• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உருகாதே... வெண்பனிமலரே_12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

K

kavi sowmi

Guest
அடுத்த நாள் காலை எழும் போதே நிஷா அழைத்திருந்தாள். மலர் தேங்க்ஸ் மலர் சரியான நேரத்தில் வந்து எனக்கு அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்ச.. ஒரு வேளை என்னால இந்த நிச்சயதார்த்தம் நின்றிருந்தா
என்னால யோசித்து பார்க்கவே முடியல.. கிஷோர் இல்லாம என்னால வாழ்ந்து இருக்க முடியாது . அவங்களோட பேமிலி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்க குடும்பத்தில் என்னை ஒருத்தியா ஏத்துக்கிட்டாங்க..


ஷப்பா சமாதானம் ஆகியாச்சா இப்ப எங்க இருந்து கூப்பிடற..

வீட்ல இருந்துதான். ரெண்டு பேரும் மூவிக்கு போக ப்ளான் பண்ணி இருக்கிறோம். வந்து பிக்கப் பண்ணிக்கறேன்னு சொல்லி இருக்கிறான் . நேற்று ஏன் வரல...

மூவி என சொல்லவும் அபியை முதல் முதலாய் பார்த்தது ஞாபகம் வந்தது. முழுதாக ஓரு வாரம் முடிந்திருக்க அவனை குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதை நினைத்தவள்... எப்படி இந்த மாற்றம் வந்தது என இவள் மனம் யோசித்துக்கொண்டு இருக்க...
எதிர் முனையில் நிஷாவோ மலரு இருக்கறயா... இல்லை டிரிம்முக்கு போயிட்டயா அண்ணா கூட எனவும்..

எந்த அண்ணா கூட...

ஏய் ஏமாற்றாத... யாருகிட்ட நேற்று பார்த்தனே வேகமாக விழறதுக்கு முன்னாடி புடிச்சது என்ன.. மேடம் ஏதோ மெத்தையில் படுத்தமாதிரில்ல கண்ணு மூடி கிடந்திங்க.. உண்மைய சொல்லு அந்த பையனைதானே உங்க அப்பா உனக்கு பிக்ஸ் பண்ணி இருக்கறாங்க..ஓரே ரொமான்சா அதனால்தான் வராமல் அப்படியே
போய்டிங்களா..

லூசு.. லூசு மாதிரி உளராத.. அவனே என்னை கீழே விழாமல் பிடிக்கறேன்னு இடுப்பு பிடிச்சி வலிக்குதுன்னு சுத்திட்டு இருக்கறான் நீ பூதுசா கதை சொல்லற..

ஹா..ஹா இப்படி வேற சொல்லி இருக்கறாங்களா... நானும் கிஷோரும் வரும் போது கண்ணடிச்சி பை சொல்லி அனுப்பினாங்க.. அது பொய்யா.. நீதான் பார்த்து இருக்கலைன்னா...
நான் பார்த்தேனே...அவங்க கண்ணுல எவ்வளவு லவ் தெரியுமா..உன்னை மட்டும் தான் கண் சிமிட்டாம பார்த்துட்டு இருந்தாங்க.. நீ சொல்லாட்டி போயேன் அடுத்த தடவை அவங்கல பார்க்கும் போது நேரடியாகவே கேட்டுக்கறேன்.

நிஷா காலையில் போன் பண்ணி கடுப்படிக்கறையா... நீ போனை வை..

ஏன்மா உண்மைய சொன்னா கோபம் வருதா.. நம்ம ப்ரண்டுங்க யாருக்கும் சொல்ல மாட்டேன் ப்ராமிஸ்...

நிஷா இதே மாதிரி பேசிட்டு இருந்த இது தான் நான் உன்கிட்ட பேசறது கடைசியாக இருக்கும் புரியுதா...

