• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உருகாதே..வெண்பனிமலரே_10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

K

kavi sowmi

Guest
அவன் உன் கிட்ட எதுவுமே சொல்லலையா...கேட்ட நிஷாவை பார்ந்து பதில் சொன்னவள்...

இல்ல நிஷா..இங்கே வரச் சொன்னான் அவ்வளவு தான்...

நீயே சொல்லு மலர் எவ்வளவு ஹேப்பியா அன்றைக்கு பார்ட்டி போச்சு. இவன் அன்றைக்கு என்ன செஞ்சான் தெரியுமா...இங்கே பாரு என தனது மொபைலில் இருந்த மெசேஜை நீட்டினாள். என்ன அந்த ஹோட்டல் மாடிக்கு வா உங்கிட்ட தனியா பேசணும்ன்னு சொல்லிட்டு அங்கே போனா அந்த சுரபிய கட்டி பிடிச்சிட்டு நிக்கறான் இவனை நான் எப்படி நம்ப முடியும்.

நிஷா பேச ஆரம்பிக்கவுமே அபியும் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் இவர்களது கதையை கேட்க ஆரம்பித்து இருந்தான். இப்போது கிஷோர் பேச ஆரம்பித்தான்..

மலர் இங்கே பாரு இவ எனக்கு அணுப்பின மெசேஜ் இவ தான் என்னைய மொட்டை மாடிக்கு வா நான் உனக்கு கிப்ட் தர்றேன்னு மேசேஜ் அணுப்பினா. நானும் போனேன். அங்கே அந்த லேசான இருட்டுல அன்றைக்கு போட்டு இருந்த
அந்த சிவப்பு கலர் ஷாலை போட்டுட்டு திரும்பி நின்றுகிட்டு இருந்தா. நானும் நிஷான்னு போய் பிடிச்சா எனக்கு பின்னாடி கிஷோர் கத்திகிட்டு இருக்கிறா...

உண்மையிலேயே மலருக்கு ஒன்றும் புரியவில்லை எப்படி சமாதானம் செய்வது எனவும் தெரியவில்லை. இதை கேட்டிருந்த
அபி தான்... எப்படி சகோ ஆள் மாறினாங்க...

அது.. இந்த பசங்க வேணும்னே அந்த மாதிரி செட் பண்ணி இருக்கறாங்க. இந்த நிஷாவும் யார் நின்றாலும் சரி கிஷோர் கண்டு பிடிச்சிருவான்னு சொல்லி இருக்கறா... அங்கே வேற மாதிரி ஆகிடுச்சி...

மலர் நீயே சொல்லு அதெப்படி தெரியாம போகும். எத்தனை வருச பழக்கம். எனக்கு இவனை தவிர வேற யாராவது நின்றிருந்தா நான் இத மாதிரி பண்ணி இருப்பானா. எல்லாமே வேஷம்.. இவனை நம்ப கூடாது ..

மலர் அவள் சொல்லறத கேட்காத... நிஜமாகவே எனக்கு தெரியலை...
நல்லா இருட்டா இருந்தது. இவள்தான் அங்கே நிற்கறான்னு போனேன். ஆள் மாறி இருக்குமின்னு கனவாக கண்டேன்.

மலர் அமர்ந்தபடி இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தவள் முதல்ல ஒரு விஷயம் எனக்கு புரியலை.. ரெண்டு பேரும் அங்கே ஒன்றாக தானே இருந்திங்க... அப்புறம் ஏன் மொட்டை மாடில சந்திக்கணும் ..

கேட்டுக்கொண்டு இருந்த அபியோ... மலர் அவங்க லவ்வர்ஸ்மா அவங்க பர்சனலா ஏதாவது பேச யோசித்து இருப்பாங்க அது எதுக்கு.. ப்ரோ போணிங்க ஆள்மாறினது தெரியலை
அங்கே என்ன தான் நடந்துச்சு...

நான் அவளோட தோளைதான் தொட்டேன் இவ பின்னாடி நின்னு கிஷோரற்னு கத்தினா.. அவ்வளவுதான் இவ கீழே கோவிசிட்டு வந்துட்டா.. நான் எவ்வளவு சொல்லியும் கேட்கலை ...அன்றைக்கு எல்லோரும் கிளம்பற வரைக்கும் இருந்தவ அதுக்கப்புறம் பேசவே இல்லை. நானும் தினமும் கால் பண்ணினேன். நேற்று வீட்டுக்கும் வந்தேன் இவ பேசவே மாட்டேங்கறா..

இன்றைக்கு எல்லோரும் மண்டபத்துக்கு வந்தாச்சு எனக்கு கால் பண்ணி நான் வரமாட்டேன் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு சொல்லறா..

மலர் எழுந்தவள் நிஷா உனக்கு நிஜமாகவே பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. எத்தனை வருசமா இந்த கல்யாணத்துக்குக்காக போராடிக்கிட்டு இருக்கிறீங்க.. இப்ப தான் ஒரு வழியா ஓகே சொன்னா நீ இப்படி செஞ்சா எப்படி கிளம்பு...

