உன்னில் உறைந்தவன் நானே_10

#1
கிருஷ்ணபிரியா,ராமின் திருமண ரிஷப்ஷன் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்தது அந்த மண்டபத்தில்...முன் இருக்கையில் ரஞ்சன் அமர்ந்து இருக்க அவனுக்கு ஒரு புறத்தில் லலிதா அமர்ந்து இருந்தாள்.

பின் வருகையில் நான்கு இருக்கை தாண்டி பூர்ணிமா அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள். சுற்றிலும் நடப்பதை கூடவே அவ்வப்போது ஒவ்வொருவருக்கும் தகுந்த வாறு மனதிற்குள் கவுண்டர் கொடுத்தபடி...

இதில் பெரும் பாலும் சிக்குவது என்னவோ ரஞ்சன் தான்... முதலில் இவனை பார்த்ததும் இவரு பெரிய அம்மானி வாரிசு... வந்துட்டாரு கோர்ட்சூட் போட்டுகிட்டு... இப்படி நினைக்க அடுத்து யார் அருகில் வந்து பேசினாலும் மனதிற்குள் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள்.

தாயார் ஹாஸ்ப்பிடலில் துளசியோடு இருக்க... இவளையும் சாருலதாவையும்,இவளது தந்தை சங்கரனையும் அழைத்து வந்திருந்தான்.

அவனிடம் வந்து பேசியவர்கள் அனைவருமே பெரிய பெரிய ஆட்கள் என்பது பார்க்கும் போதே தெரிய... ஏனோ மனம் தான் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.

இவளது உடை கூட இளம்நீலநிறத்தில் கற்கள் முழுவதும் பதித்த லெகன்கா அணிந்து இருக்க... அவனும் கிட்டத்தட்ட அதே கலரில் சூட்டோடு வரவும் இன்னமும் கோபம் இருந்தது.

இவளது தாயார் இந்த உடையை வாங்கி வந்ததாக கூறியிருக்க.... உடை தேர்வு செய்து அனுப்பி இருந்தது என்னவோ ரஞ்சன் தான். இது அவளுக்கு தெரியவில்லை.

இங்கே இந்த ரிஷப்ஷன் முடியவும் உடனே புறப்படுவதாக முடிவு செய்திருக்க இன்னும் கூட துளசி விஷயத்தில் அவன் சொன்னது நம்பும்படியாக இல்லை... அதையும் யோசித்தபடி இருக்க... இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னாள் மறுபடியும் அவனிடம் கேட்டு தெளிவு செய்ய வேண்டும் என்பதை மட்டும் நினைத்து கொண்டாள்.

ரிஷப்ஷன் நடக்க நடக்கவே ஒரு புறம் பஃபே முறையில் உணவு பறிமாற தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டவள் ரஞ்சன் உணவு உண்டு கொண்டிருந்த இடத்தை நோக்கி நகர்ந்தாள்.

நால்வர் அமரக்கூடிய வட்டவடிவிலின இருக்கை ஒன்றில் அமர்ந்து இருக்க அருகில் வந்தவள்... இவனை பார்த்தபடி இங்கே உட்காரவா என கேட்கவும்....

அவனது முகத்தில் கூட ஆச்சர்யம் தி கிரேட் பூர்ணிமா என்கிட்ட பர்மிஷன் எல்லாம் கேட்கற ...ஆச்சர்யமா இருக்கு.. என்ன ஏதாவது சொல்லனுமா... நீ அவ்வளவு சீக்கிரம் இறங்கி வர்ற ஆள் கிடையாதே...

கொஞ்சம் பேசனும்...பூர்ணிமா சொல்லவும்...

அது தானே பார்த்தேன்...சொல்லு என்ன பேசணும்... இல்லை என்ன தெரியணும்...

நீ...நீங்க...வந்து...

பூர்ணி கூட தடுமாறறா... மரியாதை வரலைன்னா விடு ஏன் சிரமபடறே...பாதி நேரம் நீ இப்படி தானே பேசற... ஒரு விஷயம் தெரியுமா... ஒருத்தரை மனதில் எந்த இடத்தில் வச்சிக்கிட்டு இருக்கறமோ அது மாதிரி தான் வார்தையும் வரும்.
உன்னோட மனதில் எனக்கான இடமே வேற இல்லையா அதனால மரியாதை வராது...

இப்போது சண்டை போடற மூடல் நான் இல்லை. ஸாரி ரஞ்சன் ஸார். உங்கள பத்தி நான் யோசிக்க கூட மாட்டேன் அப்புறம் எப்படி நினைக்க போறேன். எப்படி கூப்பிட்டாலும் என்ன... விஷயம் இதுதான். உங்க ப்ரெண்டுக்காக நீங்க பேசினிங்க இல்லையா... என்னோடது ஒரே ஒரு கேள்வி தான்.
உங்கள் ப்ரெண்டோட வீட்டில் எப்படி சம்மதிப்பாங்க .... ஏன்னா அக்கா... கொஞ்சம் சென்சிடிவ் அவளால ஏமாற்றத்தை தாங்க முடியாது.

