• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா -8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
அன்பு தோழிகளே!

என்னம்மா இப்புடி பண்றீங்களேமா அடுத்த பதிவு,உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்....

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா -8


தனது முன்பு அமர்ந்து இருக்கும் நண்பனை பார்க்க பாவமாகத் தான் இருந்தது முகேஷிற்கு,அதுவும் அவனது தற்போதைய குடும்ப வாழ்க்கையை எண்ணிய போது பாவத்தை மீறி சிரிப்பும் வந்தது ,உதட்டை மடக்கி சிரிப்பை அடக்கினான்,அவன் முன்பு சிரித்து வைத்தால்,இருக்கும் மனநிலைக்குத் தன்னை உப்புக் கண்டம் போட்டு விடுவான்.



நிமிர்ந்து நண்பனை பார்த்த ராஜேஷ் அவன் சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்து இருப்பது புரிய வேகமாக எழுந்து செல்ல பார்க்க,"டேய்,கோச்சுக்காதடா உட்காரு".



"பின்ன இன்னாடா உன்னாண்ட சொன்னா,எதாவது ஐடியா கொடுப்பன்னு பார்த்தா,சிரிச்சுக்கினு இருக்க",ராஜேஷையும் குத்தம் சொல்ல முடியாது அவனது நிலையில் யாராக இருந்தாலும் இந்நேரம் பொறுமை எல்லாம் காற்றில் பறந்து இருக்கும்.



"டேய் உனக்கு இருக்குற பிரச்சனைக்கு நான் என்ன சொல்லுறதுனு தெரியலடா,மாமியார் சண்டை,அந்த பொண்ணு உன் குடும்பத்தோடு ஒத்து போக மாட்டிங்குது,உங்க அம்மா அப்பா வீட்டுல இருக்கக் கூடாது,அவுங்களுக்குக் காசு கொடுக்காத,இந்த மாதிரியெல்லாம் அந்தப் பொண்ணு மக்கர் பண்ணுச்சுனா சரிங்களாம்,அந்த பொண்ணு இருக்குற இடமே தெரியல,ரொம்ப அமைதியா இருக்கா,பிரச்சனை உங்கிட்ட தாண்ட இருக்கு,ஒன்னு அது உன்ன தேடி வருது வனஜா மேட்டர் மாதிரி இல்ல நீ அத தேடி போர சாப்பாடு மேட்டர் மாதிரி".



"அது மட்டுமா அந்தப் பொண்ண லவ் பண்ணியா கல்யாணம் பண்ணுன,பிளான் பண்ணி பண்ணியிருக்க,அப்போ அதுக்குத் தகுந்த மாதிரி தான் நீ நடந்துக்கணும்,அந்த பொண்ணுக்குக் கொஞ்சம் டைம் கொடுடா,ஒரு நாளுல எத்தனை மணி நேரம் அந்தப் பொண்ணுகூடப் பொதுவா பேசுற சொல்லு","எங்க டா இருக்குறது கொஞ்ச நேரம் அவளும் ஆபீஸ் போய்டுற,அந்த கொஞ்ச நேரத்துல நான் மட்டும் தான் பேசுவேன்,அவ ஒரு வார்த்தைக்கு மேல பேசமாட்ட,ஆனா கோபம் வந்தா மச்சி பேச்சையே நிறுத்த மாட்ட"



எல்லாப் பொண்ணுங்களும் இந்த விசியத்துல அப்புடித்தான் மச்சி,நீ கவலை படாத,இனிமே நீயும் அவுங்க கிட்ட டிஸ்டன்ஸ் கீப் பண்ணுட,அந்த பொண்ணுக்கு வேண்டியதை பார்த்து பார்த்துச் செய்,ஆனா கிட்ட போகாத,என்ன பொறுத்த வரைக்கும் அந்தப் பொண்ணுக்கு உன் மேல இஷ்டம் இருக்கு,ஆனா உன் பழக்க வழக்கம்,வாழ்கை முறை தான் இடிக்குது,அதையும் தப்பு சொல்ல முடியாது மச்சி கடவுள் போட்ட முடுச்சு அப்புடி ,ஐயர் ஆத்துக்கும்,ஆரத்துக்கும் கோர்த்து விட எப்புடிடா அந்த ஆளுக்கு மனுசு வந்துச்சு.



