• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னம்மா இப்புடி பண்றீங்களேமா – 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
அன்புள்ள தோழிகளே!

என்னம்மா இப்புடி பண்ணிறீங்களேமா? அடுத்தப் பதிவு,உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்.



என்னம்மா இப்புடி பண்றீங்களேமா – 5


தனது வயிற்றில் ஊசி போல் குத்தியது எது என்று பார்க்க அவளை விலக்கியவன் கண்ணில் பட்டது ஏவுகணை போல் துருத்தி கொண்டு இருக்கும் அவளது சேலை மடிப்பின் ஊக்கு, அப்போது தான் கவனித்தான் அவள் சேலை கட்டிய அழகை சுமார் ஒரு டஜன் ஊக்கையும் இழுத்து இழுத்து குத்தி வைத்திருந்தால்,"என்னடி மாமி இது,இத்தனை ஊக்க குத்தி வச்சிருக்க","நேக்கு சேலை கட்டி பழக்கமில்லை அதான்",அவள் தயங்கி தயங்கி சொல்லும் அழகில் தன்னைத் தொலைத்தவன்.



மாமா எதுக்கு இருக்கேன் நான் சொல்லி தரேன் என்று அவள் மீது பாயாத குறையாக நெருங்கியவனை ஒற்றைக் கையில் தள்ளி,முகத்தைத் திருப்பிக் கொண்டால்," இங்க பாருங்கோ,நேக்கு உங்கள பத்தி எதுவும் தெரியாது, முதல நாம பேசி தெரிஞ்சுக்கலாம்,அப்புறமா இதுல்லாம்"அவசரமாகச் சொல்லியவள் அவனிடம் பதில் இல்லாமல் போக அவனை நிமிர்ந்து பார்த்தால்.



அவனோ "பேசி,பழகி,அறுஞ்சு,தெரிஞ்சு,விளங்கிடும், உன்னாண்ட ஒன்னு சொல்லுறேன் காத திறந்து வச்சு மண்டையில ஏத்திக்கோ,எனக்கு நீ தான் பொண்டாட்டி,பாத்த உடனே நெஞ்சுக்குள்ள பச்சக்குனு ஒட்டிக்கின,நீ எம்மா மோசமா இருந்தாலும் எனக்கு நீ வேணும்,அத பத்தி கவலை பட தேவையில்லை,ஒழுங்கா மாமா கூட சேந்து ஊடு முழுக்க புள்ளைங்க கைய்யா முய்யானு கத்துற மாதிரி குட்டிங்களா போடுறோம்,குஜாலா இருக்கோம் என்ன".



'நான் என்ன சொல்லுறேன் இந்தக் கடன்காரன் என்ன சொல்லுறான்,ஐயோ இப்போ என் ஆத்துகார் ஆயிட்டாரே தீட்டக்கூடாது பெருமாளே மனுசிடுப்பா'வேகமாக அவனை மனதில் தீட்டியவள் அவனுக்காக வேண்டவும் செய்தாள்.





மாமி,” சொல்ல மறந்துட்டேன் நாளைக்கி சீக்கரமா கிளம்பி இருக்க என் ப்ரண்டு கம்பெனில வேலை இருக்காம்,அவனண்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்,நீ பயப்படாம போலாம் நல்ல கம்பெனி",அவளுக்கு சந்தோசம் பிடிபடவில்லை என்ன சொல்கிறான் இவன்,"நெஜமாவே,நேக்கு வேலை கிடைக்குமா",ஆவல் ததும்பும் அவள் குரலில் மயங்கியவன்," ஆமாடி மாமி கண்டிப்பா கிடைக்கும்,இந்த ராஜேஷ் சொன்னா செய்வான்.



அவன் குரலில் உள்ள கிறக்கம் அறியாமல்,"தேங்க்ஸ் மாமா" என்று சிட்டாக பறந்துவிட்டாள்,சந்தோச மிகுதியில் மாமா என்று அழைத்ததை கூட மறந்து விட்டு சென்றால்,ராஜேஷுக்கு அவளது மாமா என்று விழிப்பு அத்தனை சந்தோசத்தை கொடுத்தது,அதே மனநிலையில் தாயிடம் சென்று மீனுவின் வேலை விடயத்தை பற்றி சொல்லி சம்மதமும் பெற்றான்.



பாட்டிக்கும் அத்தனை ஆனந்தம்,அவனது நடவடிக்கையும்,நல்ல குணமும் அவரது மனத்தாங்கலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தது என்றே சொல்லலாம்.



