• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உருகாதே வெண்பனிமலரே.._14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

K

kavi sowmi

Guest
காலை ஏழு மணியை தொடவும் இவர்கள் அபிநந்தன் வீட்டிற்கு வந்து இறங்கினர். கால்டாக்சியை விட்டு இறங்கும் முன்னமே அத்தை என்ன சத்தமிட்டபடி ஒடி வந்த பூஜாவை அதே மகிழ்ச்சியோடு தூக்கியவள்... தன்னோடு அணைத்தபடி பூஜாகுட்டி எப்படி இருக்கறிங்க என அவளிடம் கொஞ்சியபடி வீட்டிற்குள் நுழைந்தாள். பார்த்த அபி தான் அப்படியே அதிர்ச்சியில் சிலையாக நின்றிருந்தான். எந்த கேப்லடா.. இந்த அளவுக்கு பாச பயிரை வளர்த்தாங்க என்ன நினைக்க...

அதை விட ஆர்பாட்டமாக பின்னால் தாரிகா வந்திருந்தாள். ஹாய் அபி அண்ணா. .. உனக்கு முன்னாடி நான் தான் வந்தேன் பார்த்தாயா... இவனிடம் பேசிக்கொண்டு இருக்க மதுசூதனனை வரவேற்ற மூர்த்தி வாடா எத்தனை நாள் ஆச்சு... இடையிடையே வான்னா கேட்கவா செய்யற.. என்ன வினவியபடி அழைத்து சென்றார்.

பூஜாவோடு உள் நுழைந்த மலர் அவர்களது ஹாலிற்குல் பிரவேசித்தவளை அபியின் தாய் தேவகி வரவேற்றார். வாம்மா மலர் நிஜமாகவே பூவை மாதிரி தான் இருக்கற.. வா.. வா வரவேற்று அமர வைக்க.. அமர்ந்தபடி சுற்றிலும் பார்க்க அபியினுடைய வீடு இவர்களது வீட்டை விடவும் இருமடங்கு பெரியது. பெரிய ஹால் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் உட்புறமிருந்து துவங்க இரண்டு மாடிகளை கட்டி இருந்தனர்.

இவளை அமர வைத்தவர் வந்தவர்களுக்கு ஜூஸ் எடுத்து வர சென்றிருக்க.. பின்னால் தாருவோடு பேசிக்கொண்டு வந்தவன் இவள் அமர்ந்து இருப்பதை பார்த்து இவள் அருகில் அமர அவனை தொடர்ந்து அடுத்த இருக்கையில் தாரிகா அமர்ந்தாள். பூஜாவோ மாமா என இவனிடம் தாவி இருந்தாள்.

மடியில் தாங்கியவன் எங்க வீடு பிடிச்சிருக்கா என கேட்க...

அவனுக்கு பதில் சொல்லாமல் பாட்டிய எப்ப பார்க்க போகலாம் என கேட்க... இதை கேட்கவே திணறி இருந்தாள். பூஜா இப்போது அவனை தாண்டி அவனது தங்கை தாரிகாவிடம் தாவி இருந்தாள். அவளது வீட்டிலும் அருகில் அமர்வான்தான் ஆனாலும் இவ்வளவு அருகில் அமர்ந்தது இல்லை. அபியிடைய தாயார் தன்னை பற்றி என்ன நினைப்பார் இதை நினைத்தவளுக்கு இன்னும் பயமாக இருந்தது.

தேவகி ஜூஸ் எடுத்து வரவும் வேகமாக எழுந்தவள் அவரிடம் அன்ட்டி நான் எல்லோரும் தர்றேன் என வாங்க..

என்னமா... நாங்க உன்ன கவனிக்கணும் நீ எங்கள கவனிக்க வர்ற...தாரு இதையெல்லாம் நீ கத்துக்கோ..

ஓ... கத்துக்கலாமே.. மலர் இத குடு அப்படியே இந்த இடத்தில் உட்காரு என எழுந்த இடத்தில் அமர வைத்தவள் இப்ப ஜஸூ குடி நான் அப்பாவுக்கும் அங்கிள்க்கும். கொடுத்திட்டு வரேன். இந்த அப்பாவுக்கு பேச ஆள் கிடைச்சா போதும் அங்கேயே நின்றிடுவாங்க... இன்னமும் போர்டிகோவில் பேசியபடி நின்ற தந்தையை நோக்கி சென்றாள்.

மறுபடியும் அவன் புறம் அமர நன்றாக அவள் அவள்அருகில் நெருங்கி அமர்ந்தான. பக்கத்தில் உட்கார்ந்ததால தானே எழுந்து ஓடின என்ற கேள்வியோடு..

பார்த்தா என்ன நினைப்பாங்க... நகர்ந்து உட்காருங்க... பாட்டிய எப்படி பார்க்க போகலாம்..

