம் வாங்கிட்டு எஜுகேட் பண்ற ஒரு கல்லூரி. அதோட முழுப் பெருமையும் GV காலேஜ் ஓட நிறுவனருக்கு மட்டும்தான் சேரும்.

எந்தப் பக்கம் திரும்பினாலும் மரம் செடி கொடிகள்.. இதெல்லாம் மத்தவங்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தாலும்… ஆனா அங்க இருக்க ஸ்டூடண்ட்ஸ்க்கு கேர்ள்ஸ்கு பாய்ஸ் குளிர்ச்சியாவும், பாய்ஸ்க்கு கேர்ள்ஸ் குளிர்ச்சியாவும் தான் கண்ணுக்கு தெரிவாங்க??..(உண்மையை யாரும் வெளியில சொல்ல மாட்டாங்க.. நீயேன் சொல்ற…(என் மைன்ட் வாய்ஸ்??))


அப்படி ஒரு மரத்துக்கு அடில மத்தவங்கள கலாய்ச்சிட்டு இருந்த 7 பேர் கொண்ட குழுவில் அனுவும் போயி ஐக்கியமாகிட்டா.

ஹேய் அமுல் பேபிஸ்… இன்னிக்கு ஏதோ புது சார் வரதா சொன்னாங்களே.. அவரப் பத்தி ஏதாவது தெரிஞ்சுசா டி..-அனு

இல்லடி அனு.. ஒரு விவரமும் தெரியல அந்த மனுஷன் பேரு கூட தெரியலடி-அபி

பேரு தெரிஞ்சா மட்டும் நீ கிளாஸ கவனிக்கவா போற.. ஆனா இவ்வளவு ஃபீலிங்ஸ் எல்லாம் ஆகாது டி அடங்கு-கலை

“நான் கிளாஸ கவனிக்கிறேன் இல்ல குப்புறப்படுத்து தூங்குறேன்.உனக்கு என்னடி கவலை”-அபி

“அதைத்தான் நானும் சொன்னேன் நீ என்ன கிளாசை கவனிக்கவா போறேன்னு..”-கலை

அடச்சீ…உங்க கேவலமான சண்டைய நிப்பாட்டுங்க டி கிளாசுக்கு டைமாயிடுச்சு போலாம் வாங்க…-அனு





“தினகரன் சார் குட் மார்னிங்!”

அடடே…“வாங்க தம்பி இன்னும் உங்களை காணமேனு தான் நினைச்சிட்டு இருந்தேன்னு சொல்லி பிரின்சிபால் சீட்டில்லிருந்து எந்திரிச்சு டோர் வரைக்கும் போய் கைகொடுத்தாரு நம்ம அருளுக்கு…”


தினா சார், “நீங்க ஒரு ஆளு போதும் நான் தான் இந்த காலேஜ் ஓட ஓனர்னு சொல்றதுக்கு”

“ஏன் தம்பி! இப்படி சொல்றீங்க நான் போய் வெளியில யார்கிட்டயாவது சொல்வேனா”

“நீங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்க சார்… ஆனா உங்க நடவடிக்கை காமிச்சு கொடுத்துடும்..”

“இப்ப கூட வாசல் வரைக்கும் வந்து என்ன ரிசீவ் பண்ணத யாராவது பார்த்தா கண்டிப்பா டவுட் வந்திருக்கும்னு சொல்லி தன்னோட மயக்கும் புன்னகையுடன் தினா சார்ர பார்த்து சிரிச்சான்”.

“உங்க உதடு மட்டும் தான் சிரிக்குது தம்பி! ஆனா அந்த கண்ணல்ல லைட்டான கோபத்தை பார்க்கிறேன்.. உங்களால மட்டும் தான் கோபத்தைக் கூட சிரிச்சிட்டே காமிக்க முடியும்.”

“இது ரொம்ப பெரிய ஜஸ்ஸா இருக்கு சார்.. உங்களுக்கு இன்கிரிமெண்ட் வேணும்னா சொல்லுங்க.. சேர்த்து குடுத்துடறேன் ஆனா இப்படி எல்லாம் ஓட்டாதிங்க.”

“தம்பி நான் ஓட்ட எல்லாம் இல்ல! உண்மையைதான் சொன்னேன்”

“போதும் சார்.. விட்டுடுங்க!” “எனக்கு கிளாசுக்கு டைம் ஆச்சு…யாராவது கேட்டா நம்ம ராஜா சாருக்கு பதிலா கெஸ்ட் லேக்சரரா வந்திருக்கேன்னு சொல்லிடுங்க”

“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்! இனிமே காலேஜ்ல நான் இருக்கிற வரைக்கும் தம்பினு கூப்பிடாதிங்க… எல்லாரு மாதிரி சார்னே கூப்பிடுங்க..”

“சரிங்க தம்பி!”

“சார் இப்ப என்ன சொன்னேன்!”

“ஆஹா அத மறந்துட்டேன்! இனிமே சார்னே கூப்பிடுறேன். உங்களுக்கு கிளாசுக்கு டைம் ஆயிடுச்சு… நீங்க கிளம்புங்க சார்.அப்படியே இங்க இருக்க அட்மின்ஸ் நோட்டுல சைன் பண்ணிட்டு போயிடுங்க…”




B.E 4th year நேம் போர்ட் இருக்கிற கிளாசுக்குள்ள அருள் நுழைறதுக்கும், அனு பாக்குறதுக்கும் சரியா இருந்துச்சு…

நான்கு கண்களும் ஒரு நிமிடம் பார்த்துக்கொள்ளும் இடைவெளியில் உதடுகள் இரண்டும் ஒரு சேர வார்த்தைகளை உதிர்த்தது..
“இவனா”
“இவளா”

எபில வர பாட்டு...நல்லா இருக்கும்...கேட்டு பாருங்க..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நாச்சு அன்னம் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top