உன்னில் உறைந்தவன் நானே_12

#1
அன்றைய விடியல் பூர்ணிமாவிற்கு சற்றே மகிழ்ச்சியாக இருந்தது எழும் போதே கண்களில் விழுந்தது துளசியின் மகிழ்ந்த முகத்தை தான்.

"குட்மானிங் கா செம ஹேப்பியா இருக்கற போல முகமே அவ்வளவு ப்ரைட்டா இருக்கு".

ஆம் என்பது போல தலையசைத்தவள் "வினோத் அவங்க குடும்பத்தோடு இன்னும் இரண்டு நாளில் வர்றதா சொல்லி இருக்கறாங்க..நேற்று ஃபோன்ல சொன்னாங்க.."

ம்.. என்றபடி நகர்ந்தவள் காலேஜிற்கு புறப்பட்டாள். மனதில் மட்டும் வருபவர்களுக்கு துளசியை பிடிக்க வேண்டுமே என்ற எண்ணமும் கூடவே குறை சொல்லும் அளவிற்கு அழகிலோ வசதியிலோ குறைந்தவர்கள் கிடையாதே அப்புறம் என்ன? கட்டாயமாக பிடிக்கும் என நினைத்தபடி புறப்பட்டாள்.

பவானியை அழைக்க செல்லும் போது தயாளன் அவளையும் அழைத்தபடி தனது காரில் எதிரில் வந்து கொண்டு இருந்தான். பூர்ணிமா இன்றைக்கு உங்கள் காலேஜ் பக்கம் தான் எனக்கு வேலை.. வண்டியில் ஏறிக்கோ இரண்டு பேரையும் இறக்கி விட்டுடறேன்.

அவனது கேள்விக்கு பதிலாக என்ன தயா நெல்லுக்கு போற தண்ணீர் அப்படியே புல்லுக்கும் பாயுதா.. நீங்க ரெண்டு பேரும் போங்க நான் வழக்கம்போல பஸ்ல போயிக்கறேன்.

நிஜமாகவே அங்கே தான் வேலை வண்டியில் ஏறிக்கோ நீ வரலைன்னா உன்னோட ப்ரெண்டும் இங்கேயே இறங்கினாலும் இறங்கிடுவா..

சிரித்தபடியே வண்டியில் ஏறி அமர பொதுவாக பேசியபடி வண்டியை இவளது காலேஜ் நோக்கி சென்று கொண்டு இருந்தான். இவனது கேள்விக்கு சிரித்தபடி பதில் கொடுத்தவள் பார்வை ரோட்டில் வேடிக்கை பார்ப்பதில் இருந்தது.

திருப்பம் தாண்டவும் எதிரில் தென்பட்ட அந்த காஃபி ஷாப்பில் அமர்ந்து இருந்தது இவளது தங்கை சாருலதா,இவள் பார்த்து கொண்டு இருக்கும் போதே கைகளில் காஃபி கப்பை சுமந்தபடி திவாகரன் இவள் அருகில் அமர இவள் பார்க்கும் போதே இவளை சுமந்தபடி வந்திருந்த வண்டி நகர்ந்து இருந்தது.

சாருலதா இன்று காலையிலேயே ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது என வேகமாக கிளம்பி வந்தது இவளது கவனத்திற்கு வந்தது. ஏற்கனவே கடைசியாக பார்த்த போது திவாகரனை திட்டிவிட்டு வந்திருக்க இன்றைய இவர்களின் நெருக்கம் பூர்ணிமாவை யோசிக்க வைத்தது.
பேச்சு கூட முற்றிலும் நிறுத்தி இருக்க..தயாளன் இவளை அழைத்து கொண்டு இருந்தான்.

பூர்ணி என்ன ஆச்சு. திடீரின்னு அமைதியாகிட்ட..

இல்லை தயா.. வேற ஒரு யோசனை நீங்க என்ன சொன்னிங்க..

சரிதான். என்ன கிண்டல் பண்ணிட்டு நீ தான் வேற ஏதோ கனவுலோகத்தில் இருக்கற போல இருக்கு. சொன்னது எதையும் கவனிக்கலையா..

ஸாரி.. தயா.. வாய்தான் தன் போக்கில் சொன்னதே தவிர யோசனை முழுவதும் சாருவே நிறைந்து இருந்தாள். ஏற்கனவே துளசி விஷயமே தெளிவில்லாமல் இருக்க இப்போது இவளின் நடத்தை கவலை கொள்ள வைத்தது. கடைசியாக வந்து நின்றது என்னவோ ரஞ்சனின் முகம் தன் போக்கில் வாய் கூட அவனை திட்டி தீர்த்தது. எல்லாம் இவனால தான் அன்றைக்கு அவனோட அத்தை பொண்ணு கல்யாணத்துக்கு போகாமல் இருந்து இருந்தால் இன்றைக்கு இத்தனை பிரச்சினை வந்து இருக்காது.

