உன்னால உலகம் அழகாச்சே 3

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#1
நான் வந்துட்டேன் லட்டுஸ்🏃🏃... போன எபிக்கு லைக் அண்ட் கமென்ட் பண்ண எல்லாருக்கும் பெரிய சாக்கி (தேங்க்ஸ்)...
இந்த எபியும் படிச்சிட்டு மறக்காம உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க...
கருத்துக்களை எதிர்நோக்கி நான்😉😉...
also thanks for silent readers...


இவளா” என்று நினைத்த மறுநொடி “குட் மார்னிங் சார்” என்ற கோரஸ் குரல்கள் வந்ததில் அருள் தன் கவனத்தை கிளாஸ் எடுப்பதில் மாற்றிவிட்டான்.


ஒரு நிமிடத்தில் உலகையே சுற்றி வரும் திறமை கொண்ட மனம் அனுவையும் அன்று அருளை சந்தித்த நாட்களுக்கு அழைத்து சென்றது.


மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்டால் உனையே தருவாய்…சித்ராமா குரலில் பாடிய செல் என்னையும் கொஞ்சம் கவனி என்றது அனுவை.


டிஸ்ப்ளேயில் அபி காலிங் என்று வருவதைப் பார்த்து “இந்த லூசு எதுக்கு இப்ப கால் பண்ணுது… இவளுங்க ஏதாவது பிளான் சொல்லி நான் மறந்துடேன்னா தெரியலையே…” இப்படி விடாம கால் பண்ணுதுங்கனு நெனச்சுட்டே போன் அட்டன்ட் பண்ணா.

அட்டன் பண்ண அடுத்த நிமிஷம் “எருமமாடே, கிளம்பிட்டியா இல்லையா! நாங்க எல்லாம் கஃபேக்கு வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு… இன்னும் என்ன தாண்டி பண்ணுவ நீ!” அப்படின்னு மூச்சு விடாம அபி கேட்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் நம்ம அனுக்கு இன்னிக்கு டிங்டாங் கஃபேல மீட் பண்ணலாம்னு சொன்னதே ஞாபகத்துக்கு வந்துச்சு.

ஆத்தி… மறந்துட்டேன்னு சொன்னா கேவலமா கழுவி ஊத்துவாளுங்களே.. சரி சமாளிப்போம்… “இதோ ஸ்கூட்டி எடுத்துட்டுயிருக்கேன்டி ஒரு பத்து நிமிஷத்துல வந்துருவேன்.”


“அம்மா!இந்த பிங்க் கலர் சால் எங்க வச்ச கப்போர்டில் காணலையே…”


“முந்தாநாள் தானேடி அத துவைக்க போட்ட! தொவச்சி அந்த சேர்மேல கெடக்கு பாரு…”

“இத முன்னாடியே சொல்றதுக்கு என்ன… எவ்வளவு நேரமா நான் தேடிட்டு இருக்குகேன். ஏன் அவசரம் புரியாம இப்டி பண்ணிட்டு இருக்கீங்கமா..”

“நான் என்னடி பண்ணேன்… நீ தான் வீட்டில் ஒரு வேலையும் பாக்குறது இல்ல.. அந்த டிரஸ் எப்போ துவைக்க போட்டோம்னு கூட உனக்கு ஞாபகமில்லை… ஏழு கழுதை வயசாச்சு இன்னும் எல்லாத்துக்கும் அம்மாவயே கேட்டுக்கிட்டு இருக்குற…”

“அம்மா! தயவு செஞ்சு நான் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் உன் கச்சேரிய ஆரம்பிச்சிக்கோ” இப்ப நான் கிளம்புறேன்.

“எங்கடி போற அதையாவது சொல்லிட்டு போ..”

“அம்மா பிரண்ட்ஸ் மீட்டிங் டிங்டாங் கஃபேல..”

“அது சரிடி குளிச்சுட்டாவது போ!”

“நீ ஒரு ஆளு போதுமா என் மானத்த வாங்க! நான் குளிக்கலைங்கிறது உனக்கு மட்டும் தானே தெரியும். வந்து குளிக்கிறேன்மா டைம் இல்ல..”

“என்ன கருமத்தையோ பண்ணித் தொலை!”

“ரொம்ப பண்ணாதமா! அதுக்கு தான் பர்பியும்னு ஒன்னு இருக்கே.. அதை அடிச்சுட்டா நான் குளிச்சேன்னா இல்லயானு யாருக்கும் தெரியாது😜😜..”

