• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உருகாதே.. வெண்பனிமலரே_4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

K

kavi sowmi

Guest
பனிமலர் புறப்பட்டு போகவும் அபி சாப்பிடலாமா என கேட்டவரிடம்..
அங்கிள் நீங்க உட்காருங்க நான் எடுத்துவிட்டு வரேன் என்றவன் சமையல் அறையை நோக்கி போக...
மதுசூதனனோ வேண்டாம்பா அதெல்லாம் வேண்டாம் நான் எடுத்துவிட்டு வரேன்.

நோ பார்மாலிட்டிஸ் அங்கிள் நான் நல்லாவே சமைப்பேன். இது எனக்கு பிடிச்ச வேலையும் கூட...

இத என் பொண்ணு கிட்ட சொல்லிடாதே வருசம் முழுசும் உன்னையவே சமைக்க வச்சிடுவா. அவ சரியான சோம்பேறி . கவனிக்காம விட்டா அவ சாப்பிடவே மாட்டா இதுக்காகவே அவள் கூட சாப்பிட ஆரம்பிச்சேன் இப்போ எனக்காகவே நேரநேரத்துக்கு சாப்பிட ஆரம்பிச்சிட்டா ..
சொன்னவர் முகம் வருத்தத்தை தத்தெடுத்தது.

அங்கிள்... வொய் சோகம்..ஏன் இப்போ கவல படறிங்க. .

அதில்ல அபி இவளுக்கு உன்ன பிடிக்குமா... இப்பவே இவ்வளவு சண்டை போடறிங்க. எனக்கு கவலையாக இருக்கு அவளுக்கு பிடிக்காதத என்னால திணிக்க முடியாது உனக்கு புரியுது தான ...

அங்கிள்... புரியுது அங்கிள் நீங்க நினைச்சு பயப்படற அளவுக்கு எதுவும் நடக்காது. நான் ப்ராமிஸ் பண்ணறேன் உங்க பொண்ணுக்கு என்ன கட்டாயம் பிடிக்கும். பிடிக்க வச்சிடுவேன் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. இன்றைக்கு நடந்ததே எப்பவும் நடக்காது மாறிடுவா... இன்னும் ரெண்டே நாள் வெயிட் பண்ணுங்க எல்லாமே மாறிடும் .

மாறினால் சரி தான். வா சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம். போன் வர்றதுகுல்ல குடோன் போய்விடலாம்.
அடுத்த இருபது நிமிடத்தில் இருவரும் கிளம்பி இருந்தனர்.

அபி.. நீ கார் ஓட்டுவதான..அதிலே போயிடலாமா..

நானும் காரை பார்த்ததும் கேட்கணும்ன்னு நினைச்சேன் டிரைவர் வரலையா...

நீ வேற அபி இந்த கார் மலருக்காக வாங்கியது. டிரைவிங்கிளாஸ் போறா இல்லையா... ஓட்டி பார்க்கறதுக்காக வாங்கினது. அவளுக்கு ஏனோ தனியா காரை எடுக்க பயந்துக்கறா..

அவள் எடுக்காட்டி என்ன... ஏன் அங்கிள் உங்களுக்கு ஓட்ட தெரியாதா...

இந்த வயசுக்கு மேல பழகி என்ன செய்ய போறேன். எனக்கு என்னுடைய டூவிலர் போதும் ஓட்டற அரை கிலோமீட்டருக்கு அதுவே அதிகம்.

வண்டி சாவியை வாங்கியவன் காரை வெளியில் எடுத்து ஓட்டும்போதே தெரிந்தது கார் அந்த அளவுக்கு நல்ல கன்டிசனில் இருந்தது. வண்டி நல்ல கன்டிசன்ல இருக்கு அங்கிள்.

என்ன செய்ய அபி... வண்டி வாங்கின நாளில் இருந்து ஒருத்தன் வரச்சொல்லி இருக்கிறேன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து கொஞ்ச நேரம் ஆன் பண்ணி அரைமணி நேரம் ஓட்டிட்டு வந்து நிப்பாட்டுவான். இந்த பக்கம் தான் அபி லெப்ட் திருப்பு.. அந்த கேட் பக்கம் தான்.. சொன்ன இடத்தில் நிற்பாட்ட.. சாவியை எடுத்தவர் கேட்டை திறக்க இங்கே அபியின் போன் அவனை அழைத்தது.

கதவை திறந்தவரை பார்த்தவன் அங்கிள் உள்ளே போங்க... போன் பேசிவிட்டு வரேன் என்றவன் போனை ஆன் செய்ய...

டேய் அண்ணா.. என ஆர்பாட்டமாய் தாரிகாவின் குரல் கேட்டது..

