உன்னால உலகம் அழகாச்சே 9(Pre-final)

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#1
நான் வந்துட்டேன் அமுலுஸ் 🏃🏃..போன எபிக்கு லைக் அண்ட் கமென்ட் பண்ண எல்லாருக்கும் பெரிய சாக்கி 🍫🍫..

இந்த எபியும் படிச்சிட்டு மறக்காம உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க... கருத்துக்களை எதிர்நோக்கி நான் 😉😉..

Also thanks for silent readers..
"அடியே! ஆஃபிஸ்க்கு டைம் ஆகிடுச்சு,பாரு…இன்னும் ரூம்முக்குள்ள என்ன தான்டி பண்ணுற.."


"இந்தா வந்துட்டேன் மா.."


"எவ்வளவு நேரம்டி என்ன கத்த வைப்ப…டிஃபன் ஃபாக்ஸ் எடுத்துட்டு கிளம்பு.. இன்னிக்கு உங்க அப்பா கொண்டு போய் விடுவாங்க."


"ஏம்மா முதல் நாள் மட்டும் தான் கொண்டு போய் விடுவாங்களா.."


"பின்ன!டேய்லி உன்ன கொண்டு போய் விடனும்மா…ஏதோ முதமுதல்லா போறியேனு உங்க அப்பாவ கொண்டு போய் விட சொன்னேன்..இனி நீயே ஸ்கூட்டில போ…அப்புறம் இன்னொரு விஷயம்..உன்ன விட்டா இந்த ஊரையே வித்துட்டு வந்துடுவ…அதுனால ரொம்ப வாய் பேசாம கிளம்பு…"


"கிரேட் இன்சல்ட் மா.."


"பரவாலடி கிளம்பு…அங்க போயாச்சு வேல பார்க்க பழகிக்க..இங்க மாதிரியே நின்ன நெடுமரம் மாதிரி இருக்காம.."


"அம்மா இருந்தாலும்..நீ என்ன ரொம்ப மட்டம் தட்டுற மா.."


"அடியே...."


"ஏம்மா உங்க ரெண்டு பேர் சண்டைய கொஞ்சம் நிப்பாட்டுறிங்களா…எனக்கு ஆஃபிஸ்க்கு டைம்மாச்சு..நீ உள்ள ஏறு பாப்பா..அப்டினு சொல்லி இவுங்க ரெண்டு பேரோட சண்டையையும்( போரையும்) நிப்பாட்டிடாங்க சுந்தரம்."காருக்குள்ள வந்தவுடன ரேடியோவுல பாடுன சாங்


"திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மடல்
ஓ.. அன்பே..
நீ சென்றால்கூட வாசம் வீசும்
வீசும் வீசும் வீசும்
என் அன்பே.... என் நாட்கள் என்றும் போலப் போகும்
போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே
தன்னாலே காதல் வரம் கண்டேன்
திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மடல்


உள்ளமே உள்ளமே
உள்ளே உனைக்காண வந்தேன்
உண்டாகிறாய் துண்டாகிறாய்
உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை நசுக்கினேன் என்ன சுக ஆனந்தமே
நம் கனவிலும் வசித்தேன்
என்னுடைய உலகம் தனி


கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
தன்னைத் துண்டாக்கிக் கொள்ளும்
கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
தன்னைத் துண்டாக்கிக் கொள்ளும்


சந்தோசமும் சோகமும்
சேர்ந்து வந்து காக்க கண்டேனே
சந்தேகமாய் என்னையே
நானும் பார்த்துக் கொண்டேனே
ஜாமத்தில் விழிக்கிறேன்
ஜன்னல் வழியே தூங்கும் நிலா
ஹோ காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் வினா வினா


திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மடல்
ஓ.. அன்பே..
நீ சென்றால்கூட வாசம் வீசும்
வீசும் வீசும் வீசும்
என் அன்பே.... என் நாட்கள் என்றும் போலப் போகும்
போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே
தன்னாலே காதல் வரம் கண்டேன்


கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
தன்னைத் துண்டாக்கிக் கொள்ளும்
கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்"


(இந்த பாட்டுல வர எந்த லையனையும் கட் பண்ண முடியல..அனுவோட ஃபீலிங்ஸ் அப்டியே சொல்லுற மாதிரி இருந்துச்சு..அதான் ஃபுல் பாடல் வரியும் குடுத்துட்டேன்🙊🙊)அதற்கு அடுத்தும் நிறைய பாடல் காருக்குள்ள ஓடுனாலும்…அனுவின் மனம் என்னவோ இந்த பாடல்லே நின்னுருச்சு…எத்தனையோ மீம்ஸ்ல சோகமா இருக்கும் போது நாம பாடலில் வரிகளை தான் கவனிப்போம்னு பார்க்கும் போதுலாம்…அப்படியானு கேட்டு சிரிச்சிக்கிட்ட மனசுக்கு அப்டி தான்னு அருள் நிருபிச்சிட்டான்.பாப்பா ஆபிஸ் வந்துடுச்சு.. எனும் சுந்தரத்தின் குரல் வந்தவுடன தான் அனு அந்த மோன நிலையில் இருந்து வெளில வந்தா..ஓகேப்பா!பாய்…பார்த்து போங்கனு சொல்லிட்டு அந்த ஆபிஸ்ஸ நிமிர்ந்து பார்த்தா…ஐந்து மாடி கண்ணாடியால் ஆன கட்டிடம் கம்பிரமாக நின்றது.


ரிசப்ஷன்ல நின்ன பொண்ணுகிட்ட “ஹலோ மேம்!ஐம் அனு ஸ்ரீ.. அண்ட் நீயூ ஜாயினி இன் திஸ் ஆபிஸ்.”


“ஹலோ அனு!வெல்கம் டூ அவர் ஆபிஸ்”


"தேங்யூ மேம்"


"மேம் வேண்டாம்..கால் மீ கவி"


"ஓகே கவி!நா யார போய் பார்க்கனும்.. ஜாயின் பண்ணுறதுக்கு.."


"கமல் சார மீட் பண்ணுங்க..அவுங்க கேபின் லாஸ்ட் புளோர்ல..ரைட் சைட் சேகன்ட் ரூம்.அண்ட் ஹேவ நைஸ் டே."


தேங்க்யூ கவி..நா மீட் பண்ணிக்கிறேன்.. ஈவினிங் பாக்குறேன்னு ஒரு சிநேக புன்னகையோட கிளம்பிட்டா அனு.


"மே ஐ கமின் சார்"-அனு

"எஸ் கமின்"-கமல்

"சார் ஐம் அனு ஸ்ரீ.நியூ ஜாயினி."

"தெரியும்..உங்க பைல் தான் பார்த்துட்டு இருந்தேன்.உங்களுக்கு மூணு மாசம் டிரைனிங்..நெக்ஸ்ட் கேபின்ல சாரா இருப்பாங்க..அவுங்கள கான்டேக்ட் பண்ணுங்க அண்ட் வெல்கம் டூ அவர் ஆபிஸ்.."

"தேங்யூ சார்."

"நோ ப்ராப்ளம்.."


இன்றோடு அனுவும் ஆனந்தியும் அருள் கன்ஸ்ட்ரக்ஷன்ல சேர்ந்து மூணு மாசம் ஆகிடுச்சு.சோ டிரைணிங்கிற போஸ்ட்ல இருந்து எம்ளாயிங்கிற போஸ்ட்க்கு புரோமொசன் வாங்கிட்டாங்க.
கியூபிட்டும் இவுங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வச்சிடலாம்னு மூணு மாசம்ம்மா டிரை பண்ணி இன்னிக்கு தான் மீட்டிங்க சக்ஸஸ் பண்ண போகுது.
"அமுலு எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு..பாஸ்ஸ மீட் பண்ணணும்மாம்ல.."-ஆனந்தி


