எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 3

Vijayanarasimhan

Author
Author
SM Team
#43
எல்லாரோடவும் பாரபட்சம் பாக்காம நட்பாகுறது சூப்பர்... 😀👍

சித்தார்த் யாருனே தெரியல அதுக்குள்ள அவன் மேல ஒரு கொலவெறி தாக்குதலா!

அதிகாலை கனவு பலிக்கும்னு சொல்வாங்களே... பலிக்குமா?
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#44
எல்லாரோடவும் பாரபட்சம் பாக்காம நட்பாகுறது சூப்பர்... 😀👍

சித்தார்த் யாருனே தெரியல அதுக்குள்ள அவன் மேல ஒரு கொலவெறி தாக்குதலா!

அதிகாலை கனவு பலிக்கும்னு சொல்வாங்களே... பலிக்குமா?
எல்லாரிடமும் பாரபட்சம் இல்லாமல் நட்பாவது ஒருசிலருக்கே வாய்க்கப்பட்ட குணம். எப்பவும் அவங்களை சுத்தி யாராவது இருந்துட்டே இருப்பாங்க, சித்தார்த் மேல் தாக்குதல் வந்து... கதையை நகர்த்த எனக்கும் ஏதாவது வேணும் இல்லையா, அதால வந்தது😁😁
எந்த கனவு பலிக்கதோ இல்லையோ நம்ம பூவிழி கனவு நிச்சயம் பலிக்கும் அண்ணா😉😉 மிக்க நன்றி அண்ணா 🍫🍫🍫🍫😍😍😍😍
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#45
எல்லாரிடமும் பாரபட்சம் இல்லாமல் நட்பாவது ஒருசிலருக்கே வாய்க்கப்பட்ட குணம். எப்பவும் அவங்களை சுத்தி யாராவது இருந்துட்டே இருப்பாங்க, சித்தார்த் மேல் தாக்குதல் வந்து... கதையை நகர்த்த எனக்கும் ஏதாவது வேணும் இல்லையா, அதால வந்தது😁😁
எந்த கனவு பலிக்கதோ இல்லையோ நம்ம பூவிழி கனவு நிச்சயம் பலிக்கும் அண்ணா😉😉 மிக்க நன்றி அண்ணா 🍫🍫🍫🍫😍😍😍😍
:):)(y)
 
#46
எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? 3

கீர்த்தி, பிரபாவுடன் ஒருவழியாக நட்பு உடன்படிக்கை முடிந்து, முதல் நாள் ஓவிய பயிற்சியை பூவிழி தொடங்கினாள்.

முதலில் மூன்று வெள்ளை தாள்களை எடுத்து கொண்டவள், அவர்களிடம் ஆளுக்கு ஒன்றாய் கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்து கொண்டு, நாற்காலியில் அமர போனவர்களை தடுத்தவள், தரை விரிப்பில் அமரும்படி வேண்ட, மூவரும் தரையில் அமர்ந்து கொண்டனர்.

"நாம மூணு பேரும் நமக்கு பிடிச்சதை வரையலாம், யாரோடது சூப்பர்னு பார்க்கலாம் ம்ம்" என்று இவள் வரைய ஆரம்பிக்க, குழந்தைகளும் ஆர்வமாக வரைய தொடங்கினர்.

கீர்த்தி அழகான இரட்டை மீன்களை வரைந்து இருந்தாள். பிரபா, வீடு பக்கத்தில் மரம் என்று ஓரளவு நன்றாக வரைந்து இருந்தான். பூவிழி சின்சான் உருவத்தை அச்சு பிசகாமல் வரைந்து இருந்தாள்.

மூவரும் தங்கள் படங்களை மற்றவர்களுக்கு காட்டி விவாதித்து கொண்டனர்.

இப்போது பூவிழி அவர்களுக்கு வெவ்வேறு அடிப்படை வடிவங்கள் வரைய கற்று தர தொடங்கினாள்.

அவள் ஆசிரியையாய் இல்லாமல் குழந்தைகளோடு குட்டி தோழியாய் மாறி போக, முதல் நாள் வகுப்பு இனிமையாக கழிந்தது.

