என்னோடு நீ உன்னோடு நான் - 33 & 34

#1
Chapter 33:

வேற்று ஊர்வாசி மற்றும் அவனுடன் சில ஆட்களை பார்த்தவுடன் கிராம மக்கள் அவனிடம் சென்று வினவும் முன்

"ஹே ப்ரித்வி" என்று அழைத்துக்கொண்டு ஆதி அவனருகில் வேகமாக செல்ல முயன்றும் முடியாமல் நிலாவின் உதவியுடன் சென்றான்

" ஹே மேன். என்ன ஆச்சு. ஆர் யு ஒகே” என்று கேட்டுக்கொண்டே ப்ரித்வி தாங்கி பிடித்துக்கொண்டான். “தேங்க் காட். நீ வந்துட்ட. நீ என் மெசேஜ் பாத்தியா… இல்ல கௌஷிக் இன்ஃபோர்மேஷன் பாஸ் பண்ணானு யோசிச்சிட்டு இருந்தேன்” என்றவுடன்

“கௌஷிக் சொன்னான். நீ சொன்னமாதிரி மூணு நாள்ல அவன ரீச் பண்ணலனா, என்ன உன்ன துணைக்கு கிளம்பச்சொன்னான். வெள்… இங்க ஏதோ ப்ரோப்லேம்னு நினைக்கறேன். உனக்கும் ஆதி பட்டுருக்கும் போலயே” என்று கேட்க

"சொல்றேன். ஷி இஸ் நிலா. இவளோட இண்டூஷன’னால தான் நான் இங்க வந்தோம்” என்று ஆதி சொல்ல, நிவாவும் ப்ரிதிவியும் புன்னகைத்துக்கொண்டனர்.

இதை பார்த்துக்கொண்டிருந்த தலைவர்

"தம்பி உங்களுக்கு தெரிஞ்சவங்களா?" என்று கேட்க "ஆமா சார். என் ஃபிரன்ட், அது என்னோட நண்பன்” என்றான்.

“இப்போ இவர் வந்தது கூட நல்லதாப்போச்சு. இவரு சென்னைல போலீசா இருக்காரு. இவர்கிட்ட உதவி கேட்கலாம் உங்க ஊர்க்கு யாரால ஆபத்துனு தெரிஞ்சுக்க” என்றான் ஆதி.

“என்ன… போலீசா… மண்ணுச்சிடுங்க தம்பி. எங்க ஊரு பிரச்சனையை நாங்க பாத்துக்கறோம். இவங்கெல்லாம் வேணாம்” என்றான் கூட்டத்தில் ஒருவன்.

“இப்படி நாங்க பாத்துக்கறோம் பாத்துக்கறோம்னு சொல்லித்தான் இந்த அளவுக்கு வந்து நிக்கறோம். நமக்குள்ள இருந்த ஒருத்தன் நம்மளயே முடிக்க நினச்சசுருக்கான்”

“இப்பவும் இப்படியே இருந்தோம்னா நம்ம கூட்டமே அழுஞ்சுடும்” என்றாள் அங்கிருந்த ஒரு பெண்மணி.

“ஒன்னும் வேணாம். பொம்பளைங்கெல்லாம் பேச ஆரம்பிச்சுடீங்க. அய்யா மொதல்ல இந்த தம்பி படம் புடுச்ச ஆள எங்க வெச்சுருக்காருனு கேளுங்க. அவன முடுச்சுட்டா இந்த பிரச்சனையெல்லாம் முடுஞ்சுடும்” என்றான் முன் பேசியவன் தலைவரிடம்.

அவன் பெண்களை மட்டம் தட்டுவதை பார்த்த நிலா “அவன முடுச்சுட்டா எல்லாம் முடுஞ்சுதா? புரிஞ்சு தான் பேசறீங்களா? அவன் உங்க ஊருல இருக்கவங்களுக்கு ஏதோ குடுத்துருக்கான். அது எந்தளவுக்கு உங்களுக்கு பாதிப்பு ஆகும்னு யோசுச்சீங்களா?”

“இதுக்கு முன்னாடி நீங்க குடுச்ச சாராயத்துல ஏதோ கலந்துருக்கான். அது என்னனு தெரிமா? எங்களுக்கு என்னங்க… அவன உங்ககிட்ட குடுத்துட்டு போயிடுவோம். ஆனா திரும்ப உங்களுக்கு ஒன்னுனா யாரவது வருவார்களானு யோசிங்க” என்று முடித்தாள்.