சிரியாமல் கலாய்த்த நண்பனை பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது ,"எதுக்குடா முறைக்குற உண்மைய சொன்னா கோப படக்கூடாது மச்சி,எதுக்கும் பார்த்து இரு மச்சி,இனிமே சொதப்பாத,ஆனாலும் மச்சான் விதி எல்லார் வாழ்க்கையிலும் வெஸ்டர்ன் டான்ஸ் ஆடுன,உன் வாழ்க்கையில குத்து டான்ஸ் ஆடுதுடா கவனமா இரு.



முகேஷ் அவனைக் கிழித்துத் தோரணம் கட்டினாலும்,உண்மையாக நண்பனுக்காக வருந்தினான்,ராஜேஷின் முகத்தில் புதிய தெளிவு முகேஷ் சொல்வது போலச் செய்வது தான் சரியென்று தோன்றியது,பின்பு நண்பர்கள் இருவரும் கல கலப்பாக பேசி விடை பெற்றனர்.



நட்பு மட்டுமே செய்யும் மாயம் இது தான்,எத்தனை கடினமான சோதனை வந்தாலும்,நண்பனிடம் வரும் ஓர் ஆறுதல் வார்த்தை அதனைத் தூசியாக எண்ணி தகர்த்து விடும்,ராஜேஷிற்கும் அப்புடித்தான் இருந்தது புதுத் தெளிவோடு வீட்டை நோக்கி சென்றான்.



வீட்டுக்குள் நுழையும் போதே மாமியார் மருமகள் கொஞ்சல் காதில் விழுந்தது,சிறு புன்னைகையோடு வீட்டினில் நுழைந்தான் "மீனு குட்டி கொஞ்சம் சாப்புடு கண்ணு,இந்த அத்தைக்காக, குருவி கொத்துன மாதிரி கொத்துனா,எங்கன உடம்புல ஓட்டும்,பிறகு புள்ள பிறக்கும் போது நீதான் கஷ்ட படுவ",குழந்தை என்று சொன்னதுமே அவளை அறியாமல் முகத்தில் தோன்றிய வெட்கத்தை ரசித்துக் கொண்டே அவர்களை நெருங்கினான் ராஜேஷ்.



ராஜேஷை பார்த்த காமாட்சி "இன்னாடா வேல இல்ல நேரத்துக்கே வந்துட்ட".



கொஞ்சம் உடம்பு முடியலம்மா அடுச்சு போட்ட மாதிரி இருக்கு,நான் போய்த் தூங்குறேன் எழுப்பாத.



சாப்ட்டு தூங்கு ராஜேஷு,அவன் தாய் சொல்லுவதைக் கேட்காமல் மேலே சென்று விட்டான்,மீனுவிற்கு வருத்தமாக இருந்தது,அதுவும் அவன் உடல் நிலையை எண்ணி இன்னும் மருகினால்,அவனுடைய வேலையை நேரில் சென்று பார்த்தவள் ஆயிற்றே,உதவிக்குக் கொசுவை தவிர யாரும் கிடையாது,அனைத்தும் அவனே தான் செய்ய வேண்டும்,கடினமான உழைப்பு தான் அவனது சோர்வுக்குக் காரணம் என்று வருந்தினாள்,அது மட்டுமா என்ற மனசாட்சி கேட்க அதற்கு என்ன பதில் சொல்ல.



அவளுக்கே அலுப்புத் தட்டிவிட்டது,திருமணம் ஆகி மூன்று மாதத்திலே இந்த நிலை என்றால் இனி சோச்ச காலம் எண்ணுகையில் பெரு மூச்சு மட்டுமே விடையாக.



இனி இதைத் தொடர விடகூடாது என்று முடிவு செய்து கொண்டால், இன்று என்ன ஆனாலும் அவருடன் பேசி விட வேண்டும்,அந்த முடிவு அவளையும் சுறு சுறுப்பாக இயங்க வைத்தது,வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க துணிந்து விட்ட இளைய ஜோடிகளுக்குத் தெரியவில்லை அதற்கு இன்னும் சில காலங்கள் இருக்கின்றது என்று.