முதல்ல கைல இருக்கிறதா குடி குளிச்சிட்டு சாப்பிட்ட பிறகு போகலாம்... பாட்டி பின்னாடி இருக்கற ரூம்ல இருக்கறாங்க... எழுந்தவன் இரு தாருவ வரச்சொல்லறேன். ரெடி ஆனதும் போகலாம் என்றபடி பின் புறப்பட்டு தோட்டத்திற்குள் நுழைந்தான்.

அடுத்த ரெண்டாவது நொடி தாரு வர..அண்ணா எங்க மலர் ...

இந்த வழியா போணாங்க...

சூப்பர் வா...வா... இன்றைக்கு அவன் காலி.. இவளது கை பிடித்து இழுத்தவள் பின் புறம் செல்ல அங்கே அபி டியூப்பில் தண்ணீர் பாய்த்துக்கொண்டு இருந்தான். இங்கே எப்ப வந்தாலும் தண்ணீர் விட வந்திடுவான். இவன்கிட்ட எனக்கு ஒரு பாக்கி இருக்கு... வா..

என்னது...

வா...வா... நான் சொல்லறேன் லாஸ்ட் டைம் வந்தப்ப தண்ணீர் விடறேன்னு என்னைய குளிப்பாட்டி விட்டான். இன்றைக்கு மாட்டிக்க போறான். அவனது அருகில் நெருங்கியவள் ஒரு நொடியில் அவனது கையில் இருந்து பிடிக்கியவள் அவனது மேல் தண்ணீர் விட அடுத்த நொடி கீழே போட்டு விட்டு அண்ணா நான் வின் ஆயிடுட்டேன். சொன்னமாதிரி தண்ணீர் விட்டுவிட்டேன் என சிரிக்க...ஒரு நொடியில் அதை கையில் எடுத்தவன்
இருவர் மீதும் தண்ணீர் விட ஆரம்பித்தான்.

அபி வேண்டாம் என மலரும் அண்ணா வேண்டாம் என தாரிகாவும் கத்த மாமா என ஓடி வந்த பூஜாவிடம் பைப்பை தந்தவன் அவளை தோளில் தூக்கியபடி நீ அடி செல்லம்... மாமா வேடிக்கை பார்க்கிறேன் என நிற்க..அவர்கள் நகர்ந்த பக்கம் துரத்தியபடி தண்ணீரை பிய்ச்சி அடிக்க... பூஜாவிற்கு அவ்வளவு சந்தோஷம். .. சிரித்தபடி அம்மாவின் மேல் மலரின் மேல் என மாறி மாறி தண்ணீரை ஊற்றிக் கொண்டு இருந்தாள். அடுத்த பத்தாவது நிமிடம் தேவகி துண்டோடு வந்திருந்தார். தெரியுமே இது தான் நடக்கும்ன்னு பூஜாவுக்கு சளி பிடிச்சிட போகுது... இறக்கி விடு அபி.. போய் துணியை மாத்திட்டு வாங்க... பாட்டி ரொம்ப நேரமாக காத்து இருக்கறாங்க உங்கள் பார்க்க...

ஸாரி மா...இதோ போகிறேன் என அபியும் கூடவே இவர்களும் நகர்ந்தனர்.
 




K

kavi sowmi

Guest
காலை உணவை முடித்து விட்டு அபி இவளையும் அழைத்து கொண்டு பாட்டியை காண அழைத்து சென்றான். பின்புற தோட்டம் தாண்டவும் தனியாக அமைந்து இருந்தது அந்த வீடு... பாட்டி ஆரம்பத்தில தாத்தா கூட வாழ்ந்த வீடு இங்கே வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க... இப்போதைக்கு பாட்டி கூட ஒரு நர்ஸ் மட்டும் இருக்கறாங்க... அப்புறம் அம்மாவுக்கு வேலை முடிஞ்சதும் பாட்டி கூடத்தான் இருப்பாங்க... இவளுடன் பேசியபடி அழைத்து செல்ல..இவள் உள் நுழையவும் அபியின் பாட்டி..

அபி.. வா... வா.. காலையில் இருந்து
உன்னை தான் தேடறேன் என கூறியவர் வீல் சேரில் கட்டில் அருகில் அமர்ந்திருந்தார். அவனுக்கு பின்னால் நுழைந்த மலர் பாட்டியிடம் நெருங்கியவள் ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி என காலில் விழ அதே நேரம் அபியும் அதையே சொல்லி காலில் விழுந்திருந்தான். ஓரே நேரத்தில் இருவரின் தலையிலும் தனது கைகளை வைத்தவர் இருவரையும் ஆசிர்வதித்தார்.

ரெண்டு பேரும் தீர்க்க ஆயுலோட நல்லபடியாக வாழுங்க என உறைத்தவர் இருவரின் கையையும் பிடித்து கட்டிலில் அமர்த்தியபடி...
ஏண்டா ரெண்டு வருசமா வராமல் இருந்த.. என பேரனிடம் சண்டையிட ஆரம்பித்தார்.

