உன்னால உலகம் அழகாச்சே 6

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#1
நான் வந்துட்டேன் அமுலுஸ் 🏃🏃.. போன எபிக்கு லைக் அண்ட் கமென்ட் பண்ண எல்லாருக்கும் பெரிய சாக்கி 🍫🍫... இந்த எபியும் படிச்சிட்டு மறக்காம உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க...

கருத்துக்களை எதிர்நோக்கி நான் 😉😉..

Also thanks for silent readers...அனு போனதுக்கு அப்புறம் அருள் தலைய புடிச்சிட்டு உட்கார்ந்துட்டான்.உட்கார்ந்த அடுத்த நிமிஷம் அன்னிக்கு அனு ப்ரொபோஸ் பண்ணதுதான் ஞாபகத்துக்கு வந்துச்சு.


"டேய் கிளம்பிட்டியா"-கோமதி

"அம்மா இப்போ நா கோவிலுக்கு வந்து என்ன பண்ண போறேன்…காலேஜ்க்கு போயிட்டு வந்து ஆபிஸ் வோர்க் பார்க்கவே கரைக்ட்டா இருக்கு எனக்கு…ஏன் இப்படி கோவிலுக்கு வந்தே ஆகனும்னு அடம் புடிக்குற"-அருள்

"இன்னிக்கு வரலட்சுமி நோன்பு டா.. அதனாலதா கோவிலுக்கு போலாம்னு சொல்றேன்.. அப்புறம் நீ காலேஜ் ஆபிஸ் இரண்டு வோர்க்குமே நல்லா பண்ணுவேன்னு எனக்கு தெரியும். அதனால பேசாம கிளம்பி வா…"


"ஐயோ அம்மா! வரலஷ்மி நோன்புக்கு நீங்க தானே கோவிலுக்கு எல்லாம் போவிங்க, விரதம்லாம் இருப்பிங்க…அப்புறம் எதுக்கு என்ன கூப்பிடுற..."


"ஏன்டா பொண்ணுங்க மட்டும் தான் கோவிலுக்கு போகணும்.. விரதம் இருக்கணும்னு எழுதி வச்சிருக்காங்களா…. ஏன் நீங்கல்லாம் எங்களுக்காண்டி விரதமல்லாம் இருக்க மாட்டீங்களா…"


"ஐயோ அம்மா! நான் உன்ன மட்டும் தானே சொன்னேன் நீ ஏன் பொண்ணுங்கன்னு எல்லாரையும் விஷயத்தில சேர்த்து இழுக்குற…"

"சரி அப்போ நா எல்லாரையும் இழுக்க வேண்டாம்னா நீ கோவிலுக்கு வா…"

"ஏம்மா இப்பிடி அடம் பிடிக்கிற.."

"டேய் உனக்கு நல்ல பொண்ணு கிடைக்கனும்னு தான் டா.. அப்புறம் இப்பலாம் நீ என் பேச்ச கேட்கிறதே இல்ல…அம்மாங்கிற பாசமே இல்ல உனக்கு..கோவிலுக்கு வாடானு சொன்னதுக்கு இவ்வளவு பேச வைக்கிற என்ன..."


"ஐயோ அம்மா தயவு செஞ்சு அழுக ஆரம்பிக்காத…இப்ப என்ன நா கோவிலுக்கு வரனும் அவ்வளவு தானே.."

"ஆமாடா.."

"சரி கிளம்பி வரேன்..கீழ போய் வேயிட் பண்ணுங்க.."

"நா கீழ போறேன் டா..நீ வேஷ்டி சட்டையில வா.."

"அம்மா நா வரதே பெரிசு..நீ என்ன வேஷ்டி சட்டையில வர சொல்லுர.."

என் புள்ளய வேஷ்டி சட்டையில பார்க்க ஆசையா இருக்குனு சொன்னேன்..நீ எனக்காக அது கூட செய்ய மாட்டியானு சொல்லி திருப்பி அழ ஆரம்பிச்சிட்டாங்க கோமதி.


திருப்பி டேங் ஓபன் பண்ணாத மா…நீ சொல்லுற படியே கிளம்பி வரேன்.. ஆனாலும் ஆ,ஊனா கண்ணுல தண்ணி வச்சே என்ன ஒத்துக்க வச்சிடுற..இதுக்குலாம் ஒரு நாள் உன்ன சேர்த்து வச்சு செய்ய போறேன்…


டேய் நா உன் அம்மாடா..நீ என்ன செஞ்சாலும் அதுக்கு பதில் குடுத்துருவேன் டா.. அதுனால இப்ப கிளம்பி வா நா கீழ போறேன்…

அதே நேரம் அனு வீட்ல…
"அம்மா எனக்கு இந்த சேலையேல்லாம் கட்ட வராது…என்ன டார்சர் பண்ணாம விட்டுடு அம்மா.."