அம்மா தாயே அப்படி எதுவும் பண்ணிடாத. நான் இனி இத பற்றி பேசலை ஓகே வா. இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு என்னுடைய கல்யாணத்திற்கு என்னுடைய எல்லா ஃபங்சனுக்கும் நீ கூட இருக்கணும்
அத முன்னாடியே சொல்லிடதான் கூப்பிட்டேன்...பை போனேன் வைக்கறேன்டி என்றபடி கட் செய்தாள்.
இவளோ தனது அறையில் இருந்தபடி இவனை எட்டி பார்க்க அங்கே இவளது தந்தையோடு பேசிக்கொண்டு இருந்தான். அவனது முகத்தை ஆழ்ந்து பார்க்க வலிக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஒருவேளை நம்மகிட்டதான் நடிக்கறானோ.. அவள் சொல்லறதுதான் நிஜமாக இருக்குமோ...யோசித்தபடி நடை பயின்று கொண்டிருந்தாள்.

அங்கே அபியோ... என்ன அங்கிள் முகத்தையே பார்க்கறிங்க என்ன ஆச்சு...

அத தான் நான் கேட்கனும் என்ன ஆச்சு... என்னோட பொண்ணு நேற்றிலிருந்து உன்கிட்ட பேசவே விடல கூடவே உன்னை ஸ்பெசலா வேற கவனிக்கறா..உன்னை எழுந்திரிக்க விடாமல் அத்தனை வேலையும் செஞ்சு தர்றா.. எனக்கே என்னுடைய கண்ணை நம்ப முடியலை.. ஆச்சர்யமா இருக்கு..

அங்கிள் ஒரு சின்ன விளையாட்டு ரெண்டு நாளைக்கு இப்படி தான் இருக்கும் கண்டுக்காதிங்க...

என்னவோ சொல்லற அபி.. எனக்கென்ன நல்லது நடந்தால் சரிதான்.

அதெல்லாம் நல்லதாகவே நடக்கும் அங்கிள் என்றவன் எதிரில் வந்த மலரிடம் காபி ஒரு டம்ளர் கிடைக்குமா என கேட்க...

வெயிட் பண்ணுங்க கொண்டு வரேன் என்றபடி அப்பா உங்களுக்கு...

வேண்டாம்டா... நான் இப்ப கிளம்பிடுவேன். ஏன்மா இன்றைக்கு வீட்டு வேலை செய்யற அம்மா வரலையா..

ஆமாம்பா அவங்க பேத்தி ஊர்ல இருந்து வந்து இரூக்கறாங்கலாம் அதனால லீவு எடுக்க சொல்லிட்டேன்.
நான் இன்றைக்கு வீட்டு வேலையை பார்த்துக்கறேன்பா...

சரிடா.. என்றவர் சிறிது நேரத்தில் போன் வர குடோனுக்கு கிளம்பி இருந்தார். இவள் சமையல் செய்தபடி ஹாலில் இருந்தவனை திரும்பி பார்க்க டிவியை ஆன் செய்திருந்தவன் அதிலேயே ஒன்றி இருந்தான். முகத்தை பார்த்தவளுக்கு புரிந்து விட்டது அவனது திருட்டு தனம்...
படவா என்னையவே ஏமாற்றறையா..
நீ இன்றைக்கு மாட்டினடா.. மனதில் நினைத்தவள்.. சாதத்தை குக்கரில் வைத்தவள் நேற்றிலிருந்து வேலையா வாங்கற... இன்றைக்கு எல்லா வேலையும் நீதான் செய்யற... இல்ல செய்ய வைக்கிறேன்.

அருகில் இருந்த பாத்திரத்தில் தண்ணீர் எடுத்தவள் யோசிக்காது தட்டி இருந்தாள் கூடவே அம்மா கால்ல தண்ணீர் கொட்டிடுச்சி என்றபடி. சத்தம் போட அடுத்த நொடி அருகில் நெருங்கியவன் இவளை தனது இரண்டு கைகளால் தூக்கி இருந்தான் சுடுதண்ணீர் வச்சா பார்த்து எடுக்க மாட்டியா.. எரியுதா என கேட்டபடி
 




K

kavi sowmi

Guest
இவளை ஹாலிற்கு தூக்கியபடி வர.. இவனையே பார்த்தவள் உனக்கு இப்போ இடுப்பு வலிக்கலையா.. அப்புறம் சார் நான் வெறும் தண்ணீரை தான் கொட்டினேன். சுடுதண்ணீர்ரை இல்ல.. இவள் சொன்னது துவனியே தெரிந்து விட்டது தான் நன்றாக மாட்டிக்கொண்டது. இவளை பார்த்தபடி தூக்கிய கைகளை விடப்போக ...நன்றாகவே அவனது சட்டையை இருக்கி பிடித்திருந்தாள் மலர்.