“உன்னல்லாம் திருத்தவே முடியாது! இன்னிக்கு ஈவ்னிங் கோவிலுக்கு போகனும்…அதனால கொஞ்சம் சீக்கிரமா வந்துடுடி.. உங்க அப்பாவும் வரேன்னு சொல்லிட்டாரு லேட் பண்ணிடாத..”

“அதெல்லாம் கரெக்ட் டைமுக்கு வந்து ஆஜராகிடுவேன்.”

“இப்போதைக்கு என்னைப் போகவிடு தேவி! பிரண்ட்ஸ் போன் பண்ணி டைமாச்சு.. ஒரு சால் எடுத்து கொடுனு சொன்ன குத்ததுக்கு ஒரு பிரசங்கமே வைக்கிற நீ!”என்று சொல்லி தேவிகிட்டயிருந்து ஒரு அடிய வாங்கிட்டே வீட்ட விட்டு கிளம்புனா அனு.

ஸ்கூட்டி எடுக்கும்போது ஆனந்தி கிட்டயிருந்து இன்னொரு ஒரு போன்.. ஐயோ போன் எடுத்தா இவளுங்க திட்டுவாளுங்களே🙄🙄..

சரி கஃபேக்கு போனதுக்கு அப்புறம் போன் சைலன்ட்ல இருந்துச்சு பார்க்கலைன்னு சொல்லி சமாளிப்போம்....

மெயின் ரோட்டில் போன கால் மணி நேரமாவது ஆகும்.. ஒன் வேல போனா பத்து நிமிஷம் தான் ஆகும். இந்த டைம்ல யாரும் வர மாட்டாங்கனு நெனச்சு ஒன் வேலை தன்னோட ஸ்கூட்டியை அனு திருப்பிட்டா...

ஆனா அவ நேரம் இவ ஸ்கூட்டிய திருப்புறதுக்கும் அருள் கார் வரதுக்கும் கரைக்ட்டா இருந்துச்சு…

இவ வரத பார்த்த ஒரு செகண்ட்ல அருள் பிரேக் போட்டுட்டான். அப்படி இருந்தும் ஸ்கூட்டில லைட்டா மோதிடுச்சு.

அருள் இறங்கி திட்டுறதக்கு முன்னாடியே அனு திட்ட ஆரம்பிச்சுட்டா.

“ஏன்யா! கண்ணு என்ன பிரடிலயா வச்சிருக்க…ஒரு அழகான பொண்ணு ரோட்ல வரக்கூடாதே… அப்படியே வந்து மோதிட வேண்டியது…அப்புறம் சாரி சொல்ல வேண்டியது..சரினு சொல்லி லைட்டா சிரிச்சா போதும்…உடனே நம்பர் தாங்கனு கேட்கிறது.கடைசியா நீ இல்லாம நான் எப்டி வாழ்வேன்‌..ஐ லவ் யூ…ஏன் உலகமே நீ தான்னு சொல்ல வேண்டியது…”

“ஏய் முட்டக்கண்ணி! மொதல உன் பிளா பிளாவ நிப்பாட்டு…நீ சொன்ன பாரு ஒரு அழகான பொண்ணுனு அது முதல்ல யாருனு சொல்லிட்டு அப்புறம் மத்தத சொல்லு”(டேய்!இருந்தாலும் உனக்கு இவ்வளவு ஆகாது டா..இவ அழகா இல்லயா…ஹீரோயினி மாதிரி இருக்கா மொதல்ல நீ போய் உன் கண்ண செக் பண்ணுனு சொன்ன மனசாட்சிக்கு பெரிய கொட்டா வச்சு ஓரமா அனுப்பிட்டான்)

“யோவ்! என்ன திமிரா…யார பார்த்துனு!!” ஆரம்பிக்கும் போதே அங்க ஒரு கூட்டம் சேர ஆரம்பிச்சிடுச்சு…

என்னமா என்ன பிரச்சனைனு அங்க இருந்த ஒருத்தர் கேட்டவுடனே… “அண்ணா! என் பிரண்ட்க்கு ரொம்ப சீரியஸ்ணா.. அர்ஜென்ட்டா பி பாசிடிவ் ரத்தம் வேணுமுன்னு சொன்னாங்க.. அதனால ஒன் வேயில நுழைஞ்சிட்டேன்ணா.. அதுக்கு இந்த சார்ரு ரொம்ப திட்டுறாரு அண்ணா…”(இவ சொன்ன பொய்யில மனசாட்சி மயக்கம் போட்டே விழுந்துடுச்சு…)

