உப்புக் கறி (மட்டன்) 😋😋

#1
Screenshot_2019-11-14-22-53-29_1573752249482.jpg
தேவையான பொருட்கள்:-
மட்டன் - கால் கிலோ
சாம்பார் வெங்காயம் - கால் கிலோ
வரமிளகாய் - 2
மிளகு சீரகத்தூள் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:-
முதலில் குக்கரில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்வதற்கு முன்பே வரமிளகாயை கிள்ளி போடவும் பின்னர் அதனுடன் கழுவிய மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் விட்டு வந்து அந்த தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். பின்னர் அதில் 1 1/2 தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். சின்ன வெங்காயத்தை இரண்டிரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும். மட்டன் முக்கால் வாசி வெந்ததும் குக்கரை அணைத்து விடவும். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை நன்கு வதக்கவும். பின்னர் குக்கரை திறந்து வதக்கிய சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். மிக்ஸியில் மிளகு, சீரகம் சிறிது உப்பு சேர்த்து பொடித்து கொள்ளவும். பின்னர் மட்டனுடன் 4 டீஸ்பூன் மிளகு சீரகத்தூள் சேர்க்கவும். காரம் தேவைக்கேற்ப மிளகு சீரகத்தூள் சேர்த்து கொள்ளலாம். பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பின்னர் உப்பு சரிபார்த்து தொடர்ந்து வதக்கவும். தண்ணீர் வற்றி வரும் போது மட்டன் நன்கு வெந்து விடும். பின்னர் அடுப்பை அணைத்து 2 நிமிடங்கள் கழித்து வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
 
Last edited:
#10
உப்புக் கறியில் கடைசியாக உப்பு சேர்க்கனுமா
இல்லை மா பாதி உப்பு தண்ணீர் விட்டு வேக வைக்கும் போது மீதி மிளகு சீரகத்தோட பொடிசெய்து
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top