எது புகழ்?

#1
வானளவு உயர்ந்த
விளம்பரங்களில் பரப்புவதா
புகழ்
இல்லை
வாழ்வாதாரம் அற்று
வாழும் மக்களின்
மனதில் பரப்புவதே
உண்மையான புகழ்
மதி கெட்ட நின் செயலால்
மணமாலை சூடி
மனம் மகிழ நினைத்த தன்
மகளுக்கு
மலர் வளையம்
சூடியபோது
அன்னை அவள்
கதறலுக்கு நின்
அரசு கூறும் பதில்
என்ன?
 

Sponsored

Advertisements

Top