உன்னால உலகம் அழகாச்சே 8

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#1
நான் வந்துட்டேன் அமுலுஸ் 🏃🏃.. போன எபிக்கு லைக் அண்ட் கமென்ட் பண்ண எல்லாருக்கும் பெரிய சாக்கி 🍫🍫.. இந்த எபியும் படிச்சிட்டு மறக்காம உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க..
Also thanks for silent readers..

கருத்துக்களை எதிர்நோக்கி நான் 😉😉..
"என்னடி கல்சுரல்ஸ்லாம் முடிஞ்சிருச்சா.."-தேவி

"ஹான் முடிஞ்சிருச்சுமா…ரொம்ப டையர்ட்டா இருக்கு..சோ எனக்கு டிபன் வேண்டாம்.நான் போய் தூங்குறேன்."

"அடியே நில்லு! என்ன முகம் அழுத மாதிரி இருக்கு..குரலும் கரகரங்குது.."

"அதுலாம் ஒன்னு இல்லமா.. எல்லா புரோகிராம்கும் கத்துனதால..குரல் கரகரங்குது அம்மா..வேற ஒன்னும் இல்ல..நா போய் தூங்குறேன்."

"என்னமோ நீ சொல்லுற..நானும் கேட்குறேன்..ஏதாவதுனா சொல்லுடி…இப்ப கொஞ்சம் பால் குடிச்சிட்டு போய் படு.. வெரும் வயித்தோட படுக்க கூடாது."

"சரிம்மா…பால் குடிக்கும் போதும் கொஞ்சம் உறுத்தலா தான் இருந்துச்சு அனுவுக்கு.. எல்லாத்தையும் சொல்லுற அம்மாகிட்ட இத சொல்லலைனு…இருந்தாலும் எப்டியிருந்தாலும் இத சொல்லி தான் ஆகனும்..அப்ப பார்த்துக்கலாம்னு போய் படுத்துட்டா.""ஹாய் டி! என்ன பண்ணிடு இருக்கிங்க.."-அனு

"கபடி விளையாட்டுறோம்..வா ஒரு கை குறையுது..விளையாடுவோம்.."-கலை

"என்னடி கிண்டலா.."-அனு

"பின்ன என்ன..நேத்து தான் கல்சுரல் முடிஞ்சிருக்கு…நம்ம டிபார்ட்மெண்ட் தான் டிராபி வின் பண்ணிருக்கோம்…அப்ப அத பத்தி தானே பேசுவோம்.."-கலை

"சரிடி!தெரியாம கேட்டுட்டேன்.. என்ன பண்ணுறிங்கனு…இன்னிக்கு ஃபர்ஸ்ட் பிரியட் என்ன.."-அனு

"நம்ம அருள் சார்ரோடது.."-அபி

ஆனா அன்னிக்கு கிளாசுக்கு வந்தது..ராஜா சார்..

ஹலோ ஸ்டூடண்ட்ச்! குட்மார்னிங்.

குட்மார்னிங் சார்..

என்னடா அருள் சார் தானே கிளாசுக்கு வருவாங்க…இன்னிக்கு என்ன ரொம்ப நாள் கழிச்சு இந்த சார் வந்துருக்காங்கனு நீங்க நினைக்கலாம்.என்ன பண்ணுறது எனக்கு உடம்பு சரியாகிடுச்சேனு சொல்லி கொஞ்சம் சிரிப்போட நிப்பாடுனாறு..

அருள் சார் மாதிரி ராஜா சாரும் கலகலப்பா தான் கிளாஸ் எடுப்பார்னாலும்..அருள்ள மிஸ் பண்றதால.. அங்க இருந்த எல்லார் சார்பாவும் ஒரு பையன் எந்திருச்சு அருள் சார் எங்க போனாங்கனு கேட்டுட்டான்.
அவன் கேட்கலைனாலும் அனு எந்திருச்சு கேட்டுறுப்பா..