ஏய்.. வாலு நீ கத்தறதுல என்னுடைய காது ஸ்பீக்கர் போய்விடும் போல இருக்கு ஏன் இப்படி கத்தற... காதை தேய்த்து விட்டபடி பதில் கூற.. அவளோ..

சும்மா பேச்ச மாத்தாத...இப்பதான் அப்பாகிட்ட பேசினேன் அவர்தான் சொன்னாங்க நீ பெட்டி படுக்கையை கட்டிட்டு அந்த பொண்ணு வீட்டுக்கே போயிட்டயாம். கேட்க்கும் போதே எவ்வளவு ஹேப்பியா இருக்கு தெரியுமா.. அத்தான் எப்பவுமே உன்னபத்தி பேசும் போது சொல்லுவாங்க... கல்யாணமே வேணாம்ன்னு சொல்லற இந்த மாதிரி பசங்க விழுந்தா தலைகுப்புற விழுவாங்க அப்படின்னு.. அதே மாதிரி நடந்துக்கறடா...

ஏய்... நான் எப்ப சொன்னேன் கல்யாணம் வேணாம்ன்னு.... இப்போதைக்கு வேணாம்னேன் அவ்வளவுதான்...ஆக டைம் போகலைனா என்ன தான்
கழுவி ஊத்தறிங்க ரெண்டு பேரும் அப்படித்தானே..

சேச்சே அத இவ்வளவு பப்லிக்கா ஆமாம்ன்னு சொல்வனா...

அவளது பதில் கேட்டு சிரித்தவன் சரி மச்சான் எங்கே...

இவ்வளவு நேரம் பேசிவிட்டு இப்ப தான் வெளிய புறப்பட்டு போணாங்க...அப்புறம் அண்ணா நான் சீக்கிரமே அங்கே வரலாம்ல உன்னோட கல்யாணத்துக்கு...

அதுக்கு் பொண்ணு சம்மதிக்கணுமே இந்த நிமிஷம் வரை மூஞ்சை தூக்கி வச்சிட்டு சண்டை போட்டுவிட்டு இருக்கறா ... பத்து நாள் தங்க போறேன்னதுக்கே இந்த பாடு.. நான் தான் உனக்கு பார்த்த மாப்பிள்ளைன்னு தெரிஞ்சா கல்ல எடுத்து தலையில போட்டாலும் போடுவா...ஆனா இவ கூட வம்பிழுக்கறது கூட ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு. அவ கூட இருந்தா நேரம் போறதே தெரியலை தெரியுமா..

அண்ணா டேய் உனக்கு முத்தி போச்சிடா. நான் வைக்கிறேன் நீ சொன்னத அப்படியே அம்மாகிட்ட சொல்ல போறேன்.

தாரு செல்லம் எதையாவது உளரி
வைக்காதடா... இதையே சொல்லி அம்மா ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க...

அது... சொல்ல முடியாதுன்ணா என்னுடைய மூட பொறுத்து...பை வைக்கிறேன் என்றபடி கட் செய்ய இவனும் குடோனிற்குல் நுழைந்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் மணல் எடுத்து செல்ல வண்டி வர வேகவேகமாக வேலை நடந்தது.
சற்று நேரத்தில் சல்லி கற்கள் இறக்க வாகனம் வர இரண்டு மணி
 




K

kavi sowmi

Guest
வரை நேரம் போனதே தெரியவில்லை
அதற்குல்லாகவே இரண்டு முறை போன் செய்திருந்தாள் பனிமலர் மூன்றாவது முறை போன் அடிக்கவும் நேரம் பார்த்தவர் அபி கிளம்பலாம் ரொம்ப நேரம் ஆயிடுச்சி.

அபிக்கு உண்மையிலேயே மலரை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருந்தது தந்தை வர தாமதமானதும்
அவரை அழைத்தவள் படபடவென பொறிந்து கொண்டிருந்தாள். இன்னும் எவ்வளவு நேரம் ஆகும். அப்படி சாப்பிடாம யாருக்கு சம்பாதிக்க சொன்னா..உடம்புக்கு ஏதாவது வந்ததின்னா... நமக்கு வயசு குறையல புரியுதா... கிளம்பி வாங்க... இவன் கூட இருப்பது அவளுக்கு தெரியவில்லை. அவரது போனில் சத்தம் நன்றாகவே கேட்டது.

இவன்புறம் திரும்பியவர் ஸாரி அபி... தினமும் ஒரு மணிக்கு வீட்டுக்கு கிளம்பிடுவேன் நீ இருக்கவும் பேசிட்டே இருந்துட்டேன் வா போகலாம். வீட்டுக்கு போனபிறகும் அமைதியாய் சாப்பிட எடுத்து வைத்தவள் இவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காலையில் அவனிடம் பேசியது அதிகபடியோ என்ன உணர ஆரம்பித்து இருந்தாள்.

