• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உருகாதே... வெண்பனிமலரே_11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

K

kavi sowmi

Guest
கீழே விழப்போகிறோம் என்ற உணர்வு தோன்றவும் கண்களை மூடியபடி கத்திக்கொண்டு விழுந்த மலரை ஓரு நொடியில் தாங்கி இருந்தான் அபி தாங்கியவன் அவளோடு சேர்த்து விழ... புல் தரை அவனை இதமாய் தாங்கி இருந்தது.

விழுந்ததை பார்த்து போதே அருகில் வந்திருந்தனர் நிஷாவும் கிஷோரும்
ஆனால் விழுந்த மலர்தான் கண்கள் திறக்காமல் அவன் மேலிருந்தும் எழாமல் விழுந்திருந்ததை பார்த்த கிஷோரோ என்ஜாய் என்பது போல கையை காட்டியவன் நிஷாவை அழைத்து கொண்டு சென்றிருந்தான்.

சுகமாய் கைகளில் தாங்கி இருந்தவன் தன் மேல் விழுந்தவளை பூக்களை போல் தாங்கியபடி அவளின் முகம் பார்ந்தவன் கண் திறக்காமல் இருந்தவளை சில நிமிடங்கள் வரை நன்றாகவே ரசித்தான்.

இரண்டு நிமிடம் வரை எதுவும் சொல்லாமல் தன் மேல் தாங்கியவன் மலர் இப்பவே என்னுடைய இடுப்பு போச்சுன்னு நினைக்கிறேன். சொன்னவன் அதையே சொல்லி கொஞ்ச நேரம் இவளிடம் விளையாட நினைத்தான். ஏய் எழுந்திரு மலர் இடுப்புல புடிச்சிடுச்சின்னு நினைக்கறேன்...அம்மா வலிக்குது... இடுப்பு வலிக்குது என்ன நன்றாகவே சத்தமிட்டான்.

கடைசி நிமிடத்தில் தன்னை தாங்கி பிடித்தவனின் மேல் விழுந்திருந்தவள் இவனது சத்தம் கேட்டு கண்விழிக்க
திறந்ததும் பார்த்தது அவனது முகத்தை தான். அவசரமாக அவன் மேலிருந்து எழுந்தவள் இவன் எழ கை கொடுத்தபடி...ஸாரி நான் வேணும்ன்னு விழல.. அந்த சாரி கிளிஞ்சிடுச்சி...

அவங்க ரெண்டு பேரும் எங்க போணாங்க...

சீக்கிரமே கேட்டுட்ட மலர்... அவங்க இந்நேரம் மண்டபத்துக்க போய் இருப்பாங்க...

அவங்க வேலை முடிஞ்சதும் விட்டுவிட்டு போயிட்டாங்களா...
சரி நீ எழுந்திரு அபி...

ஏய்.. என்ன பொய் சொல்லறேன்னு நினைக்கறயா... நிஜமாகவே எழுந்திருக்க முடியல.. இதுக்குதான் என்னை வம்படியா கூப்பிட்டுட்டு வந்தியா...நான் வரமாட்டேன்னு அப்பவே சொன்னேன் நீ கேட்கல இப்பபாரு என்னால முடியல...போச்சு இனி எப்படி வீட்டுக்கு போறது...

அபி நிஜமாகவே முடியலையா. இந்தா கையபிடிச்சிட்டு மெதுவாக எழுந்திரு...

என்ன வெயிட் நீ.. எழுபது இருப்பியா..அபி கேட்க...

சும்மா சொல்லாத ஐம்பத்து அஞ்சு தான். இதுக்கே இப்படி சொன்னா எப்படியாம்.. கைத்தாங்கலாக அவனை எழுப்பியவளின் மேல் மொத்தமாக சாய்ந்திருந்தான் வலிக்குது நிற்க முடியலை என்றபடி...

அபி நான் வேணும்னா வாட்ச்மேனை கூப்பிட்டுட்டு வரவா...

அதெல்லாம் வேண்டாம் உன்னோட தோள்ல கை போட்டுக்கறேன் அப்படியே கார் வரைக்கும் கூப்பிட்டுட்டு போயிடு நாம வீட்டுக்கு போய்விடலாம். கைத்தாங்கலாக அழைத்து நகர்ந்தவளை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு குமிழிட்டு கொண்டு இருந்தது.
அபி உன் காட்ல அடை மழைதான்டா என்ன சொன்னாலும் நம்புவா போல இருக்கே.. இன்னும் ரெண்டு நாளைக்கு இதை வச்சே இவகிட்ட வேலை வாங்கலாம் போலவே...
நினைத்தவன் வண்டி ஓட்ட முடியுமோ என்னவோ தெரியலையே...