நீங்க எல்லாரும் மறந்துட்டிங்கனு நினைக்கிறேன்.அருள் சார் எனக்கு பதில்லா கெஸ்ட் லேக்சரரா வந்தவங்க தான்..இப்ப எனக்கு தான் சரியானதால..நான் டியூட்டில ஜாயின் பண்ணிட்டேன்..அருள் சார் ரிசைன் பண்ணிட்டாங்கனு சிரிச்ச முகமாவே சொன்னாலும்..உள்ளுக்குள்ள எல்லா ஸ்டூடண்ட்ச்சோட சோக முகத்த பார்க்கும் போது நிஜமாவே ரொம்ப கஸ்டமாச்சு..ஏன் தம்பி இப்டி என்ன பொய் சொல்ல வைக்கிறிங்கனு…இருந்தாலும் ஒரு வாரத்துல எல்லாரும் அருள்ள மறந்துட்டு தன்னோட கிளாஸ் கவனிக்க வச்சிடலாம்ங்கிற நம்பிக்கையில அன்னிக்கு உள்ள கிளாஸ்ஸ ஆரம்பிச்சாரு.நல்ல வேளயா அவர் யாருகிட்டையும் கிவிஸ்டின் கேட்கல..முக்கியமா அனுகிட்ட.கேட்டுருந்தா அன்னிக்கு சொன்ன மாதிரி நோட்ஸ் குடுத்துட்டு இருந்திங்கனு சொல்லிருப்பா.அப்படியே அந்த ஹவர் முடிஞ்சவுடன்.. ஃப்ரீ ஹவர்ங்கிறதால..பாதிலே நிப்பாட்டுன அரட்டை கச்சேரி ஆரம்பிச்சது.எத எதயோ பேசி கடைசியா டாபிக் வந்து நின்னது…பிளேஸ்மெண்ட் பத்தி.


"எல்லாரையும் ஒரே கம்பெனி காரனே செலக்ட் பண்ணிருந்தா நல்லா இருந்துருக்கும்ல…"-ஆனந்தி

"ஏன்!அங்கயும் போய் இதே கச்சேரிய ஆரம்பிக்கிறதுக்கா…அங்க போயாச்சு கொஞ்சம் உறுப்படியா வேல பார்போம்.."-கலை

"எல்லாரையும் மிஸ் பண்ணுவேன்னு சொன்னா..ரொம்ப பண்ணுற கலை நீ.. "-ஆனந்தி

"சைதான்களே!சண்டைய நிப்பாட்டுங்க ஃபர்ஸ்ட்.."-அபி

"நம்ம ஏழு பேர்ல..மூணு பேர்க்கு இப்பவே மாப்பிள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க..மீதம் இருக்கிறது நாலு பேர் தான்..அதுல நானும் கலையும் பிரியா கன்ஸ்ட்ரக்ஷன்ல செலக்ட் ஆகியிருக்கோம்.. ஆனந்தியும் அனுவும் அருள் கன்ஸ்ட்ரக்ஷன்ல செலக்ட் ஆகிடுறிக்கிங்க..அப்புறம் என்ன சமாளிச்சிடலாம்..அதோட இன்னும் டூ வீக்ஸ் தான் காலேஜ்…அப்புறம் பிராஜெக்ட் சம்மிட் பண்ண தான் வரனும்…சோ இப்பயும் சண்ட போட்டுகிட்டே இருக்காதிங்கடி…"-அபி


"அது சரிடி! இவ்வளவு நேரம் நாம எவ்ளோ பீல் பண்ணி பேசிட்டு இருக்கோம்..இவ என்னடானா இப்டி படுத்துருக்கா.."-சரண்

"அனு என்ன ஆச்சு..ஏன் இப்டி படுத்துருக்க.."-நித்யா

"தலவலிகுது அமுலு..நா வீட்டுக்கு கிளம்புறேன்…சார்கிட்ட லீவ் சொல்லிடு..கேட்டா ஒரு லெட்டர் எழுதி என் சைன் பண்ணி கொடுத்துடுனு சொல்லி வீட்டுக்கு கிளம்பிட்டா…இல்லைனா கண்ணுல இருந்து வர கண்ணீர்க்கு காரணம் சொல்லனும்..பொய் சொல்ல விரும்பாம தான் வீட்டுக்கு கிளம்பிட்டா…"

அனு வீட்டுக்கு வரது தெரியாததால…தேவி கல்யாண வீட்டுக்கு போய்டாங்க…

இருந்தாலும் அனுகிட்ட ஒரு ஸ்பேர் கீ இருந்ததால உள்ள போய்டா..

ஆனா உள்ள வந்த நிமிஷம் இவ்வளவு நேரம் கண்ணுல தேங்கியிருந்த கண்ணீர் மடை திறந்த வெள்ளம்மா வெளிள வர ஆரம்பிச்சிருச்சு.. அதற்கு தோதா அம்மாவும் இல்லாததால தன்னுடைய சோகம் எல்லாம் கண்ணீர்ல கரஞ்சி போயிடாதாங்கிற ஏக்கத்தோடையே…கண்ணீரே தீரும் அளவுக்கு அழுது தீர்த்திட்டா.