"அதுக்குயேன்டி பதட்டபடுற.. சிங்கம் புலியா உள்ள இருக்க போறது மனுசன் தானே..தைரியமா இரு.."-அனு


"சரிடி எதுக்கு நம்மள மீட் பண்ணனும்னு சொல்லிருக்காரு…"-ஆனந்தி


"நானும் கவிக்கிட்ட கேட்டேன் டி..அது இங்க இருக்க ப்ரசீஜர்ராம் டி…ட்ரெயினியாயிருந்து எம்ளாயியா மாறினா எம்டி தான் விஸ் பண்ணி ஜடி கார்ட் கொடுப்பாராம்.. அதுக்கு தான் மீட் பண்ண போரோம்."-அனு


ஏன்டி ஐடி கார்டு குடுக்கவா ஒருமணி நேரம்மா உட்கார வச்சுருக்காயிங்கனு சொல்லி தன்னுடைய முகத்த தோல் பட்டையில இடிக்கிறதுக்கும்..கமல் கதவ துறந்துட்டு வரதுக்கும் கரைக்ட்டா இருந்துச்சு.


"சாரி கைஸ்!சார் மீட்டிங்ல மாட்டிகிட்டாங்க..இப்ப போய் பாருங்க.."


"ஓகே சார்."


"மே ஐ கமின் சார்"


யேஸ் கமின்னு சொல்லிட்டு அருள் பார்கிறதுக்கும்…அனு உள்ள வரதுக்கும் கரைக்ட்டா இருந்துச்சு.


அனுவ பார்த்த நிமிசம்….இவ எப்டி நம்ம ஆபிஸ்க்கே வந்தாங்கிற அதிர்ச்சில அருள் சீட்லயிருந்து எந்திருச்சிட்டான்.


அனுவுக்கும் அதிர்ச்சி தான்…அதிர்ச்சிக்கான காரணம் எங்க போய் இவன தேடுறதுன்னு நாம யோசிச்சா…நமக்கே எம்டியா இருக்கானே…இனி எப்டி நீ ஓடுரேன்னு நானும் பார்க்கிறேன் டானு நினைச்ச ஆனந்த அதிர்ச்சி…ஹே நம்ம அருள் சாருடினு வந்த ஆனந்தியோட வாய்ஸ்ல தான் ரெண்டு பேரும் நிஜதுக்கு வந்தாங்க.


"சார் நீங்க இங்க எம்டினா…அப்ப காலேஜ்ல பாடம் எடுத்தது உங்க பிரதர்ரா சார்…"-ஆனந்தி


"நா ஒரே பையன் தான்மா…அது எங்களோட காலேஜ்…அது தான் வந்து கிளாஸ் எடுத்தேன்.. இந்தாங்க உங்க ஐடிகார்ட்…போய் ஜாயின் பண்ணிக்கோங்க..ஹேவ நைஸ் டே.."


தேங்யூ சோ மச் சார்னு ஆனந்தி சொல்லி ஐடிகார்ட்ட வாங்குறது தெரிஞ்சாலும்…அனு எதுவும் பேசல.... ரொம்ப நாள் நாம தேடுன பொருள்,எதிர் பார்க்காம நம்ம கைல கிடைக்கும் போது ஒரு சந்தோஷம்மும் கூடவே கண்ணீரும் வருமே…அந்த மனநிலையில இருந்தா.


அடியே சார் உன்கிட்ட தான் ஐடிகார்ட் குடுக்குறாங்க வாங்குனு ஆனந்தி கிள்ளுனதுக்கு அப்புறம்தான் கார்ட வாங்குனா..ரெண்டு பேரும் கிளம்பினதுக்கு அப்புறம் கமலுக்கு பயங்கரமா திட்டு விழுக ஆரம்பிச்சிடுச்சு..