கேட்க நல்லா இருக்கு பூர்ணி நினைக்கவே மாட்டியா... ஒரு நாள் என்னை மட்டுமே நினைச்சுட்டு இருக்கற நாள் வரும் அப்போது பார்க்கலாம் . இப்போதைக்கு நான் உனக்கு வாக்குறுதி தர்றேன். வினோத் கட்டாயமாக உன்னோட அக்காவைதான் கல்யாணம் பண்ணிப்பான். நம்பிக்கை இல்லையின்னா அடுத்த மாதம் அங்கே வரும் போது அவனோட பேரண்சையும் கூப்பிட்டுட்டு வரேன் முறைப்படி நிச்சயம் பண்ணிக்கலாம். அது நடந்த பிறகு உனக்கு நம்பிக்கை கட்டாயம் வரும்ன்னு நினைக்கிறேன். இந்த நல்ல செய்தியை கொண்டாடற வகையில் இந்த ஸ்வீட்ஸ்சை சாப்பிடு என்றபடி கையில் ஸ்பூனில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஸ்வீட்சை எதிர்பாராத நேரத்தில் அவளது வாயில் ஊட்டி இருந்தான்.

ரஞ்சன் என்ன செய்யறிங்க என வாயில் இருந்ததை ஒரு நிமிடத்தில் துப்பியிருக்க... எதிர் பாராத வகையில் அவன் அணிந்திருந்த உடையில் தெரித்திருந்தது...சட்டென தோன்றிய உணர்வு யோசிக்காமல் துப்பியிருக்க நிச்சயமாக இதை எதிர் பார்க்க வில்லை...

ஆனால் ரஞ்சன் முகத்தில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது. இதை தான் சொன்னேன். ஸ்டேட்டஸ் பார்த்து பழகணும்ன்னு... ஏன் சொன்னேன்னு புரியுதா...என்றைக்கும் உனக்கு அது வரப்போறது இல்லை. பிடிக்குதோ இல்லையோ மேனர்ஸ்ன்னு ஒன்று இருக்கு... ஷிட்... உன் கிட்ட பேசியே இருக்க கூடாது. சாப்பிடற மூடே போச்சு கோபமாக பேசியவன் எழுந்து நடக்க...

இப்போது தான் அவள் செய்த காரியம் புரிய பின்னோடு இவளும் எழுந்து அவனோடு சென்று கொண்டிருந்தாள்.

ஸாரி ரஞ்சன் ஸார் மன்னிச்சிடுங்க...
 
#2
இவள் பின்னோடு அவனிடம் ஸாரி கேட்டபடி வர...

லுக் பூர்ணி இனி என்னுடைய கண் முன்னாடி நிற்காதே... பயங்கர கோபத்தில் இருக்கிறேன். யோசிக்காமல் பளார்னு கன்னத்தில் ஒன்று வச்சாலும் வச்சிடுவேன். முன்னாடி சொன்னது தான் உங்கள் மாதிரி ஆளுங்கல வைக்கவேண்டிய இடத்தில் வைக்கணும். இடம் கொடுத்தா இந்த மாதிரி தான் நடக்கும் . உன்கிட்டேயும் பேசினேன் பாரு என்னை சொல்லணும்...

கோபமாக பேசியபடி நகர்ந்திருக்க...
அதன் பிறகு அவனை அவள் பார்க்கவில்லை. ஹாஸ்ப்பிடலில் பில்லை ஏற்கனவே கட்டியிருக்க... துளசியை அழைத்து கொண்டு கிளம்பி இருந்தனர்.

ரயில் நிலையம் வரை வந்தவன் கூட இவளை திரும்பி கூட பார்க்கவில்லை. இவருக்கும் அவனின் கோபம் தான். செய்தது சிறிய செயல் தான் அதற்கு அவன் பேசியது அதிகம் என நினைத்தவள் அவனின் முகம் கூட பார்க்காமல் கிளம்பி வந்திருந்தாள்.

வந்து ஒரு வாரம் முடிந்த பிறகுமே ரஞ்சன் கடைசியில் பேசியது காதிற்குல் ஒலித்துக்கொண்டே இருந்தது. போடா... நீ பணத்தில் உயர்ந்தன்னா அது உன்னோட என்னைய எதுவும் செய்யாது என நினைத்தவள் சற்றே அவனை மறக்க நினைத்து அதில் வெற்றியும் கண்டு இருந்தாள். ஆனாலும் சற்றே கவலை மட்டும் துளசியை நினைத்து மனதின் ஒரத்தில் பயம் இருந்து கொண்டே இருந்தது.