மறு நாள் காலை அவன் சொன்னது போல ரெடியாகக் கிளம்பி இருந்தால் மீனு,தனது அத்தையிடமும், பாட்டியிடமும் ஆசி பெற்றவள் கணவனின் பைக் நோக்கி நடந்தால்,முழுக்கை டாப்ஸ்,லெகின்ஸ் என்று வந்தவளை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான் ராஜேஷ்,அவள் அருகில் வரவே சுதாரித்தவன் நல்ல பிள்ளை போல் திரும்பி கொண்டான்,வந்தவள் இருபுறமும் கால் போட்டு உட்கார,விண்ணில் பறந்தான்,ஆனால் அடுத்த நோடியே அவன் சிறகுகள் வெட்டப்பட்டது போலத் தொபுக்கடீர் என்று தரையில் சரிந்தான்.



இருபுறம் கால் போட்டு உட்காந்தவள்,நன்றாக உட்காந்து அவனுக்கும் அவளுக்கும் இடையில் தான் கொண்டு வந்த கை பையும்,சான்றிதழ் கோப்பையும் வைத்து அணைக்கட்டிவிட்டு பின்னல் இருக்கும் கம்பியை இறுக்கப் பற்றிக் கொண்டால்.



அவனுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை,முழு தேங்காயை நாய் உருட்டிய கதையாக அவளை வைத்துக் கொண்டு அவன் படும் அவஸ்தை ஐயோ ..............என்று இருந்தது பாவம் … கடுப்பை முழுவதும் வண்டியிடம் செலுத்தினான் என்னம்மா இப்புடி பண்றீங்களேமா........



அங்கு அவனது நண்பன் முகேஷ் இவர்களுக்கு முன்னமே வந்து காத்திருந்தான்,ராஜேஷை பார்க்கவும் "வாடா புதுமாப்பிள்ளை "அவனை அனைத்து வரவேற்று,மீனுவையும் பார்த்து "வாம்மா"என்றான்,அவளும் சின்னச் சிரிப்புடன் தலை அசைத்தாள்



பின்பு அவனிடம் விவரம் கூறி அவளை ஒப்படைத்து விட்டு,அவளிடம்"எதா இருந்தாலும் அவன்கிட்ட சொல்லு,அவன் பத்துக்குவான்"அவன் சொல்லவே,கொஞ்சம் கலக்கமாகத் தான் தலையை ஆட்டினாள்,மனமே இல்லாமல் ஆயிரம் முறை அவளைப் பார்த்துக்கச் சொல்ல,அவன் நண்பன் முறைக்கவும் தான் அந்த இடத்தை விட்டுச் சென்றான்.



அதன் பின் அலுவலகம் சென்று அவள் நேர் கானல் முடியும் வரை முகேஷ் துணை இருந்தான்,அனைத்தயும் முடித்துவிட்டு முகம் மலர வந்தவள்,"ரொம்பத் தேங்க்ஸ் அண்ணா,பயந்துண்டே இருந்தேன்,எங்கே செலக்ட் ஆகாம போய்டுவேனோனு,இப்போதான் நேக்கு நிம்மதியா இருக்கு".



அவன் சிரித்தவாறே "யாரு நீங்க,தி கிரேட் ராஜேஷ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கோல்ட் மெடல் பொண்டாட்டி ஆச்சே,எப்புடி நீங்க இன்டெர்வியூல பாஸ் ஆகாம இருப்பிங்க",அவன் சொல்லவும் அதிர்ச்சியாகி நின்றவள் வார்த்தைகள் தந்தி அடிக்க "என்னது மெக்கானிக்கல் இன்ஜினீரிங்கா?",அவளது அதிர்ச்சியில் அவளைப் புரியாமல் பார்த்தவன்.



அவள் அதிர்ச்சியில் "என்னம்மா உனக்குத் தெரியாதா,அது மட்டுமில்ல அவனுக்கு வெளி நாட்டுல வேலை கிடைச்சுது,அவன்தான் சொந்தமா மெக்கானிக் ஷெட் தான் வைக்கணும் ஒத்த காலுல நின்னு வச்சான்,செமயா இங்கிலீஷ் பேசுவான்.



அவன் சொல்லுவது எல்லாம் உண்மையா ?என்பது போலப் பார்த்துக் கொண்டு இருந்தால் மீனு,அவன் நண்பன் அவனுக்காகப் போய்ச் சொல்லிக்கிறானோ என்ற எண்ணமும் தோன்றியது,அவனது தற்போதைய தமிழே அவளுக்குப் படும் சவால் தான்,இதில் அவன் ஆங்கிலம் பேசினால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி பார்த்தவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.



முகேஷ் தன்னை மேலும் கீழும் பார்ப்பது தெரியாமல்,அவள் சிரித்துக் கொண்டு இருந்தால்.............................கேக்க பேக்கானு ...................
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top