"உன்ன என்ன டேய்லியும்மா கட்ட சொல்லுரேன்…இன்னிக்கு வரலெட்சுமி நோன்புடி..உனக்காக ஆசையா இந்த சேலை எடுத்திருக்கேன்…அதுனால இத கட்டிடு வா.. கோவிலுக்கு போலாம்…"


"ஐயோ அம்மா எனக்கு சேலை கட்டிடு நடக்க தெரியாது மா…போற வழில எங்கயாவது கண்டிப்பா புதையல் எடுத்துடுவேன் மா.."


"சரிடி தங்கமா பார்த்து எடு.."

"எதமா எடுக்க?"

"புதையல் எடுப்பேன்னு சொன்னியே..அதான் தங்க புதையலா எடுக்க சொன்னேன்.."

"ஓஓ..இது ஜோக்கா நா அப்புறமா சிரிக்கிறேன் மா…ஆனா இப்ப என்னால சேல கட்ட முடியாது.."

"ஏன்டி கட்ட முடியாது..."

"உனக்கே தெரியும்.. ஃபர்ஸ்ட் எனக்கு சேல கட்ட தெரியாதுனு.. நெக்ஸ்ட் அத கட்டிட்டு எனக்கு நடக்க தெரியாதுனு..இதலாம் விட முக்கியமான காரணம் சேல எப்போ அவுந்துடும்மோனு பயமாவே இருக்கும்மா.."

"எரும்மமாடே உனக்கு சேல கட்ட தெரியாதுனு எனக்கும் தெரியும்.. அதுனால நா கட்டி விடுரேன்..அவுராம இருக்க எல்லா சைடும் பின் குத்தி விடுரேன்டி.. அப்புறம் நீ நடக்க வேண்டிய தூரம் ரொம்ப இல்ல..பக்கத்து தெருவுல இருக்க கோவிலுக்கு தான் போக போறோம்..."

"என்ன மா இப்டி என் எல்லா குவஸ்டின்னுக்கும் பதில் சொல்லிட்ட.."

"நா உன் அம்மா டி…இப்போ அரட்ட அடிக்காம அந்த புடவைய எடுத்துட்டு ரூம்க்குள்ள வா.."

"அம்மா எல்லா சைடும் நல்லா பின் குத்திட்டியா..."

"எல்லாம் குத்திட்டேன்டி..எங்கையும் அவுராது…அதுனால பயப்டாம கிளம்பி வா.. அப்புறம் அந்த டேபிள் மேல மல்லிகை பூ கட்டி வச்சிருக்கேன்..அதையும் வச்சிட்டு கிளம்பி வா..நா வெளில வேயிட் பண்ணுறேன்..."


தலை நிறைய மல்லிகை பூவோடு சிகப்பு கலர் சேலையில வந்த அனுவ பார்த்து தேவி ஒரு நிமிசம் ஷாக் ஆகிட்டாங்க..இவ என்னடா இவ்ளோ அழகா இருக்கானு தான்…

"ஏம்மா என்ன பார்த்து இப்டி ஷாக் ஆகி நிக்கிற…நா பார்க்க எப்டி இருக்கேன்.. கொஞ்சம் அழகா இருககேன்னா…"

பூக்குட்டி! என்ன இப்டி கேட்ட…ரொம்ப அழகா இருக்க…என் கண்ணே பட்டுரும் போல…இப்பதான் நீ பொறந்த மாதிரி இருந்துச்சு…அதுக்குள்ளயும் இவ்ளோ பெரிய பொண்ணா வளர்ந்துட்டனு நம்பவே முடியலடானு சொல்லும் போதே லைட்டா கண்ணு கலங்க ஆரம்பிச்சிட்டாங்க தேவி..


அம்மா என்ன கண்ணுலாம் கலங்குது…எவ்ளோ நாள் கழிச்சு என்ன பூக்குட்டினு குப்பிடுற…அத அனுபவிக்கலாம்னா! இப்டி நீயும் அழுது என்னயும் அழுக வச்சிடுவ போலயேமா…

சரிடி அழுகல! வா கோவிலுக்கு போலாம்…
ஆனா இரண்டு பேரும் போறது ஒரே கோவிலுக்கு தான்..இது எதார்த்தமா நடந்துச்சா இல்ல கியுபிட்டோட பிளான்னானு தெரியல..
"டேய் அந்த பொண்ண பாரேன்…அப்டியே மகாலெட்சுமி மாதிரி இல்ல-கோமதி"

"யாரமா சொல்லுற..-அருள்"

"உனக்கு என்ன கண்ணு தெரியலயாடா..அந்தா வரா பாரு சிகப்பு கலர் புடவ கட்டி..அந்த மாதிரி ஒரு பொண்ணா பார்த்து தான்டா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்."