பரவாயில்லை விடு பூர்ணி காலேஜ் வந்தாச்சு இரண்டு பேரும் இறங்கிகோங்க..பை என புறப்பட்டு செல்ல..

அப்போதும் அமைதியாக நடந்து சென்றாள். பவானி கூட என்ன ஆச்சு பூர்ணிமா நல்லா தானே வந்தே இப்போது ஏன் இத்தனை யோசனை?

ஒன்றும் இல்லை வா காலேஜ் முடியட்டும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம். மாலை வரையில் அங்கே இருந்தவள் வீட்டிற்கு வர அப்போதும் சாருலதா வீட்டிற்கு வர வில்லை சாருலதா வீட்டிற்கு வரும் போது இரவு ஏழு மணியை தாண்டி இருந்தது.

உள்ளே வரும் போதே பூர்ணிமா இவளை கேட்டிருந்தாள். ஏன் இவ்வளவு நேரம் என..

அவளும் பூர்ணிமாவிற்கு சளைத்தவள் இல்லையே! ஏன் கேட்கற.. நான் அம்மாகிட்ட சொல்லிட்டு தான் போனேன்.

என்ன சொன்ன..

என்ன சொல்லணும் ஸ்கூல்ல இன்றைக்கு டைம் ஆகும்ன்னு சொல்லிட்டு போனேன். ஏன் இத்தனை கேள்வி கேட்கற..

யாரு கிட்ட காது குத்தற.. ஸ்கூல்ல இன்றைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இல்லை உன்னோட ப்ரெண்ட் கிட்ட கேட்டுட்டேன்.

ஓ.. என்ன நீ வேவு பார்க்கற.. என்ன சொல்ல வர்ற இப்போ..

உன்னை எதுவுமே சொல்லல அம்மாகிட்ட பொய் சொல்லிட்டு எங்க சுத்திட்டு வர்ற.. ஸ்கூலுக்காவது போனியா இல்லை அதுவும் போகலையா..

இப்போ என்ன தெரியணும் ஸ்கூலுக்கு இன்றைக்கு போகலை ப்ரெண்டுங்க கூட படத்துக்கு போனேன்.அதுக்கு என்ன இப்போ..யாரும் செய்யாதத நான் செய்யல ரொம்ப மிரட்டற என்ன விடவும் பெரியவ தான் அதுக்காக பயபடுவேன்னு நினைக்காத..எனக்கு எல்லாம் தெரியும்.

எந்த ப்ரெண்டு கூட..

தெரிஞ்சு என்ன செய்ய போற.. எதுவும் முடியாதுல்ல அப்புறம் எதுக்கு கேட்கற.

சின்ன பொண்ணாச்சே பொறுமையாக கேட்டா ஒவரா பேசற.. யார் கொடுக்கிற தைரியம் அந்த தினகரனா அப்பா கிட்ட சொன்னா தோளை உறிச்சிடுவாங்க போனா போகட்டும்ன்னு பார்த்தா எவ்வளவு பேசற..லாஸ்ட் டைம்மே சொன்னேன் ஒழுங்கா இருன்னு..அம்மா கிட்ட பேசற மாதிரி என்கிட்டேயும் பேசி பார்க்கறையா.
 
#2
இங்கே பாரு காலையில் காபி ஷாப்பில் பார்த்தேன் தெரிஞ்சவங்க
அப்படிங்கறதால ரெண்டு நிமிடம் பேசினேன் அதுவும் அவங்க பேசினதால தான். நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு ஏதாவது கதை சொல்லாத..

அப்போ அந்த பையன் கூட வெளியே சுத்தல..

காட் ப்ராமிஸ் இல்லை கா ..நம்பு என்னுடைய ப்ரெண்டுங்க கூடதான் போனேன் இனி போகலை சரியா. அப்பா கிட்ட வேண்டாம் தெரிஞ்சா திட்டு விழும். அதுவும் ஸ்கூல் கட் அடிச்சேன்னு தெரிஞ்சா அவ்வளவு தான்.

ம்.. இனி ஒழுங்காக இரு என நகர்ந்து சென்றாள் பூர்ணிமா. துளசியை தேடி செல்ல.. துளசியோ அவங்க இங்கே வர்றதுக்கு புறப்பட்டாச்சுன்னு போன் பண்ணினாங்க..மகிழ்ச்சியில் சொல்ல..