என்ன கீழே விட்டு என்னோட இடுப்பை உடைக்க போறியா.. இவள் கேட்ட வேகத்திலேயே இல்லை என்பது போல தலையாட்டினான்.
பிச்சிடுவேன்.. என்ன அப்படியே ஷோபாவில் ஊட்கார வை..அது போலவே இறக்கி விட...

குட் இப்ப என்ன செய்யற... போய் மதியத்துக்கும் நீயே சமைக்கற...என்ன அப்படி பார்க்கற ரெண்டு நாளா எத்தனை வேலை வாங்கின இன்றைக்கு முழுதும் நீதான் எல்லா வேலையும் செய்யற... விடமாட்டேன் உன்னை ...அப்பாவுக்கு இன்றைக்கு நிறைய வேலை இருக்குன்னு புறப்பட்டு போய் இரூக்கறாங்க. நைட்தான் வருவாங்க. வேலை செய்யற அம்மாவும் வரல... சோ என்ஜாய் சமையல் அறை இன்றைக்கு உனக்கு மட்டும் தான்.

மலர் இது அநியாயம் நான் விளையாட்டுக்கு தான் அப்படி பண்ணினேன்.

அவன் சொன்னதை இடை மறித்தவள்
நானும் உன்கிட்ட விளையாடலாம் செல்லம்... போங்க போங்க போங்க போய் வேலையை கவனிங்க.. ஹலோ போறதுக்கு முன்னாடி இந்த நீயூஸ் சேனலை மாத்திட்டு கார்டூன் சேனலை வச்சிட்டு போங்க..

ஒரு வயசு பையனோட தனியா இருக்கறேம்ன்னு பயம் இருக்கா உனக்கு...

உன்னை வீட்டுக்குல்ல விட்டது என்னோட அப்பா தப்பான ஆளை இந்த பக்கமே சேர்க்க மாட்டாங்க..அப்புறம் தாரு வேற எப்பவுமே என்னோட அண்ணா இப்படி அப்படின்னு ஓகோன்னு சொல்லறா.. ஓவரா பேசிண ரிக்கார்ட் பண்ணி அவளுக்கு போட்டு காட்டிடுவேன்...முதல்ல போய் வேலையை கவனி.. எனக்கு சரியா ஒன்பது மணிக்கு பசிக்கும் ஓகே... சொன்னதை கேட்டபடி தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தான்.

டிவியை பார்த்தபடியே ஹலோ அபி சமையல் ஆச்சா... இன்னும் ஒன்பது ஆகறதுக்கு பத்து நிமிடம் தான் இருக்கு அவ்வப்போது கவுண்டவுன் வாசித்து கொண்டிருந்தாள்.

நேரம்டா... ராஜாமாதிரி எல்லோரையும் மிரட்டிவிட்டு இருந்தா இவ நம்மல கூஜாவா ஆக்கிடுவா போல.. இப்படியாடா தனியா சிக்குவ .. ஒன்பது மணியை நெருங்கவும் உணவை தட்டில் எடுத்தவன் மஹாராணி சாப்பாடு ரெடி என இவளிடம் தர...

எட்டிப்பார்த்தவள் ஸ்பூன் போட்டு எடுத்துட்டு வாங்க துரை அவனது பாணியிலேயே பதில் தர..

எல்லாம் நேரம் முனங்கியபடி எடுத்து வந்தவன் இவளிடம் நீட்ட...

ஸார் இப்படி முன்னாடி உட்காருங்க..