நீ பேசாமல் இரு. இப்பவே இப்படி பண்ணறவன் கல்யாணத்துக்கு அப்புறம் இத மாதிரி செய்யமாட்டான்னு என்ன நிச்சயம் என்னால முடியாது.

கிஷோரோ ஏய் நான் தப்பும் செய்யலடி... நீ ஏன் இப்படி பேசிவிட்டு இருக்கற அன்றைக்கு ரெண்டு நிமிடம் வெயிட் பண்ணி இருந்தன்னா முகத்தை பார்த்துட்டு ஸாரி கேட்டுவிட்டு வந்து இருப்பேன் அதுதான் நடந்து இருக்கும்.

கிஷோர் நான் நம்ப மாட்டேன் அவ எத்தனை நாளை உன் பின்னாடி சுத்தினா தெரியுமா. நீ என்கிட்டேயும் பேசிட்டே அவள்கிட்டேயும் ரூட் விட்டு இருக்கற.. அவளை சமாதானம் பண்ண போய் இருக்கற நான் வந்ததும் எனக்கு தகுந்தமாதிரி கதை சொல்லிட்டு இருக்கற..

ஏய்.. இதென்ன நீ புதுசா கதை சொல்லற...

கேட்டிருந்த அபி.. சிஸ்டர் நீங்க கேக்கறது சரி தான் இவங்கள நம்ப முடியாது. நீங்க எடுத்த முடிவுதான் கரெக்ட்... வா மலர் நாம கிளம்பலாம்.

இப்போது மலர் அபி என கத்தியிருந்தாள்... அபி அருகில் சென்றவள் அபி நீயும் நானும் எதுக்கு வந்து இருக்கிறோம் தெரியுமா பேசி அனுப்பி வைக்க... நீ இந்த மாதிரி பேசினா இவங்க இப்போதைக்கு போக மாட்டாங்க...நிஷா ஏதோ தப்பா யோசித்து வச்சி இருக்கற.. உன் வீட்டிலேயும் சரி அவனோடு வீட்டிலேயும் சரி சம்மதிக்காமல் எவ்வளவு போராடுனிங்க இப்ப இப்படி சொன்னா எப்படி...இத்தனை நாள் கிஷோரை புரிஞ்சிகிட்டது இவ்வளவு தானா.ஏதோ சின்ன மிஸ் அண்டர்டேன்டிங் இத பெருசு பண்ணாத..யோசித்து பாரு. இத்தனை வருசம் நடந்தத. ஒரே நிமிஷத்தில் எதுவுமே மாறாது. அன்றைக்கு நடந்தது எதிர்பாராமல் நடந்தது அதையே சொல்லிட்டு இருக்காத..முதல்ல புறப்படு ..

நிஷா அமைதியாக ஒரு புறம் அமர்ந்திருக்க இரண்டு நிமிடம் யாருக்குமே பிடிக்காத மெளனம் நிலவியது.
 




K

kavi sowmi

Guest
ஆளுக்கு ஓரு புறம் அமைதியாக அமர்ந்திருக்க அபிதான் இப்போது பேச ஆரம்பித்தான். ப்ரோ இவங்க சரி வர மாட்டாங்க.. உண்மையா இருக்கறவனை பார்த்தா நூறு சந்தேகம் வரும். நீங்க உங்க அம்மா அப்பாகிட்ட சொல்லி வேற நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிகங்க இந்த பொண்ணு வேண்டாம் ப்ரோ ..

அபி நீ பேசாமல் இருக்கறையா... மலர் சத்தமிட...

அப்புறம் என்ன மலர் எத்தனை நேரம் சொல்ல... இங்கே பாருங்க கிஷோர் உங்களுக்கு பொண்ணு கிடைக்கலைன்னா சொல்லுங்க. என்னோட ஆபீஸ்ல ஒவ்வொரு பொண்ணும் லட்டு மாதிரி அழகா இருக்கும் அதில ஒன்றை பார்த்து ஓகே பண்ணுங்க . இவங்க கால முழுசுக்கும் சந்தேக பட்டு நம்ம வாழ்க்கையையும் நரகமாக்கிடுவாங்க...

உண்மைய சொல்லுங்க கிஷோர்..அன்றைக்கு ஏன் அங்கே போனிங்க...

அது... நிஷா உனக்கே தெரியும் நாம பார்த்து பேசுவோம் மத்தபடி என்னோட கை கூட உன் மேல பட்டது இல்லை. நம்ம கல்யாணத்துக்கு வீட்ல சம்மதிச்சிட்டாங்க. சோ... சின்னதாய் உனக்கு ஒரு கிஸ் ...

என்னது என நிஷா கேட்க...

அபியோ இப்படி தான் இருக்குமின்னு நினைச்சேன்..அத மாதிரி தான் நடந்து இருக்கு .

ஸாரி நிஷா...அன்றைக்கு அப்படிதான் நினைச்சு அங்க வந்தேன். அது வேற மாதிரி ஆகிடுச்சி. நான் தப்பானவன் எல்லாம் இல்ல ..
புரிஞ்சிக்கோ... நீ இல்லாம என்னால வாழ்வே முடியாது நிஷா..