நம்ம கதவ பூட்டிட்டு தானே போனோம்..இந்த நேரதுக்கு ரெண்டு பேர்ல யார் வந்துயிருக்கானு தெரியலையேனு நினச்சிட்டே தேவி கதவ திறந்தா…ஹால்ல படுத்திருந்தது அனு.

“அடியே எரும! என்ன காலேஜ் கட் அடிச்சிட்டியா…இந்த நேரத்துல வீட்டுல இருக்க”அப்டினு தேவி கேட்டதுக்கு அப்புறம் தான் அனுவோட முகத்த பார்த்தாங்க.

டேய் என்ன ஆச்சு!ஏன் இப்டி உன் முகம்லாம் வீங்கியிருக்கு..

"தலவலிம்மா...அதான்."

"ஏன்டி!ஒரு சின்ன தலவலிக்கே இந்த அழுக அழுதின்னா…நீயெல்லாம் எப்படி கல்யாணம் பண்ணி புள்ள பெக்க போறியோ…ஒன்னும் எனக்கு புரியல…இப்ப போய் முகம் கழுவிட்டு வா..காபி போட்டு தரேன்…அப்புறமா ஒரு மாத்திரை சாப்பிட்டு தூங்கு…சரி ஆகிடும்."

"சரிம்மா."

"ஏன்டி!வெளில மழை வருதானு பாரு."

"ஏம்மா.."

"இல்ல நான் கேட்குறதுக்கு எல்லாம்..ஒரு வார்தையில பதில் சொல்லுறியே அதான்னு..சிரிச்சிட்டே சொன்னாங்க."

"அம்மா"

"சரிடி கோவபடாத…போய் முகம் கழுவிட்டு வா."


அருள்ளோட நியாபகத்துலையும்…பிராஜெக்ட் டேன்சனுலையுமே அனு காலேஜ்ஜ முடிச்சிட்டா…ஆனா எந்த வேலை பார்த்தாலும்…செல்லரிக்கும் கரையான் மாதிரி அருள்ளோட நியாபகம் எப்போழுதுமே இருந்துச்சு.


"ஏன்டி எருமமாடே! காலேஜ் படிக்கும் போது தான்..ஒரு வேலையும் பார்க்க மாட்ட…இப்பயாசும் வீட்டுல கொஞ்சம் வேலை பார்த்தா என்ன.."

"அம்மா என்னாலயெல்லாம் வேல பார்க்க முடியாது…நீங்களை பார்த்துகோங்க..அப்டினு சொல்லி தேவி திட்ட ஆரம்பிக்கிறதுகுள்ள லைப்ரரிக்கு கிளம்பிட்டா."

இங்க தான் கியூபிட்…எனக்கு ரொம்ப போர் அடிக்குதே..என்ன பண்ணலாம்னு யோசுசிச்சு…அனுவ மாட்டிவிட பிளான் பண்ணிடுச்சு.கொஞ்சம் கூட பொறுப்புங்கிறதே இல்ல இவளுக்கு…எல்லா பெட்சீட்டும்,பெட் கவரும் எடுத்துட்டு வந்து துவைக்க போடுனு சொன்னேன்…அதுக்குள்ள லைப்ரரி போயிட்டா…இவள பெத்ததுக்கு பதில்லா ஒரு அம்மி கல்ல பெத்துருக்கலாம்..
மாவு அரைக்கவாது யூஸ் ஆகிடுக்கும்னு…அனுவ திட்டிக்கிட்டே பெட்கவர் எடுக்க அனு ரூம்முக்கு போனாங்க.


பெட்சீட்,பெட்கவர் எடுத்ததுக்கு அப்புறம் தான்..பில்லோ கவர் எடுக்கலைனு கவர உறுவுனாங்க…உறுவுன நிமிசம் கீழ விழுந்தது…அனு வரஞ்சி வச்சிருந்த அருள்ளோட ஃபோட்டோ உள்ள பேப்பர் தான்.


இப்டி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சிருந்தா…அனு கிளம்பியிருக்க மாட்டாளோ…


கீழ விழுந்த பேப்பர்ர எடுத்து பார்த்தா..அங்க ஒரு பையனோட கோப முகம் உள்ள படமும்,அனு கைபட எழுதியிருந்த கவிதையும்.

அத பார்த்த நிமிசம் பெரிய ஹாக்னாலும்…அனு வந்தவுடன கேட்கலாம்னு சொல்லி துணிய மிசின்ல போடுறதுக்கு போயிட்டாங்க.
"அம்மா ஒரு காபி."

"தரேன்..இப்டி வந்து உட்காரு…கொஞ்சம் உன்கிட்ட பேசனும்.."