ஏன் என்றால் இப்போது தினமுமே வினோத் துளசியிடம் செல் பேசியில் பேசிக்கொண்டு இருந்தான். ரஞ்சன் பேசியது போல... இவனும் குறைந்தவன் அல்லவே...ரஞ்சன் வளர்ந்த அதே சூழலில் தானே இவனும் வளர்ந்து இருப்பான்..

இவனும் அப்படிபட்ட சூழ்நிலையில் வளர்ந்த போது ரஞ்சனின் குணம் இவனுக்கும் இருக்குமே... கோபமாக பேசினால் அழ மட்டும் தானே துளசிக்கு தெரியும் திரும்ப பேச கூட தெரியாதே... இப்படியாக யோசனையில் இருக்க...

இதை எதை பற்றியும் கவலை இல்லாமல் அண்ணபூரனி வேறு உலகத்தில் இருந்தார். அவருடைய ஆசை அவரது கனவு எல்லாமே பணக்கார இடத்தில் தனது பெண்களுக்கு மாப்பிள்ளை பார்ப்பது இதோ துளசிக்கு இந்த இடத்தில் முடிந்து விட்டாள் அடுத்து இருப்பவர்களுக்கும் இது போலவே உயர்ந்த இடத்தில் வரும் என நினைக்க ...

நிச்சயத்திற்கு தாய் தந்தையை அழைத்து வந்து பேசுகிறேன் என கூறியிருந்த வினோத்தை எதிர் நோக்கி காத்திருந்தார். கூடவே பூர்ணிமாவிற்கு கூட மாப்பிள்ளை என மனதில் ஒருவனை உரு போட்டு கொண்டிருந்தார். இதை இவர் பூர்ணிமாவிடமோ சங்கரனிடமோ இது வரைக்கும் சொல்லவில்லை.

மனதில் நினைத்ததை கூட அடுத்த இரண்டு நாளில் கூறியிருந்தார். அன்று மதிய நேரம் தயாளன் வந்திருக்க... பவானி கூட அன்று காலை முதலே பூர்ணிமாவோடு சுற்றி கொண்டு இருந்தாள்.

மதிய உணவிற்கு அனைவரும் அமர்ந்து இருக்க பூர்ணிமா அருகில் பவானி எதிர் புறத்தில் சங்கரனோடு தயாளன் பூர்ணிக்கு மறுபக்கத்தில் துளசி அமர்ந்திருக்க கிண்டலடித்தபடியே ஒருவருக்கு ஒருவர் பரிமாறிய படி உணவு உண்ண...

அண்ணபூரனி தனது ஆசையை வெளிப்படையாக சொன்னார். துளசிக்கு நான் ஆசைபட்டமாதிரி வாழ்க்கை அமையப்போகுது அதே மாதிரி நம்ம பூர்ணிமாவிற்கும் நான் நினைத்தமாதிரி நடந்தா நல்லா இருக்கும்.

பூர்ணிமா கூட விளையாட்டு போல என்ன மா நினைச்சே என கேட்க....

நம்ம தயாவுக்கு உன்னை திருமணம் செய்ய நான் முடிவு செஞ்சிருக்கிறேன். இது நடக்கும் தானே பூர்ணி... கேட்ட பூர்ணிமா அதிர்ச்சியாக பார்த்தாள் என்றால் பவானியின் கண்களில் நீரோ குளமென கட்டியிருந்தது.

தயாளன் கூட உணவு உண்பதை நிறுத்தியபடி பார்க்க....

அம்மா யாரை கேட்டு முடிவு பண்ணற... நீயே முடிவு செஞ்சிடுவியா... என்கிட்ட முதல்ல கேட்கணும்ன்னு தெரியாதா...

சரி இப்போது கேட்டாச்சு இல்லையா பதில் சொல்லு...

எத்தனை முறை கேட்டாலும் இது தான் என்னோட பதில் இப்போது மட்டும் இல்லை எப்போதும் தயாவை கட்டிக்க மாட்டேன் என்றபடி சாப்பிடாமல் எழுந்து ஓடியிருந்தாள்.

அண்ணபூரனியோ தயா தம்பி அவள் விளையாட்டு போல சொல்லிட்டு போறா ...நீங்க தப்பா நினைக்காதிங்க நான் அவகிட்ட பேசறேன்...என்றவர் பூர்ணிமாவை தேடி பின்னோடு செல்ல...அவருக்கு அடுத்ததாக அண்ணபூரனியை தொடர்ந்து பூர்ணிமாவை தேடி சங்கரன் எழுந்து சென்றார்.

பவானி அழுதபடியே தனது வீட்டை நோக்கி சென்றிருந்தாள். அவளது முகமே நிலையை சொல்ல... தமாளனுக்கு கூட இப்போது யாரை சமாதான படுத்துவது தெரியாமல் திகைத்து நின்றான்.

தொடரும்.
 

Sponsored

Advertisements

Top