• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னம்மா இப்படி பண்றீங்களேமா 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mugil Nila

நாட்டாமை
Joined
Jul 28, 2018
Messages
65
Reaction score
4
Location
Erode
மணி: பிற்பகல் 2. 00

வர்ஷினி தன் தோழிகளுடன் கல்லூரி வெளிவாசல் நோக்கி நடந்தாள். இன்னைக்கு என்ன பேசி கடுப்பேத்தபோறானோ என்ற சலிப்புடன்.

முன்னமே இன்று தோழிகள் அனைவரும் கூடி பேசி ஒரு முடிவெடுத்திருந்தனர். வகுப்பிலிருந்து கல்லூரி கேட் வரையிலும்
ஒன்றாகவே நடந்து செல்ல வேண்டும். அவர்களுக்கு அந்த கல்லூரி மாணவர்கள் தரும் தொல்லைகளையும் சீண்டல்களையும் சமாளிக்க இதுவே சிறந்த வழி எனத் தோன்றியது. அதன்படி இந்த வாணரப் படைகள் 18 பேரும் கும்பலாக நடந்து சென்றனர். முதலில் எதிர்ப்பட்ட ஸ்ரீதரை பார்த்ததும் மீரா மட்டுமே பயந்தாள். அவனோ புன்னகையுடன் மீராவைப் பார்த்துக் கொண்டே இவர்களை கடக்க முற்பட்டான். அதற்குள் அமுதா பை அண்ணா என்றாள். அதே புன்னகை மாறாமல் பை மா பத்திரமா போங்க என பதிலளித்தான். மீரா அமுதாவை முறைத்துக் கொண்டே வேகமாக முன்னால் நடக்க வர்ஷினி அவளை பிடித்திழுத்து அமுதாவை பார்த்து சிரித்துக்கொண்டே ஏண்டி என்றாள்.

மீராவை வம்பிழுக்கத்தான் இப்படி செய்தாள். அதுபோக ஸ்ரீதரை நினைத்து மீரா தவிர யாருக்கும் பயமில்லை. அவனது முக லட்சணம் அப்படி.அவர்கள் துறையில் நன்றாக படிக்கும் ஒழுக்கமான மாணவன்.அவன் மீது மரியாதை கூட உண்டு இவர்களுக்கு

ஒரு அண்ணனுக்கு பை சொல்றது கூட தப்பா என வம்பளத்தாள் அமுதா.

அவன் உனக்கு அண்ணணா? மீரா கேட்கவும்

பின்ன உனக்கு மாமான்னா எனக்கு அண்ணா தானடி என்றவுடன் எல்லாரும் சிரிக்க

போதும் டி விளையாடுனது அவ கோவிச்சிக்க போறா விட்றி என ரேணு சமாதானம் செய்ய அரட்டையடித்தபடி வருகையில் திடீரென வர்ஷினிக்கு பின்னால் நடந்து வந்த பவியும் சந்தியாவும்

உயிரே உயிரே தப்பி்ச்சி எப்படியாச்சு ஓடிவிடு அய்யோ வருதே மூதேவி வருதே

என ஒரே குரலில் பாட ஏன் என குழம்பிய வர்ஷினி திரும்ப எத்தனித்தாள்.

ஹே ஹே திரும்பி பார்க்காம வேகமா நடந்து போடி என்று பவி சொல்லியவுடன் ஆஹா வில்லன் வரான் போலருக்கே என்று புரிந்து கொண்டவள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

விடுவானா அவன்ஓடி வந்து ஹை வர்ஷினி என அருகில் நின்றான் அருண்.
அருண் அந்த கல்லூரியின் வரலாற்று துறையினல் பயிலும் மாணவன். வர்ஷினியை காதலிப்பதாய் தொந்தரவு செய்பவன் இவன்தான். இவனுக்கு பயந்துதான் இந்த ஒற்றுமையே பலம் திட்டமெல்லாம்.