"அம்மா காஃபி குடுத்துட்டு பேசும்மா…எவ்வளவு நேரம் வேண்ணா கேட்குறேன்."

"சரி! வெயிட் பண்ணு வரேன்."

காஃபி குடிக்கும் வரை பொறுமையாக இருந்த தேவி…"ஏன் அனு உன்ன நாங்க ஏதாவது கஸ்ட படுத்துறோம்மா.."

"இல்லமா.."

"அப்ப நீ ஆச படுற ஏதாவது வாங்கி தராம இருந்தோம்மா.."

"இல்லமா.."

"எல்லாதையும் ஃபர்ஸ்ட் நீ என்கிட்ட தானே சொல்லுவ…
அதுவும் ஒரு பையன பார்தேங்கிறதுல ஆரம்பிச்சு…யார் யார் லெட்டர் குடுத்தாங்கனு வரைக்கும்…"

"ஆ..ஆ..ஆமாம்மா.."

"நான் கொஞ்சம் ஸ்ட்ரீட் மாதிரி நடந்துகிட்டாலும்…உன்னளவுல சுதந்திரம் குடுத்துருக்கேன்னா..இல்லயா.."

"குடுத்துருக்கிங்க அம்மா.."

அப்ப இது என்னது அனு..அப்டினு அந்த பேப்பர எடுத்து காமிச்சாங்க..

IMG_20190623_132904.jpg

அம்மா அது வந்துனு..அனு ஆரம்பிக்கிறதுக்கும்…தேவி அவுங்க கை அனுவோட கன்னத்த பதம் பார்கிறதுக்கும்…கரைக்ட்டா இருந்துச்சு..

"அம்மா.."

"எத்தன நாளா இது நடக்குது அனு…"

"நீ அப்ப அப்ப அழுகுறதுக்கு காரணம் இது தான் கரைக்ட்…நா எத்தன தடவ கேட்டுருப்பேன்….ஆனா அத்தன தடவையும் தலவலினு சொன்ன நீ…ஒரு தடவ கூட உண்மைய சொல்லனும்னு உனக்கு தோனலியா.."


"பிளிஸ்மா!கோப படாதம்மா…உன்கிட்ட இந்த உண்மைய சொல்லலைனாலும்…தலவலினு நான் சொன்னதும் உண்ம தான் மா.."


"கண்டிப்பா உன் மேல கோபம் தான்..ஆனா நீ லவ் பண்ணுரியேனு இல்ல…ஏன்னா நானும் உங்க அப்பாவும் லவ் மேரேஜ் தான்…அத நான் தப்புன்னும் சொல்லல…ஆனா எப்ப இருந்து என் பொண்ணு பொய் சொல்ல ஆரம்பிச்சானு தான்.."

தேவி சொல்லி முடிச்ச நிமிசம்…அனு போய் தேவிய இருக்கி கட்டிகிட்டு அழுக ஆரம்பிச்சிட்டா..

"அம்மா சாரிமா!என்ன மனிச்சிடுமா…பிளிஸ்மானு சொல்லி ஒரு அரைமணி அழுது முடிச்சதுக்கு அப்புறம் தான் தேவிய அணைப்பில் இருந்து விட்டா…ஆனா அதுவரைக்கும் தேவியும் எதுவும் பேசல…"

அவுங்க அவுங்களுக்குள்ளே கேட்டுகிட்டு இருந்தாங்க…எங்க நாம தவறிட்டோம்னு…அது அவுங்கள அறியாமே கேள்வியாகவும் வெளிய வந்துடுச்சு..

ஐயோ அம்மா!நீங்க எங்கயும் தவறல…நான் தான் உங்க பொண்ணுங்கிறதுல இருந்து தவறிட்டேன்னு சொல்லி திருப்பி அழுக ஆரம்பிச்சிட்டா…

ஒருவழியா அழுது அழுது ஓஞ்சதுக்கு அப்புறம் தேவி கேட்ட கொஸ்டின் "யார் அந்த பையன்?"

"பேரு அருளழகன் மா..எங்க காலேஜ்ல தான் லெக்சர்ரா இருந்தாங்க.."

"இருந்தாங்கனா.."- தேவி

"இப்ப இல்லமா..ரிசைன் பண்ணி போயிட்டாங்க.."

"சரி இப்ப என்ன பண்ணுறாரு..?"

"தெரியாது மா.."

"எங்க இருக்குறாரு..?"

"தெரியாது மா.."

"போன் நம்பர் இருக்கா..?"

"இல்லமா.."