அவள் முடிக்க மருத்துவர் அங்கே வந்து "அய்யா ராமசாமிக்கு நிறைய ரத்தம் போய்டுச்சு. காப்பாத்த முடில" என்று சொல்ல

“கேட்டுக்கோங்க உங்க அவசர புத்தினால அவன் போய்ட்டான். மிஞ்சுன ஒருத்தனையும் முடுச்சுருங்க. திரும்ப எவனாவது வருவான். எல்லாம் போய் சாவலாம்” என்று கத்திக்கொண்டு முன்பு பேசிய பெண் சென்றாள் அந்த இடத்தில் இருந்து.

"அய்யா" என்று ஒருவன் கூட்டத்தில் இருந்து பேச தொடங்க அவனை கையசைத்து தடுத்தார் தலைவர் பேசவேண்டாம் என்று.

"எங்க ஊர்ல ஒருத்தன அவன் பக்கம் சாச்சுருக்கான். ஏதோ வியாதி வர செஞ்சுருக்கான். பூசாரி பொண்ண வேற பிடிச்சு வெச்சுருக்கான். அவன சும்மா விடக்கூடாது”

“நீங்க என்ன சொல்றீங்களோ செய்றோம் தம்பி. எனக்கு இந்த ஊரு ஜனங்க எந்த ஆபத்துமில்லாம இருக்கனும்" என்றார் தலைவர் நிலாவையும் ஆதியையும் பார்த்து.

காயத்தின் வலி தாங்காமல், ஆதி அங்கிருந்த ஒரு இடத்தில் உட்கார்தவன், தலைவருக்கு நன்றி சொல்லிவிட்டு ப்ரித்வி பக்கம் திரும்பினான்.

“என்ன பிரச்சனைனா…" என்று நிலாவிற்கு கிராஸ் டாக் வந்ததிலிருந்து அனைத்தையும் அவனிடம் சொன்னான்.

அனைத்தையும் கேட்ட ப்ரித்வி “சோ இதுவரைக்கும் 5 பசங்க இறந்துருக்காங்க. முனிராசன் மர்மமான முறைல இறந்துருக்காரு. அன்ட் இப்போ ராமசாமி. நீ ரெண்டு பசங்கள காப்பாத்திருக்க” என்று முடிக்க

“எஸ், அவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் மெடிக்கல் அஸிடன்ஸ் வேணும் அன்ட் அதில்லாம அவன் வீடியோல மொத்தமா 12 பேருக்கு இஞ்செக்ட் பண்ணிருக்கேன்னு சொன்னான்” என்று சொல்லிவிட்டு தலைவரிடம் திரும்பிய ஆதி

“சர் யாரு அந்த பசங்கனு தெரில அதுனால இங்க இருக்க பசங்களுக்கு எல்லாம் ஒரு மெடிக்கல் செக் அப் அதாவது மருத்துவ பரிசோதனை பண்ணனும்” என்றவுடன்

“சரிங்க தம்பி. இங்க மொத்தம் 25 குடும்பம். அதுல ஒரு 15 பேரு சின்ன பசங்க இருப்பாங்க” என்றார் தலைவர்.

“எப்படி இவங்கல கூட்டிட்டு போறது” என்று ஆதி யோசிக்கும் போது "ஆதி… நீ ஏன் மொபைல் மெடிக்கல் யூனிட் (MMU) ட்ரை பண்ண கூடாது. நம்ம கவர்ன்மெண்ட்கிட்ட இப்போ கேக்க முடியாது. திடீர்னு போய் இது தான் பிரச்சனை, குடுங்கனு கேட்ட ஆயிரம் கேள்வி வரும்” என்றான் ப்ரித்வி.

“ஐ நோ. பட் நார்மல் எமெர்கெனசி யூனிட்னா, நான் மேனேஜ் பண்ணி கொண்டுவந்துடுவேன், ஆனா இதுக்கு MMU வேணும்ல” என்று யோசித்தவனிடம்

“நான் புருஷோத்தமன் சர்ட்ட பேசறேன். நாங்க ஒரு டைம் மெடிக்கல் வேன் எடுத்துட்டு ஜவ்வாது மலைக்கிட்ட போயிருக்கோம். ஒரு ரிமோட் வில்லேஜ்க்கு. NGO வழியா கேட்டா சீக்கரம் கிடைக்கும்” என்றாள் நிலா.

