• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உருகாதே .. வெண்பனிமலரே_8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

K

kavi sowmi

Guest
சில நிமிடத்திலேயே இயல்பை தொலைத்து இருந்தவன் எதுவும் கூறாமல் அவளை வேகமாக அவளது கையை பிடித்து இழுத்தபடி வெளியேறினான். காரணம் புரியாத மலரோ.. ஏன் இப்படி இழுத்திட்டு வர்ற.. என்ன ஆச்சு..உனக்கு பைத்தியமா பிடிச்சு இருக்கு அங்கே பார்த்தவங்க என்ன சொல்வாங்க.. இதுக்காகதான் உன்ன கூப்பிட்டுட்டு வரமாட்டேன்னேன்.

உன்னோட போன் எங்கே..

வீட்ல இருக்கு. அது ஸ்விச் ஆப் ஆகிடுச்சி..அதனால நான் எடுத்துட்டு வரல..

எப்பவுமே இப்படி தான் செய்வாயா..
வெளிய கிளம்பினா போன் எடுக்கணும்ன்னு கூட தெரியாதா..

சும்மா திட்டாதே நான் ஓன்னும் தனியா வரல. உன் கூட தான் வந்தேன். நீ கூட இருக்கறதாலதான் போன் எடுத்துட்டு வரல போதுமா..இந்த பதில் அவனது கோபத்தை கொஞ்சமாய் குறைத்தது.

அப்பா கூப்பிட்டு இருந்தாங்க..ஏதோ எமர்ஜென்சி போல உடனே வரச்சொல்லி இருக்கறாங்க..

அப்பாவுக்கு ஒன்றும் இல்லைல்ல...

ஏய்.. கூல் அப்பாவுக்கு எதுவும் இல்லை...வீட்டு பக்கத்தில.. யாரோ கட்சிக்காரனை வெட்டிட்டாங்கலாம். பிரச்சினை ஆகும் போல இருக்கு ரெண்டு பேரும் வீட்டுக்கு உடனே வாங்கன்னு சொன்னாங்க...

இன்னும் நாலு நாள்ல இவங்களோட நிச்சயம் இருக்குல்ல அன்றைக்கு நிறைய நேரம் இருப்பயாம் இப்ப கிளம்பலாம்... நீ வண்டி ஓட்ட வேண்டாம். நான் வண்டி ஓட்டறேன் பின்னால் ஊட்காரு சரியா என்றவன் இவள் உட்காரவும் வண்டி வேகமாக பறந்தது.

கொஞ்சம் நிதானமா போங்க அபி இவள் சொன்னது காற்றின் கேகத்தில் அவன் காதில் விழுந்ததோ! இல்லையோ..பயத்தில் கைகளுக்கு அருகில் இருந்த கம்மியை பற்றிய படி கண்கள் இருக்கமாக மூடி அமர்ந்தவள் தான் வண்டி நிற்கவும் கண் திறந்து பார்த்தாள். கண்முன்னால் அவள் கண்ட காட்சி கைகள் தானாக நடுங்க...
இப்ப என்ன செய்யறது... சற்று தூரத்தில் ஐம்பதிற்துக்கும் மேற்பட்டோர் கையில் கம்பு ,கத்தி,தடிகளோடு ஒவ்வொரு கடையையும் எதிர் பட்ட வாகனங்களையும் அடித்து நொறுக்கியபடி வந்து கொண்டிருந்தனர்.

அருகில் இருந்த குறுகலான தெருவில் வண்டியை விட்டவன் இந்த வழியா போனா எங்க போகலாம் மலர்.

இது கட் ரோடு..வழி கிடையாது.
அந்த ரோட்டிலும் அங்கங்கு வண்டி
நிறுத்தி இருக்க சற்று தொலைவில் வண்டியை நிறுத்தியவன்.. இவளை அழைத்தபடி சற்று மறைவாக நின்றிருந்தான். கட் ரோட்டுக்கு வர மாட்டாங்க. மெயின் ரோடு வழியா போகத்தான் பார்ப்பாங்க. எப்படியும்
இன்னேரம் போலீஸ்டேசனுக்கு கம்லைன்ட் போய் இருக்கும். பயப்படாதே என்றவன் இவளை தன் பின் புறமாக நிற்க வைத்து கொண்டான்.

