எந்தன் நிலை

#1
அடக்கி வைத்த கண்ணீருக்கு
ஆறுதல்கள் கிடைக்குமோ
இப்பிறவி எடுத்து என்ன பயன்
ஈன்ற பெற்றோர்க்கு
உதவிட முடியாது
ஊனமுற்று கிடக்கிறது
எந்தன் நிலையும் மனமும்
ஏறுகின்ற படிகள் யாவும்
ஒவ்வொன்றாய் சரிகிறதே
ஓலமிடும் என் ரணங்களுக்கும்
ஔடகம் தான் கிடைக்குமோ
அஃது வரை என்செய்யும்
அழுகின்ற எந்தன் மனம்....
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top