அதை கேட்ட ப்ரித்வி புருவத்தை உயர்த்தி ஆச்சர்யத்துடன் “வாவ் சௌண்ட்ஸ் கிரேட். நீங்க எங்க வேல பாக்கறீங்க?” என்று கேட்க “அதெல்லாம் நிறைய இருக்கு போறப்ப சொல்றேன்” என்றான் ஆதி புன்னகையுடன் நிலாவை பார்த்து.

காயம் மீண்டும் வலிக்க அங்கே கைவைத்துப் பிடித்தவரே “Bu பட் முனிக்கும் அந்த இன்னொரு பையனுக்கும் சீக்கரம் மருத்துவம் பாக்கணும். சீக்கரம் அந்த கருணாவ கூட்டிட்டு போகணும் இல்லாட்டி” என்று சொல்லும்போது அவனுக்கு மெல்லியதாக தலை சுற்றியது.

அதை கவனித்த நிலா “ஆதி என்னாச்சு ஆர் யு ஒகே?” என்று கேட்கும் போதே அவன் காயத்தில் இருந்து ரத்தம் மெதுவாகக்கசிந்தது.

அவன் மெல்ல சாயும்முன் ப்ரித்வி அவனை தாங்கியவன் “வி மஸ்ட் ஸ்டார்ட் ஸூன்” என்றான் அவசரமாக!

Chapter 34 below
 
#2
Chapter 34:

“ஆதி வி மஸ்ட் ஸ்டார்ட் ஸூன்” என்றவன், அவன் அழைத்துவந்த கான்ஸ்டபிலை அழைத்தான்.

அவர்கள் வந்தவுடன் தலைவரிடம் திரும்பியவன் "அந்த பசங்கள அனுப்பி வைங்க. நான் கடலூர் ஹாஸ்பிடல்ல சேத்துடறேன்" என்று ப்ரித்வி சொல்ல, அவர்கள் தயங்குவதைப் பார்த்த ஆதி, ஏதோ சொல்ல வர, நிலா அவனை பொறுமையுடன் இருக்கச்சொல்லிவிட்டு

"சர் நீங்க அனுப்புங்க இல்ல விடுங்க. உங்கள காப்பாத்த தான் இவளோ கஷ்டப்பட்டுருக்காரு. நாங்க சீக்கரம் கூட்டிட்டுப்போனும் ப்ளீஸ் புருஞ்சுக்கோங்க” என்றாள் சற்று பொறுமை இழந்து.

"தனியா எப்படிமா அனுப்பறது… அதான்" என்று தலைவர் தயங்க, வள்ளி தலைவரிடம் "அய்யா நான் அவங்க கூட போறேன். எனக்கு போய்ட்டு திரும்பி இங்க வர வழி தெரியும்” என்றாள் அவள் தம்பி உடல்நிலையில் அக்கறைக்கொண்டு.

அவள் கணவன் அவள் அருகில் வந்து “அதுவும் சரிதான்யா. நானும் வேணும்னா கூட போய்ட்டு வரேன் அப்போ தான் என்ன ஆச்சுனு நமக்கும் தெரியும்” என்றான்.

தலைவர் சரி என்று சொல்ல, ப்ரித்வி கான்ஸ்டபிலிடம் “நீங்க இவங்கள கூட்டிட்டு ஜீப்ல வாங்க நாங்க முன்னாடி போறோம் அந்த கருணை இருக்கற இடத்துக்கு. அவனையும் தூக்கிட்டு போயிடுவோம்” என்றான்.

“அந்த இடம் எங்களுக்கு தெரியாதே சர்” என்று சொல்ல பூசாரி அவர்கள் அருகில் வந்து "நான் கூட்டிட்டு போறேன் உங்கள" என்றார்.

நிலா வள்ளியிடம் அவர்களின் பைகளை எடுத்துக்கொண்டு வர கேட்டுக்கொண்டாள்.

ப்ரித்வி அவர்களிடம் சாராய ஸாம்பிள்ஸ் வாங்கிக்கொண்டான்.