அவளுக்கு இணையாக நடந்நது கொண்டே என்ன இன்னைக்கு செம அழகா இருக்க எனறான்.

இப்படிலாம் என்கிட்ட பேசாதீங்க அண்ணா சொல்லிட்டேன்.

நான் கூட உங்கிட்ட என்ன அண்ணானு கூப்பிடாதனு சொல்லிட்டேன்.

வர்ஷினிக்கு அருகிலிருந்த ரேணு சிரித்துவிட்டாள்.

அருண் அவளை முறைத்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தான்.வர்ஷினி அண்ணானு கூப்டாத நான் உன்ன லவ் பண்றேன்.

நான் வேற ஒருத்தர லவ் பண்றேன் அண்ணா.

நீ இல்லனா நான் செத்திருவேன். என்றான் பதட்டத்துடன்.

அவரு இல்லனா நான் செத்திருவனே அவனைப் போலவே சொன்னாள்.

மற்றவர்கள் இவர்களின் சம்பாஷனணயை உன்னிப்பாக கவனித்து கடைசி பேச்சில் ரேணு மறுபடியும் சிரித்தாள்.

அருண் அவளை கோபத்துடன் நோக்கி ஏய் இங்க என்ன காமெடி ஷோவா நடத்துறாங்க சும்மா கெக்க கெக்கனு என்ன சிரிப்பு? பேசிட்டிருக்கேன் ல என்றான்

ஐய்ய எங்களுக்கு சிரிப்பு வந்தா சிரிப்பு வந்தா செய்வோம்.நீங்க வேணும்னா தனியா பேசுங்க என்றாள்.

ஏய் கொழுப்பா என்ன வாய் நீளுது நான் சீனியர் தெரியும்ல.

காலேஜ்ல ஆண்டி ரேகிங் கமிட்டி இருக்கு
கம்ப்ளைண்ட் பண்ணா என்ன ஆகும் தெரியும்ல


ஆஹான் கம்ப்ளைண்ட் பண்ணிட்டு வெளிய வரணும் தானே பாத்துக்கிறேன் மிரட்டினான்

நா அருணு என்ன மிரட்டுற அப்புறம் எங்கூர் பக்கம் கால் எடுத்து வைக்க முடியாம பண்ணிடுவோம் ஜாக்கிரதை இடையில் தீபா குரல் கொடுக்க

ஆஹா ஒன்னு கூடிட்டாளுங்கடா இனி நம் ஜம்பம்லாம் இங்க பலிக்காது என்றுணர்ந்தவன் வேறுவழியின்றி பை வர்ஷினி இனி இதுங்க கூடலாம் சேராத என்றுவிட்டு சென்றான்.


கல்லூரி கேட் தாண்டி தோழிகள் அவளவள் வழியில் வழியில் விடைபெற்று பிரிய ஒரே ஊர் என்பதால் ரேணுவும் பவியும் மட்டும் வர்ஷினியுடன் பேருந்து நிலையம் சென்றனர்.

இவர்கள் நின்றிருந்த இடத்திற்கு சற்று தூரமாக பைக்கை நிறுத்தினான் வாசு. வாசுவைப் பார்த்தவுடன் கண்கள் பளபளக்க
முகம் லேசாய் செம்மையுற இதழில் விரிந்த புன்னகையை பற்களை கொண்டு கீழுதட்டை தழுவி மறைத்துக் கொண்டே ஹே அது வந்திருக்குடி என்று தோழிகளுடன் கூறிவிட்டு மெதுவாய் அவனை நோக்கி நடந்து சென்றாள்.

ஆமாம் அவள் அவனை அழைக்கும் விதம். டா போட்டு அழைப்பது மரியாதையாய் இருக்காதல்லவா.