"ஐயோ! அம்மா கொஞ்சம் மெதுவா பேசு…அந்த பொண்ணு என்னோட ஸ்டூடண்ட்.."

"உனக்கு ஸ்டூடண்ட்டா..நல்லதா போச்சு..பொண்ணு கேட்போம்மாடா…"

நீ இப்டியே தான் ஏதாவது பேசுவேன்னா..நா இப்பவே கிளம்புறேன் அம்மானு கோவமா அருள் சொன்னவுடன தான் அந்த பேச்ச கோமதி விட்டாங்க..அப்பையும் அருள்ள பார்த்து முறைக்கிறத விடல.. அந்த முறைப்புக்கு காரணம் வீட்டுல போய் அருளுக்கு கச்சேரி இருக்குங்கிறது தான்…அந்த கச்சேரி கோமதி திட்டுறதா இல்ல அழுகுறதானு அந்த கடவுளுக்கு தான் தெரியும்.அனு தான் அருள்ள வேஷ்டி சட்டையில பார்த்து ஸ்டன் ஆகிட்டா..ஏதோ மனசுக்குள்ள ஒரு உந்துதல்..இப்பவே அருள் கிட்ட காதல சொல்லிடுன்னு…இப்போ ஏதுக்கிறானோ இல்லயோ காதல்ல சொல்லிடுன்னு மெதுவா சொல்லிட்டுயிருந்த மனசு..அஞ்சே நிமிசத்துல பேரலையா மாற ஆரம்பிச்சிடுச்சு…அதுடைய அழுத்தம் தாங்காம அனுவும் எப்டியாச்சு சொல்லிடலாம்னு முடிவு எடுத்துட்டா.


அதுக்கு தோதாவே அன்னிக்கு கோவில்ல இவுங்கள தவிர யாரும் இல்ல..


டேய் பிரகாரம் சுத்திட்டு வா! எனக்கு கால் வலிக்குது…அப்படின்னு சொல்லி கோமதி சன்னதிக்கு முன்னாடியே உட்கார்ந்துட்டாங்க.

அருள் பிரகாரம் சுத்த போறத பார்த்து அனுவும் தேவி கிட்ட கேட்டா..அம்மா நானும் போய் பிரகாரம் சுத்தவா..


சரி போயிட்டு வா!அதோட இன்னிக்கு ஆறு மணிக்கு ஏதோ விசேஷ பூஜையாம்… நாமதான் தெரியாம ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துட்டோம்.. இப்ப கூட்டமும் இல்ல அதுனால ஒரு 108 பிரகாரம் சுத்திட்டு வா.

என்னது 108ஆனு நினச்சாலும்.. அதுக்கு சண்ட போடுறதுக்கான டயம் இப்ப கிடையாது. ஏன்னா அனு தேவி கிட்ட சண்டை போடுறதுக்குள்ளேயும் அருள் பிரகாரத்தை சுத்தி முடிச்சுட்டு வந்துடுவான்கிறதால… மனசுக்குள்ளே தேவிய திட்டிட்டு பிரகாரம் சுத்த போயிட்டா…
கருவறைக்கு பின்புறம்மா போகும் போதே அனு அருள்ள நிப்பாடிட்டா..


உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்-அனு

சொல்லுங்க!-அருள்

"நீதான்டா உலகத்துல்லே ரொம்ப அழகு!என் ராஜா,என் கண்ணுனு எல்லா அம்மாவும் அவுங்க பையன பார்த்து சொல்லிடுப்பாங்க…அது பொய்யின்னு அவுங்களுக்கே தெரியும்!ஆனா உங்க அம்மா பொய் சொல்லல…நீங்க அவ்ளோ அழகு… உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு…I love you.."


இப்டி அனு சொன்ன நிமிசம் அருள் சொன்னுது…வரும் போது 'என்னை அறிந்தால்' படம் பார்த்துட்டு வந்தியா…அந்த டையலாக் எல்லாம் சொல்லிட்டு இருக்க…


ஆமா..வரும் போது பார்த்தேன்…அதுக்கு இப்ப என்ன…ஏதோ நல்லா இருந்துச்சே டையலாக்குனு சொன்னேன்…ஆனா அந்த I love you உண்ம.