அந்தப் பொண்ணுதான் ரத்தம் கொடுக்க போகணும்ங்கிற அவசரத்துல ஒன் வேல நுழைஞ்சிட்டேனு சொல்லுதே…அப்புறம் ஏன் தம்பி இப்படி சண்டைக்கு போற…

“ஐயோ சார் நான்…. “

அட நிப்பாட்டு தம்பி…அந்த பொண்ணு ஃபர்ஸ்ட் ஹாஸ்பிடல் போகட்டும்… நீ போமா உன் பிரண்டுக்கு ரத்தம் கொடு…

ரொம்ப தேங்க்ஸ் அண்ணானு சொல்லிட்டு அருள்ள பார்த்து ஒரு வெற்றி சிரிப்பு சிரிச்சிட்டே கஃபேக்கு போனா அனு.ஏன்டி! இது தான் பத்து நிமிஷத்துல கஃபேக்கு வரதா-அபி


எருமமாடே எவ்ளவு நேரம் தான் உனக்காக வெயிட் பண்றது-சரண்

வாய தொறந்தா வரது ஃபுல்லா பொய்!உண்மைய சொல்லுடி…ஃபர்ஸ்ட் கால் பண்ணும் போது எங்க இருந்த-ஆனந்தி
அது ஒன்னும் இல்லடி….வர வழியில ஒரு சின்ன பஞ்சாயத்து…அத முடிச்சிட்டு வர டைம் ஆகிடுச்சு…பிரபலங்கள்னாலே பிராப்ளங்கள் தானேனு சின்சான் டையலாக் சொல்லி நாலு அடிய வாங்கிட்டு அன்றைய நாளுக்கான கச்சேரி அமோகமா ஆரம்பித்தது…ஆனா அனுவோட நேரம்….அருளும் அதே கஃபேக்கு தான் பிரண்ட்ஸ் மீட் பண்ண வந்துருந்தான்…

ஒருத்தர ஒருத்தர் பார்த்து பெரிய ஷாக் ஆனாங்களா…இல்ல இவுங்கள எப்டியாச்சு சேர்த்து வைக்கனும்னு நினைச்ச கியூபிட் இவுங்க ரியாக்சன்ன பார்த்து ஷாக் ஆனுச்சானு தான் தெரியல…


“டேய் மச்சி!இங்க இருக்கோம்ங்கிற சவுண்ட் வந்ததுக்கு அப்புறம் தான் அங்க இருந்து நகர்ந்தான்….அப்டியும் அனுவ கிராஸ் பண்ணும் போது எப்போலயிருந்து கஃபேல ஹாஸ்பிடல் ஓபன் ஆச்சு….அப்புறம் என்ன சொன்ன பி பாசிடிவ் ரத்தம் கொடுக்கனும்மா…‌எங்கமா கொடுத்துடியா அப்டினு கேகும் போதே பேரர் வந்து மேம் உங்க கோல்ட் காஃபினு சொல்லி இன்னும் கொஞ்சம் அனுவ டென்ஷன் ஆக்கியும்,அருள்ளுக்கு இன்னும் கொஞ்சம் அனு மேல கோபத்த கிளப்பிவிட்டும் போயிட்டாரு.”

“இல்ல சார்!அது வந்து….”

“தப்பு தப்பு!யோவ் அப்டினு கூப்பிடனும்….”

“ஐயோ சார்! பிரண்ட்ஸ் பார்க்க வர அவசரத்துல பொய் சொல்லிட்டேன் சார்…இந்த சின்ன பிள்ளைய மன்னிச்சு விட்டுடுங்க சார். மீ பாவம் சார்…”

இப்படி வார்த்தைக்கு ஒரு சார் போட்டு பம்மிட்டு பேசுற அனுவ பார்த்து வந்த கோபம் கூட கம்மியாகிடுச்சு அருளுக்கு….