ஆதி ப்ரித்வி மற்றும் நிலாவின் உதவியுடன் காரில் ஏறமுற்ப்படும்போது “தம்பி நாங்க உங்களுக்கு ரொம்ப கடமை பட்டுருக்கோம். உனக்கும் தான்ம்மா. எங்களால உங்களுக்கு ரொம்ப கஷ்டம் ஆயிடுச்சு” என்று வருத்தப்பட

“பரவால்ல சார். நீங்க கவனமா இருங்க. நான் ஒரு ரெண்டு நாள்ல திரும்ப வர ட்ரை பண்றேன். உங்க செக் அப்க்கு” என்றாள் நிலா. ஆதியும் மெலிதாக புன்னகைத்துவிட்டு காரில் ஏறினான்.

அடர்ந்த மரங்களின் நடுவில் இருந்தது கருணாவின் குடிசை. ஆதி வண்டியில் இருந்து இறங்க முயற்சிக்க "இங்கயே இரு ஆதி உன்னாலேயே முடில" என்று நிலா சொல்ல "எஸ் நீ இரு. நான் போயிட்டு வரேன்" என்று இறங்கினான் ப்ரித்வி.

உள்ளே சென்ற ப்ரித்வி கருணா கட்டியப்படியே இருந்ததை பார்த்தவன், அவனை சேர்ருடன் சேர்த்து கட்டிய கயிற்றை அவிழ்த்து அவன் கை கால்கள் கட்டியவாறே இழுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

அவன் வருவதை பார்த்த நிலா, அவனுக்கு உதவினாள். இருவரும் அவனை காரின் பேக் சீட்டில் போட்டனர்.

“என்னடா பண்ண அவனை? ஆள் மூச்சு பேச்சே இல்ல” என்று ப்ரித்வி ஆதியை கேட்க, அவனால் பேச முடியாமல் நிலாவை பார்த்தான்.

“அனஸ்தீஷியா ட்ரக் போட்டேன்னு சொன்னான்… இல்ல சொன்னாரு” என்றாள். ப்ரித்வி அவள் வார்த்தையை சரி செய்ததை பார்த்து சிரித்துவிட்டு மறுபடியும் வீட்டிற்குள் சென்றான்.

ஆதி முடியாமல் சீட்டில் சாய "ஆதி முடிலயா? நான் போய் அவர சீக்கரம் வர சொல்றேன்” என்று செல்ல முயற்சிக்க, அவன் அவள் கையை பற்றி நிறுத்தினான்.

மெல்லிய குரலில் “அவன்கிட்ட, இருக்கற எல்லாத்தையும் போட்டோ எடுத்துக்க சொல்லு. அந்த ட்ரக்ஸ்லாம் எடுத்துக்க சொல்லு” என்றான்.

சரி என்பது போல் தலையசைத்துவிட்டு அவளும் உள்ளே சென்றாள். அங்கு அவன் ஏற்கனவே போட்டோஸ் எடுத்துக்கொண்டிருந்தான். “ப்ரித்வி… உங்கள இங்க இருக்கற எல்லாம் ட்ரக்ஸ்ஸையும் எடுத்துக்க சொன்னாரு” என்றாள்.

“ஹ்ம்ம். நீங்க அவனோட துணையா இருங்க. நான் ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அவன் அங்கிருந்த தேவையான பொருட்களை எடுத்து அங்கிருந்த ஒரு பையில் அனைத்தையும் போட்டுக்கொண்டான்.

ஆதியும் நிலாவும் காரில் காத்திருக்கும்போது போலீஸ் ஜீப்பும் வந்தது. முனி வள்ளி வள்ளியின் கணவன் மற்றும் இன்னொரு சிறுவனுடன் வந்தடைந்தனர் பூசாரியின் உதவியுடன்.

பூசாரி ஆதி, நிலா பக்கத்தில் வந்து “எங்களால தான் உங்களுக்கு இவளோ கஷ்டமும். உங்களுக்கு ஒன்னும் ஆகாது. எங்களோட பிரார்த்தனை உங்கள காப்பாத்தும்” என்று சொல்லிவிட்டு சென்றார்.

அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர்..

சிறு தூர பயணத்துக்கு பின் கடலூர் வந்தடைத்தனர். ஆதிக்கு நிலாவை முதலில் பார்த்த நினைவுகள் திரும்ப வர, அவள் கையை பற்றிக்கொண்டான்.