பரவாயில்லை அபி நான் டிரை பண்ணறேன் நேரா ஹாஸ்பிடலுக்கு போயிடலாமா...

ஐயோ ஹாஸ்பிடலுக்கா...வேண்டாம் வீட்டுக்கு போயிடலாம். அங்கே போனா என்கிட்ட தைலம் இருக்கு போட்டு பார்க்கலாம் சரி ஆகிடும்.

ஏன் இப்படி பயந்துக்கற..

எனக்கு ஊசின்னா கொஞ்சம் பயம்.
உண்மைமா நம்பு.

பேசியபடி வந்தவள் இவனை பார்த்து நிஜமாகவே அடி பட்டிருக்கா..உன்ன பார்த்தா எனக்கு சந்தேகமாக இருக்கு...

மறுபடியும் அம்மா என்றவன் இத மேலிருந்து விழும்போது யோசித்து இருக்கணும் அப்படி கத்தட்டு விழுந்த...காப்பாத்தி விட்டா இப்படி எல்லாம் தான் பேர் வரும். இந்த பொண்ணுங்க ரொம்ப மோசம். எப்பவுமே சந்தேகமாக தான் எல்லாறையும் பார்க்கறாங்க. நல்லதுக்கு காலமே இல்ல அபி..அம்மா சொல்லறது சரிதான். ..

நார்மலாதானே கேட்டேன் அதுக்கு ஏன் எல்லா பொண்ணுங்களையும் சொல்லுவே...இதோ கார் வந்தாச்சு உள்ள உட்காரு ... நான் வண்டி ஓட்டறேன். இவனுக்கு வண்டியை திறந்து விட்டவள் உடுத்த புறம் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்தாள். கொஞ்ச நேரம் பொறுத்துக்க வீட்டுக்கு போயிடலாம்.

இவன் சீட்டில் சாய்ந்தபடி அமர்ந்து கொள்ள இவள் மிதமான வேகத்தில் வண்டியை எடுத்தவள் வீடு வரும் வரைக்கும் மெதுவாக அவனிடம் பேச்சு கொடுத்த படி வந்து சேர்ந்தாள். இறங்கும் தருவாயில் அபி... அப்பாகிட்ட சொல்லாத.. சங்கட படுவாங்க..

சொல்ல கூடாதா என்னோட ரூம்புக்கு எப்படி போறது. நடக்கவே முடியல ரொம்ப வலிக்குது. எப்படியும் பார்த்தா சொல்ல தானே செய்யணும்.

இப்ப அப்பா தூங்கி இருப்பாங்க. நான் உன்னை ரூம்ல விட்டுடறேன். நாளைக்கு காலையில் பார்த்துக்கலாம் சரியா...

ம்...ஓகே ஓகே வா இந்த பக்கம் வா தோள்ல கை போட்டுக்கறேன் ரூம்ல
விட்டுடு. காலையில் பார்க்கலாம். சரி என்றவள் இவனை மறுபடியும் அழைத்து சென்றவள் இவனது ரூம்பில் கட்டியில் இவனை அமர்த்தியவள் இவனது முகம் பார்க்க அதிக வலியை தாங்குவது போல் முகத்தை வைத்திருந்தான்.

ஸாரி அபி.. படுத்துக்கோ வரேன் என்றபடி வெளியேறியவளை பார்த்து இருந்தவன்
 




K

kavi sowmi

Guest
அவள் அந்த புறம் நகரவும் இந்த பக்கம் குத்தாட்டம் போட ஆரம்பித்தான். அபி செமடா... முகத்தை பார்த்தா பேச மாட்டியா...ரெண்டு நாளா எவ்வளவு கடுப்பேத்தின என்னை... வாடிவா இன்னும் ரெண்டு நாளைக்கு எனக்கு மட்டும் தான் நீ வேலை செய்ய போற...உன்னை எங்கேயும் நகர விட போறது இல்ல.. எப்படி அப்பாவுக்கு தெரிய கூடாதா... இது ஒன்னே போதும்..உன்னை வளைச்சி வளைச்சி வேலை வாங்க... ஆனாலும் நீ சோ ஸ்வீட்ரா... என்ன சொன்னாலும் நம்பற..

மலர் வரும் சத்தம் கேட்க வேகமாக தனது பெட்டில் திரும்பி படுத்துவன் அம்மா என முனங்கியபடி கண்கள் மூடி இருந்தான்.

அபி... நான் தான் வரலாமா..

ம்...ம் என்றவனிடம் அபி நீ இன்னும் சாப்பிடலல்ல. தோசை எடுத்துவிட்டு வந்து இருக்கறேன் சாப்பிடறையா..

அப்பா எங்கே மலர்...