“நீ பொய் சொன்னது கூட தப்பு இல்ல! ஆனா அது ஒரு நல்ல விசயத்துக்கா இருக்கனும்! அப்புறம் டிராபிக் ரூல்ஸ் கொஞ்சம் மதிக்க கத்துக்கோனு கருத்து கந்தசாமியா சொல்ல…அனு ரொம்ப நல்ல புள்ளையா வெளிள தலைய தலைய ஆட்டிட்டு மனசுக்குள்ள ‘போயா டுபுக்கு' அப்டினு சொல்லி அவன கலாய்சிகிட்டு இருந்தா.”
என்ன டா நம்ம இவன்ன கூப்பிட்டா….அந்த பொண்ணு கூட கடலைய போட்டுகிட்டு இருக்கான்.உதயா நீ போய் அவன கூப்பிட்டு வா-முத்து

இந்தா போரேன் இருடா-உதயா

டேய் மச்சான்னு உதயா சவுண்ட் கேட்டவுடனே….அனுவுக்கு ஒரு பாய் சொல்லிட்டு கிளம்பிட்டான்…


அடியே!உட்காரு….அந்த ஆள பார்த்து எந்திரிச்சு நின்னவ அப்டியே நிக்கிற-அபி


அபி சொன்னதுக்கு அப்புறம் தான் அருளை பார்த்து ஷாக்காகி நின்னுடோம்கிறதே அனு உணர்ந்தா.

அனு உட்கார்ந்துவுடனே! ஏன் அமுலு அந்த ஹேண்ட்சம் என்ன சொன்னாரு-அனிதா


ஹான் சுரைக்காய்க்கு உப்பு இல்லைனு… ஃபர்ஸ்ட் இங்கயிருந்து கிளம்பலாம்னு பாதிலே எல்லாரையும் கூட்டிட்டு கிளம்பிட்டா.


ஹலோ! ரெட் சுடிதார்னு அருள் வாய்ஸ் கேட்டும் அனு அந்த நாள்ளோட ஞாபகத்திலிருந்து வரல.


பக்கத்துல இருந்த அபி ஒரு கிள்ளு கிள்ளுனதுக்கு அப்புறம்தான் கிளாஸ்ல இருக்கிறத உணர்தா.

ஏண்டி எருமை மாடு இந்தக் கிள்ளு கிள்ளுறனு சொல்லி அபிய அடிச்சதுக்கு அப்புறம் தான்…ஏன் கிளாஸ்ல இருக்க எல்லாரும் நம்மலே பாக்குறாங்கன்னு யோசிச்சா…

“Hello! red chudidar I think you are physically present and mentally absent” அப்படின்னு அருள் சொன்னவுடனே…எந்திரிச்ச அனு.. “நோ சார் ஐ அம் mentally also present.”

“அப்படியா அப்போ நா என்ன சொன்னேன்.”

நோட்ஸ் குடுத்துட்டு இருக்கீங்கன்னு சொன்ன அடுத்த நிமிஷம் கிளாஸ்சே சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு.


இதுக்கு எதுக்கு லூசு மாதிரி சிரிக்குதுங்கனு யோசிச்ச அடுத்த நிமிஷம் அபி அனுகிட்ட அவரு உன்னோட நேம் கேட்கிறார்டின்னு சொன்னா.

கேவலமா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு மை நேம் இஸ் அனு ஸ்ரீனு சொல்லுறதுக்கும் அந்த கிளாஸ் ஓவர்னு சொல்லுற பெல் அடிக்கிறதுக்கும் கரெக்டா இருந்துச்சு.
எபி சாங்....நல்லா இருக்கும்... கேட்டு பாருங்க...

 

srinavee

Author
Author
SM Exclusive Author
#4
சூப்பர் சூப்பர்... செம்ம flow Deiva...😀💞😂 Nalla kondu pore... Hat's off... Enakku dailyum ud venum... Konjam try pannu...😉😉😛😛🍫🍫🍫🍫😘😘😂😂
 

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
Adada.. amma archanai enna archanai enna aechanai ingayum appadi thaan enaku anu idathula naan irukura maathiri irunthuchi.. aana kulikurathu maatum naan correct taa panniruven paa.. sent enaku allergy.. smell pidikaathu.. 😂😂😂
 

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#8
சூப்பர் சூப்பர்... செம்ம flow Deiva...😀💞😂 Nalla kondu pore... Hat's off... Enakku dailyum ud venum... Konjam try pannu...😉😉😛😛🍫🍫🍫🍫😘😘😂😂
😍😍🍫🍫Ka...

Daily ah🙄🙄...athu rmba kastamachey ka....

Na free anathuku aprm venna Try panren ka...
 

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#9
Adada.. amma archanai enna archanai enna aechanai ingayum appadi thaan enaku anu idathula naan irukura maathiri irunthuchi.. aana kulikurathu maatum naan correct taa panniruven paa.. sent enaku allergy.. smell pidikaathu.. 😂😂😂
Ha ha....😍😍🍫🍫🍫 Da...

Amulu...anuvuku kulikirathu konjam kastamana work da😜😜...
 

Sponsored

Advertisements

Top