மறுநாள் ஆறு மணி பெட் காஃபி பருகிவிட்டு, மறுபடி உறக்கம் பிடிக்காமல் குளித்து தயாராகி வெளியே வந்தவளை, பங்களாவை சுற்றி இருந்த பரந்த தோட்டம் அத்தனை பேரழகாய் அழைத்தது.

நேற்றே தோட்டத்தை பார்க்க வேண்டும் என சாவித்ரியிடம் பூவிழி அனுமதி கேட்க, குடும்ப உறுப்பினர் தவிர மற்றவர் தோட்டத்திற்குள் செல்ல அனுமதி இல்லை என்று அவள் மறுத்து விட்டாள்.

"அப்ப நாள் பூரா நான் ரூம்ல அடஞ்சு கிடக்கணுமா சாவிக்கா" பூவிழியின் முகம் சுருங்க,

"இல்ல பூவிழி, பங்களா பின்பக்கம் விளையாட்டு மைதானம் இருக்கு… அது பக்கத்திலயே சின்ன தோட்டம் கூட இருக்கு… நீ அங்க வேணா போய் பாரு" என்று சாவித்திரி பொறுமையாகவே விளக்கம் தந்தாள். அவளுக்கு ஏதோவொரு வகையில் பூவிழியை பிடித்திருந்தது அதன் காரணம் அவளின் துறுதுறு தனமாய் இருக்கலாம்.

"தேங்க் யூ சாவிக்கா…" என்று அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு துள்ளி ஓடியவளை பார்த்து தோளை குலுக்கி கொண்டாள் பெரியவள்.

காலையின் இதமான சூழலில் அந்த பங்களாவை சுற்றி கொண்டு மெல்ல நடை பயின்றாள் பூவிழி.

செல்வமும் செழிப்பும் அழகும் ஆடம்பரமும் நிறைந்து இருந்த இந்த சூழ்நிலை பூவிழிக்கு புதிது. அவள் இதுவரை வாழ்ந்த சூழ்நிலை முற்றிலும் வேறு.

தனக்கு கொஞ்சம் பாசமும் நிறைய கண்டிப்பு காட்டும் தில்லு பேபி தான் அவளின் ஓரே சொந்தம், எதிரி எல்லாம்.

வளர்ச்சி அடைந்த கிராமத்தின் நகர சூழல் கொண்டது அவளின் பிறந்த ஊர். அவளின் தாத்தா தில்லை நாயகம் சொந்தவீட்டை ஐந்து பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியில் தானும் பேத்தியும் வசிக்க, மற்ற பகுதிகளை வாடைகைக்கு விட்டிருந்தார். மேலும் சுமார் ஐந்து ஆட்டோக்களை வாடைகைக்கு விட்டு, அந்த வருமானத்தில் குறைவின்றி ஓடி கொண்டிருக்கிறது இவர்களின் வாழ்க்கை.

வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களிடம் எப்போதும் வரம்பின்றி வாயடிக்கும் தன் பேத்தியை அடக்கி வைப்பதே தில்லை நாயகத்தின் தினப்படி தலைவலியான வேலையாக இருந்தது இதுவரை.

'இந்த மூணு நாள் நான் இல்லாம தில்லு பேபி ரொம்ப ரிலாக்ஸா இருக்கும் போல… ஃபோன் கூட பண்ணல…'

ஆமா எப்படி ஃபோன்ல பேசும்! நான் வேலைக்கு போறேன்னு கேட்டதுக்கு முடியாதுன்னு தைய தக்கான்னு குதிச்சா நான் என்ன பண்ணுவேன் அதான் நான் வேலைக்கு போறேன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு எஸ்ஸாகி வந்துட்டேன்!'

'ஒருவேளை என்மேல கோவமா இருக்குமோ? இருந்துட்டு போகட்டும்… எத்தனை நாளைக்கு…!'

என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு வந்தவளை காலையின் சிற்றுண்டி மணம் இழுத்தது.

பூவிழி அந்த பங்களா சமையலறையின் பின்பக்க கதவை நெருங்கி இருந்தாள். 'வாசனையே சும்மா தூக்குது… இது என்ன டிஷ்ஷா இருக்கும்? தெரிஞ்சுக்கணுமே!' என்று கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.