அவர் ரூம்ல போய் படுத்திட்டார். இந்தா இத எடுத்து சாப்பிடுவல்ல..

குடு சாய்ந்தபடி அமர்ந்திருக்க அவனது கைகளில் தந்தவள் அருந்த தண்ணீரை அருகில் எடுத்து வைத்து விட்டு சாப்பிட்டு முடிக்கும் வரை அருகிலேயே இருந்தாள். சாப்பிட்டுமுடிக்கவும் இருந்த பாத்திரத்தை எடுத்து சென்றவள் சில நிமிடத்தில் திரும்ப வந்தாள். அபி என அழைத்தபடி..

தைலம் கொண்டு வந்து இருக்கிறேன் போட்டு விடவா...

என்னது... நீயா என்றபடி இவளை பார்க்க..

ஸ்பிரே தான். முதுகு காட்டு ஸ்பரே பண்ணி விடறேன் சரியாகிவிடும்.

இரு.. என்றவன் கடைசி நொடி அங்கே வச்சிட்டு போ மலர் நான் பார்த்துக்கறேன்.

நீ எப்படி போடுவ...

எப்படியோ போட்டுக்கறேன்... போ மலர் என கூறியவன். குட் நைட் கதவைத் சாத்திட்டு போ எனக்கு தூக்கம் வருது. என்னை பற்றி யோசிச்சிட்டு தூங்காம இருக்காத .. இப்ப அவ்வளவா வலிக்கல சரியா...

ம் ..என்றபடி வெளியேறினாள் மலர்..தனது அறைக்கு சென்றவள் நேரம் பார்த்தவள் நேரம் பத்தை நெருங்கி கொண்டு இருக்க ஏற்கெனவே இந்த சில நாட்களாய் அபியின் தங்கையிடம் நல்ல நட்பு உதயமாகி இருந்தது. சரியாக தினமும் பத்து மணிக்கு அழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். பத்து மணி ஆகவும் அவள் அழைக்கவும் சரியாக இருந்தது.

மலர் எப்படி இருக்கற... இந்த நாள் நல்லா போச்சுதுதா..

எங்கே நாம ஒன்று நினைச்சா அது வேற மாதிரி ஆகுது. மனசே சரியில்லைபா...தாரிகா
நீ என்ன திட்ட கூடாது. நான் வேணும்ன்னு எதுவும் செய்ய...

என்னது மொட்டை மொட்டயா பேசற எனக்கு எதுவுமே புரியவில்லை. என்னுடைய அண்ணா கூட இருக்கும் போது மனசு சரியில்லையா.. தப்பாச்சே நான் ஏன் உன்னை திட்ட போறேன். மலர் பேஸிக்கலி நான் கொஞ்சம் தத்தி..
புரியற மாதிரி சொன்னால்தான் எனக்கு புரியும் அரை குறையா சொன்னா சத்தியமா புரியலைடா...

இரண்டு நிமிட அவகாசத்தில் நடந்ததை சொல்லி முடிக்க கேட்டவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

கூடவே ப்ளீஸ் தாரு உன் அண்ணா எதுவும் சொல்லல. அடி பலமா இருந்தா என்ன செய்ய... என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க. நீ கேட்டு சொல்லறையா. தைலம் போட்டு விடறேன்னேன் திட்டி அணுப்பிட்டாங்க...அவள் சொல்லவும்....அவளுக்கு தெரியாமல் இருக்க வேண்டிய மொபைலை மூடியபடி சிரித்தவள் இவளிடம் சிரிப்பை அடக்கியபடி..
இதுக்கெல்லாம் நான் திட்டுவனா.. பயப்படறமாதிரி இருக்காது நான் அண்ணா கிட்ட பேசிட்டு உன்கிட்ட சொல்லறேன் . போனை வைத்தவள் அதே சிரிப்போடு அபியை அழைத்திருந்தாள்.

அபி நம்பரை பார்க்க தன்னை கலாய்க்கவே தனது தக்கை போன் செய்கிறாள் என நினைத்தவன் ஹோய் என்ன அதிசயம் இந்நேரத்துக்கு கூப்பிடற...மச்சான் பக்கத்தில் இல்லையா..

அவர் தூங்கிட்டார்ணா..ஏன் அவர்கிட்ட பேசணுமா..

வேணாம்மா. அவர் பேசினா என்னால பதிலே பேச முடியாதே..

அந்த பயம் இருக்கட்டும்...என்னுடைய ஓரே அண்ணாவோட இடுப்புல அடி பட்டுடிச்சாம் அதுதான் நலம் விசாரிக்க கூப்பிடறேன் ஆனால் சார் ரொம்ப ஹேப்பியா இருக்கறமாதிரில்ல தோணுது.