எதுக்கு...

அவசரபடாதிங்க... சொல்லறேன்.. அப்படியே வாயை திறக்கறேன் ஊட்டி விடு...

ஏய்.. இதெல்லாம் ஓவரு...

என்ன ஓவரு.. நீ செஞ்சதுக்கு நான் செய்யறது ரொம்ப கம்மி .. ஊட்டி விடு...தட்டில் இருந்து இரண்டு ஸ்பூன் ஊட்டி விடவும் தட்டை வாங்கியவள் போதும் போதும் நானே சாப்பிட்டுகறேன். உனக்கு எவ்வளவு கோபம் வரும்ன்னு பார்க்கலாம்ன்னு
பார்த்தேன். இட்ஸ் ஓகே கொஞ்சம் நல்லவன் தான் போல இருக்கு... அபி உன்ன கட்டிக்கறவ ரொம்ப லக்கி எப்படி கேட்கறயா... நல்லா சமைக்கற...நல்லா வீட்டு வேலையும் செய்யற...

நல்லா கொஞ்ச கூட செய்வேன் பார்க்கறையா.. என்றபடி அவளை நெருங்க... போனை கையில் எடுத்தவள் தாரு... எப்படி இருக்கற...
சும்மா தான் பாப்பா என்ன பண்ணறா... உன்னோட அண்ணா இங்கே தான் இருக்கறாங்க பேசறையா என்றவள்... இவனிடம் போனை தந்து விட்டு தோட்டத்தை நோக்கி நகர்ந்து இருந்தாள்.

அந்த நேரம் போனை தந்து நகர்ந்தவள் அப்போது தான் கவனித்தாள் அவன் சொன்னதை..

நல்லா கொஞ்ச கூட செய்வேன். பார்க்கறையா...இவன் என்ன நம்ம கிட்ட இப்படி பேசறான். சரியில்லையே..மலர் இனி இவன்கிட்ட அளவாக பேசு.. இவள் அவனை ஊட்டி விட சொன்னது ஓவர் என்பது அவளுக்கு புரியவே இல்லை.

இங்கே போனை வாங்கியவளோ..என்னணா... இந்நேரத்துக்கு கூப்பிடற..

நீ வேற தாரு... அவ கண்டு பிடிச்சிட்டா..

ஹா...ஹா...என சிரித்தவள்..இனி என்ன செய்ய போற ...

நல்ல வேளை கோப படலை அதுக்கு பதிலாக நல்லா வேலை வாங்கறா..
இப்படியேதான் நாள் போகுமா.. ஒரு வேளை இவள் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாலோ..கவலையாக இருக்கு..சண்டை போட்டு சமாதானம் ஆகி மறுபடியும் சண்டை போட்டு எனக்கே ஒரு மாதிரி இருக்கு. நடக்குமா... நடக்காதா...தெரியவே இல்லை..தாரு என்ன செய்ய..

இதற்குதான் என்ன மாதிரி அறிவாளிகிட்ட ஐடியா கேட்கணும்ங்கறது.. அண்ணா இனி நான் பார்த்துக்கறேன் நீ என்ன பண்ணற...

என்ன பண்ணனும்...

இப்ப எதுவும் செய்ய வேண்டாம். யோசித்து நாளைக்கு நல்ல ப்ளானா சொல்லறேன்..அதுக்கப்புறம் சுபம் தான்..

அப்படிங்கற..

அப்படியே தான் அபி.. என்றபடி போனை வைத்திருந்தாள் தாரிகா ...மலரை அடியோடு சாய்க்கும் திட்டத்தோடு தாரிகா வரப்போவதை உணராமல் தோட்டத்தில் இனி இவனிடம் பேசக்கூடாது என்ற தீர்மானம் செய்திருந்தாள் மலர்.

உருகாதே!!!
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
semma ...:cool::cool:
yapdi achocho pathu velai seiya matiya... suthani pattorucha????:ROFLMAO::ROFLMAO:
malar be ready for the plan...(y)(y)
tharu nee nalla panra:giggle::giggle:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top