"யார கேட்டு கமல் நம்ம காலேஜ் ஸ்டூடண்ட் எல்லாம் செலக்ட் பண்ணிங்க.."


"சார் இந்த இயர்ல இருந்து ரெண்டு ஸ்டூடண்ட் செலக்ட் பண்ணுங்கனு பெரிய எம்டி தான் சொன்னாங்க சார்.."


"ஓ!அத ஏன் என்கிட்ட சொல்லல…"


"சார் எப்பவுமே நீங்க இண்டர்வியூக்கு வர மாட்டிங்க சார்…நான் தான் செலக்ட் பண்ணுவேன்…எம்ளாயியா ஜாயின் பண்ணதுக்கு அப்புறம் தான் சார் நீங்க பார்பிங்க…அதான் சார் சொல்லல…சாரி சார்.."


"இட்ஸ் ஓகே!..."எனக்கு கொஞ்சம் தலவலியா இருக்கு..நா வீட்டுக்கு கிளம்புறேன்…முக்கியமான பைல் இருந்தா…வீட்டுக்கு எடுத்துட்டு வாங்கனு சொல்லிட்டு கிளம்பிட்டான் அருள்.


இன்னிக்கு இந்த சாருக்கு என்ன ஆச்சு..எப்பவும் நாம தானே செலக்ட் பண்ணுவோம் இப்ப எதுக்கு இப்டி கத்துறாரு…அவரு கண்ணு கூட கலங்குன மாதிரி இருந்துச்சு…என்னவா இருந்தா என்னடா உனக்கு…போய் வேலைய பாருனு மனசாட்சி திட்டுனதுக்கு அப்புறம்வேலைய பார்க்க போயிட்டான் கமல்.


கியூபிட்டும் ஆறு மாசம்மா இவுங்க ரெண்டு பேரையும் எப்படியாச்சு சேர்த்துடனும்னு போட்ட பிளான் எல்லாதையும் அருள் கிளோஸ் பண்ணிடான்.அதுனால கடைசியா ஒரு தடவ முயற்ச்சி பண்ணி பார்போம்…இப்பவும் சேரலைனா, ரெண்டு பேரும் பிரிஞ்சிடடும்கிற முடிவுல…மீட்டிங் அரேஞ்ச் பண்ணிடுச்சு."ஹலோ அனு,ஒரு சின்ன ஹெல்ப்…"-கமல்


"சொல்லுங்க சார்.."


"எம்டி சாருகிட்ட அர்ஜென்டா ஒரு சைன் வாங்கனும்..வாங்கிட்டு சாராகிட்ட குடுக்க முடியுமா.."


"அப்கோர்ஸ் சார்..பட் நா சைன் வாங்குனா எம்டி வேற எதாவது சொல்லுவாங்க.."

"எதுவும் சொல்ல மாட்டாங்க…கேட்டா நா பாரின் கிளையண்ட்ட ரிசிவ் பண்ண போயிருக்கேன் சொல்லுங்க…இது அர்ஜென்ட் கேள்வியா கேட்காம எடுத்துட்டு போறிங்களா.."


"ஓகே சார்.."


"மே ஜ கம் இன் சார்"-அனு

"யேஸ்.."

"சார் இந்த ஃபைல்ல சைன் வேணும்.."

"வச்சிட்டு போங்க.."


“………”


"வாட்!ஏன் இப்டி பார்த்துட்டு இருக்கிங்க.."


"பதில் சொல்லுங்க..நா கிளம்புறேன்.."


"எதுக்கான பதில்…"


"என்னோட காதலுக்கான பதில்,ஏன் காலேஜ்ல ரிசைன் பண்ணிங்கனுங்கிறதுக்கான பதில்.."


நா ஏன் இதுக்கான பதில் எல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு அருள் சொன்ன நிமிசம் அனு அவனுடைய சட்டை காலர இறுக்கி பிடிச்சிருந்தா.

எபில வர சாங்

 

Sponsored

Advertisements

Top