• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா – 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
அன்பு தோழிகளே!

படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பதமாகக் கூறுங்கள் "என்னம்மா இப்புடி பணிறீங்களேம்ம".


என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா – 1



"ஏண்டி,குழந்த கால் வலிக்கப் போகுது,செத்த இப்புடி உட்காருடி" ,குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்த தனது பேத்தியை பார்த்த மங்களத்திற்குப் பாவமாக இருந்தது,தந்தை, தாயை ஒரு சேர விபத்தில் பறி கொடுத்தவள்,தனது அத்தை மகனின் ஆதரவை பெற சென்னைக்கு வந்துள்ளாள்.



ராஜசேகருக்கும்,அலமேலுக்கும் பிறந்த தவப் புதல்வி தான் மீனு,அவர்கள் இருவரும் காதல் திருமணம்,ராஜசேகர் கூலி வேலை செய்பவர்,அலமேலு பிராம்மணப் பெண்,இருவருக்கும் எப்படிக் காதல் மலர்ந்தது என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்,சாகும் தருவாயில் அவரது சொத்தையும்,மகளையும் தனது தங்கை மகன் ராஜேஷுக்கு தாரவார்த்து கொடுத்துவிட்டு இறந்து விட்டார்,ஆதரவை தேடி பேத்தியும்,பாட்டியும் இதோ இன்று சென்னையில்.



“பாட்டி நேக்கு ரொம்பப் பயமா இருக்கு,அந்த மாமிய பார்த்தாலே, இதுல அவர் எப்புடி இருப்பாருனு தெரியல,எனக்கும் அவாளுக்கும் சத்தியமா ஒத்துப் போகாதுபாட்டி, என்று கெஞ்சிய பேத்தியை பார்த்துக் கனிவு பிறந்தாலும் ஒரு பெரு மூச்சுடன் ,"நேக்கு மட்டும் ஆசையாடி,உன்ன மட்டுமா அந்தக் குடும்பத்துக்குத் தாரவார்த்து கொடுத்திருக்கார்,என்னையும் சேத்துல கொடுத்துண்டு போய்ட்டார்,நேக்கே வாய்த்த பேசையுற மாதிரி இருக்குடி,அந்த பெருமாள் தான் காப்பாத்தணும்".



அவர்கள் இங்குப் போராட அங்கு ராஜேஷோ வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டு இருந்தான்,"இன்னம்மா சொல்லுற,தங்கச்சின்னு கூடப் பாக்காம உன்ன தனியா உட்டுட்டு ஓடி போன அந்த ஆளு பொண்ண நான் கட்டிக்கணுமா போவியா?",அதுவும் உங்க அண்ணண் அருக்காணி மாதிரி பேத்து வச்சுட்டு போய் இருந்தா,நினைக்கவே அல்லு வுடுது,".



உடனே தனது ஆய்தத்தைக் கையில் எடுத்த காமாட்சி கண்ணைக் கசக்க ஆரமித்துவிட்டார்,"இப்ப இன்னாத்துக்குக் கண்ணுல வேர்க்குது உனக்கு,கண்ணாலத்துக்கு நாள பாரு,அதுங்கள இழுத்துகினு வரேன்", என்று கோபமாக செருப்பை மாட்டி கொண்டு சென்று விட்டான்.





அதுவரை நடித்த காமாட்சி கண்ணைத் துடைத்து விட்டு சிரித்த முகமாக உள்ளே சென்றார்,ராஜேஷின் பலவீனம் காமாட்சி தான் அன்னை சொல் தட்டாத பிள்ளை,தன்னுடைய அண்ணண் தன்னைச் சிறு வயதில் அனாதையாக விட்டு சென்றாலும்,அவரது மீது பாசம் கொண்ட காமாட்சியால் அண்ணண் மரணத்தை ஏற்க முடியவில்லை,அதுவும் மீனாட்சி அம்மன் சிலை போல் இருக்கும் தனது அண்ணண் மகளை எக்காலத்திலும் விட முடியாது என்று முடிவு செய்து விட்டார்,அதற்குக் கடவுளே ஒரு சந்தர்ப்பம் அமைத்து கொடுத்து விட்டார்.



ராஜேஷ் பெரிய பட்டறை வைத்து உள்ளான்,அப்பா ஒரு குடிமகன் இருபத்தி நான்கு மணி நேரமும் அரசாங்க சேவை தான்,அதாவது டாஸ்மாக் கடையில் இன்றும் குடித்து விட்டு பட்டறையின் முன்பு மல்லாந்து படுத்திருந்தார்.