நிஜமாகவா சொல்லற..

ப்ராமிஸ் உன் மேல ..

ஸாரிடா நான் தான் உன்ன தப்பு தப்பான புரிஞ்சிகிட்டேன். மன்னிச்சிடு என்றவள் அவன் அருகில் வந்து அவன் தோள் சாய்ந்தபடி மறுபடியும் அழ ஆரம்பிக்க...

ஏய் போதும்பா அழாத நான் தான் உனக்கு புரிய வச்சி இருக்கணும் . தோள் சாய்ந்தவளை தட்டி கொடுத்து பேசிக்கொண்டு இருக்க... இதை பார்த்த அபிக்கு மட்டும் அல்ல மலருக்கும் உதட்டில் சிரிப்பு உதயமாகி இருந்தது. அப்போது கிஷோருடைய போன் சிணுங்கியது. போனை பார்த்தபடி அம்மா கூப்பிடறாங்க என்றவன் அட்டென் செய்ய..

கிஷோர் மண்டபத்துக்கு எல்லோரும் வர ஆரம்பிசாசிட்டாங்க. எங்கே நிஷாவே கூப்பிட்டுட்டு வரேன்னு போன ரெண்டு பேரும் இன்னும் இங்கே வரல.. எங்கே இருக்கற...

அம்மா கிளம்பியாச்சுமா... இன்னும் ஐந்து நிமிடம் அங்கே வந்துடுவேன்.

நிஷா நாம சீக்கிரம் கிளம்பனும்.

மலரிடமும் அபியிடமும் திரும்பிய நிஷா ஸாரி மலர் உங்களையும் இங்கே வரவச்சி டென்சன் பண்ணினதுக்கு... நாம போகலாம் என நடந்து கதவை திறக்க... கதவு திறக்கவில்லை.

கிஷோர் கோபத்தில் சாவியை எடுத்து வெளியே வீசினேன்னே.. மை காட் இப்ப எப்படி போறது.. மாற்றி மாற்றி கதவை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர் நால்வரும்.

கதவு வெரி ஸ்டிராங் வேற கீ இருக்கா...

இல்லையே..

அபிதான் சுற்றிலும் பார்த்தவன் இந்த பக்கம் இன்னொரு கதவு இருக்குதே இது எங்கே போகும் என்றபடி கதவை திறக்க... அது சின்ன பால்கனி...அங்கிருந்து பார்க்க தோட்டம் அழகாய் காட்சி தந்தது.

இந்த வழியாக கீழே போக முடியுமா...

போகலாம் அபி குதிச்சா கால் உடையும்...

ஏதாவது கயிறு மாதிரி இருக்கா...

நிஷாவோ இங்கே அந்த மாதிரி எதுவும் இல்லை...

கீழே இறங்கற மாதிரி ஏதாவது தேடுங்க...

மலரோ நிஷா சாரி ஏதாவது இருக்கா அத பிடிச்சிட்டு கீழே இறங்கிடலாம்.

பாட்டியோடது ஓன்று இருக்கு இரு எடுத்து தர்றேனு. பிரோவை திறந்து தர.. அபியோ உன்னோட பாட்டி கை விட்டுட மாட்டாங்களே...

மாட்டாங்க.. இந்தா இத என்ன செய்ய போறிங்க... வாங்கி பால்கனியில் ஒருபுறத்தை கட்டியவன் கிஷோரை பார்த்து முதல்ல நீ இறங்கு கிஷோர் உன் வீட்ல ஏணி இருக்கா...

இல்லை...

சரி பார்த்து இறங்கு பத்தடி தான் இருக்கும் விழுந்தாலும் புல் தரைதான் அடி அவ்வளவா படாது .

முதலில் கிஷோர் இறங்கினான். முதலில் இறங்கிய கிஷோரை பார்த்து அபி... கிஷோர் உங்களோட வாரிசுகளுக்கு உங்களோட கல்யாணத்தை கதையா சொல்லலாம். அவ்வளவு சுவாரஷ்யமா இருக்கும். அடுத்தது நிஷா நீங்க இறங்குகுங்க...
அவளையும் மெதுவாக இறக்கி விட
அவள் இறங்கும் முன்பே கிஷோர் அவளை கீழே விழாதவாறு அழகாய் தாங்கி இருந்தான்.

மலர் நீ இறங்கறயா...

இல்லை அபி நீ இறங்கு அடுத்ததாக
நான் வரேன். என்றவள் இவன் இறங்கவும் அடுத்ததாக மலர் இறங்க ஆரம்பிக்க மூன்று பேர் இறங்கும் போது அமைதியாக இருந்த சேலை இவள் இறங்க ஆரம்பிக்கவும் மேல் புறமாக கிளிய ஆரம்பிக்க பயத்தில் கத்தியபடி கண்களை இறுக்கமாக மூடியவள் கீழே விழுந்தாள்.

உருகாதே பனிமலரே!!
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Parra.. itha problem ah..??
Ippo solved ...??

Malar catch pannitaya abi ???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
சௌமி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கவி சௌமி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top