காலையில் இவள்பேசிக்கொண்டு இருந்த போதே அபியின் தகப்பனார் இவளது தந்தையிடம் பேசிவிட்டு இவனிடம் பேசியதை கேட்டுக்கொண்டு இருந்தாள். பத்து நாள் தானே சொடக்கு அடிக்கும் நேரத்தில் நாட்கள் விரைந்தோடி விடும். மறுபடியும் பழைய நாட்கள் போல அப்பாவும் நானும் தானே பார்த்து கொள்ளலாம் என நினைத்திருந்தாள். இந்த தீர்மானம் இரவுக்குல் மாறிவிடப்போவதை அப்போது உணரவில்லை.

அப்போது மட்டும் அல்ல மாலையில் காபி கொடுத்த போதும் எந்த ஒரு
பேச்சும் இல்லாமல் அமைதியாக நகர்ந்தது நேரம்...

இரவு உணவு தயாரிக்க ரெடி ஆன போது பிரச்சனை ஸ்டார்ட் ஆகியது.
மதுசூதனனை அழைத்தபடி அபிநந்தன் அங்கிள் நைட்க்கு நான் டிபன் செய்யறேன். சப்பாத்தி அன்டு வெஜ்குருமா சரியா என்றபடி இவனும்
வந்து நிற்க...ஏற்கனவே சப்பாத்தி மாவை பிசைந்து கொண்டிருந்த மலரை பார்த்தவன் மலர் நீ சப்பாத்தி செஞ்சிடு குறுமா நான் செய்யறேன் என்ன ஆரம்பித்தான்.

சதா எந்த நேரமும் தந்தையோடு பேசிக்கொண்டு இருக்கும் மலருக்கு இவன் வந்த பிறகு பேசாதது கோபத்தை ஏற்கனவே ஏற்படுத்தி இருந்தது. யோசிக்காது பதில் கூறினாள்... குறுமா வைப்பிங்க... சரி அத யாரு சாப்பிடறது என...

அபியும் ஏன் நீ மத்தியானம் வச்சத நான் சாப்பிடலையா.. ஏதாவது குறை சொன்னேனா..

என்ன நானும் இருக்கறவரைக்கும் சண்டை போட கூடாதுன்னு பேசாமல் இருந்தா ரொம்ப பேசறிங்க. குறுமாதான வைக்கணும் வைங்க என்றபடி நகர்ந்து நின்றாள்.

குறுமாவுக்கு வேணும்ங்கற சாமான் எடுத்து தா மலர்.

ம்... சரி...

எடுத்த காய்கறிகளை ஒவ்வொன்றாய் வெட்டியபடி... திரும்பி அவளை பார்க்க தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல எங்கோ பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். அபி ஏதாவது செய்டா... இப்படி திரும்பி நின்னா ப்யூச்சருக்கு நல்லதில்லையே... மெல்ல வம்பிழுக்க நினைத்தவன் அவளது முகத்தை பார்த்தபடி பாட ஆரம்பித்தான்.

'"மலரே மெளமா" என ஆரம்பிக்க..

சாருக்கு உடம்பு எப்படியிருக்கு... அப்பா பக்கத்துல இல்லைன்னா பாட்டு வருமா... பிச்சிடுவேன். ஒழுங்காக வேலைய பாரு...மரியாதை கொஞ்சமாய் குறைந்திருந்தது.

ஓய்... என்ன மிரட்டறயா... இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன். என்னோட வாய் என்னோட பாட்டு என்னமோ இந்த அம்மாவோட பேரை கூப்பிடறகாகவே பாடின மாதிரி என்னா பில்டப்...

சற்று நேரம் மறுபடியும் இருவருக்கும் விரும்பாத மெளனம் இருவருக்கும் நடுவே இருந்தது.மறுபடியும் அபியே துவங்கினான். அப்புறம்... மலரு..

கொஞ்சம் சலிப்பாக என்ன என்றவள் இப்போது தான் பார்த்தாள் அவன் காய்கறி வெட்டுவதை ஒரே சீராக நேர்த்தியாக... பார்த்தவள் யோசிக்காது உண்மைய சொல்லு நீ ஐடி பில்ட்டுல ஓர்க் பண்ணலதான... நீ மும்பையில் ரெஸ்டாரண்டுல தான் வேலை செய்யற..

ஏன் ரோட்டு கடையில் வேலை செய்யறேன்னு சொல்லேன்... கேட்க இன்னும் நல்லா இருக்கும்ல. ..

நல்லாதான் இருக்கும். உனக்கேத்த பர்பெக்ட் வேலை அதாதான் இருக்கும். பழையபடி பேச ஆரம்பித்து இருந்தால் அவளையும் அறியாமல்..