எப்ப இருந்து இந்த காதல்...-அருள்


"உங்கள ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும் போது அப்டி எந்த எண்ணமும் இல்ல…ஆனா உங்கள திருப்பி திருப்பி பார்க்கும் போது தான் என் மனசுல நீங்க பதிய ஆரம்பிச்சிங்க…பார்க்கும் போதுலாம் சண்ட போட்டம்மே..அப்ப எனக்கு தெரியாது இது காதல்லா மாறும்னு…உங்க பின்னாடி இப்டி பைதியமா சுத்துவேன்னு…அப்புறம் அருண் கிட்டயிருந்து என்ன காப்பாத்தும் போது தான் முழுசா உங்க மேல காதல் வந்துச்சு…அண்ட் ஐ லவ் யூ…"


"படிக்கிற வயசுல இது தப்புன்னு உனக்கு தோணலையா…அப்புறம் எனக்கு நீ சொல்ற மாதிரி எந்த ஃபீலிங்கும் உன் மேல கிடையாது.. அதனால வேற வேல இருந்தா போய் பாரு...-அருள்"

"படிக்கிற வயசுல காதல் தப்புனு எனக்கும் தெரியும்…இதே ஒரு மாசத்துக்கு முன்னாடி என்கிட்ட கேட்டு இருந்தாங்கன்னா நானும் அப்படிதான் சொல்லி இருப்பேன் காதல் தப்புன்னு…ஆனா இப்ப என்னால அப்படி சொல்ல முடியாது… அப்புறம் உங்களுக்கு எந்த ஃபீலிங்கும் இல்லைன்னு சொன்னீங்க…காதல்ங்கிறது ஒருவகையான அன்புதான்! நீங்க என் மேல அன்பு வைக்கலைனாலும்…உங்க மேல நான் இந்த வானம் வரைக்கும் காதல் அதாவது அன்பு வச்சிருக்கேன்! உங்களுக்காகவும் உங்களோட பதிலுக்காகவும் நான் காத்திருக்கிறேன்.

அப்புறம் இன்னொரு விஷயம் மூஞ்சிய இந்த மாதிரி வைக்காதீங்க…ஃபர்ஸ்ட் டைம் ப்ரப்போஸ் பண்ற எனக்கே வேர்த்து வடியல… உங்களுக்கு ஏன் இப்படி வேர்த்து ஊத்துதுன்னு கேட்டுட்டு அனு போயிட்டா.."

அருள் சார் என்ன முழிச்சுட்டே தூங்கறீங்களா! நீங்க கிளாஸ் எடுக்குறதுக்கான பெல் அடிச்சுட்டாங்க பாருங்க… கிளாசுக்கு போகலையான்னு ப்ரொஃபஸர் ராம் கேட்டவுடன்னதான்! அருள் அந்த நாள்ளோட ஞாபகத்திலிருந்து வெளில வந்தான்.


உனக்கு எப்படி அனு நான் புரியவைப்பேன்… உன்னுடைய காதல என்னால ஏத்துக்க முடியாதுனு! இத உன்கிட்ட எப்டி சொல்ல போறேன்னு நெனச்சுட்டே… அடுத்த கிளாஸ் எடுக்குறதுக்கு அருள் கிளம்பிட்டான்...IMG_20190607_192756.jpg

IMG_20190607_192738.jpg
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#6
nee potra photosla unnoda thread அழகாயிருச்சு தெய்வா.... :love::love:(y)(y)

எப்படியோ ரெண்டு அம்மாக்களையும் இன்னைக்கு அழ வச்சுட்டே.. :rolleyes::rolleyes:

அதுக்கு ஒரு திட்டு பார்சல்.. தேவிம்மா.. திட்டறதா நினைச்சுக்கோ.... :p:p:D:D

எவ்ளோ அழகா அவளோட அன்பை சொல்லிருக்கா... இவனுக்கு என்னவாம் ஓகே சொல்லறதுக்கு... :oops::oops:

ஏதும் fb இருக்கா author ஜி உங்களோட கதையிலையும் .....o_Oo_O:LOL::LOL:(y)
 

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#7
nee potra photosla unnoda thread அழகாயிருச்சு தெய்வா.... :love::love:(y)(y)

எப்படியோ ரெண்டு அம்மாக்களையும் இன்னைக்கு அழ வச்சுட்டே.. :rolleyes::rolleyes:

அதுக்கு ஒரு திட்டு பார்சல்.. தேவிம்மா.. திட்டறதா நினைச்சுக்கோ.... :p:p:D:D

எவ்ளோ அழகா அவளோட அன்பை சொல்லிருக்கா... இவனுக்கு என்னவாம் ஓகே சொல்லறதுக்கு... :oops::oops:

ஏதும் fb இருக்கா author ஜி உங்களோட கதையிலையும் .....o_Oo_O:LOL::LOL:(y)
🍫🍫🍫கா..

😍😍😘😘..

எப்டியாவது அழகான சரி தான்கா😜😜..

Enna fb ka🤔
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#8
🍫🍫🍫கா..

😍😍😘😘..

எப்டியாவது அழகான சரி தான்கா😜😜..

Enna fb ka🤔
ஹீரோக்கு பிளாஷ்பாக் இருக்கானு கேட்டேன் மேடம்....
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top