கூச்சல் ஒருபுறம் கூடவே பொருட்கள் உடைபடும் சத்தம் அந்த கும்பல் அந்த தெருவை கடக்கும் சத்தம் தெளிவாக கேட்டது ஹோ என்ற கூச்சல் அருகில் கேட்க கடை விளக்குகளை உடைக்கும் சத்தம் உடைந்த கண்ணாடி சிதறலின் சத்தம் தெளிவாக காதில் கேட்க பயத்தில் கண்களை இருக்க மூடியபடி அவனது முதுகில் இருக்கி அணைத்தபடி நின்றிருந்தாள்.

அவளது இதய துடிப்பு அவனுக்கு நன்றாக கேட்டது. கைகளின் நடுக்கம் அவளது பயத்தை அப்பட்டமாய் அவனுக்கு உறைத்தது. பயப்படாத மலர் நடுங்கும் அவளது கைகளை தனது கைகளுக்குள் வைத்தபடி... இன்னும் ஐந்து நிமிடம் அவங்க நகர்ந்து போயிடுவாங்க.. இவளது பயத்தை அதிகப்படுத்தும் படி கூட்டத்தில் ஒரு குரல் கேட்டது.

தலைவா..இந்த ரோட்டுக்கும் போய் ஒரு காட்டு காட்டிட்டு வரலாமா...இதை கேட்டதும் பயத்தில் இன்னும் அவனது முதுகில் நன்றாகவே ஓண்டினாள்.

வேண்டாம்டா அது கட் ரோடு... உள்ளே போன நேரம் போலீஸ் வந்தாங்கன்னா ஓடி தப்பிக்க வழி இருக்காது. அப்படியே நேரா போ...
போலீஸ் வண்டி சத்தம் கேட்டா ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடிடுங்க...

மேலும் பத்து நிமிடம் தாண்டியிருக்க
போலீஸ் வாகனம் போகும் சத்தத்தை தொடர்ந்து அமைதியாய் இருக்க ...
மலர் போகலாம் என்றவன் இவளை அழைத்தபடி வீட்டிற்கு வண்டியை விட இன்னமும் நடுங்கி கொண்டிருந்தாள்.
கம்மியை இருக்கி பிடித்தவளின் கைகளை பிரித்து விட்டவன் ஓரு கையை எடுத்து தனது தோளில் வைத்தபடி... பயப்படாத... இன்னும் ஐந்து நிமிடம் வீட்டுக்கு போயிடலாம்
சொன்னவனின் நம்பிக்கை குரலில் அவளது பயம் மெல்ல மெல்ல விலகியது.

மெயின் ரோட்டில் அங்கிங்கு போலீஸ் நின்றிருக்க வீடு வரவும்
வாசலிலேயே காத்திருந்த மதுசூதனனோடு உள் சென்ற போது தான் தெரிந்தது பிரச்சினையின் தீவிரம்... எந்த அளவுக்கு நடந்து கொண்டு இருக்கிறது என... லோக்கல் சேனலில் திரும்ப திரும்ப ஒளிபரப்பிக் கொண்டு இருந்தனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்களின் அட்டகாசத்தை.... எதிர் பட்டவர்களுக்கு அடி பட்டதாக கிட்டத்தட்ட இருபது பேருக்கும் மேல் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்தனர். நூற்றுக்கனக்கான வாகனங்கள் சேதம் என...திரும்ப திரும்ப ப்ளாஸ் நியூஸில் கொட்டை எழுத்தில் ஓடிக்கொண்டு இருந்தது.

சற்று நேரம் டிவியை பார்த்தபடி அமர்ந்தவளுக்கு தெரிந்தது தனியாக ஓரு வேளை வந்திருந்தால் என்னவாகி இருக்கும்.
 




K

kavi sowmi

Guest
தனக்கு ஏதாவது ஒன்று என்றால் தந்தையின் நிலை என்ன???
நினைத்தவள் அப்படியே அமர்ந்திருக்க அபியோ.. இன்னும் என்ன யோசனை மலர் தூங்கலையா..

தேங்க்ஸ் அபி.. நடந்தத பார்த்ததில் இருந்து இன்னும் வெளிவர முடியலை ஓரு வேளை நீ கூட இல்லைன்னா என்ன ஆகி இருக்குமோ... உன்னை மாதிரி அவசரத்துக்கு யோசிக்க கூட வராது.

ஏன் அப்படி யோசிக்கற.. நான் இல்லன்னா நீ அங்கே இருந்து கிளம்பியே இருக்க மாட்ட... உன் ப்ரெண்டுங்க யாராவது உன்ன அவங்க வீட்டுக்கு கூப்பிட்டுட்டு போய் இருப்பாங்க. எப்பவுமே பாசிட்வா யோசி ... ஓகே குட்நைட் நாளைக்கு பார்க்கலாம் அவன் எழுந்து அவனது அறைக்குள் செல்ல...