சமையலறை அவள் வீட்டின் கூடத்தை விட பெரிதாக, பிரம்மாண்டமாக, நேர்த்தியான நவீன வடிவமைப்புடன் காட்சியளித்தது.

அங்கே ராபர்ட் மும்முரமாக எதையோ கிண்டி கொண்டிருந்தான். அவன் கைகள் பரபரவென அங்கே இயங்கி கொண்டிருக்க, அவன் பின்னால் வந்து எட்டிப் பார்த்தவள், "என்ன இது பாஸ்தாவா? குழகுழன்னு இருக்கு… ஒழுங்கா சமைக்க தெரியாதா உனக்கு?" முகம் கசங்கி கேட்க,

திடுக்கிட்டு திரும்பிய ராபர்ட், "ஏய், நீ! நீ இங்க எப்படி வந்த?" என்று கேட்டான்.

"இதோ இப்படி தான்" கதவின் புறம் கைக்காட்டினாள் இவள்.

ராபர்ட் காட்டமாக முறைத்து, "ஹலோ, உனக்கு இங்க என்ன வேலை? என்னை டிஸ்டர்ப் பண்ணாம கிளம்பு" சொல்லிவிட்டு தன் சமையலை கவனிக்கலானான்.

"ம்ம் போறேன்… அதுக்கு முன்ன… முதல் நாளு என்னை பார்த்து ஏன் அப்படி கேவளமா லுக்கு விட்டன்னு சொல்லு"

அங்கிருந்த கேரட்டை எடுத்து கடித்தபடி சாவகாசமாய் இவள் கேட்க, அடுப்பை அணைத்து விட்டு திரும்பி திருதிருவென முழித்தான் ராபர்ட்.

இந்த சில்வண்டு பெண் தன் பார்வை மாற்றத்தை இத்தனை துல்லியமாக கவனித்திருப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

"பின்ன, சோஃபால சின்ன புள்ளதனமா எழும்பி எழும்பி உங்காந்து விளையாடுனா உன்ன எப்படி பார்ப்பாங்களாம்?" என்று அவனும் திருப்பி கேட்டான்.

"ஓய்... அப்ப நீ என்னை சைட் அடிச்சிருக்க இல்ல?" அவள் குரலை உயர்த்த,

"அய்யோ இல்ல இல்ல… நான் எதார்த்தமா தான் பார்த்தேன்"

ராபர்ட் பதறி மொழிய, பூவிழி அவனை நம்பாத பார்வை பார்த்தாள்.

"அய்யோ எக்குதப்பா ஏதாவது சொல்லி என் பொண்டாட்டி கிட்ட என்னை மாட்டி விட்டுடுடாத! நான் வேணும்னா உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்…" என்று இருகரத்தையும் தலைமேல் கூப்பி சொன்னான்.

"ம்ம் அந்த பயம் இருக்கட்டும்… இனிமே என்கிட்ட பார்த்து நடந்துக்கணும் சரியா தம்பி…" பூவிழி தோரணையாக சொல்ல, இவன் கண்கள் விரிந்தன.

சற்று நேரத்தில் பூவிழியின் வளவள பேச்சில் ராபர்ட்டும் கலந்து கொள்ள, அங்கு பேச்சும் சிரிப்புமாக சமையல் கலைக்கட்டியது.

"ஒ ஓ… அப்ப சாவிக்கா தான் உன் வொய்ப் ஆ? சொல்லவே இல்ல" பூவிழி ஆர்வமாய் கேட்க, ராபர்ட் குழைந்த வெட்கத்துடன் தலையசைத்தான்.

"எனக்கும் சாவித்திரிக்கும் லவ்… மதம் வேறன்னு ரெண்டு வீட்டிலையும் ஒத்துக்கல… அதால காதலை விட முடியுமா… மேரேஜ் பண்ணிட்டு இங்க கூட்டிட்டு வந்துட்டேன்… ரெண்டு வருசமாச்சு…"

ராபர்ட் தங்கள் காதல் கதையை சொல்லியபடி தன் சமையலை கவனிக்க, பூவிழி சமையல் மேடையில் அமர்ந்து சுவாரஸ்யமாய் கதைக்கேட்டு கொண்டிருந்தாள்.