மலரின் நிலை வேறாக இருந்தது. ஓரே நேரத்தில் அவனும் அவளோடு விழுந்ததே அவளுக்கு வேறு மாதிரியான உணர்வில் இருக்க.. அவளையும் நகர விடாமல் அவளோடு நெருங்கி நின்றவனை அவளால் முறைக்கு கூட முடியவில்லை. மனதிற்குள் நினைத்து கொண்டாள் இவனோட வீட்டுக்கு வரவும் இவனுக்கு குளிர் விட்டு போயிடுச்சி என..

அவனிடம் சற்று நேரம் பேசியவர் இவளிடம் திரும்பி பேச ஆரம்பித்தார். நல்லா இருக்கறயாடா... உன்னை கடைசியாக நாலு வயதில் பார்த்தது. திரும்ப பார்க்க இவ்வளவு நாள் ஆகி இருக்கு...

அபியோ..டோன்ட் பீல் என்னோட செல்ல பாட்டி இனிமேல் அடிக்கடி பார்க்கலாம். என்றவன் அவரது கன்னம் தொட்டு கொஞ்ச..

போடா... நீ சொல்லாத.. நீ சொல்லு ராசாத்தி நான் கேட்கறேன் .

இனி அடிக்கடி வரேன் பாட்டி. ..

போதுமா .. அவளே சொல்லிட்டா...அபி கூற...

சரிடா நான் மாத்திரை போட்டுவிட்டு கொஞ்சம் நேரம் படுக்கறேன். நீங்க போறதுன்னா போய்கங்க.. இவர்களை போகச்சொல்லவும் அவனோடு வெளியேறியவள் வாசலை தாண்டவும் அவனோடு சண்டையிட ஆரம்பித்தாள். ஏன் அபி இப்படி செய்யறிங்க.. காலையில் ஹால்லயும் அப்படி நெருங்கி உட்காரறிங்க இங்கேயும் அப்படியே செய்யறிங்க.. பார்க்கறவங்க என்ன பற்றி என்ன நினைப்பாங்க...இது உங்க வீடுங்கறதால இப்படி செய்யறிங்களா...

கேட்ச் பண்ணிட்டாய்யா.. என மனதில் நினைத்தவன் இதோ பாரு என்னோட வீட்ல எப்பவும் இப்படி தான் இருப்பேன். உனக்காக எதுவும் மாத்தல.. யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க... பேசியபடி நடக்க சற்று தொலைவில் கார்டனில் இருந்து சேரில் அமர்ந்தபடி மதுசூதனனும் மூர்த்தியும் பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது.

இருவரும் மகிழ்ச்சியாக சிரித்தபடி பேசிக்கொண்டு இருக்க இவளையும் அறியாமல் நின்று பார்த்து கொண்டு இருந்தாள்.

என்ன பார்க்கற மலர்...

என்னுடைய அப்பாவும் உன்னோட அப்பாவும் அவ்வளவு ப்ரெண்ட்சா... எனக்கு தெரியவே தெரியாது. அப்பா முகத்தில் எவ்வளவு சந்தோஷம்... எனக்காகவா எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட இருந்தாங்களா..

நீ சொல்லறது புரியலை...

எனக்கு அப்பா தான் உலகம். வேற எங்கேயும் போக பிடிக்காது. அதனாலயே எங்கேயும் போனது இல்லை... இப்ப தான் தோணுது நான்தான் தப்பு பண்ணிட்டனோன்னு...வாங்க அவங்க பேசட்டும் நாம உள்ள போகலாம்.

அவள் பேசி விட்டு வீட்டிற்குள் நுழைய அப்போதுதான் அவனுக்கும் புரிந்தது. அவள் வருத்தபடறா...நிச்சயமாக அப்பாவோட ஆசையை பற்றி யோசிப்பா... இல்லை யோசிக்க வைக்கணும்...இவன் இவ்வாறு நினைத்தபடி நகர்ந்தான்.

மாலை மூன்று மணியை தாண்டி இருக்க இவளையும் தாரிகாவையும் அழைத்து கொண்டு ஷாப்பிங் எனக்கு கிளம்பி இருந்தான். ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி வீட்டுற்கு வரும் போது இரவு ஏழு மணியை தொட்டிருந்தது.இரவு உணவை உண்டவள் இவனுக்கும் தாரிகாவிற்கும் குட்நைட் உரைத்து விட்டு தனக்கென ஒதுக்கி இருந்த அறைக்குள் நுழைந்தவள் அன்றைய நாளில் நடந்ததை மனதிற்குள் அசை போட....

அன்றைய நாளில் அவனோடு சுற்றியது கடைசியாக....அபியோடு சேர்ந்து பாட்டியின் காலில் விழுந்ததே திரும்ப திரும்ப கண் முன்னாள் வந்து கொண்டு இருந்தது.

வெண்பனி மலரே உருகாதே!!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top