ஓகே துளசி வரட்டும் பார்த்து பேசிக்கலாம்.

பூர்ணி அவங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கும் தானே..பிடிக்கலைன்னு சொல்லிட்டு மாட்டாங்கே..

அதெல்லாம் மாட்டாங்க துளசி என்னுடைய அக்காவுக்கு என்ன குறை.. அழகான ,அறிவான, அன்பான பொண்ணு நீ கிடைக்க அந்த வினோத் தான் நிறைய புன்னியம் செஞ்சு இருக்கணும். வா உள்ளே போகலாம்.அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

அடுத்த நாள் காலையிலேயே பவானியை பார்க்க சென்றிருந்தாள் பூர்ணிமா. முக்கிய வேலையாக வெளியில் செல்ல வேண்டி இருப்பதால் பவானியோடு கூட இருக்க முடியுமா என தயாளன் கேட்டிருக்க தந்தையிடம் சொல்லி விட்டு இங்கே வந்திருந்தாள்.

பவானியோடு டைனிங் ஹாலில் அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருக்க.. எதிர் பாராத விருந்தாளியாக வந்து இருந்தார் கிருஷ்ணபிரியாவின் தாயார் அலமேலு..வாங்க அன்ட்டி என வரவேற்க.. அவரோ பார்த்தது பூர்ணிமாவை மட்டும் தான் நீ.. சங்கரன் பொண்ணு பூர்ணிமா தானே..

இவரது கேள்விக்கு ஆம் என்பது போல தலையாட்டல் மட்டுமே இவளிடம் இருந்து வந்தது. ஏற்கனவே அவரது அலட்டல் சுத்தமாக பிடிக்காது அப்படி இருக்கையில் இவளிடம் பேசினால்..வரவேற்பாக சிறு புன்னகை கிடையாது சற்றே அலட்சிய பார்வையை அவருக்கு தர..அவளிடம் இருந்து பார்வையை பவானியிடம் திருப்பியவர் சொல்ல வந்ததையே மறந்துவிட்டேன் நாளைக்கு நீயும் தயாளனும் என்னுடைய வீட்டுக்கு விருந்துக்கு வாங்க.. புது மண தம்பதிகளை வீட்டிற்கு அழைப்பது அங்கே பிரபளமாக இருந்தது.

சரிங்க அன்ட்டி என கூற.. நகர்ந்தவர் பூர்ணிமாவை பார்த்து நீயும் வாயேன் உன்னோட ப்ரெண்ட் கூட.. நீ இல்லாம எங்கேயும் அவளை பார்த்தது இல்லை அதனால தான் கூப்பிடறேன்.என்ன பவானி இவளையும் கூப்பிட்டுட்டு வருவேல்ல.. வரணும்... வா பூர்ணிமா .

அதே திமிர் நடையோடு அவர் புறப்பட்ட.. பவானி அப்போதே ஆரம்பித்து விட்டாள். ப்ளீஸ் நீயும் வா எனக்கு கம்பட்டபிலா இருக்கும் ப்ளீஸ் பூர்ணி வரமாட்டேன்னு சொல்லாத..

அந்த அம்மாவை பார்த்தாலே எனக்கு பிடிக்காது அங்கே போனால் கூட ஏதாவது வில்லங்கமாதான் பேசும் ப்ளீஸ் பவானி என்ன விட்டுடேன்.

ப்ளீஸ் பூர்ணி எனக்காக.. உனக்கே தெரியுமே என்னை பற்றி அங்கே தயா பிசினஸ் பேச நகர்ந்துட்டா ரொம்ப கஷ்டம் எனக்கு எப்படி பேசணும்ன்னு கூட தெரியாது வேடிக்கை தான் பார்ப்பேன்.

அம்மா கிட்ட கேட்கணும் பவானி அவங்க வேண்டாம்னா என்னால வர முடியாது புரிஞ்சிக்கோ..

அன்ட்டி வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க நீ வர்றேன்னு சொல்லு.. எத்தனை முறை தான் பவானியிடம் மறுப்பது கடைசியில் சரி என்பது போல தலையாட்ட. அப்போதும் விடாமல் ஏதேதோ சொல்லி கடைசியில் உறுதியாக இவள் வருகிறேன் என சொன்ன பிறகே இவளை விட்டாள் பவானி.

அப்போது தெரியவில்லை அடுத்த நாளில் நடக்கப்போவது அனைத்துமே அவளுக்கு பிடிக்காதது மட்டும் தான் என்பது!!!

தொடரும்.
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top