ஏற்கனவே ஏக கடுப்பில் இருந்தவன் அவரைப் பார்த்ததும் கொதித்து விட்டான்,"டேய்,கொசு",

"இன்னா அண்ணே",



"இந்த ஆளா தூக்கி கெடச்சுடா,காலங் காத்தலையே ஊத்திகினு மல்லாந்து கடக்கு",அவரை தாண்டி தனது வண்டியை எடுத்தவன் மாமன் மகள் மரிக்கொழுந்தை பார்க்க விரைந்தான்..



வண்டியில் பறந்தவன் மனம் ஒரு நிலையில் இல்லை கோதுமை நிறத்தவன்,ஆறடி ஆஜானுபாகுவான உடல் கட்டு (உழைக்கும் வர்கம் அல்லவா) அழுத்தமான உதடுகள் அடர்ந்த மீசைக்குள் பதுங்கி இருந்தது, கோபத்தில் சிவந்த கண்கள்,கூர் நாசி என்று அழகாக இருந்தான்.



வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன் புயலாக உள்ளே நுழைய,அவனது வருகை கண்டு பாட்டியிடம் பதுக்கினால் அந்தப் பதுமை.



"அவனோ அவர்களைக் கண்டு கொள்ளாமல் அவர்கள் மூட்டை கட்டி இருக்கும் சாமான்களைப் பார்த்தவன் அதற்குத் தகுந்த வண்டியை வரவழைத்து விட்டு தான் நிமிர்ந்து பார்த்தான்,பார்த்தவன் பார்வை நிலை குத்தி நின்றது மீனுவிடம்.



"இன்னம்மா இருக்கா,வெண்ணையில செஞ்ச சேல மாதிரி,மெய்யாலுமே என் மாமே மக தானா",அதை உறுதி செய்யும் விதமாக ஒலித்தது மங்களத்தின் குரல் ,"என்ன தம்பி போகலாமா காத்தால இருந்து குழந்தை சாப்புடாம இருக்கா".



"சரி ,வண்டில சாமான் ஏத்திட்டு நீங்க வண்டில வாங்க,நீ என்கூட வா"என்று மீனுவை அழைக்க ,மறுத்து தலை அசைத்தவளை பார்த்து அவன் மனமும் அசைந்தது.



"நானும் பாட்டி கூடையே வரேன்",சிறு பவள வாய் திறந்து பேச,ராஜேஷுக்கு அந்தச் சிறு உதடு அசைந்தது வெறி ஏறியது,அதனை மறைத்தவன் "இன்னா பாட்டி உங்க பேத்தி மக்கர் பண்ணுது,என்னய்யா........பார்த்த புள்ள புடிக்கறவன் மாதிரியா இருக்கு,அங்க அம்மா புலம்பிக்கினு இருக்கு,நான் கடைய தொறக்கணும் என்னவாம் கேட்டு சொல்லுங்க, இல்லாட்டி நான் இப்புடிக்க நடைய கட்டுறேன்".



இல்ல தம்பி அவ புது மனுஷால் பார்த்து பயந்து போய் இருக்கா வேற ஒண்ணுமில்லை என்று சமாளித்தவர் மீனுவிடம் "மீனு குட்டி அடம் புடிக்காம போடா ராஜாத்தி, சாமானை எல்லாம் பத்திரமா பார்த்து ஏத்திட்டு வரணும் நான் பின்னாடியே வரேன்",அவர் சொல்லவே அரை மனதாகக் கிளம்பி சென்றாள்.



'வாடி மல்கோவா மாமி,முதல அம்மாகிட்ட சொல்லி தேதிய முன்னாடி பார்க்க சொல்லணும்,என்று எண்ணியவன் அவள் வண்டியில் உட்கார ஒரு புன்னைகையோடு வண்டியை எடுத்தான்'.



அவன் மீது சாய்ந்து விடக் கூடாதென்று அவள் நுனியில் உட்காந்து வர 'மாமி விவரம்தாண்டி நீ 'என்று மனதுக்குள் சிரித்து கொண்டான் உற்சாகமாக வண்டியை செலுத்தினான்.



அவன் முடிவெடுத்து விட்டான் இனி இவளுடன் தான் தன் வாழ்க்கையென்று…………..



ஆனால் அவள்.............
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top