அமர்ந்து இருந்தவளுக்கு தான் தெரியவில்லை தான் அவனிடம்
மனதால் நெருங்கி கொண்டு இருப்பதை...

அடுத்த நாள் அழகாய் விடிய இரவு ஏதேதோ யோசனையில் தாமதமாக தூங்கியவள் எழும் போதே ஒன்பது மணியை நெருங்கியிருந்தது. வேகமாக காலை கடன்களை முடித்து விட்டு ஹாலிற்குள் வர தந்தை மட்டும் தனியாக அமர்ந்து அன்றைய நாளிதழை பார்த்து கொண்டு இருந்தார்.

குட்மானிங்பா...

வாடா வாடா லேட்டாகிடுச்சா...அப்போது வேலைக்கார பெண்மணி காபியோடு வர அதை வாங்கி அருந்தியபடி..அப்பா எங்கப்பா... அபிய காணோம் . கடந்த இரண்டு நாட்களாய் இவன் பார்க்கும் பொழுது எல்லாம் தந்தையோடு காட்சி தருபவன் இன்று அந்த இடத்தில் இல்லை எனவும் இயல்பாய் வந்து விழுந்தது.

உனக்கு தெரியாதா... அவன் ஊருக்கு போயிட்டான் அவங்க பாட்டி பேசிணாங்கல்ல பார்த்துட்டு வர நேற்றே டிக்கெட் புக் பண்ணிட்டான். எட்டு மணி வண்டிக்கு கிளம்பிட்டான்.

ஓ.. சரிப்பா... முதல் முறையாக தன்னிடம் சொல்ல விட்டு போகவில்லை என்பதை நினைத்தவள் முகம் வருத்தத்தில் சுருங்கியது இதை கவனித்தவருக்கு மனதில் லேசாக மகிழ்ச்சி தோன்றியது.

வருத்தத்தோடு எழுந்து சென்ற மகளை பார்த்த போது அபி கூறியது நினைவில் வந்தது. அங்கிள் உங்க பொண்ணு நான் இல்லைன்னு வருத்தபட்டான்னா என்னை தேடிடான்னா..உங்கள் ஆசை சீக்கிரமே நிறைவேறிடும். கவலையே படாதிங்க..

சரிடா... வா நாம ரெண்டு பேரும் சாப்பிடலாம் என சொன்னவர் நேராக தனது அறைக்குள் சென்று அபியை அழைத்திருந்தார் தனது செல்பேசிக்கு...

அபி நீ சொன்ன மாதிரி வருத்தபடறா எனக்கு செம சந்தோஷமாக இருக்குபா...

ஐயோ அங்கிள் நீங்க வேற.. நீங்களே அவகிட்ட சொல்லிடுவிங்க போல இருக்கு இப்ப மலர் எங்கே...

அவளோட ரூமிற்க்கு போய் இருக்கிறா...

சரி அங்கிள் நான் கூப்பிட்டு பேசறேன் என்றவன் அவளது நம்பருக்கு அழைக்க... எடுத்து உடனே பொறிய ஆரம்பித்து இருந்தாள் மலர். நான் யார் உங்களுக்கு...நான் யாரோ தானே..என்கிட்ட ஏன் சொல்லணும்.நீங்க நினைச்சா வரலாம். நினைச்சா எங்கே வேணும்னாலும் போகலாம்.. நான் உனக்கு ஒன்னுமே இல்லல்ல... ஊருக்கு போறதபத்தி சொல்லகூட தோணலைல.. நான் ஒரு பைத்தியகாரி..கோபமாக பேசியவள் கடைசியில் அழுதிருந்தாள்.

மலர்... மலர் அழுகிறயா.. இத பாரு நாளை நைட்க்கு வந்திடுவேன். காலையில் நீ தூங்கிட்டு இருந்தே அதனால்தான் சொல்ல முடியலை... ப்ளீஸ் அழாத... ஸாரி..

ஏன் நேற்று நைட் பத்து மணி வரைக்கும் உன் கூட தானே இருந்தேன் அப்ப சொல்லி இருக்கலாம்ல...ஏன் சொல்லல ..

அதுதான் ஸாரி கேட்டுட்டனே... ப்ளீஸ் விட்டுடேன்.

ம்... நானும் ஸாரி... நான் தான் அதிகமா உரிமை எடுத்துட்டேன் போல.. இட்ஸ் ஓகே...