சொல்லிட்டாளா... அதெல்லாம் இல்லை. சும்மா சின்ன விளையாட்டு..
நான் நல்லா தான் இருக்கிறேன்.

உன்னோட வாய்ச கேட்டாலே தெரியுது
இப்படியா மிரட்டுவ..சரிண்ணா எப்ப அப்பாவை வந்து பேச சொல்லலாம். எத்தனை நாள் இப்படியே சின்ன பிள்ளை மாதிரி விளையாட்டுண்டுட்டு இருக்க போறே.. இனி நீ வேலையில் ஜாயின் பண்ணினா அப்புறம் லீவு கிடைக்கிறது கஷ்டம்ல்ல...

தாரு.. இவள் என்ன நினைக்கறான்னே தெரியலையே தைரியமாக அப்பாவை வரச் சொல்லலாம் அப்பா முன்னாடி பிடிக்கவில்லைன்னு சொல்லிட்டா...
அப்புறம் சரி பண்ணறது கஷ்டம்டா..
இன்னும் ஒரு வாரம் பார்க்கலாம்
அப்புறம் ஏதாவது யோசிக்கலாம் அவளுக்கும் என்னை பிடிக்குது இது நல்லதாகவே தெரியுதுஆனாலும் அவளுக்குள்ள நிறைய குழப்பம் இருக்கு அதிலேயிருந்து அவ வெளிய வரணும் அப்புறம் தான் கல்யாணத்தை பற்றி பேச முடியும்.

என்னணா செய்ய போற..

இப்போதைக்கு இன்னும் ரெண்டு நாளைக்கு அவள என்கூடதான் வச்சிக்க போறேன் அப்புறம் என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கணும்.

சரிண்ணா என்ஜாய் நானும் கட் பண்ணறேன்
 




K

kavi sowmi

Guest
என்னுடைய கால்ஸ்க்காக அண்ணி வெயிட்டிங் குட் நைட்ணா..அடுத்ததாக
மலரை அழைத்தவள்... மலர் அண்ணாவுக்கு இப்போதைக்கு அவ்வளவாக வலிக்கலைன்னு சொன்னாங்க. நீ தூங்கு காலையிலே அவனை நல்லா பாத்துக்கோ.. நான் மறுபடியும் காலையில் உன்கிட்ட பேசறேன் என்ன கட் செய்தாள்.

அடுத்த தாள் காலை ஏழு மணிக்கே அபியின் கதவை தட்டி இருந்தாள் மலர். அபி வலி குறைஞ்சிருக்கா...

நேற்று நடந்ததை மறந்து இருந்தவனோ என்ன வலி என ஆரம்பித்து... இவள் முகம் பார்க்கவும்.. லேசா இருக்கு என்றான்.

அபி இப்ப என்ன செய்ய.. அப்பா எழுந்ததும் உன்கிட்டதானே பேசுவாங்க
நீ ஹால் வரைக்கும் வந்து உட்கார்ந்துக்கோ.. அப்பா போகவும் மறுபடியும் ரூம்ல வந்து ரெஸ்ட் எடு சரியா..

ம்... நீ போ வரேன்..

அபி நடக்க முடியும் தானே... நான் வேணும்னா ரெண்டு நிமிஷம் கழித்து் வரேன் உன்ன ஹால் வரைக்கும் கொண்டு வந்து விட...அவள் சொன்னதற்கு எல்லாம் தலையை மட்டும் ஆட்டி வைத்தான் எங்கே பேசினால் சிரித்து விடுவோமோ என்ற பயம் புதிதாக வந்து இருந்தது.

அப்போது அந்த நிமிடத்தை அழகாக ரசிக்க ஆரம்பித்து இருந்தான் அபி. இவனுக்காக .அவளுடைய பதட்டம்.. அப்போது மட்டும் அல்ல. அவளுடைய தந்தை புறப்பட்டு போகவும் இவளும் தனது வண்டியை எடுத்து போனவள் இவனுக்காக மொத்த மெடிக்கலையும் வாங்கி வந்திருந்தாள்.

நீதான் ஹாஸ்பிடல் வர மாட்டேங்கற.. இதெல்லாம் சீக்கிரம் சரி ஆகறதுக்கு. இதுல ஹாட் வாட்டர் ஊற்றி ஒத்தடம் கொடுத்தா உடனே வலி சரியாகிடுமாம். ஓகே வா.

எல்லா விளையாட்டும் அடுத்த நாள்
அவளுக்கு தெரியவரப் போவதை அப்போது அவன் உணரவில்லை.

உருகாதே!!!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கவி சௌமி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடப்பாவி அபி எப்படியெல்லாம் மலர் பொண்ணை ஏமாத்தறே
இதெல்லாம் அநியாயம்,
மலர் பாவம், சௌமி டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top