"எங்க தங்கியிருக்காங்கனு தெரியுமா..?"

"தெரியாது மா.."

"என்ன பார்த்தா லூசு மாதிரி இருக்கா..?"

"கண்டிப்பா இல்லமா.."

"அப்ப நீ லூசா..?"

"இல்லமா.."

"ஆனா எனக்கு என்னமோ நீ முழு லூசு ஆகிட்டேன்னு தெரியுது.. அந்த பையன் எங்க இருக்கானு தெரியாது, என்ன பண்ணுறாங்கனு தெரியாது,நம்பர் கிடையாது.. அப்புறம் எப்படி இந்த லவ்.."

"அம்மா நீங்க சொல்லுற மாதிரி அவுங்கள பத்தின டீடைல் என் கிட்ட இல்லைனாலும்…என்னுடைய காதல் உண்மை மா.. கண்டிப்பா தேடி நா கண்டு பிடிச்சிடுவேன்."

"நம்பிக்கை இருக்கலாம் அனு…ஆனா எதுவுமே தெரியாம எப்டி கண்டு புடிப்ப நீ.."

"எனக்கு நம்பிக்கை இருக்கு மா…என் காதல் உண்மையானது…நிச்சயமா நான் கண்டு பிடிச்சிடுவேன் மா…ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.."

"உன்கிட்ட எவ்வளவு டைம் வேணும்னு கேட்டா…காலம் முழுவதுக்கும்னு சொல்லுவ…அப்படிலாம் எங்கனால டைம் கொடுக்க முடியாது…எங்களுக்கு நீ ஒரே பொண்ணு…உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு.. எங்களுக்கும் ஆசைலாம் இருக்கு…சோ இரண்டு வருசம் டைம் தரோம்…அதுக்குள்ள கண்டுபிடி…இல்லைனா நிதர்சனத்த புரிஞ்சிகிட்டு நாங்க சொல்லுற மாப்பிளைய கல்யாணம் பண்ணிக்கனும்..சம்மதமா."


"தேங்யூ சோமச் அம்மா…டீல்…கண்டிப்பா இரண்டு வருசத்துக்குள்ள கண்டுபிடிச்சு…அவனையும் காதலிக்க வச்சிடுவேன்…அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு…உங்களுக்கு மாப்பிள்ளை தேடுறதுக்கான வாய்பே தர மாட்டேன்மானு சொல்லி சிரிச்சிட்டே கன்னதுல முத்தம் வச்சு கட்டிக்கிட்டா.."


"அடியே!கண்ணத்த எச்சி பண்ணாத…போ போய் துவச்ச டிரஸ்ஸ காய போடு.. நாளைக்கு புது ஆபிஸ்க்கு போனும்ல..""ஆமா மா!ஆனா என்னால டிரஸ் காய போட முடியாதுமா…ரொம்ப அழுது தலவலிக்குது இப்ப ஒரு காஃபி போட்டு தானு சொல்லி…அடுத்து தேவியோட திட்ட கேட்க ஆரம்பிச்சிட்டா"...
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#6
தேவிம்மா வந்து அனுவ திட்டினா தான் எனக்கு உன் கதை படிச்ச effect கிடைக்குது...:p:D

அவளுக்கு தான் அருள் கம்பெனில வேலை கிடைச்சிருக்கே:rolleyes: ... அது தெரியாமயா இப்படி அழுதுகிட்டு இருக்கா
லூசு பொண்ணு...:D:cool:

இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் பண்ணுவாங்களா ... அதுவரைக்கும் தேவிம்மாவின் திட்டு தொடரும்ம்மம்ம்ம்ம்.....:eek::oops::p:D
 

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#7
தேவிம்மா வந்து அனுவ திட்டினா தான் எனக்கு உன் கதை படிச்ச effect கிடைக்குது...:p:D

அவளுக்கு தான் அருள் கம்பெனில வேலை கிடைச்சிருக்கே:rolleyes: ... அது தெரியாமயா இப்படி அழுதுகிட்டு இருக்கா
லூசு பொண்ணு...:D:cool:

இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் பண்ணுவாங்களா ... அதுவரைக்கும் தேவிம்மாவின் திட்டு தொடரும்ம்மம்ம்ம்ம்.....:eek::oops::p:D
ஆஹா எபக்ட் கிடைகிறதுங்கிறதால...அனு திட்டு வாங்கிட்டே இருக்க முடியாதுலக்கா...அனு பாவம்😜😜..

அருள் கம்பெனினு அவளுக்கு தெரியாதே🤭🤭...

💞💞💞🍫🍫🍫கா..
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top