பைக்கை விட்டு கீழிறங்கி அதன் மேல் சற்று சாய்ந்தபடி நின்றிருந்தவன் இவள் வருவதை பார்த்தவுடன் புன்னகைத்து வாங்க மேடம், எப்படியிருக்கிங்க இப்போலாம் ஆள பாக்கவே முடியலை என
யாரோ போல் பேசவும் கோபமுற்று வந்த வழியே திரும்ப போனவளை
கை பிடித்து தன் பக்கம் திருப்பி சிரித்துக் கொண்டே ஹே ஹே சாரிடி சாரிடி கோவப்படாத சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று சமாதானப்படுத்த முயற்சித்தான்.

கோபத்தில் மூக்கின் நுனி சிவக்க மௌனமாக நின்றிருந்தவளை இரசித்துக் கொண்டே அதான் சாரி சொல்லிட்டேன்ல ஏதாச்சும் பேசேன் என்றவன் முடிப்பதற்குள்
நீ பாக்க வராம இருந்திட்டு என்ன குத்தம் சொல்றியா ? என எகிறினாள்.

ஷ்ஷ் லூசு கத்தாம பொறுமையா பேசு இப்படி கத்துனா எல்லாரும் நம்மளைத்தான் பாப்பாங்க.சரி நான் தான் பாக்க வரலை நீ ஒரு மெசேஜாச்சும் பண்ணியாடி என்றான் வாசு

அஜய் மொபைல் சாப்ட்வேர் பிராம்பளம்னு கடைல கொடுத்திருக்கான்.

சரி. உங்கப்பன் போன் என்னாச்சு

ம்ம்ஹும். அப்பா போன்லலாம் மெசேஸ் பண்ண மாட்டேன். மாட்டிக்கிட்டா அடி பின்னிடுவாரு. பயத்துடன் சொன்னாள்.

அதுக்குத்தான்டி போன் வாங்கித் தரேன்னு சொல்றேன். நீ வேணாம்னு சொல்ற.

சரி விடு காலேஜ்லாம் எப்படி போகுது என பேச்சை மாற்றினாள்.

ஏதோ அதுபாட்டுக்கு போகுது என அசட்டையாக பதில் சொன்னான்.

என்னாது இந்த காலேஜ்லயாச்சு ஒழுங்கா படிச்சு அரியர் இல்லாம பாஸ் பண்ற வழியைப் பாரு. எப்ப பாரு ஊர சுத்த வேண்டியது

அடியே காலேஜ் சேர்ந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள நீயும் உன் மாமானாரும் இப்படி டார்ச்சர் பண்றீங்க. வராத படிப்ப வா வான்னா எப்படி வரும் என அலுத்துக் கொண்டவன் சரி சனிக்கெழம காலேஜ் கட் அடிச்சிட்டு வா சினிமாக்கு போகலாம்.

பேச்சை மாத்தாத.

ம்ம்ப்ச் வருவியா மாட்டியா

நம்மூர்க்காரங்க யார்னா பாத்துட்டு வீட்ல போட்டுக் கொடுக்கவா நான் வரமாட்டேன்பா
என்றாள்.

துப்பட்டானு ஒன்னு எதுக்கு வச்சிருக்க. மூஞ்சில சுத்தி கட்டிட்டு வா யாருக்கும் அடையாளம் தெரியாது.

அது அப்புறம் பாத்துக்கலாம் பஸ் வந்திடுச்சி நான் கெளம்புறேன் என்று நகர்ந்தகவளிடம்

வர்ஷி நான் வைட் பண்ணுவன் நீ வரணும் என்று கட்டளை போல சொன்னான் வாசு.

இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. என்று முனுமுனுத்தபடியே முகம் மலர்ந்து தோழிகளுடன் பேருந்தில் ஏறினாள்.

இவர்கள் இப்படி காதலை வளர்த்து கொண்டிருக்க இவர்களின் தந்தைகள் அவர்களது வீட்டினை கலவரப்படுத்திக் கொண்டிருந்தனர்.


இன்னும் பண்ணுவோம்
Super d kannamma...❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top