வேலைகளை முடித்து விட்டு தனது அறைக்கு மீனு செல்ல அந்தப் பத்து படிகளையும் கடக்க அவளுக்குப் பத்து நிமிடங்கள் ஆனது வெட்கம் ஒரு புறம்,தயக்கம் ஒரு புறமென்று அவளை வதைத்தது, அன்றொரு நாள் அவனைப் பார்த்தது போல் இன்றும் அவன் தலைக்கு மேல் கை வைத்து படுத்து இருந்தான்,அவனை நெருங்கியவள் "ஏங்க" என்று அழைக்க,அவனது அழைப்புக்கு ஏங்கி போனவன் எழுந்து அமர்ந்தான்.



இருவரது கண்களும் கலக்க அவளைக் கண்களால் விழுங்கி கொண்டு இருந்தான் ராஜேஷ்,அவளும் சலிக்காமல் அவனது பார்வையை எதிர் கொண்டால்,தன்னை மறந்து அவன் அவளிடம் நெருங்க, அவளும் அவனது கண்களில் மயங்கி கண்களை மூடி அவனுக்கு வாகாகத் தனது முகத்தைக் காட்டிக்கொண்டு இருந்தால்,அவளது மயக்கம் போதை ஏற்ற மேலும் நெருங்கி அவளது தடையைப் பற்றி அவனை நோக்கி இழுக்கவும் ,கீழே இருந்து பாட்டியின் அலறல் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.



அதில் சுதாரித்தவள் "ஏன்னா பாட்டி,ஏன் இப்புடி அழறாள் வாங்கோ"என்று அவனையும் இழுத்துக் கொண்டு சென்றால்,உணர்வுகள் வடிந்தவனாக அவனும் பதட்டமாகி கீழே சென்றான்.



அங்கே .............



பாட்டி கீழே கிடக்க அவர் காலுக்கு அடியில் முத்து இருந்தார்,காமாட்சியும் சத்தம் கேட்டு ஓடி வந்தவர் அவர்களை பார்த்து உறைந்து போய் நின்றார்,இருவரும் மூச்சு விடாமல் தரையில் சரிந்து கிடந்தனர்.



யோசிக்க நேரமின்றிப் பாட்டியை அள்ளி கொண்டு சென்றான் ராஜேஷ்,காமாட்சி முத்துவை எழுப்பிக் கொண்டு இருந்தார்,போதையில் இருந்ததால் அவருக்குச் சுயநினைவே இல்லை,"யோவ்,பாவி மனுஷா அந்த அம்மாவை இன்னாயா பண்ணி தொலைச்ச",அந்த போதையிலும் நிதானமாக "இன்னாடி பேசுற உன்னைய தவிர....................",என்று எதுவோ சொல்லவர,"கசுமாலம் உன் வாயில தீய வைக்க,நான் இன்னா கேட்ட நீ இன்னா சொல்லுற,இரு வந்து உன்ன வச்சுகிறேன்",பொரிந்து விட்டு அவரும் முகேஷுடன் சென்றார்.



வச்சுக்கோடி காமு மாமா வெயிட்டிங்............................. மீண்டும் மயங்கி சரிந்தார் முத்து.
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
என்ன ஒரு வில்லதனம் author ji ??.. Enna ஆச்சு பாட்டிக்கு...ராஜேஷ் உனக்கு கட்டம் சரியில்லை போ...??
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Super epi ka??..

என்ன ஆச்சுக்கா பாட்டிக்கு??...

ஏன் ஏன் அவசரபடுற ராஜேஷ்...பொருமையா இரு???..

பிரண்ட் குடுத்த ஜடியாவ பேசாம போய் டிரை பண்ணு...????
 




Last edited:

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
என்ன ஒரு வில்லதனம் author ji ??.. Enna ஆச்சு பாட்டிக்கு...ராஜேஷ் உனக்கு கட்டம் சரியில்லை போ...??
கட்டம் மட்டுமா வட்டம், சதுரம், முக்கோணம் எதுவுமே சரியில்ல?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top