எவ்வளவு பேசற.. வாயே ஓயாம.. ஆமாம் உனக்கு பச்சை கேரட் பிடிக்காதாம் அப்படியா.. உன்னோட அப்பாகிட்ட பேசும் போது சொன்னாங்க..

ஆமாம் சுத்தமான பிடிக்காது. சின்ன வயதில் இருந்தே...

அப்படியா அப்போ இத நீ சாப்பிட்டே ஆகணும் என்றவன் பொடியாக வெட்டியிருந்த கேரட்டை ஓரு நிறைய எடுத்தவன் இவள் கவனிக்கும் முன்னே இவளது தலைக்கு ஒரு கையை பிடித்தபடி வாய்க்குல் திணித்திருந்தான். ஒரு நிமிடத்தில் அவனிடம் இருந்து திமிறி நகர்ந்தவள் வாயில் இருந்த கேரட்டை துப்பியபடி...

எவ்வளவு கொழுப்பு இருந்தா என்ன பிடிச்சி வச்சி என் வாய்க்குல்ல திணிச்சிருப்ப... மலரை யாருன்னு நினைச்ச என்கிட்ட சீண்டாத வரைக்கும் தான் நான் நல்லவ.. வம்பு வச்சிகிட்ட என்னோட சுயரூபத்தை காட்டாம விட மாட்டைன். நீ காலிடா என்றவள் கைக்கு கிடைத்த காய்கறிகளை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள்..
 




K

kavi sowmi

Guest
இவள் ஓன்றை வீச பதிலுக்கு அவன் ஓன்றை வீச யோசிக்காமல் தக்காளியை எடுத்தவள் கைகளில் உடைத்து அவன் முகத்தில் தேய்த்திருந்தாள் .

மலர் விட்டுடு என்கிட்ட வம்பு வைகாத
என்றவன் அவன் பங்குக்கு இரண்டை உடைத்து தலையில் தேய்க்க...
மலரோ அருகில் இருந்த கோதுமை மாவை ஒரு கையில் அள்ளி அவன் தலையில் அபிஷேகம் செய்திருந்தாள்.

சில நிமிடத்தில் சமையல் அறை தனது மொத்த அழகையிம் இழந்திருந்தது.
போராட்ட பூமி போல் காட்சி தர இப்போது அபி அருகில் இருந்த இரண்டு முட்டையை எடுத்தவன் இவளை நோக்கி வர...

வேண்டாம் அபி எனக்கு பச்ச முட்டை ஸ்மெல் பிடிக்காது என்னை விட்டுடு...

அப்படின்னா கட்டாயம் உடைக்கணுமே
என்றவன் தலையில் ஒன்றை உடைக்க அப்பா என சத்தமாக அழைத்திருந்தாள். இவளது சத்தம் கேட்டு சமையலறைக்கு வந்தவர்
இருவரையும் பார்க்க...

என்ன இது... என்ன செஞ்சு வச்சிருக்கறிங்க..

இவன்தான் வம்பிழுத்தான்பா.. என மலரும்...

அங்கிள் இவதான் தலையில மாவ அள்ளி போட்டா என அவனும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சொல்ல..
இருவரையும் மாறி மாறி பார்த்தவருக்கு ஐந்து வயது குழந்தை
கொட்டி கவிழ்த்து விட்டு மாற்றி மாற்றி குறை சொல்லுமே அது தான் ஞாபகம் வந்தது.

நீங்க ரெண்டு பேரும் சமைக்கவே வேண்டாம். நான் கடையில போய் வாங்கிட்டு வரேன். முதல்ல ரெண்டு பேரும் போய் குளிங்க ... முடியல... முதல்ல நாளைக்கு சமையல் பண்ணற அம்மாவ வரச்சொல்லறேன். இவங்க பஞ்ஞாயத்தை பார்க்கவே நேரம் போதாது போலயே...விட்டுட்டு போய் அரைமணி நேரம் இருக்குமா ரணகலம் பண்ணி வச்சிருக்கறாங்க...என்றபடி நகர...

முட்டை உடைஞ்ச ஸ்மெல்லில் முகத்தை அஷ்டகோணலாய் வைத்திருந்தவளோ தலையில் இருந்ததை ஒரு கையில் எடுத்தவள் இவனது அருகில் வந்து... இவனது தலை முடியை கொத்தாய் பற்றியவள் அவனது தலையில் தனது கைகளில் இருந்ததை தேய்த்தபடி போ...
நீயும் இந்த ஸ்மெல்லோட... என்றபடி வேகமாக தனது குளியல் அறைக்குள் சென்றிருந்தாள்.

சண்டைகள் தொடரும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top