ராபர்ட் சமையல் முடிந்து அனைத்தையும் உணவு மேசைக்கு கொண்டு செல்ல, இவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

விளையாட்டு மைதானத்தையும் அதனருகே இருந்த பூங்காவையும் ஒரு சுற்று சுற்றி விட்டு தன் அறைக்கு வந்தாள்.

காலை உணவை முடித்துக் கொண்டு, இன்றைக்கு பிள்ளைகளுக்கு எந்தெந்த வரைப்படங்களை கற்றுத்தர வேண்டும் என சிறிது நேரம் சுயபயிற்சி செய்துவிட்டு, வெளியே வந்தாள்.

இந்த மூன்று நாட்களில் அங்கு வேலை செய்பவர்கள் அனைவரிடமும் நட்பு பாராட்ட ஆரம்பித்து இருந்தாள். பூவிழியின் நட்பு வட்டத்தில் ஆண், பெண், குழந்தைகள், வயதானவர் என்ற எந்த பேதமும் இருக்கவில்லை.

தோட்டத்தில் வேலை செய்பவர்கள் முதல் கேட் வாச்மேன் வரை இவள் தோழமை பட்டியலில் சேர்ந்து கொண்டனர். ராம் குமாரை கூட காரில் வரும் போது பார்த்திருக்கிறாள். கீர்த்தி போல அவளின் அப்பா வெள்ளை நிறத்தில் சற்று பூசிய தேகமாய் காட்சி தந்தார். தன் கணிப்பு சரியென தன்னையே மெச்சி கொள்ளவும் செய்தாள்.

இத்தனைக்கும் சித்தார்த் மட்டும் அவள் கண்களில் சிக்கவே இல்லை. காரணம் அவன் இங்கு இல்லை‌. தன் தோழியின் திருமணத்திற்காக சிங்கப்பூர் சென்றவன், மேலும் சில நாட்கள் நண்பர்களுடன் ஊர்சுற்றி வருவதாய் திட்டம்.

###

சத்யவர்த்தினி தன் அறையில் தலையைப் பிடித்தபடி அமர்ந்து இருந்தாள். ராம்குமார் முகம் கூட யோசனையில் சுருங்கி போயிருந்தது.

"இவனுக்கு எல்லாம் எதுக்கு இந்த தேவையில்லாத வேலை! இப்ப எல்லா பழியும் பாவமும் நம்ம சித்தார்த் மேல வந்து விழுந்துடுச்சு" சத்யவர்த்தினி ஆதங்கமாக தம்பியை திட்டிக் கொண்டிருந்தாள்.

"ஃப்ரண்ட் தானேன்னு அவன் காதலிச்ச பொண்ணு கூட கல்யாணம் செஞ்சு வச்சிருக்கான். சித்தார்த் செய்ய நினைச்சது நல்லது தான்! பட் அந்த நரேன் ஒரு வருசத்துல தன்னோட காதல் மனைவிய கொலை செய்யற அளவுக்கு சைகோவா இருப்பான்னு யாருமே எதிர்பாக்கலயே!" ராம்குமார் தன் மைத்துனனுக்கு ஆதரவாக பேசினான்.

"ச்சே அந்த நரேன் எல்லாம் ஒரு மனுச பிறவியா? எத்தனை முறை என்னை அக்கா அக்கான்னு கூப்பிட்டு இருப்பான், அவன் காதலை நம்பி வந்த பொண்ணை போய்… மிருகம் கூட இது மாதிரி செய்யாது" சத்யாவிற்கு அப்படியே பற்றி கொண்டு வந்தது தானும் ஒரு பெண் என்ற முறையில்.

"அந்த பொண்ணோட அப்பா சும்மா விடலையே அந்த நரேனை கண்டதுண்டமா நடுரோட்டில வெட்டி போட்டு பழித்தீர்த்துகிட்டாரு… சரிதான் அவனுக்கு தேவைதான்…" ராம்குமார் பேச,

"அச்சோ இப்ப அந்த ஜனார்த்தனனோட பழியுணர்ச்சி எல்லாம் நம்ம சித்தார்த் மேல இல்ல திரும்பி இருக்கு! அவர் மகளோட கொலைக்கும் சித்தார்த்க்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு எடுத்து சொன்னாலும் அவர் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாரே என்ன செய்ய?" சத்யவர்த்தினி பதற்றமாக பேசினாள்.