உனக்கு என் கிட்ட இல்லாத உரிமையா.. மலர்.. பாட்டிய பாத்து ரொம்ப நாள் ஆச்சு .அவங்களோட குரலை கேட்கவும் உடனே பார்க்கணும் போல தோணிச்சு..அதனால தான் வண்டி ஏறிட்டேன். அங்கே வந்ததும் சொல்லாமல் வந்ததிற்கு தோப்புகரணம் கூட போடறேன் ஓகே வா. வருத்தபடற மாதிரி பேசாத.. ஊருக்கு போனதும் பேசறேன் அவன் கட் செய்ய... இங்கே கட்டிலில் அமர்ந்தவள் தன்னை பற்றி தன் இயல்பை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.

நியாயமாக பார்த்தால் அவன் போனதிற்கு சந்தோஷம் தானே வரணும் ஏன் அவனோட குரலை கேட்கவும் அழுகை வந்தது. அவன் கிட்ட உன்னோட எதிர் பார்ப்புதான் என்ன...
யோசித்தவளுக்கு தன் மனம் போகும் போக்கு தெளிவாக புரிந்தது..

இல்லை அப்பாவுக்காக முடிவு பண்ணினதில் எந்த மாற்றமும் இல்லை . உன்னோட மனதில் இனி சலனத்துக்கே இடம் இல்லை. இவ்வளவு நாளா யாரும் இங்கே தங்கினது இல்லை. கூட இத மாதிரி உரிமையா சண்டை போட்டது இல்லை. அதுதான் இந்த அளவுக்கு அவனை நினைக்க சொல்லுவது. அவனை மறந்திடு. இனி அவன் வந்தாலும் நீ அவன் விட்டு விலகியே இரு. அதுதான் உனக்கு நல்லது.
தெளிவாக முடிவு செய்தவள் தனது அறையில் இருந்து வந்த படி தந்தையிடம் அப்பா... சாப்பிடலாம் வாங்க... என அழைக்கும் போது குழப்பம் எதுவுமில்லாமல் தெளிந்திருந்தாள்.

அபியோ இவளுக்கு நேர்மாறான மனநிலையில் இருந்தான். அவனை தேடறா என்பதே அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது. அவன் வரையில் தெளிவாக தெரிந்தது அவளுக்கு அவனை பிடிக்கும் என்பது..
 




K

kavi sowmi

Guest
தன்னிடம் சண்டையிட்டது ஸாரி சொன்னது பயத்தில் முதுகில் அணைத்தபடி நின்றது...இப்படி ஒவ்வொன்றிலும் அவளது முகம் பல பாவனைகள் காட்ட..

அதுவே அவனுக்கு சுகமாய் இருந்தது. கண்கள் மூடியபடி அதை அணுபவித்தவன் மனதிற்குள் கொஞ்சி கொண்டான் மலரை... இந்த ஒரு முறைதான் செல்லம் ...இனிமேல் நீயே ஆசைபட்டாலும் உன்னை நான் தனியா விட மாட்டேன். எப்பவுமே என் கூட மட்டும் தான் இருப்ப..

தனக்குல்லேயே கேட்டுக் கொண்டான். வேண்டாம்ன்னுதானே சொல்ல வந்தோம்.. எது அவளிடம் தன்னை கட்டி போட்டது .அங்கும் இங்கும் நடனமாடும் அந்த கண்களா..பார்த்த உடனே முதல் நாள் சண்டையிட்டது பிறகு சமாதானம் ஆனது இதோ சற்று முன்பு அழுதது இதுவே அவளது மனதை தெளிவாக படம் பிடித்து காட்டியது .

அதே மகிழ்ச்சி அவனது வீட்டிற்கு சென்றபோதும் பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு தாய் தந்தையுடம் பேசியவன் அடுத்த நாள் கோவைக்கு வண்டி ஏறியிருந்தான்.
தன்னை பார்த்ததும் அவளது முகம் மகிழ்ச்சியில் எப்படி மலரும் என பல வாராக நினைத்தபடி கதவை தட்ட அவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

உருகாதே!!!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சௌமி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கவி சௌமி டியர்
 




Last edited:

Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
மலர் என்ன செய்ய போறா ! அடுத்த அதிர்ச்சி என்ன, (y)(y).
 




K

Kavi sowmi

Guest
மலர் என்ன செய்ய போறா ! அஅடுத்த அதிர்ச்சி என்ன, (y)(y).
அபிய சுத்த விடலாம் பா.
நன்றி சகோ.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top