ஆதியின் நண்பன் கௌஷிக் ரெஃபர் செய்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். ஆதியை பார்த்த மருத்துவர் அவனுக்கு ரத்தம் வெளியேறியதால் அவனை அட்மிட் செய்து அதற்கான மருத்துவ உதவிகைளை செய்தார்.

அருகில் இருந்த நிலாவிடமும் ப்ரித்வியிடமும் “ஸ்டிட்ச் போட்டுருக்கேன். ரத்தம் கொஞ்சம் வெளியேறிருக்கு, ஒழுங்கா இன்னிக்கி சாப்பிடல போல. அதுனால மயங்கிட்டாரு. ஃபியூ அவர்ஸ் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என்று சொல்லும்போது

ஆதி அவரிடம் “அந்த பசங்களுக்கு கொஞ்சம் ECG எடுத்து பாக்கறீங்களா. எல்லாம் நார்மலா இருக்கானு பாக்க” என்று சொல்லிவிட்டு “கூடவே அவங்களோட பிளட் அன்ட் யூரின் ஸாம்பிள்ஸ் எடுத்துக்கறீங்களா?” என்றான்.

“Sure” என்று சொல்லிவிட்டு அவர் சென்றார் அங்கிருந்து.

ஆதி ப்ரித்வியிடம் திரும்பி “தேங்க்ஸ் டா. நல்ல நேரத்துக்கு நீ வந்த”

“நான் இவளோ சீரியஸ் இஷ்யூல நீ மாட்டியிருப்பனு நினைக்கல ஆதி” என்றான்.

அப்போது அங்கே வந்த நர்ஸ் “உங்கள டாக்டர் வரச்சொன்னார்” என்று சொல்ல, நிலா எழுந்திருக்கும் போது, ப்ரித்வி "நான் போயிட்டு வரேன்" என்று நர்ஸ்ஸுடன் சென்றான்.

அவனுடன் தனிமையான தருணத்தை எதிர்ப்பார்த்த நிலா, ப்ரித்வி சென்றவுடன் "நான் ரொம்ப பயந்துட்டேன்" என்று அவன் தோள்மேல் சாய்ந்து அழுக ஆரம்பித்தாள்.

அவள் முடியயை கோதிவிட்டவன் "அழாத நிலா. ஐ வில் பி ஒகே ஸூன்” என்று சொல்லிவிட்டு அவள் கையை பற்றிக்கொண்டு முத்தமிட்டு “உன்னவிட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன்”

“சீக்கரம் சென்னை போறோம் அங்க போய்ட்டு” என்று அவளை பார்த்து புருவத்தை ஏற்றி இறக்கி சிரித்தவனை “ச்சி போ” என்று செல்லமாக அடித்தாள்.

ப்ரித்வி உள்ளே வரும்போதே செருமிக்கொண்டே வந்தான்.

நிலா அவன் பிடியில் இருந்து கையை விடுவிக்க முயற்சிக்க, அவன் இன்னும் இறுக பற்றிக்கொண்டான் அவளைப்பார்த்து சிரித்துக்கொண்டே.

“என்ன சொன்னாரு டாக்டர்” என்று ஆதி கேட்க “ஒரு குட் நியூஸ். ஒரு பேட் நியூஸ்” என்றான் மறுப்பாக தலையை ஆடியவாறே.

ஆதி நிலாவின் கையை விட்டுவிட்டு “என்ன சொல்ற. என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

"குட் நியூஸ் அந்த பசங்க ECG சேஃப். அவங்களும் சேஃப். அன்ட் பிளட், யூரின் ஸாம்பிள்ஸ் எடுத்தாச்சு” என்று சொல்ல நிலாவும் ஆதியும் பெருமூச்சு விட்டனர்.

"அப்போ பேட் நியூஸ்" என்று கேட்டான் ஆதி கேள்வியுடன்.

Thank you so much for reading :) :) Do give your feedback please and keep supporting me :)

BeFunky-collage (15).jpg
 
#7
சூப்பர் அந்த பசங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லைங்கிறது ஹேப்பி நியூஸ்
But பேட் நியூஸ் என்ன, ப்ரீத்தி டியர்?
சீக்கிரமா வந்து சொல்லுங்க
 
Last edited:

Sponsored

Advertisements

Top