மனைவியின் தோளை ஆதரவாக பற்றி கொண்டவன், "நரேன் கொலை வழக்குல ஜனார்த்தனன அரெஸ்ட் செய்ய லீகலா எல்லா ஏற்பாடும் செய்தாச்சு… அவன் ஜெயிலுக்கு போயாச்சுனா நம்ம சித்தார்த்க்கு வந்த பிரச்சனையும் நீங்கிடும்" என்று ஆறுதல் படுத்தினார்.

"எப்ப ராம் இதெல்லாம் நடக்கும்? போன மாசம் மட்டும் ரெண்டு முறை நம்ம சித்துவ கொலை செய்ய டிரை பண்ணி இருக்காங்க… மாரி கூட இருந்ததால சித்துக்கு ஒண்ணும் ஆகல… இந்த விசயம் இன்னும் அம்மா அப்பாவுக்கு தெரியாது! 'சித்தார்த்க்கு எதுக்கு தனியா பாடிகார்ட்னு' அப்பா டவுட்டா கேட்டாரு… நான் ஏதோ சொல்லி சமாளிச்சு வச்சிருக்கேன். எப்ப இந்த பிரச்சினை முடியும்னு இருக்கு" என்று தன் கணவன் தோளில் முகம் சாய்த்துக் கொள்ள, ராம் ஆதரவாக அவள் முதுகை தட்டி கொடுத்தான்.

###

ஒரு தனி அறையில் பழைய நாற்காலி ஒன்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தாள் பூவிழி.

தனக்கு என்ன நேர்ந்தது என்பதை கூட அவளால் யோசிக்க முடியவில்லை. கைகட்டை அவிழ்க்க முயல, முடியாமல் போனது.

'என் லைஃப்ல இன்னும் ஹீரோ இன்ரோ ஆகவே இல்லையே! அதுக்குள்ள ஃபைட் சீன எவன்டா மாத்தி வச்சது? இப்ப என்ன காப்பாத்த எந்த சூப்பர்மேன் வருவான்? இதென்ன சினிமாவா! ஓ மை கடவுளே' அவள் மனம் புலம்பலை தொடங்க,

அடைத்து இருந்த கதவு தூள் தூளாய் உடைந்து, ஒரு முரடன் அவள் காலடியின் கீழே பறந்து வந்து நினைவற்று விழுந்தான்.

'இங்க என்னங்கடா நடக்குது…!' பூவிழி நிமிர்ந்து பார்க்க ஆறடிக்கு குறையாத ஆண்மகன் ஒருவன் ஐந்தாறு அடியாட்களோடு ஆயசமாக சண்டையிட்டு கொண்டிருந்தான்.

அவன் சண்டையிடும் நேர்த்தியில் இவள் கண்கள் விரிய, அவர்கள் எல்லாரையும் அடித்து போட்டுவிட்டு பூவிழியை நோக்கி தோரணையாக நடந்து வந்தான்.

ஏனோ அவன் கண்களைச் சுற்றி கருப்புநிற முகமூடி போல அணிந்து அவன் அடையாளத்தை மறைத்து இருந்தான்.

அவளின் கைகட்டுகளை அவிழ்த்து விட்டு, அவளின் மென்னுடலை அப்படியே தன்னிரு கைகளில் வாகாய் ஏந்திக் கொண்டான்.

காற்றில் மிதப்பதைப் போல அவளுக்குள் அத்தனை பரவசம் பரவியது. ஆர்வமாய் அவன் முகமூடியை களைய தன் கையை நீட்டினாள்… நீட்டினாள்...

சட்டென அவள் இமைகள் விழித்து கொண்டன. தன் பட்டாம்பூச்சி இமைகளை படபடவென தட்டி திறந்தாள்.

"...அப்ப, இதெல்லாம் கனவு தானா! அச்சோ என் ஆளோட முகத்தை பார்க்கவே இல்லையே!" என்ற புலம்பலோடு தன் அலைபேசியை எடுத்து பார்க்க, மணி விடியற்காலை 4.12 என காட்டியது.

சிக்கிட்டேனோ? பார்க்கலாம்...
Very nice sis 😂😂😂😂😍😍😍
 

Advertisements

Latest updates

Top